தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்!

2 posters

Go down

 மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்! Empty மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்!

Post by உதுமான் மைதீன் Tue Nov 02, 2010 1:10 am



பகீரிட வைத்தது நமது அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு... ""சார்... என் மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு அந்த பிரபல மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிருந்தேன். செக்கப் பண்ற அறைக்கு கூட்டிட்டுப் போயி உடைகளை எல்லாம் கழட்டி டாக்டர் செக்கப் பண்ணியிருக்காங்க. பிறகு, இடுப்புல இன்ஜெக்ஷன் போடும்போது எதார்த்தமா பார்த்தவ அதிர்ச்சி யாயிருக்கா. அவ ஆடைகள் இல்லாம படுத்துருக்குற பெட்டுக்கு நேரா கேமரா இருந்திருக்கு. பார்த்துட்டு வந்தவ எங்கிட்ட சொல்லி அழுதுக்கிட்டிருக்கா சார். பெண்களை பரிசோதனை பண்ணி இன்ஜெக்ஷன் போடுற அறையில எதுக்கு சார் கேமரா? அதுவும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனையில். என் மனைவி மாதிரி எத்தனை பெண்களோட அந்தரங் கத்தை ரகசியமா படம்பிடிச்சு மிஸ்யூஸ் பண்றாங் கன்னு தெரியல. இந்த கொடூரக் குற்றத்தை நக்கீரன்தான் சார் அம்பலப்படுத்தி... அந்த வக்கிர மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வைக்க ணும்'' -என்றார் தழுதழுத்த குரலில் ஒருவர்.

அந்த நபர் குறிப்பிட்டது சென்னை ஆவடிக்குப் பக்கத்திலுள்ள பட்டாபிராம் ரயில்வே கேட் அருகில் இருக்கும் பிரபல கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைதான். பிரசவத்துக்குப் பெயர் பெற்ற மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களின் அந்தரங்கங்களை ரகசியமாக படம்பிடிக்கிறார்களா? என்கிற அதிர்ச்சியுடனும்... அந்த மருத்துவமனையின் புகழைக் கெடுக்க தவறான தகவலை கொடுத்திருப்பாரா? என்கிற சந்தேகத்துடனும் அந்த மருத்துவமனையை நோட்டமிடக் கிளம்பினோம். நமக்கு தகவல் வந்த 21-ந்தேதி மதியமே.

சி.டி.ஹெச். மெயின்ரோட்டிலிருந்து நாம் உள்ளே நுழையும்போதே மருத்துவமனை கேமரா கண் இமைக்காமல் முறைத்தபடி நம்மை கண்காணித்துக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் இன்னொரு கேமரா. மதிய நேரம் கூட்டம் எதுவும் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்களின் கண்கள் நம்மை சந்தேகத்துடன் பார்க்க... வெளியில் வந்து காத்திருந்தோம்.


மணி... மாலை 6. இளம்பெண்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவர்களில் ஒருவரைப்போல் உள்ளே நுழைந்து ரிசப்ஷனில் நின்றோம். ரிசப்ஷனின் இடதுபுறத்தில் ஃபார்மஸிக்கு பக்கத்து அறையில்தான் கேமரா பொருத்தப் பட்டிருப்பதாக நமக்கு வந்த தகவல். டாக்டரை பார்த்துவிட்டு வரும் இளம் கர்ப்பிணி பெண்கள்... திருமணமாகாத இளம்பெண்கள்... அந்த அறைக்கு சென்று பரிசோதனை + சிகிச்சை பெற்றபடி வெளியே வந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரம் பார்த்து ஒரு வயதான பாட்டி சிகிச்சைக்காக அந்த அறைக்குள் நுழைய... பட்டென்று அந்தப் பாட்டியின் பேரன்களைப் போல் உள்ளே நுழைந்து "பாட்டிக்கு எப்படிங்க இருக்கு?' என்று நர்ஸிடம் பேச்சு கொடுத்தபடியே அந்த அறையில் கண்களை சுழல விட்டோம்.

அடிவயிற்றில் ஆணி அடித்தது போல் இருந்தது. பாட்டி பெட்டில் படுத்திருக்க... அவரின் கால் வைத்திருப்பதற்கு நேராக மேலே சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருப்பது நம் கண்ணில் பட்டுவிட்டது. அதற்குள் ""சரிங்க... நீங்க வெளியில் போங்க சார்... பாட்டிக்கு இன்ஜெக்ஷன் போடப் போறோம்'' என்றபடி நர்ஸ் கதவை சாத்த அடப்பாவமே... எத்தனை எத்தனை இளம்பெண்கள் இந்த இடத்திலே ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்? இதையெல்லாம் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு யார் யார் பார்க்கிறார்களோ... என்கிற பதைபதைப்புடனும் அந்த வீடியோ கேமரா பொருத்தப்பட்டிருப்பதை எப்படியாவது ஃபோட்டோ எடுக்க வேண்டுமே என்கிற படபடப்புடனும்... பாட்டியைப் பற்றி விசாரிப்பது போல் திரும்பவும் அந்த அறைக்கு உள்ளே நுழைய முயற்சிக்க... அதற்குள் அந்த பாட்டிக்கு சிகிச்சை முடிந்து ஒரிஜினல் பேரன்கள் பாட்டியை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

இனி வேறு இளம்பெண் அந்த அறைக்குள் சிகிச்சை பெறும்போது நாம் கேமராவுடன் உள்ளே நுழைந்தால் பரபரப்பாகிவிடும்... என்ன செய்வது? நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கும் போதே... ஒரு சின்ன "கேப்' கிடைத்தது.

நர்ஸ் மருந்து எடுக்க... வேறு அறைக்குப் போக... பெண் நோயாளியும் அந்த அறையில் இல்லாத நேரம்... பட்டென்று அந்த அறைக்குள் நுழைந்து... கண்காணித்துக் கொண்டிருக்கும் கேமராவையே "க்ளிக் க்ளிக்' என்று ஃப்ளாஷ் போட்டு க்ளிக்கினார் நமது புகைப்படக் கலைஞர்.

அடிவயிற்றில் ஜிலிருடன்... நாம் அந்த அறையிலிருந்து வெளியேற... நல்லவேளை ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்களும், ஊழியர்களும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் சீரியலை சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வெளியேறிய நாம்... க்ரேஸ் மருத்துவ மனையின் எம்.டி.யும்... மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் செல்லராணியை 044-26853808 என்ற மருத்துவமனை எண்ணில் தொடர்பு கொண்டோம் -சிகிச்சைக்கு கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவனைப் போல்.

""எதுவா இருந்தாலும் மேடம்கிட்ட நேர்ல வந்து பேசிக் கோங்க'' என்று மருத்துவமனை ஊழியர் சொல்ல... நாம் விடாப் பிடியாக கெஞ்சி டாக்டரை லைனில் பிடித்தோம்... நைஸாக.

""ஹலோ வணக்கம்... டாக்டர் செல்லராணி மேடம்ங்களா?''

""ம்...?''

""ஆஹ்... நேத்து என் மனைவியை ட்ரீட்மெண்ட் டுக்காக உங்கக்கிட்ட கூட்டிட்டு வந்தேன் மேடம்...''

""சரி...''

""அது... வந்து... இன்ஜெக்ஷன் போடுற ரூம்ல கேமரா இருக்கிறதை பார்த்துட்டு வந்து அழுறா மேடம்.''

""அப்படியெல்லாம் எதுவும் கேமரா வைக்கலையே?''

""கேமரா இருக்குங்களே மேடம்?''

""ப்ச்... கேமரா வைக்கலேங்குறேன்ல'' (டென்ஷனாகிறார்.)

""அதில்ல மேடம்... நானும் வந்து பார்த்தேன் மேடம்... கேமரா இருக்குறதை. எனக்கென்னன்னா... நீங்க டாக்டர், பார்க்கலாம். ஆனா... வேற யாராவது பார்ப்பாங்களேன் னுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு''.

""இங்க பாருங்க... கேமரா கண்ட்ரோல் என் ரூம்லதான் இருக்கு. நான் மட்டும்தான் வாட்ச் பண்ணுவேன். வேற எங்கயும் டிஸ்ப்ளே பண்றதில்ல...''.

""ஓ... அப்படிங்களா? ட்ரீட்மெண்ட் ரூம்ல கேமரா வெச்சிருக்கீங்களே தப்பில்லையா மேடம்?''.

""இதுல என்ன தப்பு இருக்கு? இந்த ஹாஸ்பிட்டலில் 14 கேமரா இருக்கு. நீங்க சொல்ற அந்த அறையில் இருக்கிறது சின்ன கேமராதான். ஸ்டாஃப்கள் வேலை பார்க்குறதை கண்காணிக்கத்தான் கேமரா வெச்சிருக்கோம் என்றபடி போனை துண்டித்தார். நக்கீரன்தான் வந்து ஃபோட்டோ எடுத்திருக்கிறார்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் மருத்துவமனை நிர்வாகம் உஷாராகியிருக்கும். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் செல்லராணி டேவிட்டின் "கேமரா பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான்' என்ற ஒப்புதல் வாக்குமூலமும் நக்கீரனுக்கு கிடைத்திருக்காதே? அதனால்தான் இந்த சைலண்ட் ஆபரேஷன்.

கிரேஷ் மருத்துவமனை ஊழியர் ஒருவரோ ""எல்லா ரூம்லேயும் சி.சி.டி.வி. கேமரா வெச்சிருக்குறதால... நர்ஸ், லேப் டெக்னீஷியன்கள்னு வேலை பார்க்குற பொம்பளப் பிள்ளைங்க ட்ரெஸ் மாத்துறது கூட இந்த கேமராவில் பதிவாகுது. பாவம்... அந்தப் பிள்ளைங்களுக்கு தெரியாது. இவங்களோட இன்னொரு கிரேஸ் ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருக்கிறதால... டாக்டர் செல்லராணி அங்கே போய்டுவாங்க. அந்த நேரத்துல அவருடைய கணவர் டேவிட்தான் கேமரா மானிட்டரில் உட்கார்ந்திருப்பாரு. அவர் டாக்டருமில்ல... ஆனா... இப்படி எல்லா ரூம்லயும் என்ன நடக்குதுன்னு பார்ப்பாரு. கேமராவில் பதிவானதைக் காண்பித்து ப்ளாக் மெயில் பண்ணியே சில சீனியர் டாக்டர்கள் அந்தப் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்காங்க. கர்ப்பிணி பெண்கள் மட்டுமில்ல... திருமணமாகாத இளம்பெண்களும், கல்லூரி மாணவிகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து அந்த அறையில்தான் சிகிச்சை எடுத்துக்குறாங்க'' என்று வேதனையுடன் சொன்னவர் ""ஏற்கனவே நோயாளியின் கிட்னியை திருடியதா பெரும் பரபரப்பானாங்க இந்த டாக்டர். அப்புறம் இளம்பெண்ணுக்கு ஆபரேஷன் பண்றேன்னு பாதி ஆபரேஷன் பண்ணிட்டு மீதியை வேற ஹாஸ் பிட்டலுக்குப் போயி பண்ணிக்கோங்கன்னு திடீர்னு கைவிரிக்க... அந்த இளம்பெண் இறந்துட்டாங்க.... இவ்வளவு நடந்தும் இந்த மருத்துவமனைக்கு பெண்கள் கூட்டம் குவியும். அதை இப்படி வக்கிரமா வீடியோ பதிவு செஞ்சு கணவனை ரசிக்க வைக்கிறாங்களே ச்சே'' என்கிறார் நொந்தபடி.

""கூச்சம், பயம் காரணமாக ஒரு நோயாளி தனது உடலை காண்பிக்க மறுத்துவிட்டால்... வற்புறுத்தி டாக்டர் பரிசோதனை செய்வதே சட்டப்படி குற்றம். அப்படியிருக்க... அதே அந்தரங்கத்தை நோயாளிகளுக்கு தெரியாமலேயே இரகசியமாக படம்பிடித்து டாக்டரோ அல்லது வேறு யாரோ ரசிப்பது... மிஸ் யூஸ் பண்ணுவது பெரும் குற்றம்'' என்கிறார்கள் பிரபல மருத்துவர்கள்.

கிரேஸ் என்றால் மகிமை என்று அர்த்தம். இப்படிப்பட்ட வக்கிர கேமராவால் மகிமை இழந்து நிற்கிறது கிரேஸ் மருத்துவமனை. காவல்துறைதான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். [You must be registered and logged in to see this image.]
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

 மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்! Empty Re: மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்!

Post by கலைநிலா Tue Nov 02, 2010 3:35 am

இதுக்கு இந்த அரசு தான் நடவடிக்கை எடுக்கணும் .அது மற்றவர்களுக்கு பாடமாய் அமையனும் .நடக்குமா ?
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum