தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம்
5 posters
Page 1 of 1
திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம்
அன்பு உறவுகளே ........
திருக்குறளுக்கு இதுவரையிலும் 200க்கும் மேற்பட்ட விளக்கவுரைகள் உள்ளன ...ஆனால் எளிய வெண்பாவில் ..அனைவருக்கும் / குழந்தைகளுக்கும் மிக எளிதாய்ப் புரியும் வண்ணம் விளக்கக் குறள்கள் அமைத்தாலென்ன என்றுதோன்றிய ஒரு சிறு பொறியின் விளைவுதான் இந்த இழை ..
1330 விளக்கக் குறள்கள் அமைத்து விட்டேன் ...அறிஞர்கள் பார்வைக்கு சமர்ப்பித்து .. நூல் வடிவாக்கம் நடந்து கொண்டிருக்கிறது
2000 ஆண்டுகளில் இது முதல்முயற்சியாகவும் இருக்க வாய்ப்புண்டு ..
தாங்களின் மேலான கருத்துக்களைப் பெற ....அதிகாரத்துக்கு ஒன்றென மாதிரிக் குறள்களை உங்கள்முன் பணிக்கிறேன் .....
தாங்களின் மேலான கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்......
திருக்குறள் : அறத்துப்பால்
அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு [01:01]
விளக்கக் குறள் :
அகரம் முதலாம் மொழிக்கு; பகவான்
பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு
அதிகாரம் 02 : வான் சிறப்பு
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால் [02:04]
விளக்கக் குறள் :
வாரி வழங்காது மாரி குறையுமிடம்
ஏரின்றி வாடும் நிலம்
அதிகாரம் 03 : நீத்தார் பெருமை [துறவின் பெருமை]
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து [03:04]
விளக்கக் குறள் :
உறுதியென்னும் அங்குசத்தால் ஐம்புலனும் காப்போர்
துறவென்னும் ஞாலத்து வித்து
அதிகாரம் 04 : அறன் வலியுறுத்தல்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. [04:04]
விளக்கக் குறள் :
அகத்தூய்மை நல்லறமாம்; மற்றவை எல்லாம்
பகட்டும் புரட்டுமா கும்
அதிகாரம் : 5 இல்வாழ்க்கை
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து [05:08]
விளக்கக் குறள் :[/u]
அறவழியில் வாழ்ந்து வழிநடத்தும் வாழ்க்கை;
துறவறத்தின் மேன்மை தரும்
அதிகாரம் 06: வாழ்க்கைத்துணை நலம்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை [06:05]
விளக்கக் குறள் :
கணவனை மட்டுமே தெய்வமாய்ப் போற்றுபவள்;
வாழவைக்கும் வான்மழைப் போன்று
அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு :..
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் [07:09]
விளக்கக் குறள் :
பேருவகை கொள்வாள்; மகனை நல்லதாய்
ஊரார்சொல் லக்கேட்ட தாய்
அதிகாரம் 8 : அன்புடைமை :..
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் [08:01]
விளக்கக் குறள் :
அன்புக்கும் உண்டோ அணையிங்கு; ஓர்துளி
கண்ணீர் அறிவிக்கும் அன்பு
அதிகாரம் 009 : விருந்தோம்பல்
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம் [09:05]
விளக்கக் குறள் :
வித்தின்றி வேர்விடும்; தன்விருந்தின் எஞ்சிய
மிச்சம் புசிப்போர் நிலம்
அதிகாரம் 010 : இனியவை கூறல்
அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் [10:02]
விளக்கக் குறள் :
அகம்குளிர்ந்(து) அள்ளிக் கொடுப்ப திலுமோர்
முகமலர்ந்த இன்சொல் சிறப்பு
தொடரலமா ??...
திருக்குறளுக்கு இதுவரையிலும் 200க்கும் மேற்பட்ட விளக்கவுரைகள் உள்ளன ...ஆனால் எளிய வெண்பாவில் ..அனைவருக்கும் / குழந்தைகளுக்கும் மிக எளிதாய்ப் புரியும் வண்ணம் விளக்கக் குறள்கள் அமைத்தாலென்ன என்றுதோன்றிய ஒரு சிறு பொறியின் விளைவுதான் இந்த இழை ..
1330 விளக்கக் குறள்கள் அமைத்து விட்டேன் ...அறிஞர்கள் பார்வைக்கு சமர்ப்பித்து .. நூல் வடிவாக்கம் நடந்து கொண்டிருக்கிறது
2000 ஆண்டுகளில் இது முதல்முயற்சியாகவும் இருக்க வாய்ப்புண்டு ..
தாங்களின் மேலான கருத்துக்களைப் பெற ....அதிகாரத்துக்கு ஒன்றென மாதிரிக் குறள்களை உங்கள்முன் பணிக்கிறேன் .....
தாங்களின் மேலான கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்......
திருக்குறள் : அறத்துப்பால்
அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு [01:01]
விளக்கக் குறள் :
அகரம் முதலாம் மொழிக்கு; பகவான்
பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு
அதிகாரம் 02 : வான் சிறப்பு
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால் [02:04]
விளக்கக் குறள் :
வாரி வழங்காது மாரி குறையுமிடம்
ஏரின்றி வாடும் நிலம்
அதிகாரம் 03 : நீத்தார் பெருமை [துறவின் பெருமை]
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து [03:04]
விளக்கக் குறள் :
உறுதியென்னும் அங்குசத்தால் ஐம்புலனும் காப்போர்
துறவென்னும் ஞாலத்து வித்து
அதிகாரம் 04 : அறன் வலியுறுத்தல்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. [04:04]
விளக்கக் குறள் :
அகத்தூய்மை நல்லறமாம்; மற்றவை எல்லாம்
பகட்டும் புரட்டுமா கும்
அதிகாரம் : 5 இல்வாழ்க்கை
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து [05:08]
விளக்கக் குறள் :[/u]
அறவழியில் வாழ்ந்து வழிநடத்தும் வாழ்க்கை;
துறவறத்தின் மேன்மை தரும்
அதிகாரம் 06: வாழ்க்கைத்துணை நலம்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை [06:05]
விளக்கக் குறள் :
கணவனை மட்டுமே தெய்வமாய்ப் போற்றுபவள்;
வாழவைக்கும் வான்மழைப் போன்று
அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு :..
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் [07:09]
விளக்கக் குறள் :
பேருவகை கொள்வாள்; மகனை நல்லதாய்
ஊரார்சொல் லக்கேட்ட தாய்
அதிகாரம் 8 : அன்புடைமை :..
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் [08:01]
விளக்கக் குறள் :
அன்புக்கும் உண்டோ அணையிங்கு; ஓர்துளி
கண்ணீர் அறிவிக்கும் அன்பு
அதிகாரம் 009 : விருந்தோம்பல்
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம் [09:05]
விளக்கக் குறள் :
வித்தின்றி வேர்விடும்; தன்விருந்தின் எஞ்சிய
மிச்சம் புசிப்போர் நிலம்
அதிகாரம் 010 : இனியவை கூறல்
அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் [10:02]
விளக்கக் குறள் :
அகம்குளிர்ந்(து) அள்ளிக் கொடுப்ப திலுமோர்
முகமலர்ந்த இன்சொல் சிறப்பு
தொடரலமா ??...
DURAIAN- புதிய மொட்டு
- Posts : 71
Points : 144
Join date : 31/10/2009
Re: திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம்
:héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம்
வாழ்த்துகள்
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம்
உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்....
dsudhanandan- புதிய மொட்டு
- Posts : 36
Points : 49
Join date : 02/03/2011
Re: திருக்குறளுக்கு புதுகுறளால் விளக்கவுரை - அறம் 1-10 /இது..2000 ஆண்டுகளில் முதலாய் இருக்கலாம்
சிங்கார தமிழனின் தமிழ் பற்றை எண்ணி வியக்கிறேன். வாருங்கள் குறட்பாக்களின் இன்சுவை பருகுவோமென அன்புடன் தந்தமைக்கு அன்பு நன்றிகள். திறமை வெளிபடுத்தப்படவேண்டும். வாழுத்துக்கள். தொடருங்கள் உங்களின் பயணத்தை.
mravikrishna1- புதிய மொட்டு
- Posts : 29
Points : 47
Join date : 02/06/2011
Similar topics
» அறம் காக்க ஆர்த்தெழு
» முதன் முதலாய்... பெண்கள்...!
» அரை வேக்காடில் ஓர் அறம்...
» அறம் – கவிதை
» அறம் - கவிஞர் இரா. இரவி
» முதன் முதலாய்... பெண்கள்...!
» அரை வேக்காடில் ஓர் அறம்...
» அறம் – கவிதை
» அறம் - கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum