தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் எழுத்துருவின் தோற்றம்

4 posters

Go down

தமிழ் எழுத்துருவின் தோற்றம்  Empty தமிழ் எழுத்துருவின் தோற்றம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 10, 2010 5:20 pm

குடும்பம்: பிராமி
இடம்: தென்னாசியா
காலம்: கி.பி 8 ஆம் நூற்றாண்டிலிருந்து - தற்காலம் வரை

தமிழ் எழுத்துக்கள் கிரந்தா எழுத்துக்களில் இருந்து தோன்றியது. கிரந்தா மொழி தென்னாசியாவை சேர்ந்தது. சிறப்பம்சம் என்னவென்றால்: தமிழ் மொழி, தென்-இந்தியாவின் ஆதி மொழிகளில் ஒன்று ஆகும். முதலாம் நூற்றாண்டிற்கு முன்பு தென்னிந்திய மக்கள் கிரந்த எழுத்து முறைகளை பாவித்தார்கள். பிற்காலங்களில் அதிலிருந்து தழுவி தமிழ் எழுத்து உருவாகியது. தமிழ் மொழி திராவிட மொழிகளை சேர்ந்தது.
நன்றி தமிழ்கிறைஸ்ட்

தமிழ் எழுத்துருவின் தோற்றம்  Tamil

கடைசி வரியிலுள்ள ஆறு எழுத்துக்களும் சமஸ்கிருதத்திலிருந்தும் அதனை அண்டிய எழுத்துக்களிலிருந்தும் .
எடுத்தது. ஒரு சில தமிழ் எழுத்துக்கள் வௌ;வேறு விதமான ஒலி-வடிவங்களையுடையது.
உதாரணம்:
KA, GA ,HA
CHA, SA
THA, DA
PA, BA
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் எழுத்துருவின் தோற்றம்  Empty Re: தமிழ் எழுத்துருவின் தோற்றம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 10, 2010 5:23 pm

இலக்கணம்

மொழிக்கு அழகைக் கொடுப்பது இலக்கணம். ஒரு மொழியை சரியாக எழுத, பேச மற்றும் படிக்க வகுத்துள்ள கோட்பாடுகளே இலக்கணமாகும், இது மொழிச் சிதைவை தவிற்க்கும்.

தோற்றம்: இலக்கணம் என்பது தோன்றியபின்னரே இலக்கியங்கள் மற்றும் நூல்கள் தோன்றின என்பது தவறான கருத்து. ஒரு மொழி நன்கு பலராலும் பயண்படுத்தப்பட்டபின்பே அந்த மொழிக்கு இலக்கணத்தின் முக்கியத்துவம் அதிகமாகும். அது போலவே தமிழ் மொழிக்கான இலக்கணமும், பல இலக்கியம் மற்றும் நூல்களின் தோற்றத்திற்க்குப் பிறகே தோன்றியது. மொழியின் முந்தய பேச்சு வழக்கு, எழுத்துப்படைப்புகள் அராயப்பட்டு உருவாக்கப்படும் கோட்பாடுகளே இலக்கணமாகும்.

எதற்க்கு? மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுவது மொழி மற்றும் செய்கை. ஒருவருடைய செய்கைக்கான காரணமும், மற்றவருடைய செய்கைக்கான காரணமும் வேறுபடலாம், அது போலவே மொழியிலும். இதன் காரணமாக ஒருவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் போது மற்றவர் வேறு விதமாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது, இந்த மொழி இடைவெளியை தவிற்க்க மொழிக்கு இலக்கணம் இன்றியமையாதது. மொழியை அறிந்து, பயண்படுத்திக்கொண்டிருப்பவருக்கே இலக்கணம் தேவைப்படும்போது, வேற்று மொழி அறிந்தவர்கள் புதிதாக மொழியை படிக்கும் போது இலக்கணம் மிக முக்கியமானதாக இருக்கிறது. பேச்சு வழக்கில் மொழி பல பரிமானங்கள் மேற்கொள்ளும், இதன் காரணமாக ஒரு சாரருக்கு அம்மொழி புரியாமல் போவதற்க்கு பல வாய்ப்புகள் உள்ளன, இருப்பினும் அம்மொழி எழுத்தில் ஒரு பரிமானத்தில் மட்டுமே நிற்க்கும் தன்மை. இதற்க்கு காரணம் மொழியின் இலக்கணம் மட்டுமே.

கட்டாயமா? இலக்கணத்தை அப்படியே பின்பற்றவேண்டியதில்லை. இலக்கணம் என்பது வழிகாட்டி, வழிகாட்டியின் கருத்துகளை ஏற்று நம் தேவைகளை உணர்ந்து பயணத்தைத் தொடரலாம். இலக்கணத்தில் இருந்து முழுமையாக விலகாமல் நம் தேவைக்கேற்ப்ப இலக்கணத்தையொட்டி செல்லுதல் நன்மை. இலக்கணம் என்பது ஒருமுறை இயற்றப்பட்ட சட்டம் அல்ல, காலப்போக்கில் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாரு அம்மொழியின் அறிஞர்களால் மற்றியமைக்கப்படும்.

தமிழ் இலக்கணம்: தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் என மூன்று பாகுபாடுகளை உடையது. இவையே முத்தமிழ் என போற்றபட காரணமாக விளங்குகிறது. அகத்தியம், முத்தமிழுக்க்கும் உரிய இலக்கண நூல் என நம் முன்னோர் கூறுவர். முத்தமிழுக்கும் இலக்கணம் இருப்பினும், பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிக்கிறது. இயற்றமிழ் என்பது செய்யுள் மற்றும் உரைநடையின் உள்ளடக்கமாகும். தொல்காப்பியம் இயற்றமிழின் முதல் இலக்கண நூலாகும்.

பிரிவுகள்: தமிழிலக்கணம், அறிஞர்களின் பார்வையில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
மூன்று இலக்கணம்: எழுத்து, சொல் மற்றும் பொருள்.
ஐந்திலக்கணம்: எழுத்து, சொல், பொருள், அணி மற்றும் யாப்பு.
ஆறு இலக்கணம்: எழுத்து, சொல், அகப்பொருள், புறப்பொருள், அணி மற்றும் யாப்பு.
ஏழு இலக்கணம்: எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு, செய்யுளிலக்கணம் மற்றும் பாட்டியலிலக்கணம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் எழுத்துருவின் தோற்றம்  Empty Re: தமிழ் எழுத்துருவின் தோற்றம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 10, 2010 5:31 pm

தமிழ் எழுத்துக்கள்


உயிரெழுத்து: அ, ஆ - இவை வேறோர் எழுத்தின் உதவியில்லாமல் தாமே இயங்குகின்றன. மனித உடலுக்கு உயிர் எத்தனை முக்கியமோ அதுபோலவே இயங்கும் அ, ஆ முதலிய பன்னிரண்டு எழுத்துக்களும் உயிரெழுத்துக்கள் எனப்படும்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ - உயிர் எழுத்துக்கள் 12

மெய்யெழுத்து: க், ங் - 'இக்', 'இங்' என உச்சரிக்கப்படும் 'க்' என்னும் எழுத்தை உச்சரிக்க உயிரெழுத்தின் உதவி தேவைப்படுகிறது. நமது மெய் (உடம்பு) இயங்குவதற்கு உயிர் தேவைப்படுவது போல 'க்' முதலிய எழுத்துக்களை உச்சரிக்க உயிர் எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. ஆதலால் 'க்' முதலிய பதினெட்டு எழுத்துக்களும் மெய்யெழுத்துக்கள் என்று சொல்லப்படும்.
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் - மெய்யெழுத்துக்கள் 18.

உயிர்மெய் எழுத்து: க என்னும் எழுத்தில் 'க்' என்னும் ஒலியும் 'அ' என்னும் ஒலியும் சேர்ந்திருக்கின்றன. அதாவது க(க்+ அ) - 'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் கூடிப் பிறந்த எழுத்தாகிறது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 x 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ - 12 இவ்வாறு உண்டாகும் உயிர் எழுத்துக்கள் 216.

ஆய்த எழுத்து: 'ஃ' இங்ஙனம் மூன்று புள்ளி வடிவமாக இருப்பது ஆய்த எழுத்து. இது அஃது இஃது எஃது என்றாற் போலச் சொல்லின் இடையில் வரும்.

தமிழ் எழுத்துருவின் தோற்றம்  Tamilletter

குறில்: அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் குறுகிய ஓசையுடையவை. ஆதலால் இவை குறில் எனப்படும்.

நெடில்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் எழுத்துக்களும் நீண்ட ஓசையுடையவை. ஆதலால் இவை நெடில் எனப்படும்.

வல்லினம்: க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறும் வலிய ஓசையுடையவை, ஆதலால் இவை வல்லினம் எனப்படும்.

மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறு எழுத்துக்களும் மெலிந்த ஓசையுடையவை, ஆதலால் இவை மெல்லினம் எனப்படும்.

இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறும் இடைத்தர ஓசையுடையவை, ஆதலால் இவை இடையினம் எனப்படும்.

தமிழ் எழுத்துருவின் தோற்றம்  Tamilletter2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் எழுத்துருவின் தோற்றம்  Empty Re: தமிழ் எழுத்துருவின் தோற்றம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 10, 2010 5:40 pm

சொல்
ஆ (பசு), வீடு, வண்டு - இங்ஙனம் ஓர் எழுத்துத் தனித்தோ இரண்டு முதலிய எழுத்துக்கள் தொடர்ந்தோ ஒரு பொருளைத் தெரிவிப்பது சொல் எனப்படும்.

பெயர்ச் சொல்: ஆ, வீடு, வண்டு - இவற்றுள் ஒவ்வொன்றும் ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்லாதலால் பெயர்ச் சொல் எனப்படும்.

வினைச்சொல்: கண்டான், கண்டு, கண்ட - இவ்வாறு ஒன்றன் வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

திணை: உலகத்து உயிர்களுள் விலங்கு, பறவை, நீர்வாழ்வன, ஊர்வன என்றும் உயிர்களைவிட மனிதன் பேராற்றல் படைத்தவனாக இருக்கின்றான். எனவே, மனிதன் மற்ற உயிர்களைவிட மேலானவனாகின்றான். இவ்வாறே நம் கண்ணுக்குத் தெரியாத தேவரும் நரகரும் உயர்ந்தவர் என்று நூல்கள் கூறுகின்றன. ஆகவே மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். இப்பிரிப்பு இன்றளவும் இலக்கணத்தில் கூறப்படுகிறது.
உயர்திணை: மக்கள், தேவர், நரகர்.
அஃறிணை: பிற உயிர் உள்ளனவும் இல்லனவும்.



பால்:
பால் பிரிவுகள்: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால் மற்றும் பலவின்பால்.
உயர்திணை பால்கள்
ஆண்பால்: கண்ணன், பாண்டியன், பையன்.
பெண்பால்: கண்ணகி, அரசி, பெண்.
பலர்பால்: அரசர்கள், மக்கள், பெண்கள்.
அஃறிணை பால்கள்
ஒன்றன் பால்: பசு, கிளி, பாம்பு, தவளை, மலை, மரம்.
பலவின்பால்: பசுக்கள், கிளிகள், பாம்புகள், தவளைகள், மலைகள், மரங்கள்.



எண்: பொருள்களின் எண்ணிக்கை. ஒன்றைக் குறிப்பது ஒருமை, ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை.
ஒருமை எண்: கந்தன், கற்பகம், மாடு, நான், நீ, அவன், அவள், அது.
பன்மை எண்: பெண்கள், பிள்ளைகள், மாடுகள், நாம், நீர், அவர்கள், அவை.



இடம்:
தன்மை இடம்: ஒரு வாக்கியத்தில் பேசுபவரைக் குறிப்பது தன்மை இடம்.
முன்னிலை இடம்: ஒரு வாக்கியத்தில் கேட்பவரைக் குறிப்பது முன்னிலை இடம்.
படர்க்கை இடம்: ஒரு வாக்கியத்தில் பேசப்படுபவரைக் குறிப்பது படர்க்கை இடம்.



வேற்றுமை: வேற்றுமை எட்டு வகைப்படும்.
முதல் வேற்றுமை: இயல்பான பெயர். கண்ணன் வந்தான்.
இரண்டாம் வேற்றுமை: ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு. கண்ணனைக் கண்டேன்.
மூன்றாம் வேற்றுமை: ஆல், ஓடு, உடன் - மூன்றாம் உருபுகள். கண்ணனால் அழைக்கப்பட்டேன். கண்ணனோடு சென்றேன். கண்ணனுடன் வந்தேன்.
நான்காம் வேற்றுமை: கு - நான்காம் வேற்றுமை உருபு. கண்ணனுக்குத் திருமணம்.
ஐந்தாம் வேற்றுமை: இல், நின்று, இருந்து - ஐந்தாம் வேற்றுமை உருபுகள். கண்ணனில் கந்தன் பெரியவன். கண்ணன் வீட்டினின்று சென்றான். கண்ணன் மரத்திலிருந்து இறங்கினான்.
ஆறாம் வேற்றுமை: அது, உடைய - ஆறாம் வேற்றுமை உருபுகள். இது கண்ணனது பை. இவை கண்ணனுடைய பைகள்.
ஏழாம் வேற்றுமை: இல், இடம், கண் - ஏழாம் வேற்றுமை உருபுகள். பையில் பணம் இருக்கிறது. கண்ணனிடம் கத்தி இருக்கிறது. வீட்டின் கண் விருந்தினர் இருக்கின்றனர்.
விளி வேற்றுமை: பெயர் கூறி ஒருவனை அழைத்தலே எட்டாம் வேற்றுமை எனப்படும். அழைத்தல் - விளித்தல். இது விளி வேற்றுமை என்றும் சொல்லப்படும்.

தமிழ் எழுத்துருவின் தோற்றம்  Tamilletter3

நன்றி தமிழ் கிறைஸ்ட்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தமிழ் எழுத்துருவின் தோற்றம்  Empty Re: தமிழ் எழுத்துருவின் தோற்றம்

Post by வ.வனிதா Tue Jan 04, 2011 8:03 pm

தமிழுக்கு ஓர் அகராதி கொடுத்து புகழ் பெற்று விட்டீர் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

தமிழ் எழுத்துருவின் தோற்றம்  Empty Re: தமிழ் எழுத்துருவின் தோற்றம்

Post by அரசன் Tue Jan 04, 2011 8:14 pm

வாழ்த்துக்கள் நண்பா ... தொடரட்டும் உங்கள் அரும்பணி ./...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தமிழ் எழுத்துருவின் தோற்றம்  Empty Re: தமிழ் எழுத்துருவின் தோற்றம்

Post by கவிக்காதலன் Tue Jan 04, 2011 9:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தமிழ் எழுத்துருவின் தோற்றம்  Empty Re: தமிழ் எழுத்துருவின் தோற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum