தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யாழ்ப்பாணப் பண்பாடு - மறந்தவையும் மறைந்தவையும்
2 posters
Page 1 of 1
யாழ்ப்பாணப் பண்பாடு - மறந்தவையும் மறைந்தவையும்
யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்கள் என்பதை நோக்குவதற்கு முன்னர் பண்பாடு
என்றால் என்ன என்பதை வரையறை செய்து கொள்வது அவசியமாகும். பண்பாடு பற்றிய
ஆய்வினை மேற்கொண்ட மேலைப்புல அறிஞர்கள் 160க்கும் மேற்பட்ட வரையறைகளைத்
தொகுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் எமக்குப் பொருத்தமான சிலவற்றை இங்கு
சுட்டிக் காட்ட
விரும்புகிறேன்.
மக்கள் தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும் மரபுகளும் சேர்ந்த ஒரு தொகுதியே பண்பாடு ஆகும்.
பண்பாடு என்பது அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களும் சமுதாய
மரபுரிமையாகப் பெறப்பட்ட நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அடங்கிய
தொகுதியாகும்.
பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம்
முதலானவையும், மனிதர்கள் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற
திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும்.
பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட் கூட்டம் தனது சமூக வரலாற்று
வளர்ச்சியினடியாகத் தோற்றுவித்துக் கொண்ட பௌதிகப் பொருட்கள், ஆத்மார்த்தக்
கருத்துக்கள், மத நடை முறைகள், சமூகப் பெறுமானங்கள் ஆகியவற்றினதும்
தொகுதியாகும். ஒரு கூட்டத்தினரின் தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தி முறைமை,
உற்பத்தி உறவுகள், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள்
ஆகியவற்றின் தொகுதியாகும்.
இவ்வாறு பண்பாடு பற்றிய வரையறைகளை மானிடவியல் ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
இவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் பெருமள்வுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்களை வகைப்படுத்திக் காட்டுவதற்கு
முன்னர். யாழ்ப்பாணப் பிரதேசத்தின் அமைவிடம் பற்றியும் புவியியல் பற்றியும்
விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
சில அறிஞர்கள் பண்பாட்டைப் புவியியல் அடிப்படையில் நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக இலங்கை பண்பாடு, இந்திய பண்பாடு , எனக் குறிப்பிடுவதை சுட்டிக்காட்டலாம்.
எனினும் இவற்றுக்கிடையே பல்வேறு வகையான வேறுபாடுகள் இருப்பது உணரப்பட்ட
போதும் பொதுவாக இவ்வாறு அழைக்கும் வரலாறு இன்று வரை தொடர்கிறது.
பண்பாடு என்பது பன்மைத்தன்மை கொண்டது என்பதையும் மனங்கொள்ள வெண்டும்.
யாழ்ப்பாணப் பிரதேசம் என்னும் பெரு வட்டரத்திற்குள் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவுப்பற்று முதலிய பகுதிகள் உள்ளடங்குகின்றன.
இப்பிரிவுகளுக்கிடையே பண்பாட்டுக் கோலங்கலிற் சிற்சில நுண்ணிய வேறுபாடுகள் அல்லது தனித்தன்மைகள் காணப்படுவது உண்மையே.
எனினும் எல்லாப் பிரிவுகளுக்கும் உரித்தான பொதுவான பண்பாட்டு அம்சங்களையே இவ்வுரையில் குறிப்பிடுகின்றோம்.
பண்பாடு என்ற சொல் வாழ்க்கை முறை அல்லது வாழ்வியல் என்ற அர்த்தத்திலும் பயின்று வருகிறது.
தமிழிலே பண்பாடு என்ற சொற்பயன்பாடு மிக அண்மைக்காலத்திலேயே அறிமுகமானது.
Culture என்ற ஆங்கிலப் பதத்திற்கு நாகரிகம் என்ற சொல்லே பெரு வழக்கமாக
இருந்தது.
பழந்தமிழ் இலக்கியங்களிற் பண்பாட்டினை குறிக்கச் சால்பு என்ற பதமே
கையாளப்பட்டுள்ளது என்பர். Culture என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பண்பாடு என்ற
சொல் மிகப் பொருத்தமாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கின்றது என்பதை
மறுப்பதற்கில்லை. வாழ்வியல் அல்லது வாழ்க்கை முறைகள் எனப்பன்மையிலே
சுட்டுவதும் பண்பாட்டின் பன்மைத்தன்மையை மனங்கொண்டே எனக் கருதலாம்.
பண்பாடு என்ற சொற்பொருள் வியாக்கியானம் இவ்வுரைக்கு முக்கியமானது அல்ல. எனினும் ஒரு முன்னீடாக இதனைக் குறிப்பிட்டோம்.
பண்பாடு பற்றிய ஆய்வினைச் செய்தவர்கள் பண்பாட்டை பொருள் சார் பண்பாடு,
பொருள் சாராத பண்பாடு என இரண்டாகப் பாகுபாடு செய்வார். ஆய்வு வசதிக்காக
இவ்வாறு பாகுபாடு செய்யப்பட்டுள்ள போதும் பொருள்சார் பண்பாடும் பொருள்
சாராத பண்பாடும் ஒரே வழி ஒன்றிணைந்து செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
ஒரு சமுதாயப் பண்பாட்டு முறையை தெளிவாக அறிந்து கொள்ள முதலிலே பொருள்சார்
பண்பாட்டுக் கூறுகளின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியமெனப்
பண்பாட்டு மானிடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பண்பாட்டு
மானிடவியல் ஆய்வாளர் பக்தவற்சலபாரதி பொருள்சார் பண்பாடு பற்றி பின்வருமாறு
கூறுகின்றார்.
ஆய்வு செய்யும் சமூகத்தின் பொருள் சார் பண்பாட்டினைப் பற்றிய தரவுகள்
மிகவும் பயனுள்ளவை. வீடுகளின் அமைப்பு, செய்பொருள்கள், வீட்டுச்சாமான்கள்,
உடைகள், அணிகலன்கள், போக்குவரத்துச் சாதனங்கள், கால்நடைகள்,
தொழிற்கருவிகள், சடங்குப் பொருள்கள் போன்ற பல்வேறு வகையான பொருள்களைப்
பற்றிய தரவுகள் சமுதாயப் பண்பாட்டு முறைகளை அறியப் பெரிதும் உதவும்.
இந்த வகையிலே நோக்கும் போது யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பொருள்சார்
பண்பாடுகள் யாவற்றையும் இவ்வுரையிலே விரித்துக் கூறுவது கடினமானது.
குறிப்பிட்ட சில பொதுமைப்பண்புள்ள அதேவேளை முக்கியமானவை எனக் கருதும்
பண்பாட்டுக் கோலங்கள் சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இங்கு நான் சுட்டிக்காட்டப்போகும் பண்பாட்டுக் கோலங்கள் பலவற்றை நாம்
இழந்து விட்டோம். சிலவற்றை மாற்ருவத்தோடு பேணி வருகின்றோம். இன்னும்
சிலவற்றை 'பொய்யாய், பழங்கதையாய், கனவாய்' மெல்ல மெல்ல போக விட்டு
விட்டோம். பண்பாடு என்பது ஒரு ஓட்டம். அது இயங்கியற் சாத்தியமுடையது. அது
மாறுவது அல்லது மாற்றப்படுவது தவிர்க்க முடியாத்து. பண்பாடு என்பது மாறாத
தன்மை கொண்டது என்ற கருத்தியலாளர்களும் உளர்.
பண்பாடு மாறுவதற்கு அல்லது மாற்றுருப் பெறுவதற்கு அல்லது மறைவதற்குப் பல
காரணிகள் உள்ளன. சமூக, பொருளாதார, அரசியல், வரலாற்று மாற்றங்களும்
இம்மாற்றங்களால் உருவான கல்வி, தொழில், உலகத் தொடர்புகள் முதலானவையும் ,
பண்பாட்டைக் கொள்ளலும் கொடுத்தலும் என்ற பரிமாற்ற முறையும் இந்நிலைக்கு
பிரதான காரணிகள் எனலாம்.
19 ஆம் நூற்றாண்டையும் 20ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியையும் ஆதாரமாகக்
கொண்டே யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்களை இங்கு சுட்டிச் செல்லலாம் என
எண்ணுகிறேன்.
யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பென்பது அடிப்படையில் அதிகார அடுக்குகளை உடையது.
இந்த அதிகார அடுக்கு முறை என்பது சாதிகளை அடிப்படையாகக் கொண்டது.
யாழ்ப்பாணப் பாரம்பரிய சமூக அமைப்பென்பது பௌதீக ரீதியாகவும் கருத்தியல்
ரீதியாகவும் வேளாள முதன்மை உடையது. குடித்தொகையிலும் ஏனைய சாதியினரை விட
வேளாளர்களே அதிகமாக காணப்படுகின்றனர். அத்துடன் காலனிய ஆட்சியும்
வேளாளர்களது சமூக மேலாண்மையை பலப்படுத்துவதாகவே அடிப்படையில் இருந்தது.
ஒல்லாந்த, ரோமன் , டச்சுச் சட்டம் முதல் காலனிய ஆட்சியுடன் முன்னணிபெற்ற
புகையிலை முதலான காசுப் பயிர்களின் செய்கை, கல்வி, நிர்வாகம் முதலியன
யாவும் அடிப்படையில் அமைந்ததை அவதானிக்க முடியும்.
இவ்வாறு யாழ்ப்பாணச் சமூக அமைப்புப் பற்றி அகிலன் குறிப்பிடுவது மிகுந்த
அவதானிப்புக்குரியது. இந்த நீண்ட மேற்கோளை உறுதி செய்வதாக அதிகம்
கவனிப்புக்குட்படாத எழுத்து இலக்கியங்களும், அரை வாய் மொழிப் பாடல்களும்
நாட்டுப் பாடல்களும் செவிவழிக்கதைகளும் நிறையவே உள்ளன. யாழ்ப்பாணத்துப்
பண்பாட்டுக் கோலங்களை சாதி, சமூக அதிகார அடுக்குகளின் அடிப்படையிலும்
நோக்குவது தவிர்க்க முடியாதது. விரும்பியோ விரும்பாமலோ ஒன்றுடன் ஒன்று
அத்து ப்பட்டுள்ளதை புலமைத்துவ நோக்கில் நிராகரிப்பது கடினமானது.
யாழ்ப்பாணத்தின் பொருள்சார் பண்பாட்டுக் கூறுகளை முதலில் நோக்குவோம்.
பொருள்சார் பண்பாட்டுக் கூறுகள் யாவற்றையும் விரிவாகக் குறிப்பிட்டு
ஆராய்வது இவ்வுரையிலே சாத்தியமற்றது. பொதுவான முதன்மையான
பண்பாட்டுக்கோலங்கள் சிலவற்றையே குறிப்பிட்டு விளக்க முனைகிறேன்.
யாழ்ப்பாணத்துப் பொருள்சார் பண்பாடுகளில் உணவு ,உடை, உறையுள்,
போக்குவரத்து, புழங்கு பொருட்கள், அணிகலன்கள் முதலியவற்றைப் பற்றியே இங்கு
குறிப்பிடுகிறேன்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யாழ்ப்பாணப் பண்பாடு - மறந்தவையும் மறைந்தவையும்
மீண்டும் எழுச்சி பெர என்வாழ்த்துக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» பண்பாடு
» பண்பாடு
» மனிதநேயப் பண்பாடு
» பாதை மாறும் பண்பாடு
» படம்தான் முக்கியம் பண்பாடு யாருக்கு வேண்டும்?
» பண்பாடு
» மனிதநேயப் பண்பாடு
» பாதை மாறும் பண்பாடு
» படம்தான் முக்கியம் பண்பாடு யாருக்கு வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum