தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ ஆற்றுப்படை நூல் விமர்சனம் முனைவர் ,பேராசிரியர் இராம .குருநாதன்

2 posters

Go down

ஹைக்கூ ஆற்றுப்படை   நூல் விமர்சனம் முனைவர் ,பேராசிரியர் இராம .குருநாதன்  Empty ஹைக்கூ ஆற்றுப்படை நூல் விமர்சனம் முனைவர் ,பேராசிரியர் இராம .குருநாதன்

Post by eraeravi Sat Jul 16, 2011 5:30 pm

ஹைக்கூ ஆற்றுப்படை

நூல் விமர்சனம் முனைவர் ,பேராசிரியர் இராம .குருநாதன்

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ வடிவக் கவிதை வளர்ச்சி மலரும் புலர் பொழுதுகளில் இருந்து விடுபட்டு மெலிந்து போய்விட்ட உணர்வு இருந்து வருகிறது .அந்தக் கவலை நீங்கும் நாள் எந்நாளோ என்று நினைக்கையில் ஊட்டச்சத்தாக வெளிவந்து இருப்பது கவிஞர் இரா .இரவி எழுதியுள்ள
ஹைக்கூ ஆற்றுப்படை என்னும் நூலாகும் .ஒரு படைப்பாளியை இன்னோரு படைப்பாளி நன்கு அறிந்து கொள்வது இயல்புதானே .ஹைக்கூ கவிஞரான கவிஞர் இரா .இரவி தன்னொத்த ஹைக்கூக் கவிஞர்களின் படைப்புகளைத் திறம்பட திறனாய்வு செய்துள்ளார் .
கவிஞர் ஒவ்வொரு நாளையும் கூர்ந்தறிந்து தமக்கே உரிய பாணியில்
மதிப்பீடு செய்துள்ளார்.படைப்பாளிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையில் தம் கண்ணோட்டங்களை நடுநிலையோடு திறனாய்கிறார்.படைப்பாளி ஒரு நல்ல சுவைஞனாக இருக்கும் நிலையில் இது சாத்தியமே .கவிஞர் இரா .இரவிதாம் படித்துச் சுவைத்திருக்கும் நூல்களில் இருந்து திரட்டித் தந்துள்ள பாடல்களும் ,அவற்றின் மீதான கருத்தோட்டங்களும் அவர் நுனிப்புல் மேய்பவர் அல்லர்என்பதனை நிலைநாட்டும் .அவர் நுணுகி ஆய்ந்து சுவைத்த ஹைக்கூ மேற்கோள்கள் அனைவரையும் ஈர்க்கச் செய்யும் .ஹைக்கூ என்றால் என்ன என்பதனை எளிமையான விளக்கத்தால் சொல்லி அதற்கானஎடுத்துக்காட்டைச் சுவைபடத் தந்துள்ளதைப் பலவாறு புகழ்ந்துரைக்கலாம் .அமுதபாரதியின் ஹைகூகளைப் பற்றிச் சுருக்கமாகத் தொடக்கத்திலேயே குற்றால் அருவியில் குளித்து முடித்த இன்பம் கிடைக்கிறது .என்று சொல்லி நூலில் நுழையச் செய்கிறார் .கவிஞர் மு .முருகேஷ் எழுதிய நிலா முத்தம் என்னும் நூலினைச் சுவைத்த கவிஞர்,முழு நிலவு நாளன்று அமைதியாகத் தனிமையில் நிலவை ரசித்த இன்பத்தைத் தருகின்றதுஎன்று எழுதியுள்ளமை மு .முருகேஷ் கவிதைகளைப் படிக்கத் தூண்டும்.
இன்றைய சூழ்நிலையில் இயற்கையை இரசிக்க மனிதனுக்கு நேரம் இல்லாது போய் விட்டது .அதனை ஹைக்கூவிலாவது ரசிக்கலாமே என்ற தம் ஆதங்கத்தையும் ,ஆர்வத்தையும் சிபி எழுதியுள்ள மகரந்த ரகசியங்கள் என்ற நூலிற்கான மதிப்பீட்டை அழகுற மொழிந்து உள்ளதை ஏற்கும் அதே வேளையில் அந்த நூலாசிரியருக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்கிறார் .இன்வரும் காலங்களில் பட்டாம்
பூச்சி ,பனித்துளி தவிர்த்துப் பாடுங்கள் .நீங்களே நிறைவாகப் பாடி உள்ளீர்கள் .என்று கூறி இருப்பது ,அன்பின் பொருட்டே ,அது கூறியதாகாது . இயற்கைக் காட்சிகள் ஊடே வாழ்வியலை வடித்து வட்டிலில் வடிவதை
சிமிழுக்குள் செதுக்கும் வித்தையோடுமட்டும் விளங்கி நிற்பதில்லை இன்றைய ஹைக்கூப் பாடுபொருள்ஹைக்கூ இன்றைய நடப்பு நிலைகளையும் எடுத்துக் காட்டப் பயன் படுகிறது .ஹைக்கூ வடிவம் அதற்கும் அடிபணிந்துள்ளது .குறிஞ்சி பூக்கள் என்னும் வீ .தங்கராசுவின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இன்றைய நடப்பைச் சித்தரிக்கும் ஒரு ஹைக்கூ கவிஞர் இரவியால் அடையாளப் படுத்தப் பட்டுள்ளது .இது அந்த ஹைக்கூ .

தேர்தல் கமிசன் பெயரே சரியில்லை
தேர்தலுக்குப் பின் எல்லாமே
கமிசன் மயம்

இது வருவது உரைத்தலா ? வந்தது உரைத்தலா ? என்னும் அளவிற்கு இன்றிய நடப்பினைக் காட்டுகிறது .பரிமளம் சுந்தரின் ஆய்வேடான ஜப்பானிய -தமிழ் ஹைக்கூக் கவிதைகள் ஓர் ஒப்பாய்வு என்ற நூல் பற்றிய இரவியின் கருத்துக்கள் சரியான மதிப்பீடாகத் திகழ்கிறது .
ஹைக்கூ பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்குரிய செய்தியாக அவர் கூறி இருக்கும் கருத்தான ,ஹைக்கூ பற்றி குறைவான மதிப்பிடு உள்ளவர்கள் இந்நூலைப் படித்தால் மாறுவது உறுதி .என்று ஹைகுப் பற்றி மாறான கருத்துக் கொண்டோரை வசை பாடாமல் கனிவோடு கடிதோச்சும் பண்பினைக் கவிஞர் இரா .இரவி வசம் காண்கிறோம் .
கவிஞர் நாணற் காடனின் கவிதைத் தொகுப்பை கவிஞர் படித்ததும் எழுதுகிறார் .கடுகு சிறியதுதான் காரம் பெரிது .அது போல ஹைக்கூ வடிவம் சிறியதுதான்.அனால் தாக்கம் பெரிது .என்று சுட்டி இருப்பது ஹைக்கூ பற்றிய எளிய விளக்கம் .ம .ஞானசேகரனின் இரு ஹைக்கூ நூல்களை ரசித்து எழுதியுள்ள கருத்துக்கள் இனிமை .அருமை .தமிழ்மணி ,விநாயமூர்த்தி ,கவிமுகில் ,வசீகரன், கன்னிக்கோயில் ராஜா,தமிழ்நெஞ்சன்,அமரன் ஆகியோரது ஹைக்கூக் கவிதைகளில் மனம் பதித்துக் கவிஞர் இரா .இரவி உளந்தோய எழுதி உள்ள கருத்துக்கள் .அவர் ஒரு படைப்பாளி மட்டும் அல்ல ,நல்ல திறன் ஆய்வாளர் என்பதனை மெய்பிக்கும் .அதனை எண்ணிப் பெருமிதம் அடையலாம் .அந்த அளவிற்கு அவரது ஹைக்கூக் குறித்த மதிப்பீடுகள்நூலை உயர்த்துவன .பலரிடம் கொண்டு செல்லும் தூதுவனாக விளங்குவன .
ஆற்றுப்படை என்பதன் இலக்கணமே தாம் பெற்றதை அடித்தவருக்கு எடுத்துச் சொல்லி அவரும் தக்கவாறு பயன் கொள்ளச் செய்வதுதான் என்பதற்கு எடுத்துக்காட்டாக நூலின் தலைப்பினைத் தெரிவு செய்து இருப்பது போற்றுதற்குரியது




--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

ஹைக்கூ ஆற்றுப்படை   நூல் விமர்சனம் முனைவர் ,பேராசிரியர் இராம .குருநாதன்  Empty Re: ஹைக்கூ ஆற்றுப்படை நூல் விமர்சனம் முனைவர் ,பேராசிரியர் இராம .குருநாதன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 18, 2011 1:47 pm

வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் !
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !
» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum