தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச்சித் தகவல்கள் !!

2 posters

Go down

சிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச்சித் தகவல்கள் !! Empty சிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச்சித் தகவல்கள் !!

Post by RAJABTHEEN Thu Apr 28, 2011 1:12 am

இந்த உலகத்தில் மிகவும் புனிதமான ஒரு இடம் உள்ளது என்றால் அது தாயின் கருவரை என்றுதான் நான் சொல்வேன் . ஆனால் அந்த புனிதத் தளத்திலும் இன்றய நிலையில் இயற்கைக்கு மாறாக பல கலவரங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன . இந்த உலகத்தை கடவுள் படைத்தாரா என்பது எனக்கு தெரியாது ஆனால் என்னை என் தாய்தான் படைத்தாள் என்பதை நான் நான்கு அறிவேன் . நம்புகிறேன் கடவுள் இருக்கிறது ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு அன்னையின் உருவதிலும் , பிறருக்கு உதவும் மனம் கொண்ட நல்ல மனிதர்கள் உருவதிலும் , சரி இனி நம்ம விசயத்திற்கு வருவோம் .
[You must be registered and logged in to see this link.]விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்த பின்னும் நமக்கு கர்ப்ப காலம் பற்றிய முழுமையான அறிவு இல்ல .
இயற்கையான முறையில் கரு உருவாகி ஆரோக்கியமாக வளர்ந்து பிரசவ நேரத்தில் ஏற்படும் ஒரு சில பிரச்சினைகளினால் சிசேரியன் செய்யப்பட்டு குழந்தை பிரசவிக்கும் நிலை தற்போது அதிகரித்துள்ளது.
இதற்கு தா‌யி‌ன் சில பல உடல் அமைப்புகள்தான் காரணமாகின்றன.

ஒரு கர்ப்பிணியை, எல்லா பரிசோதனைகளும் செய்து அவருக்கு சுகப் பிரசவம் ஆகும் என்று மருத்துவர்கள் தீர்மானித்து பிரசவ அறைக்கு கொண்டு சென்று கடைசி நேரத்தில் கூட சிசேரியனுக்கு பரிந்துரை செய்யும் நிலை உள்ளது.

(இவை அனை‌த்து‌ம் இய‌ற்கையாக சிசே‌ரிய‌ன் செ‌ய்யு‌ம் நிலையை‌ப் ப‌ற்‌றிய விஷய‌ங்க‌ள் ம‌ட்டுமே. பண‌ம் ப‌றி‌ப்பத‌ற்காக த‌னியா‌ர் மரு‌த்துவமனைக‌ளி‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் சிசே‌ரிய‌ன்க‌ள் அ‌ல்ல. தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் என்பது ஆச்சரியமான நிகழ்ச்சிதான்.)

புகழ் பெற்ற ரோமாபுரி தளபதி ஜூலியஸ் சீஸர் , இவர்தான் உலகத்திலே முதல் முதலில் வயிற்றை கிழித்து எடுக்கப் பட்டக் முதல் குழந்தை !


[You must be registered and logged in to see this link.]எனவே , அவரது பெயரையே இம்முறைக்கு வைத்துவிட்டார்களாம் ! ஒரு விஷயம் தெரியுமா ? சிசேரியனில் பிறக்கும் குழந்தை நார்மல் பிரசவத்தில் பிறக்கும் குழந்தையைக் காட்டிலும் , புத்திசாலியாக இருக்கிறதாம் ! அதேநேரம் , நார்மல் முறையில் பிறக்கும் குழந்தை தனது தாய் - தந்தையிடம் காட்டும் அன்பு பரிவு பாசத்தைவிட சிசேரியனில் பிறக்கும் குழந்தை குறைவாகவே தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்று சொல்கிறது ஆய்வுகள்.

உலகம் முழுதும், குறிப்பாக வளரும் நாடுகளில், சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் எந்த ஒரு நாட்டிலும், எக்காரணத்தைக் கொண்டும், சிசேரியன் பிரசவங்கள் 15 விழுக்காட்டிற்குமேல் இருக்கக்கூடாது என்று சொல்கிறது. ஆயினும் இந்தியா, சீனா ,பிரேசில் போன்ற நாடுகளில் இது உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் அளவைவிட ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதற்கான முதன்மையான காரணியாக பலரும்,
படித்தவர்கள் முதல் படிக்காத பாமரன் வரை, கருதுவது மருத்துவர்களின் பணம் கொள்ளையடிக்கும் ஆசைதான் என்பது. இது பெரிதும் உண்மைதான் என்றாலும் மேலும்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச்சித் தகவல்கள் !! Empty Re: சிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச்சித் தகவல்கள் !!

Post by RAJABTHEEN Thu Apr 28, 2011 1:12 am

பல காரணங்களும் , குற்றச்சாட்டுகளும் நம் மீதுதான் உள்ளது என்று சொல்லவேண்டும் ..

[You must be registered and logged in to see this link.]பொதுவாக சிசேரியன் பிரசவங்கள் மகப்பேறு காலத்தில் தாய், சிசு ஆகிய இருவரின் மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே (Perinatal death) மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால் மிக அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறும் நாடுகளில் இன்னமும் மகப்பேறு காலத் தாய், சிசு மரணங்கள் அதிகமாகவேயுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துள்ள அளவிற்கு மகப்பேறு கால தாய், சிசு மரணங்கள் குறையவில்லை என்பதுதான் உண்மை. அப்படியானால் சிசேரியன் பிரசவங்கள் தேவையற்றமுறையில் செய்யப்படுகிறதா என்ற இயல்பான அய்யத்தை இப்புள்ளி விபரம் எழுப்புகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் சென்னை மருத்துவக் கல்லூரியின் உலக பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னையின் தனியார் மருத்துவ மனைகளில், அரசு மருத்துவமனைகளைவிட நான்கு மடங்கு சிசேரியன் பிரசவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்தது. இது மருத்துவர்களின் பணம் பண்ணும் ஆசை என்ற வாதத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக உள்ளது. அதேபோல் உலக அளவில் நடத்திய வேறு ஒரு ஆய்வில் சென்னை சென்னை உள்ள நடுத்தர, உயர் நடுத்தரக் குடும்பங்களில் சிசேரியன் பிரசவங்கள் அதிகமாக நடைபெறுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின

இதற்கு மருத்துவர்களை குறை சொல்வதில் பயன் இல்லை. பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திருப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தை, கர்ப்பப்பையின் பாதை வழியாக பயணப்படுவது தடைபடும் என்று மருத்துவர்கள் உணர்வார்கள்.


[You must be registered and logged in to see this link.]இவை அனைத்தும், அந்த கணம், பிரசவ வலி கண்டபின்புதான் கவனிக்க முடியுமேத் தவிர முன் கூட்டியே கணிக்கக் கூட முடியாது.
எனவேதான் பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு சுகப் பிரசவத்திற்கு கொண்டு செல்லப்படும் பெண்களுக்கு சிசேரியன் செய்ய நேரிடுகிறது.

அமெரிக்க அரசின் யுத்தவெறி எல்லையில் வந்து நின்று ரத்தப் பற்களால் சிரித்தபோது ஈராக் கர்ப்பிணி பெண்கள் அவசரமாக மருத்துவமனைகளுக்கு விரைந்து சிசேரியன் செய்து குறைமாதத்திலேயே குழந்தை பெற்றுக் கொண்டார்கள். யுத்தம் தொடங்கிவிட்டால் அப்புறம் மருத்துவ மின்சார வசதிகள் இருக்காது. 2000ம் ஆண்டு முடிந்து புதிய மில்லனியம் பிறந்தபோது தனது குழந்தையும் அந்த நேரத்தில் பிறக்கவேண்டும் என்று உலகம் முழுக்க சிசேரியன் செய்துகொண்டவர்கள் ஏராளம். ஆனால் நாமோ யுத்தமின்றி மில்லனியம் இன்றி வெளிநாடுகளின் சிசேரியன் விகிதத்தை வேகமாக எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் .

சில ஆராய்ச்சிகள் இன்றைய நடுத்தரவர்க்கத் தாய்மார்கள் தாங்களாகவே முன்வந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்ற உண்மையையும் வெளிக்கொணர்ந்திருக்கின்றன.

இதற்கு முதன்மையான காரணம் பிரசவ வலியின் வேதனையை அவர்களால் தாங்கமுடியாததுதான் என்றாலும், சில தாய்மார்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தனது அந்தஸ்த்திற்கான ஒரு குறியீடாகக் கொள்வதாகச் சில ஆய்வுகள் சற்று திடுக்கிட வைக்கின்றன. (அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பெருமையாக சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்).தொண்டு என்று இருந்த மருத்தவம் தொழில் என்று மாறியதால் வந்த பணத்தாசை ஒருபக்கம் .

இன்னொரு முக்கியமான விசயம் ஜோசியம் என்ற மூடநம்பிக்கையினால் விளைவது. சில குடும்பங்கள் தங்கள் ஜோசியர்களிடம் ஆலோசனை கேட்டு சிசேரியன் மூலம் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லது என நினைத்து மகப்பேறு மருத்துவர்களிடம் சிசேரியன் பிரசவம்தான் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதும் நடைபெறுவதுமுண்டு.
இதுபோன்று இன்னும் எத்தனையோ படித்த குடும்பத்தில் உள்ளவர்கள் இன்னும் மூடநம்பிக்கையில் நாகரிகம் என்ற பெயரில் தெரிந்தே இதுபோன்ற ஆபத்துக்களை தங்களுக்கு தாங்களே ஏற்படுத்திக் கொள்கிறார்கள் . நண்பர்களே ஒருவேளை உங்களிலோ அல்லது உங்களுக்கு தெரிந்த யாரேனும் இதுபோன்ற எண்ணங்களில் இருந்தாலோ அல்லது கேட்க நேர்ந்தாலோ உடனே இன்றே அவற்றை அடியுடன் நிறுத்திவிடுங்கள் . அறிவியல் வளர வளர அன்றாட வாழ்க்கைமுறை மாறுது . இன்றைய அறிவியல் வளர்ச்சி நமது வாழும் நாட்களை அதிகரிக்கப் போவதாக எண்ணி அதில் சிக்கி சீரழிந்து விட வேண்டாம் . அறிவியல் வளர்ச்சிகளை நம்மால் இயலாத செயல்களை செய்வதற்கு பயன்படுத்துங்கள் . நம்மால் இயன்ற செயல்களை அழிக்கும் வகையில் அவை அமையவேண்டாம் . அப்படி ஒருவேளை அமைந்தால் அப்பொழுது இந்த உலகத்தில் மனிதர்களாகிய நாம் முழுவதும் அழிந்து நாம் உருவாக்கிய அறிவியல் வளர்ச்சிகள் மட்டுமே மீதம் இருக்கக்கூடும் இந்த உலகத்தில். சற்று சிந்தித்து செயல்படுங்கள் . இனியாவது நாம் வாழப்போகும் இந்த சிறிது காலத்தை இயற்கையுடன் இணைந்து இனிமையாக வாழுங்கள் . இயந்திரங்களுடன் சேர்ந்து இழந்துவிட வேண்டாம் .

இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச்சித் தகவல்கள் !! Empty Re: சிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச்சித் தகவல்கள் !!

Post by karthikeyan2s Mon Aug 01, 2011 8:51 pm

ரேயளி வெறி nice
karthikeyan2s
karthikeyan2s
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 8
Join date : 01/08/2011

Back to top Go down

சிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச்சித் தகவல்கள் !! Empty Re: சிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச்சித் தகவல்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2ஜி அலைக்கற்றை விவகாரம்: தொலைபேசி உரையாடலில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
» உயரமான பாதணி அணியும் பெண்களே கவனம்! ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்கள்
» பெண்களுக்கு அதிகளவு மரணத்தை ஏற்படுத்தும் குடல் புற்று நோய்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்
» கனேடிய ஆண்களை விட குறைவாக சம்பாதிக்கும் பெண்கள்! ஆய்வில் சுவாரஸ்யத் தகவல்கள்
» சிசேரியன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum