தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பண்பாடு
2 posters
Page 1 of 1
பண்பாடு
பண்பாடு
பாவலர் கருமலைத்தமிழாழன்
தண்ணீரின் கதவுதனைத் திறந்து கொண்டு
தன்தலையை மீன்களெல்லாம் காட்டல் போன்று
கண்ணீரின் முகத்தோடே பெண்க ளின்று
கதவுக்குப் பின்னாலே நின்று! நெஞ்சில்
பன்னீரின் கனவுகளில் பார்க்க வந்தோன்
பதிலுக்காய் ஏங்குகின்றாள்! அவனோ சொல்லில்
பொன்னீரின் மேலெண்ணம் பதித்துப் பண்புப்
பொற்கதவைத் திறக்காமல் மூடி கொண்டான் !
பெண்மனத்தில் நெருப்பள்ளிப் போட்டு வாயால்
பேசுகின்றோம் பண்பாட்டுப் பாட்டு! சங்க
வெண்பாட்டில் களவொழுக்கம் கற்பு என்ற
வெளிப்பாட்டில் விலைபேசிப் பெண்ணைக் கேட்கும்
பண்பாட்டைப் படித்ததுண்டா ? பெண்ணைப் பெற்றோர்
படும்பாட்டை நினைத்தீரோ? திரும ணத்தைக்
கண்ணிரண்டின் சங்கமத்தில் நடத்த லன்றிக்
கண்ணீரில் நடத்துவதா நற்பண் பாடு !
கடல்நீரில் கலந்திருக்கும் உப்பு! பாட்டு
கற்பனையில் கலந்திருக்கும்! நீயும் நானும்
உடல்நீரில் கலந்திட்டோம் நெஞ்சில் அன்பாம்
உயிர்நீரில் கலந்திட்டோம் என்றே சொல்லிக்
குடித்தனத்தை நடத்திவந்த நாளில் பெண்ணின்
உயிர்மூச்சு நின்றுவிட அடுத்த நாளே
மடலவிழ்ந்த மற்றொருத்தி கையைப் பற்றி
மனைவாழ்க்கை நடத்துதற்கே தொடங்கி விட்டான் !
கட்டிலிலே அணைத்திருந்த கணவன் காலன்
கயிற்றாலே கதைமுடிந்த பின்னே நெற்றிப்
பொட்டிழந்து கார்கூந்தல் பூவி ழந்து
பொலிவிழந்த முகத்தோடா வாழ வேண்டும் ?
எட்டிநின்றே இளமையினைத் தீய்க்க வேண்டும்
எனும்மிந்தக் கொடுமையினை நாட்டி லின்றும்
கட்டிவைத்தே பெண்ணடிமை பேணு கின்ற
கயவர்காள் பண்பாடு இதுவா சொல்வீர்!
ஒருவனுக்கு ஒருத்தியெனும் உயர்பண் பாடு
ஒருதலையாய்ப் போவதுவோ? மெய்யை நீக்கி
எழுத்தெண்ணல் பாட்டுவிதி ! பாவை மெய்யை
எண்ணாமல் போடுவதோ கைம்பெண் நீதி
விருந்தளிக்கும் பண்பாட்டில் பருவத்தையேன்
ஒதுக்கிவைக்க எண்ணவேண்டும் ! தவறு செய்ய
இருட்பாதை திறப்பதுவோ? புதிய வாழ்வு
இருவருக்கும் தருவதுவே நற்பண் பாடு !
போர்மீது ஆசைவைத்தார் வீரர்! நல்ல
புகழ்மீது ஆசைவைத்தார் புலவர்! நன்செய்
ஏர்மீது ஆசைவைத்தார் உழவர்! ஓங்க
அறிவியலில் ஆசைவைத்தார் அறிஞர்! தொண்டர்
ஊர்மீது ஆசைவைத்தார் ! இளைஞர் இன்று
உதவாத நாகரீக மேலை நாட்டு
சீர்மீது ஆசைவைத்தார் சீர ழந்தார்
சிறப்பான பண்பாட்டை மறந்து நின்றார் !
உடல்மூடி உறுப்புகளின் உருவை மூடி
முகம்மூடும் மஞ்சளினால் முறுவல் பூத்து
நடைபயிலும் நற்பணியில் நடந்து வந்தால்
நாமெல்லாம் கரம்கூப்பி வணங்கத் தோன்றும்
இடைதெரிய இருபந்து மேல்கீழ் ஆட
ஈர்க்கின்ற ஒப்பனையில் மேனி காட்ட
உடையாதோ உள்ளந்தான் தவறு செய்ய
உந்தாதோ ! தமிழ்பண்பை மறந்த தாலே !
இயல்விழித்தால் இலக்கியங்கள் தோன்றும் ! நூலின்
இதழ்விரித்துப் படித்தால்தான் அறிவு தோன்றும்
கயல்விழிக்கே ஏங்குகின்ற நெஞ்சில் நல்ல
கல்விதனைத் தந்தால்தான் ஒழுக்கம் தோன்றும்
வயல்விழிக்க உழைப்புதனைக் கூட்ட வேண்டும்
வழிதவறித் தடுமாறும் இளைஞர் கூட்டப்
புயல்விழிக்குப் பண்பாட்டுப் பக்கு வத்தைப்
புகுத்திவிட்டால் புதுக்குமுகம் தோன்றி டாதோ !
குயில்கூவும் இடந்தன்னில் கூகை நின்றே
குரலெடுத்தல் போலின்று யாழின் மேலாம்
மயிற்றோகை மழலையர்வாய்த் தேனோ சையோ
மம்மியென்னும் அவலத்தால் தமிழின் மேன்மை
உயிர்பிரிந்த உடலாக மொழித னக்கு
முதல்வாரா எழுத்தாகப் போன திங்கே
தமிழ்மொழிதான் சாகுமென்றால் கட்டிக் காத்த
தமிழ்ப்பண்பும் செத்துவிடும் அறிவீர் நன்றாய் !
தண்ணீரில் வாழ்கின்ற மீனோ அந்தத்
தண்ணீரில் சாவதுபோல் தமிழும் சொந்த
மண்ணினிலே தாழ்வதற்குத் தமிழன் தானே
காரணமாய் நிற்கின்றான் ! பற்று இன்றேல்
இன்தமிழும் இன்மையாகும் தமிழன் இல்லை
இலக்கியங்கள் பேசுகின்ற பண்பா டில்லை
எண்ணிடுவீர் எழுந்திடுவீர் தமிழைக் காக்க
ஏற்றிடுவோம் தமிழ்பண்பை வாழ்வோம் நன்றாய் !
பாவலர் கருமலைத்தமிழாழன்
தண்ணீரின் கதவுதனைத் திறந்து கொண்டு
தன்தலையை மீன்களெல்லாம் காட்டல் போன்று
கண்ணீரின் முகத்தோடே பெண்க ளின்று
கதவுக்குப் பின்னாலே நின்று! நெஞ்சில்
பன்னீரின் கனவுகளில் பார்க்க வந்தோன்
பதிலுக்காய் ஏங்குகின்றாள்! அவனோ சொல்லில்
பொன்னீரின் மேலெண்ணம் பதித்துப் பண்புப்
பொற்கதவைத் திறக்காமல் மூடி கொண்டான் !
பெண்மனத்தில் நெருப்பள்ளிப் போட்டு வாயால்
பேசுகின்றோம் பண்பாட்டுப் பாட்டு! சங்க
வெண்பாட்டில் களவொழுக்கம் கற்பு என்ற
வெளிப்பாட்டில் விலைபேசிப் பெண்ணைக் கேட்கும்
பண்பாட்டைப் படித்ததுண்டா ? பெண்ணைப் பெற்றோர்
படும்பாட்டை நினைத்தீரோ? திரும ணத்தைக்
கண்ணிரண்டின் சங்கமத்தில் நடத்த லன்றிக்
கண்ணீரில் நடத்துவதா நற்பண் பாடு !
கடல்நீரில் கலந்திருக்கும் உப்பு! பாட்டு
கற்பனையில் கலந்திருக்கும்! நீயும் நானும்
உடல்நீரில் கலந்திட்டோம் நெஞ்சில் அன்பாம்
உயிர்நீரில் கலந்திட்டோம் என்றே சொல்லிக்
குடித்தனத்தை நடத்திவந்த நாளில் பெண்ணின்
உயிர்மூச்சு நின்றுவிட அடுத்த நாளே
மடலவிழ்ந்த மற்றொருத்தி கையைப் பற்றி
மனைவாழ்க்கை நடத்துதற்கே தொடங்கி விட்டான் !
கட்டிலிலே அணைத்திருந்த கணவன் காலன்
கயிற்றாலே கதைமுடிந்த பின்னே நெற்றிப்
பொட்டிழந்து கார்கூந்தல் பூவி ழந்து
பொலிவிழந்த முகத்தோடா வாழ வேண்டும் ?
எட்டிநின்றே இளமையினைத் தீய்க்க வேண்டும்
எனும்மிந்தக் கொடுமையினை நாட்டி லின்றும்
கட்டிவைத்தே பெண்ணடிமை பேணு கின்ற
கயவர்காள் பண்பாடு இதுவா சொல்வீர்!
ஒருவனுக்கு ஒருத்தியெனும் உயர்பண் பாடு
ஒருதலையாய்ப் போவதுவோ? மெய்யை நீக்கி
எழுத்தெண்ணல் பாட்டுவிதி ! பாவை மெய்யை
எண்ணாமல் போடுவதோ கைம்பெண் நீதி
விருந்தளிக்கும் பண்பாட்டில் பருவத்தையேன்
ஒதுக்கிவைக்க எண்ணவேண்டும் ! தவறு செய்ய
இருட்பாதை திறப்பதுவோ? புதிய வாழ்வு
இருவருக்கும் தருவதுவே நற்பண் பாடு !
போர்மீது ஆசைவைத்தார் வீரர்! நல்ல
புகழ்மீது ஆசைவைத்தார் புலவர்! நன்செய்
ஏர்மீது ஆசைவைத்தார் உழவர்! ஓங்க
அறிவியலில் ஆசைவைத்தார் அறிஞர்! தொண்டர்
ஊர்மீது ஆசைவைத்தார் ! இளைஞர் இன்று
உதவாத நாகரீக மேலை நாட்டு
சீர்மீது ஆசைவைத்தார் சீர ழந்தார்
சிறப்பான பண்பாட்டை மறந்து நின்றார் !
உடல்மூடி உறுப்புகளின் உருவை மூடி
முகம்மூடும் மஞ்சளினால் முறுவல் பூத்து
நடைபயிலும் நற்பணியில் நடந்து வந்தால்
நாமெல்லாம் கரம்கூப்பி வணங்கத் தோன்றும்
இடைதெரிய இருபந்து மேல்கீழ் ஆட
ஈர்க்கின்ற ஒப்பனையில் மேனி காட்ட
உடையாதோ உள்ளந்தான் தவறு செய்ய
உந்தாதோ ! தமிழ்பண்பை மறந்த தாலே !
இயல்விழித்தால் இலக்கியங்கள் தோன்றும் ! நூலின்
இதழ்விரித்துப் படித்தால்தான் அறிவு தோன்றும்
கயல்விழிக்கே ஏங்குகின்ற நெஞ்சில் நல்ல
கல்விதனைத் தந்தால்தான் ஒழுக்கம் தோன்றும்
வயல்விழிக்க உழைப்புதனைக் கூட்ட வேண்டும்
வழிதவறித் தடுமாறும் இளைஞர் கூட்டப்
புயல்விழிக்குப் பண்பாட்டுப் பக்கு வத்தைப்
புகுத்திவிட்டால் புதுக்குமுகம் தோன்றி டாதோ !
குயில்கூவும் இடந்தன்னில் கூகை நின்றே
குரலெடுத்தல் போலின்று யாழின் மேலாம்
மயிற்றோகை மழலையர்வாய்த் தேனோ சையோ
மம்மியென்னும் அவலத்தால் தமிழின் மேன்மை
உயிர்பிரிந்த உடலாக மொழித னக்கு
முதல்வாரா எழுத்தாகப் போன திங்கே
தமிழ்மொழிதான் சாகுமென்றால் கட்டிக் காத்த
தமிழ்ப்பண்பும் செத்துவிடும் அறிவீர் நன்றாய் !
தண்ணீரில் வாழ்கின்ற மீனோ அந்தத்
தண்ணீரில் சாவதுபோல் தமிழும் சொந்த
மண்ணினிலே தாழ்வதற்குத் தமிழன் தானே
காரணமாய் நிற்கின்றான் ! பற்று இன்றேல்
இன்தமிழும் இன்மையாகும் தமிழன் இல்லை
இலக்கியங்கள் பேசுகின்ற பண்பா டில்லை
எண்ணிடுவீர் எழுந்திடுவீர் தமிழைக் காக்க
ஏற்றிடுவோம் தமிழ்பண்பை வாழ்வோம் நன்றாய் !
karumalaithamizhazhan- ரோஜா
- Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India
Re: பண்பாடு
அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பண்பாடு
» மனிதநேயப் பண்பாடு
» பாதை மாறும் பண்பாடு
» யாழ்ப்பாணப் பண்பாடு - மறந்தவையும் மறைந்தவையும்
» படம்தான் முக்கியம் பண்பாடு யாருக்கு வேண்டும்?
» மனிதநேயப் பண்பாடு
» பாதை மாறும் பண்பாடு
» யாழ்ப்பாணப் பண்பாடு - மறந்தவையும் மறைந்தவையும்
» படம்தான் முக்கியம் பண்பாடு யாருக்கு வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum