தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் !
Page 1 of 1

ஹைக்கூ முதற்றே உலகு !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
மதிப்புரை பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன் !
வானதி பதிப்பகம்,23. தீனதயாளு தெரு தி.நகர், சென்னை. விலை ரூ 100.
[size]
ஹைகுவில் பல பரிமாணங்கள்
ஹைகு கவிதைகள் நீர்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள். வற்றியும் வற்றாதும் தென்படும் நீர்நிலை போல்தான், நல்ல ஹைகுகள்அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படுகின்றன. பல பொருண்மைகளைப் பல கோணங்களில் வெளிப்படுத்த ஏதுவாக இப்போது ஹைகுவடிவம். இன்று அதன் வடிவமும், பொருளும் காலமாற்றத்திற்குத் தகுந்தவாறு, மாறிக் கொண்டு வருவதனை இலக்கிய உலகில் கண்டுவருகிறோம்.
குஇயற்கையின் அனுபவம் போய்ச் சமுதாயத்தின் வெளிப்பாட்டிற்கு ஏற்ற வகையில் தமிழில் அவ்வடிவத்தைப் பதிவு செய்வதுபெருகிவிட்டது. இதனால் ஜப்பானிய மூலவேரிலிருந்து அந்நியப்பட்டு இருப்பதால் ஹைகுவைப் பற்றிய இரசனை அருகி வருவதுபோலத்தோற்றம் தருகிறது. அங்கும் கூட இப்போது எல்லாவற்றிற்குமான பாடுபொருளைச் சொல்வதற்குரிய வடிவமாக ஹைகு மாறிவிட்டிருக்கிறது.
ஹைகுவை உலக அளவில் எழுதிப் பார்த்த மேனாட்டுக்கவிஞர்கள் குறிப்பாக எஸ்ரா பவுண்ட் போன்றவர்களால் பிடிபடாத அவ்வடிவம்சிலருக்கே வாய்த்தது. அதில் சிலரே செவ்வி தலைப்பட்டனர். நம் பாரதி கூட ஹைகுவை முதன் முதலாகத் தமிழுக்குஅறிமுகப்படுத்தியதோடு நின்றுவிடாமல், கவிதை என்பது ஒரே அடியாகக் குறுகிப் போய்விடக்கூடாது என்ற சிந்தனையை முன்வைத்தவர் ஆவார்.
இன்றைய நிலையில் எல்லாமே சுருங்கிப் போய்விட்டது. முன்னணி இதழ்களே கூட ஒரு பக்கச் சிறுகதையை விரும்பி ஏற்கின்றன.மேனாடுகளில் கூடச் சிறுகதைகள் short –shorts என்று அழைக்கப்பட்டு வருவதையும், எழுதப்பட்டுவருவதையும் பார்க்கிறோம். பேண்ட்போடுவது ஒருவகை என்றால், வசதிக்காக அந்த வடிவத்திலும் குறுகி, 'ஷார்ட்' அணிவதைப் போலக் குறுகிவிட்டது.
தமிழில் இன்று ஹைகு வடிவம் பெருகிநிற்க இளைஞர்கள் பலர் காரணமாகின்றனர். அதீதமான ஈடுபாடுகொண்டு எழுதிவருகின்றனர்.கவிஞர் இரா. இரவி, நாம் அன்றாடம் காணும் வாழ்வியலை ஹைகு வடிவில் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரது அண்மைக் காலத்தியஇன்னொரு தொகுப்பு 'ஹைக்கு முதற்றே உலகு' என்னும் நூல். இருபத்தாறு தலைப்புகளில் இன்றைய பல்வேறு பாடுபொருள்களை இதில் பதிவு செய்துள்ளார். மற்றும் அதன் கிளைவடிவமாகத் தோன்றிய லிமரைக்கூ, பழமொன்றியூ, லிமர்பூன், துளிப்பா ஆகிய வடிவங்களிலும்எழுதியுள்ளார். கலாம் பற்றிய சில தகவல்களை ஹைகுவில் பதிவு செய்திருக்கும் கவிஞர், எளிய நடையில் அவரது பண்புகளை நாற்பதுஹைகுகளில் சொல்லியுள்ளார். இறுதி மூச்சு உள்ள வரை இயங்கிக்கொண்டே இருந்தவர் என்றும், எல்லோரையும் மதித்தவர், எல்லோரும்மதித்தவர் என்றும் சுட்டியிருப்பது உண்மையான பார்வை.
தன்னம்பிக்கை, இயற்கை, கலைகள், தமிழ், நண்பன், கலங்கரை விளக்கம், கண்ணீர், நீதி, அரசியல், புத்தகம், உணவு முதலானதலைப்புகளை ஹைகுவில் பதிவு செய்கிறார். கலையைப் பற்றிய பார்வையில் குழந்தையை இணைத்து,' எந்த ஓவியராலும் \வரையமுடியாது குழந்தை \ வரையும் ஓவியம் என்று எழுதுகிறார். இயற்கைக்கு அணியமாக உள்ள ஹைகுவில் 'குளத்தில் தன் அழகைரசித்தது மரக்கிளை' என்று கூறியுள்ளது ஹைகு வடிவத்தோடு பொருந்தவருவதோடு அசல் ஹைகுவாகவும் இருக்கிறது. இயற்கையைக்கடந்து வாழ்க்கை பற்றிய பார்வைக்கு நம்மை ஆட்படுத்தும் ஹைகுவாக.
மலர்கள் மாலையான
பின்னும் தொடரும்
வண்டுகள் !
என்றகவிதையும்,
புகைவரும்
நெருப்பின்றியும்
பனிமூட்டம் !
என்ற கவிதையும் பொருள் ஆழத்தை வாழ்க்கையோட்டத்தோடு விரித்துக்காட்டமுடியும். அழகு என்பது அவரவர் பார்வைக்குத் தகுந்தவாறு தெரியும் என்பதை ரோசாவோடும், செவ்வந்தியோடும்இணைத்துக்காட்டுகிறார். அறவியல் பேசும் ஹைகுகள் சில கண்ணீர்என்றதலைப்பில்சொல்லப்பட்டுள்ளன.
பிரார்த்தனையிலும் சிறந்தது
பிறர் கண்ணீர்
துடைப்பது !
என்ற கவிதை இதற்கு உதாரணம்.
மழை பற்றிய திருக்குறள் சிந்தனையைக் கவிஞர் உள்வாங்கிக்கொண்டு
பொய்த்தும் வாட்டியது;
பெய்தும்வாட்டியது
மழை என்கிறார்.
ஹைகு. பழமொன்றியுவில் வாழ்க்கையின் பல பரிமாணங்களைப் பதிவு செய்கிறார் கவிஞர். இன்றைய வாழ்க்கையில் நாட்டு நடப்புஎவ்வாறு உள்ளது என்கிற பல கோணப் பார்வைகளை அதில் காட்டியிருப்பது கவிஞரிடம் சமூகச் சிந்தனைக்கான களம் பரந்துபட்டிருப்பதுதெரியவரும். கவிஞாயிறு தாரா பாரதியின் பிரபலமான வரிகளான 'வெறுங்கை என்பது மூடத்தனம்; உன் விரல்கள் பத்தும் மூலதனம்' என்றதாக்கத்தை இக்கவிஞரிடம்,
முடியுமா என்பது மூடத்தனம்
முடியாது என்பது மடத்தனம்
முடியும் என்பதுமூலதனம்!
என்று காணலாம்.
இதில் அடங்கியுள்ள கவிதைகள் எளிமையோடு கூடிய மிகச்சாதாரணமானவையாக ஆங்காங்கே தென்படுவது ஏனோ? அவற்றை ஹைகுஎன்ற வடிவத்தில் அடக்கிவிடக் கூடுமா?இருப்பினும் பல்வேறான பாடுபொருள்களைத் துளிப்பாவிலும் காட்டமுடியும் என்றுமெய்ப்பித்திருப்பது ஹைகுவில் இவருக்கு மிகு ஆர்வம் இருப்பது தெரியவரும்.. மேலும் மேலும் எழுதினால் ஹைகுவில் சிறக்கலாம்என்பதைக் காட்டும் விதமாக அமைந்துள்ளது இந்த நூல். எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லவேண்டும் என்பதைஹைகுவிற்கும் பொருத்திப்பார்க்கலாம்.
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi[/size]
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

மின்-அஞ்சல் : | vanathipathippakam@gmail.com |
தொடர்பு எண் : | 914424342810 |

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
» ஹைக்கூ ஆற்றுப்படை நூல் விமர்சனம் முனைவர் ,பேராசிரியர் இராம .குருநாதன்
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum