தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



“ ஜனநாயகத்தை கொலை செய்யும் அரசாங்கம் ” பிரதமருக்கு கடும் விமர்சனத்துடன் ஹசாரே கடிதம்

2 posters

Go down

“ ஜனநாயகத்தை கொலை செய்யும் அரசாங்கம் ” பிரதமருக்கு கடும் விமர்சனத்துடன் ஹசாரே கடிதம் Empty “ ஜனநாயகத்தை கொலை செய்யும் அரசாங்கம் ” பிரதமருக்கு கடும் விமர்சனத்துடன் ஹசாரே கடிதம்

Post by thaliranna Sat Aug 13, 2011 9:35 pm

“ ஜனநாயகத்தை கொலை செய்யும் அரசாங்கம் ” பிரதமருக்கு கடும் விமர்சனத்துடன் ஹசாரே கடிதம்
புதுடில்லி: லோக்பால் மசோதாவில் மாற்றம் கொண்டு வரும்வரை நான் ஓய மாட்டேன் என கூறி வரும் காந்தியவாதியான அன்னா ஹசாரே பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் உங்களுடைய அரசாங்கம் ஜனநாயகத்தை கொலை செய்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். வரும் 16 ம் தேதி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஹசாரே துவக்கவுள்ளார். டில்லி போலீசார் தரப்பில் 72 மணி நேரம் மட்டுமே காலம் ஒதுக்கியிருப்பதால் இதனை ஏற்க முடியாது என ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஹசாரே, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சாத்வீகமான முறையில் நடத்தவிருக்கும் இந்த போராட்டத்திற்கு நாங்கள் கேட்ட இடத்தை தர டில்லி போலீசார் மறுத்துள்ளனர். இது போராட்டத்ததை திட்டமிட்டு ஒடுக்கும் அரசின் நோக்கம் என்பது தெளிவாகிறது. எங்களின் அமைதி போராட்டத்திற்கு பாரபட்சமின்றி உங்களால் ( பிரதமர் ) இடம் பெற்று தர முடியுமா ? முடியாது. தங்களின் அரசு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு கூட தடை விதிக்கிறது. ஊழலுக்கு எதிரான எங்களின் குரலை நெரிக்க திட்மிடுகிறீர்கள். உங்களுடைய அரசாங்கம் சுதந்திரம் அடைந்த காலம் முதல் வெறும் ஊழல் நிறைந்ததாக இருக்கிறது என மக்களே கருத்து தெரிவிக்கின்றனர். மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் உங்கள் அரசாங்கம் ஜனநாயகத்தை கொலை செய்வதுடன் அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிராக செயல்படுகிறீர்கள் . நாங்கள் நடத்தவிருக்கும் போராட்டத்தில் கைது செய்யதாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று கடுதமையாக எழுதியுள்ளார். இவரது கடிதம் இந்தியில் எழுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் உருவாகும் அன்னா ஹசாரேக்கள்: லோக்பால் மசோதாவில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் களம் இறங்கியிருக்கும் தியாகி அன்னா ஹசாரேவுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. ஐ.நா., சபை வளாகம் முன்பு ஹசாரே தோற்றத்தில் காகித தொப்பி அணிந்தும் அவரைப்போல குர்தா அணிந்தும் இந்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும், உலகம் முழுவதும் ஒளிந்து கிடக்கும் கறுப்பு பணத்தை இந்திய திருநாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார் ஹசாரே. இவரது போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு பெருகியது. இதனையடுத்து லோக்பால் வரைவு கமிட்டியில் ஹசாரே மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலரை சேர்க்க சம்மதம் தெரிவித்தது. இருப்பினும் இந்தக்குழுவினர் பரிந்துரைத்த கருத்துக்களை மத்திய அரசு புறக்கணித்து தன்னிச்சையாக இறுதி வடிவம் கொடுத்துள்ளது.

இதனால் அதிருப்தியுற்ற அன்னாஹசாரே மீண்டும் தனது போராட்டம் தொடரும் ஆகஸ்ட் 16 ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போகிறேன் என்று அறிவித்துள்ளார். இவரது போராட்டத்திற்கு போலீசார் உரிய அனுமதி எதுவும் வழங்கவில்லை. இதனால் இவர் கைது செய்யப்படும் சூழலுக்கு செல்ல நேரிடும் . தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் எழும் என தெரிகிறது.

இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஐக்கியநாடு சபை முன்பு இந்திய ஊழல் ஒழிப்பு சமூக நல விரும்பிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஹசாரே போன்ற தோற்றத்துடன் ( குல்லா மற்றும் குர்தாவுடன்) பலர் வந்திருந்தனர். மூவண்ண தேசிய கொடியுடன் வந்த இவர்கள் கையில் பல்வேறு பதாகைகளும் கொண்டு வந்திருந்தனர். இதில் லோக்பால் ஜோக்பால் , ஊழல்வாதிகளை ஜெயிலுக்கு அனுப்பு, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை நிறுத்து என உள்ளிட்ட வாசகங்கள் இருந்தன.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நியூஜெர்சியை சேர்ந்த பார்த்ததுரகா என்பவர் கூறுகையில்; நாங்கள் அன்னாஹசாரேவுக்கு கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து போராட களம் இறங்கியிருக்கிறோம். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் ஒருங்கிணைந்த ஆதரவு ஹசாரேவுக்கு பெருகி வருகிறது. சிறந்த அரசியலமைப்பு அங்கம் உருவாக்கப்படும்போது சாமானிய மனிதனும் பலன் பெற முடியும். ஹசாரே கொள்கைகளை மத்திய அரசு ஏற்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

அமெரிக்க அதிகாரி கருத்தினால் சர்ச்சை: இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்திதொடர்பாளர் விக்டோரியா என்பவர் அளித்துள்ள பேட்டியில் ; ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை இந்திய அரசு நசுக்க கூடாது என்றும் , அஹிம்சை போராட்டத்திற்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவு தெரிவிக்கும் என்றும் கூறினார். இவரது கருத்து காங்கிரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய நாட்டில் உள்ள விஷயம் குறித்து அறிந்து கொள்ளாமல் அமெரிக்கா தெரிவித்துள்ள கருத்து முறையானதல்ல என்றும் இது மிக்க கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் காங்., செய்தி தொடர்பாளர் அபிஷேக்சிங்வி கூறியுள்ளார். பா.ஜ.,வும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நன்றி தினமலர்
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

“ ஜனநாயகத்தை கொலை செய்யும் அரசாங்கம் ” பிரதமருக்கு கடும் விமர்சனத்துடன் ஹசாரே கடிதம் Empty Re: “ ஜனநாயகத்தை கொலை செய்யும் அரசாங்கம் ” பிரதமருக்கு கடும் விமர்சனத்துடன் ஹசாரே கடிதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Aug 16, 2011 10:49 am

ஐடியா வந்திடிச்சே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum