தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உச்சி மோந்த தமிழ்க் கன்னி
Page 1 of 1
உச்சி மோந்த தமிழ்க் கன்னி
வண்ணச் சொல்லும் வகைவகையாய்ப் பொருளும் கலந்து வாரி என்னை அணைத்து மகிழும் எழுத்து வள்ளல்களே! எனக்காய்த் தரப்படும் சில மணித்துளிகள் என் பெருமையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
நான் பிறக்கும் போதே சுந்தரத் தோற்றத்துடனும் இலக்கண அமைப்புடனும் இலகுவற்ற முறையுடனும் இனிமையாகத் தான் தோன்றினேன். என் தந்தையார் பிரமன் ஆணையிலும் குறுமுனி அகத்தியன் அறிவிலும் அகிலத்தில் அவதரித்தேன். கடந்து வந்த பாதையிலே நான் பதித்து வந்த கோலங்கள், காலவாரியாக மாறுபட்டுக் கொண்டேயிருக்கின்றன. மூவேந்தர் ஆட்சியிலே பூரித்து நின்ற என்னைக் கடல்கோள்கள் அச்சுறுத்தின. எனினும் காலன் என்னைக் கவரவில்லை. முதல், இடை, கடை என்று முறையே சங்கங்கள் வைத்து என்னை வளர்க்க மன்னர்களும் புலவர்களும் தங்களைப் போல் முனைந்து நின்றனர். சங்கப்பலகையிலே நான், எட்டுத்தொகை, பத்துப்பாட்டென அழகு அணிகளில் பொய்யாமொழி, நான் பொய்யாமல் இருக்க, நீங்கள் என்னை அடிக்கடித் தொட்டுக் கொள்ளும் குறள்வெண்பாவால் ஆரம் சூட்டினான். காதல், வீரம், மேவி நின்ற காலத்திலே காதலால் மேம்பட்டேன். துறவு மேவி நின்ற காலத்தில் மேம்பட்டேன். காதலால் துறவு மேவிநின்ற காலத்தில் துறவினால் மேம்பட்டான்.
அடுத்து வந்த பல்லவர் காலத்திலே பக்திப்பாடல்களால் என்னைத் தூவி மகிழ்ந்தனர். தாழிசை, துறை, விருத்தம் கலந்த பாக்களினால் பாடல்களைச் சமர்ப்பித்தனர். சோழர்காலத்திலே நளவெண்பா, பரணி, பிள்ளைத்தமிழ் என வகைவகையாய்ப் படைத்தளித்தனர். நாயக்கர் ஆட்சிக்காலத்திலே விகடகவி, சிலேடைக்கவி, வசைக்கவி போன்ற சிறப்புமிக்க வடிவங்களை வடித்து எனக்கு அளித்ததுடன் சந்தச் சுவை கலந்த பாடல்களையும் அருணகிரிநாதர் என்னும் முருகபக்தன் எனக்களித்தான். குறவஞ்சி, பள்ளு போன்ற பிரபந்தங்கள் இக்காலத்தில் என்னை அலங்கரித்ததுடன் இவற்றிற்குச் சிந்து முதலிய செய்யுள்வகைகளைக் கையாண்டு பேச்சுவழக்கிலுள்ள சொற்கள் கையாளப்பட்டமையை, தற்கால எளிய போக்கிற்கு நாயக்கர் காலமே வித்திட்டது. என மனதில் நான் நினைப்பதுண்டு. நாயக்கர் காலத்தில் என்னை அலங்கரிக்க வடமொழி தழுவினர். ஐரோப்பியர் இலக்கியங்களின் போக்கைத் தழுவினர். ஐரோப்பிய நாட்டார் தம்மதம் பரப்ப என்னைத் தாராளமாக ஆய்ந்து கற்று எனக்கே பல படைப்புக்கள் ஆக்கி வைத்தார்கள் என்றால், என் பெருமையை என்னென்பேன். இக்காலத்து என்னுள் பதிந்த இலக்கியங்கள், நாடக இலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள், அத்தனையையும் பட்டியலிட்டு அழகாய் எடுத்துரைக்க எனக்காய் அமைக்கப்பட்ட நேரம் போதாது. ஆதலால், ஆவலாய் என்னை அளக்கிறேன், அளவாய் இப்போது. 20ம் நூற்றாண்டிலே பாரதியை, கம்பதாசனை, கவிமணியை இவர்கள் போன்ற எண்ணற்றோரை நாவாரப் புகழுகின்றேன்.
இன்று 21ம் நூற்றாண்டிலே புதுமைப் பெண்ணாய் நான் வலம் வருவதென்றால், இலகுநடையிலே பட்டிதொட்டி எங்கும் வாழும் அத்தனை மக்களின் மனதிலும் என்னை விதைக்கின்றீர்களே. கணனிப் பரப்பில் முகநூல் வடிவினுள் முனைந்து நிற்கும் நான் கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தினுள் நுழைகின்றேன். அதுமட்டமல்ல, உலகெங்கும் வாழும் என் அருமைக் குழந்தைகள், '' தேமதுரைத் தமிழோசை உலகு எல்லாம் பரவும் வகை'' செய்து தாங்கள் வாழுகின்ற உலகு எங்கும் தங்கள் சின்னஞ்சிறிய விரல்கள் எடுத்து என்னுள் குதித்து விளையாடுகின்றனர். எனக்காய்ப் படைத்த படைப்புக்கள் அத்தனையும் தாம் வாழும் நாட்டு மொழியில் மொழி பெயர்க்க முன் வந்துள்ளனர். இதைவிட மகிழ்ச்சி எனக்கு என்ன தேவை? மூன்று வயதில் திருஞானசம்பந்தர் பாடிய போது பெற்ற சுகத்தைவிட, இன்று அந்நிய சூழலிலே இச்சிறார்கள், இலண்டன் தமிழ் வானொலியில் என்னை வாழ வைக்க வார்த்தெடுக்கின்ற படைப்புக்கள் கேட்டு நான் பஞ்சாமிர்த சுவையைப் பருகி இன்புறுகின்றேன். இளஞ்சிட்டுக்களே! உங்கள் உச்சிமோந்து நான் வாழ்த்துகின்றேன். இக்குழந்தைகளின் அணைப்பினாலும் எனது தந்தையின் ஆசியினாலும் காலம் தோறும் தோன்றும் புலவர்கள், ஆர்வலர்களின் அன்பளிப்புக்களினாலும் காலன் கண்ணில் அகப்படாமல்;, கன்னியாய்க் காலங்கழிக்கின்றேன்.

kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Similar topics
» தமிழ்க் காப்பு அரங்கம் - ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பும் தமிழ்க் காப்பும்
» உனை உலகின் உச்சி சேர்க்கும் - கவிதை
» சங்கத் தமிழ்க் கவியே
» காலநிலை மாற்றம் கடல் மட்டத்தை உயர்த்தும்: எச்சரிக்கிறது உச்சி மாநாடு
» தமிழ்க் கூத்தன் புகழுக்கு அழிவில்லை !கவிஞர் இரா .இரவி .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum