தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Yesterday at 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திருநெல்வேலி அல்வாவும் பலகோடி பணமும்!!

2 posters

Go down

திருநெல்வேலி அல்வாவும் பலகோடி பணமும்!! Empty திருநெல்வேலி அல்வாவும் பலகோடி பணமும்!!

Post by பட்டாம்பூச்சி Tue Nov 09, 2010 4:28 pm

பள்ளியில் கட்டுரை போட்டியிலோ ஓவியப் போட்டியிலோ கலந்துக் கொள்ளும் ஒரு மாணவனை அழைத்து ‘இந்தா நீ உலகத்தின் முதல் விருதினை பெற்றாய்’ என்று கையில் கொடுத்தால் அந்த மாணவனின் முகத்தில் எத்தனை வெளிச்சங்கள் சிரிப்பாய் பிரகாசிக்குமோ அப்படித் தான் பிரகாசித்தான் இனியன். தமிழினியன் அவன் முழு பெயரென்றாலும் இனியனென்றே நண்பர்கள் அழைத்துக் கொண்டு அவன் பின்னால் ஓடினார்கள்.

இனியனுக்கு வாழ்வின் அத்தனை வெற்றிகளும் உள்ளங் கையில் விழுந்து கிடப்பதாய் ஒரு சந்தோஷம், வானத்தையும் பூமியையும் மாறி மாறி பார்க்கிறான், எதை விலைக்கு வாங்குவது வானத்தையா பூமியையா என்று சிந்தித்திருப்பான் போலும். அப்படி ஒரு துணிவு, துடிப்பு, துள்ளல், அவனுக்குள் இன்று.

“வா.. வா… எல்லோரும் வாங்க.., இன்னைக்கு எல்லாருக்கும் விருந்து இருக்கு.., அதும் எங்க தெரியுமா ஐந்து நட்சத்திர விடுதியில விருந்து” சத்தம் போட்டு கத்தினான் இனியன்.

அப்படி என்ன தான் நிகழ்ந்து விட்டது இவனுக்கென்று திகைத்துபோய் பார்க்கிறார்கள் அவனுடைய நண்பர்களெல்லாம். இனியனொன்றும் அத்தனை சாதாரணமானவன் அல்ல. வீண் பேச்சி பேசியோ வெட்டியாக அரட்டை அடித்தோ திரிபவனல்ல. இக்கால இளைஞர்களுக்கு முன்மாதிரி இளைஞன். சுருக்கமாக சொன்னால் திரைப்படங்களில் நடித்திடாத ‘வாழும் கதாநாயகன் என்று சொல்லலாம் இனியனை.

“இனியா.. இனியா.. சொல்லுடா.. என்னடா ஆச்சு அப்படி, (இ)தோ பார்.. இனியும் நீ சொல்லலைன்னா நாங்க எல்லாம் திரும்பிப் போய்டுவோம். அப்புறம் நீ தான் எங்களை தேடி தேடி வந்து சொல்லணும்”

“சொல்லக் கூடாதுன்னு இல்லடா, சொன்னா நம்புவீங்களா, நான் ஒரு பெரிய கோடீஸ்வரன் ஆகப்போறேன் ரவி, என்னால இனி எதையும் அப்படி சொடுக்கினா வாங்கிட முடியும்”

நண்பர்கள் திகைத்தார்கள். என்ன ஆச்சு இவனுக்கு. ஏதேனும் கனவு கினவு காண்பதாக நினைத்து பெனாத்துகிறானா அல்லது லாட்டரி கீட்டரி ஏதாவது… “ஹா..ங்………… எனக்கு தெரிஞ்சி போச்சு………..”

“இனியா எனக்கு தெரிஞ்சி போச்சு”

“என்ன தெரிஞ்சி போச்சு மலர்?”

“உனக்கு நம்மூரு பம்பர் லாட்டரி அடிச்சு போச்சி……..”

“அடப்போடா… அதலாம் எப்பவோ நிறுத்தியாச்சி தெரியாதா”

“அப்போ.., இன்னைக்கு ஏப்ரல் பூல்…..”

“ச்ச ச்ச.. நான் சொல்வது சத்தியம், இன்னும் இரண்டே நாள்ல நான் தான் நம்ம ஊர்லையே ஏன் தமிழகத்துலையே இந்தியாவிலேயே பேசப்பட போற முதல் ஆளாக போறேன்”

“டேய்.. ரவி.. மலர்.. வாசு.. வாங்க போலாம். இவனுக்கு ஏதோ ஆயிடுச்சி..டா”

“நில்லு மணி, இங்க பார்.. ஐம்பது மில்லியன்.., ஐம்பது மில்லியன் டாலர்.., நம்மூரு பணம் எவ்வளவு தெரியுமா ‘இருநூற்றி இருபத்தொன்பது கோடியே, எழுபத்தொன்பது லட்சத்து, தொன்னூற்றியொன்பதாயிரத்து, தொள்ளாயிரத்து ஐம்பத்துநாலு ரூபா இருபத்தியிரண்டு பைசா..”

இனியன் நீட்டி சொல்லி மூச்சு விடுவதற்குள் வாய்பிளந்து ஓடி வந்தார்கள் நண்பர்களெல்லாம். படக்கென அந்த தாளை மடக்கி சட்டை பையில் போட்டுக் கொண்டான் இனியன்.

“நான் சொல்றதை கவனமா கேளுங்க. இது, என்னோட பணம் மட்டுமில்ல, உங்களோட பணமும் கூட”

“என்னடா இனியா, உனக்கு ஒன்னும் ஆயிடலியே என்னென்னவோ சொல்ற, ஏதேதோ காட்டுற எங்களால நம்பவே முடியலேயேடா”

“முதல்ல நானும் நம்பலடா ரவி, பொய்யின்னு தான் விட்டுட்டேன், பிறகு தான்…. ‘இங்க பார் என்னோட பேர்ல செக்கு, வங்கியில போட்டு எடுக்க சிபாரிசு கடிதம்ன்னு எல்லாம் அனுப்பினாங்க, அதனால தாண்டா நானே நம்பினேன்..”

“எங்கருந்து வந்திருக்கு, யார் அனுப்பினா, எதையுமே விவரமா சொல்ல மாட்டேன்றியேடா இனியா, சரியா சொன்னா நாங்களும் அதை யார்கிட்டையாவது கேட்டு உறுதி படுத்துவோம்ல”

“அதலாம் விடு மணி.. ஒரு கனவு போல இருக்கு தெரியுமா. ஒரு புத்தகம் வாங்க, கல்லூரி கட்டணம் அடைக்கன்னு எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட்டிருப்போம் அதுக்கெல்லாம் ஒரு விடிவுடா இது. எப்படின்னெல்லாம் கேட்காதிங்க, உடனடியா எனக்கு பணம் வேணும் ‘ஒரு லட்சத்தி முப்பத்தி ஐந்தாயிரம் வேணும்’ யாராவது ஏற்பாடு பண்ணுவீங்களா”

“ஒரு லட்சத்தி முப்பத்தி ஐந்தாயிரமா?????” நண்பர்கள் வாய் பிளந்து நின்றார்கள். மணி, மலர், ரவி, அழகன், இனியன் எல்லோரும் கல்லூரி முடித்து வேலை தேடி அலைந்து ஏதும் சரியாக கிடைக்காததால் பகுதி நேர ஊழியர்களாக கிடைக்கும் இடங்களில் கிடைக்கும் வேலைகளை செய்துவரும் லட்சிய இளைஞர்கள்.

இவர்களில் இனியன் எப்போதுமே சமூகம் பற்றியும் தன் பெற்றோர் பற்றியும் சிந்தித்து எதையேனும் வாழ்வின் கடைசி நாளிற்குள் சாதித்தே ஆகவேண்டுமென லட்சிய கனவுகளோடு வாழ்பவன். அப்படிப்பட்ட இனியனின் சொல்வதை யாராலும் நிராகரிக்க முடியாமல் பணம் திரட்டுவதற்கான வழியை யோசிக்கிறார்கள்.

“இனியா நான் எப்படின்னா அப்பா கிட்ட பேசி தங்கச்சி கல்யாணத்துக்கு வைத்திருக்கிற பணத்துல ஒரு ஐம்பதாயிரத்தை வாங்கி தரேன் “

“நான் கூட எங்க வீட்ல பேசி ஒரு இருபதாயிரம் வாங்கிக் கொடுப்பெண்டா இனியா” மற்றொருவன் பதினைந்தும், மீதம் ஐம்பதாயிரத்தை மட்டும் இனியன் தயார் படுத்திக் கொள்ளவேண்டுமென்றும் முடிவெடுத்தார்கள்.

“மச்சி இங்க பாருடா..உன் மேல நம்பிக்கை இல்லாமலெல்லாம் இல்லடா, நீ என்ன சொன்னாலும் செய்வோம். ஆனா என்ன பண்ண போற, எப்படி இதலாம் நடக்கும்னு சொல்வியா?” ரவி கேட்டான்.

இனியன் ஒரு நொடியும் தாமதிக்கவில்லை. தன் கைப்பையில் வைத்திருந்த கோப்புகளை எல்லாம் எடுத்துக் காட்டினான். எல்லோரும் கையெழுத்திட்டு அங்கீகரிக்கப் பட்ட காசோலை மற்றும் இதர படிவங்களையும் மின்னஞ்சல் மடல்களையும் எடுத்து அவர்கள் முன் போட்டு, ஏதோ இணைய லாட்டரியில் பணம் அடித்திருப்பதாகவும், அந்த தொகை மிகப் பெரிய தொகை என்பதால் பேங்காக் வங்கியில் வந்து எடுத்துக் கொள்ள சொல்லி பேங்காக் வங்கியிலிருந்து அழைத்து பேசியதாகவும், பேங்காக் போக இனியனுக்கு கடவுச்சீட்டு அதாவது பாஸ்போர்ட் இல்லாததால் அவர்களே ஒரு உலகவர்த்தக மையம் ஒன்றினை தொடர்புகொண்டு பணம் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பதாகவும், தற்போது அந்த உலகவர்த்தக மையத்தின் மூலம் பரிந்துரைக்கப் பட்ட வக்கீல் ஒருவர் இவனை பலமுறை அழைத்து பேசி அநேகம் நாளைக்கே பணம் இவனுடைய இந்திய வங்கிக் கணக்கிற்கு மாறிவிடும் என்று சொன்னதாகவும், அதற்க்கு முன் இவ்வளவு முன்தொகை இடவேண்டுமென்றும் தவிர இதர செலவெல்லாம் சேர்த்து இரண்டு லட்சம் வரை கட்டவேண்டுமென்றும், அவன் முடிந்தவரை தயார் செய்து விட்டதாகவும் மீதம் இவ்வளவு பணம் தேவைபடுகிறதென்றும் சொல்லிமுடிக்க நண்பர்கள் எல்லோரும் அமைதியாக அவனையே பார்த்தார்கள்.

“ஏண்டா… யோசிக்கிறீங்க, எந்த பணமா இருந்தாலும் பரவாயில்லைடா, கொண்டுவாங்க, இன்னும் இரண்டே நாள், இரண்டே நாள்ல திருப்பிடலாம், இந்த பணம் மட்டும் கிடச்சுட்டா நாமேல்லோருமே கோடீஸ்வரன்களாயிடுவோம்..”

“இதப் பாரு மச்சி, உனக்கு உதவி செய்ய எங்களுக்கு ஒரு ஆட்சேபனையும் கிடையாதுடா, ஆனா இரண்டு லட்சம்!!! யோசி, நன்றாக சிந்தித்து பார், வெறும் இரண்டு லட்சம் வாங்கிக் கொண்டு இவ்வளவு பெரிய தொகை தருவது சாத்தியமா?” ரவி கேட்க

“ஆமாண்டா இனியா, இணையத்துல இப்படி எல்லாம் நிறைய திருட்டுத்தனம் நடக்குதுடா, உண்மையான சான்றிதழ் மாதிரியே கல்லூரி சான்றிதழ் முதற் கொண்டு அச்சடிச்சி தராங்கடா.., எதுக்கும் வேற யாரையாவது நல்லா தெரிந்தவங்களை கேட்டுக்கடா” மலர் கெஞ்சினான்

“நீங்கல்லாம் எதிர்மறையாவே யோசிக்கிறீங்கடா, நான் அதுக்கெல்லாம் தயாரில்லை, எனக்கு நம்பிக்கை இருக்கு, வெள்ளைக்காரன் ஆங்கிலத்தில் பேசினான், ஜெனுன் பிரின்ட் சான்றிதழ் வந்திருக்கு, இன்னும் என்னடா வேணும், நம்பினா தாண்டா வாழ்க்கை. எனக்கு இதுல நம்பிக்கை இருக்கு ரவி, முழு நம்பிக்கை இருக்கு. இது மட்டும் நடந்துட்டா, இதை வைத்து எத்தனை பேரோட கண்ணீரைத் துடைப்பேன் தெரியுமா? மொத்த ஏழ்மை இளைஞர்களையும் தத்தெடுத்துக்குவேண்டா, பெரிய பெரிய ஆளா ஆக்குவேன். நூறு இளைஞர்களை சுயமா அவுங்க கால்ல நின்னு உழைக்கிற அளவுக்கு உருவாக்கி அவர்கள் மூலமா ஆயிரம் ஆயிரம் பேருக்கு என்னால வேலை கொடுக்க முடியும்டா ரவி. எனக்கு ஒரு பெரிய கனவு இருக்குடா.. யாரும் எழ்மையா இருக்கக் கூடாது. சாப்பாடுக்காக பொய் சொல்லக் கூடாது. துணிக்காக பொருளுக்காக ஆசைப்பட்டு அடுத்தவன் பொருளை திருடக் கூடாது. என்னால அவனை மாதிரி இருக்க முடியலையேன்னு பொறாமை பட்டு வஞ்சம் வளர்த்து கொலைவரை ஒருவனை ஏழ்மை கொண்டுபோயி விட்டுடக் கூடாது. எரியுற ஏழ்மை நெருப்பு தணல் விட்டு வீட்டின் கூரைவரை எரியறதாலதான் ‘இன்னைக்கு யாரை பார்த்தாலும் கிடைக்கிறத சுருட்ட தயாராயிட்டாங்க. அதலாம் ஒழிக்கனும்னா, அவர்களுக்கு உழைப்பை கொடுக்கணும்டா, உழைத்து சுயமா சம்பாரித்துக்கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கனும். கட்டுக் கட்டா பணத்தை சுயமா சம்பாரித்து பார்த்துட்டா பிறகு பிறர் பொருள் மேல ஆசை வருமா? நம்மால் முடிந்த ஆயிரம்பேரை அப்படி உருவாக்குவோம், அந்த ஆயிரம் பேர் கிட்டயும் அவர்கள் மூலமா அதுபோல யாரேனும் ஒரு ஏழை மாணவனையாவது படிக்க வைக்க, பெரியாளாக்கி விட வாக்குறுதி வாங்கிக்குவோம், அதே கணக்குல ஒரு ஐம்பது; நூறு; வருடம் தாண்டிபாரு, அடுத்த தலைமுறைக்கு பசி இருக்குமா?? பஞ்சம் இருக்குமா?? அதுக்கு இந்த தொகை வேணும்டா.. வேணும் கண்டிப்பா வேணும்”

எல்லோர் வாயையும் தன் கனவுகளால் அடைத்தான் இனியன். நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது, அதை ஈடு செய்ய தக்க பாதையும் தேவை என்பதை மட்டும் சிந்திக்க அவகாசமின்றி போனது இனியனுக்கு. அவரவர் அவரவரால் இயன்றதை சேகரித்துக் கொடுத்தார்கள். இனியன் கடைசியாக தன் அம்மாவிடம் கெஞ்சி கேட்க, அவள் வார வட்டிவிடும் கந்துவட்டி கடையில் பேசி என் மகன் தொழில் துவங்கப் போகிறானென்று சொல்லி ஐம்பதாயிரம் வாங்கித் தருகிறாள்.

மொத்தப் பணமும் சேர்த்து இரண்டு லட்சத்தையும் அவர்கள் சொன்ன பேங்காக் வங்கிமுகவரிக்கு அனுப்பப் படுகிறது. இனியனுக்கு ஏக சந்தோஷம். எப்படியும் இரண்டு நாளில் பணம் கைக்கு வந்து விடும். எப்படியும் பத்திரிகைகளுக்கெல்லாம் தெரிந்து பேட்டியெல்லாம் எடுப்பார்கள். ஒரு பாதி தொகையை ‘பொதுசேவை மையங்களுக்கு தருவதாகவும் மீதி தொகையை வைத்து முழுக்க முழுக்க படித்து வேலை தேடும் இளைஞர்களை வைத்து தொழில் துவங்கப் போவதாகவும் பேட்டியில் சொல்லலாம்.

“மச்சான் பணம் வந்த உடனே ஒரு பெரிய கார் வாங்கி அதுல ஒரு சீட்டு முழுக்கக் பீரா வாங்கி அடுக்குறோம்டா.. ஒரு ஒரு வாரத்திற்கு சலிக்கிற வரையும் குடிக்கிறோம், ஆட்டம் போடுறோம், குடிக்கிறோம் ஆட்டம் போடுறோம்.. என்ன மச்சி சொல்ற..” அழகன் இனியனிடம் சொல்லி விட்டு திரும்பி ரவியை கேட்க..

“அதுலையே இருக்காதடா அழகா, உன் பணத்துல குடிச்சாலே எனக்கு பிடிக்காது, இதுல நான் வேற வாங்கித் தருவேனா.. ஆசை தான் உனக்கு. இந்த பணத்துல ஒரு காசு கூட நமக்கு சுயதேவைக்காக எடுக்க போறதில்ல”

“நீ எடுக்காத.., எங்களுக்குக் கொடு..அதலாம் நாங்க பார்த்துக்குறோம்”

“நீங்க வேற நான் வேறையா? அதில்லடா அழகா, நான் சொல்வது அப்படியில்லை, இந்த பணம் நாம் சம்பாரித்த பணமில்லைதானே. நமக்குக் கிடைக்கப் போற பணம்தானே, அதுல பிறருக்கு கொடுக்க உரிமை இருக்கே தவிர நமக்கு அனுபவிக்க எந்த உரிமையும் கிடையாது. வேணும்னா இதை வைத்து நாமும் சம்பாதிப்போம், நம்மலால பிறரையும் சம்பாதிக்க வைப்போம், அதுக்கப்புறம் உன் பணத்துல நீ ஆட்டம் போடு நானும் கூட சேர்ந்து போடுவேன்..”

கனவுகள் சுகமாயினும், கனவுகள் நல்லதாயினும், கனவுகள் கனவுகள் தானே. இனியன் மிக நல்ல கனவு கண்டான். பணம் அனுப்பியதிலிருந்து ஒவ்வொரு நொடியும் கனவுகளோடு வாழ்வினை வெல்லும் பொழுதிற்காய் காத்திருந்தான். என்னதான் நாமாக ஆயிரம் கற்பனை லட்சியமென கோட்டைகளை கட்டிக்கொண்டாலும் ‘எது நடக்க இருக்கிறதோ அதுவே நடத்தப் படுகிறது. அந்த நியதியின் படி ஏற்பட்ட தாமதம் இனியனுக்கு மெல்ல மெல்ல பயத்தை தந்தது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடி காத்திருப்பும் வலித்தது இனியனுக்கு. நடக்கும் என்பதை தவிர வேறொன்றுமே நினைக்க தயாராகயில்லை என்றாலும் ஒரு பயம் மனதை கவ்வியது.

வாழ்வில் பொதுவாக நாம் எல்லோருமே என்னதான் திடமான நம்பிக்கை வைத்திருந்தாலும் அது சரியான நம்பிக்கையாகவும் இருத்தல் வேண்டும். இதை இனியன் சிந்திக்க தவறி விட்டான். நாட்கள் ஒன்றாய் இரண்டாய் நகர ஆரம்பித்தது. பணம் பெற்ற இடத்திலிருந்து ஒரு தகவலும் வரவில்லை. ஒரு நாளைக்கு ஆயிரம் முறை அழைத்தவன் இப்போது ஒருமுறை கூட அழைக்கவில்லை. நண்பர்கள் மெல்ல மெல்ல நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தார்கள். அலசி ஆராய்ந்து ‘சில இணையதளம் தரும் வசதி மூலம் தமிழகத்திலிருந்து உலகத்திற்கு எங்கு வேண்டுமாயினும் குறைந்த கட்டணத்தில் அழைக்கவும், அங்ஙனம் அழைக்கையில் பக்கத்து வீட்டு நபருக்கு அழைத்தாலும் வெளிநாட்டு அழைப்பு போல தான் அலைபேசியில் காட்டும், அழைப்பவரின் தொடர்பு எண்ணினை காட்டாது என்பதையும் கண்டுகொண்டார்கள். தகவல் அறிந்து அம்மா பதறி போனாள். பயந்தாள். ஒரு லட்சம் தங்கையின் கல்யாண பணத்தை வாங்கித் தந்த நண்பனின் அப்பா வீடுவரை வந்து சத்தம் போட்டுவிட்டுப் போனார். காவலில் தெரியப் படுத்துங்களில்லையேல் நான் தெரிவிப்பேன் என்று எச்சரிக்கை செய்தார்.

இனியனுக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. எத்தனையோ மின்னஞ்சல்களை அவர்களுக்கு அனுப்பி வைத்தும் பதிலில்லை. அவர்கள் அழைத்த தொடர்பு எண்ணில் அழைக்க முயன்றாலும் அத்தனை எண்களுமே தற்காலிகமாக அனைத்து வைக்கப் பட்டிருப்பதா தகவல் வந்தது.

கனவெல்லாம் கண்முன் வந்து தன்னை சுட்டு எரிந்தாலும் நம்பிக்கை கொண்டான் இனியன். இன்னும் சற்று அவகாசம் கொள்ளவேண்டும்போல் எண்ணினான். எப்படியும் பணம் வந்துவிடுமென்றே நம்பினான். நடக்காது என்பதை மட்டும் அவனால் நினைக்கவே முடியவில்லை. நடந்தேயாகவேண்டுமெனும் ஒரு தீவிர சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுப் போனான். அவன் நம்பிக்கை ஒருவிதத்தில் மட்டும் வீண்போகவில்லை. மூன்று நாள் நான்காகி, நான்கு ஐந்தாகி, ஐந்து ஒரு வாரமாக கடந்த பின், வாரம் இரண்டு மூன்றாக நகர்ந்த பின் ஒரு மின்னஞ்சல் வந்தது அவர்களிடமிருந்து.

தான் அனுப்பிய பணம் கிடைத்ததாகவும், மிக்க மகிழ்வென்றும், பணத்தை பேங்காக் வங்கியிலிருந்து அந்த உலகவர்த்தக மையம் எடுத்து விட்டதாகவும், இன்னும் ஒரே நாளில் மொத்த தொகையையும் இவன் கணக்கிற்கு மாற்றிவிடுவதாகவும், உடனடியாக அதை செய்வதற்கான சம்பளமாக ரூ பத்து லட்சம் அனுப்பிவைக்க வேண்டுமென்றும் அனுப்பாவிட்டால் அனுப்பிய பணத்திற்கு நாங்கள் பொறுப்பில்லை என்றும் அந்த மின்னசல் கூறிமுடிய, கணினியை எடுத்து உடைத்துப் போடவேண்டும் போல் இருந்தது இனியனுக்கு.

உடனடியாக அந்த மின்னஞ்சலோடு குறிப்பிடப் பட்டிருந்த தொலைபேசி எண்ணினை கையில் குறித்துக் கொண்டு ஓடினான். ஓடி ஒரு தொலைதொடர்பு கடைக்குள் நுழைந்து, அவசரம் அவசரமாக அழைத்தான். எதிர்முனையில் யாரோ தொலைபேசியை எடுத்து ‘ஹலோ…. திருநெல்வேலி அல்வா கடையிலிருந்து பேசுறோம் யார்வேனும்’ என்றார்கள். பகீரென்றானது இனியனுக்கு.

“என்னங்க இது பேங்காக் இல்லையா?!!!”

“பேங்காக்கா?????? ஏம்ப்பா இது பேக்கரிப்பா, திருநெல்வேலி அல்வா விக்கிற பேக்கரி, தொடர்பு எண்ணை ஒழுங்க பாரு போனை வைய்யீ………”

இனியனின் கையிலிருந்த தொலைபேசி அனிச்சையாக தவறி கீழே விழுந்துவிட்டது!

—————————வித்தியாசாகர்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

திருநெல்வேலி அல்வாவும் பலகோடி பணமும்!! Empty Re: திருநெல்வேலி அல்வாவும் பலகோடி பணமும்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 10, 2010 11:01 am

:héhé: மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum