தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நம்பர் 1 அணியல்ல! நம்பர் 1 பிராண்ட்!

Go down

நம்பர் 1 அணியல்ல! நம்பர் 1 பிராண்ட்! Empty நம்பர் 1 அணியல்ல! நம்பர் 1 பிராண்ட்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 18, 2011 1:32 pm

[You must be registered and logged in to see this image.]
இங்கிலாந்தில்
இந்திய கிரிக்கெட் அணி பெற்று வரும் படு மோசமான தோல்விகளுக்கு மூத்த
வீரர்கள் முதல் ஊடகங்கள் தொடங்கி சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் வரை
காரணங்களைத் தேடி அலைகின்றனர். இதில் பெரும்பாலோனோர் கருத்து அதிக
கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால் களைப்படைந்த அணியாக இது உள்ளது
என்பதே.


இந்த
வாதத்தில் முற்றிலும் உண்மை இல்லை என்றாலும் இந்த வாதத்தை வேறொரு
கோணத்தில் அணுகினால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பணவெறி, வீரர்களின
், குறிப்பாக புகழ் பெற்ற வீரர்களின், விளம்பர
ஒப்பந்தங்கள், இந்திய அணி ஒரு நாட்டில் விளையாடுகிறது என்றால் சுமார் 70-
80 நாடுகளின் நேரடி ஒளிபரப்பு உரிமை அதற்கான விளம்பர வருவாய் இன்ன பிற...
இன்ன பிற... விடயங்கள் வெளிச்சத்திற்கு வரும்.

மேற்கிந்திய
தொடரில் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மூத்த வீரர்களுக்கு
ஓய்வு, ஆனால் இங்கிலாந்தில் அதே களைப்படைந்த மூத்த வீரர்கள் அணியில்
நுழைகின்றனர். அவர்கள் உண்மையில் உடற்தகுதியுடன் இருக்கிறார்களா என்பதை
நிரூபிக்க உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர்கள் விளையாடுவதில்லை. நேரடியாகத்
தேர்வு செய்யப்படுகின்றனர். இது இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது.


இதற்குக்
காரணம் என்ன? ஏன் இந்தியா அதிகப் போட்டிகளில் விளையாடுகிறது? ஏன் இந்திய
அணியை அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் விரும்புகின்றன? இந்தக் கேள்விக்கான
விடை நட்சத்திர பிராண்டுகளை விளம்பரப்படுத்தும் நட்சத்திர வீரர்களாக நம்
வீரர்கள் இருப்பதே காரணம், எனவேதான் இந்திய அணி நம்பர் 1 அணியல்ல நம்பர் 1
பிராண்ட் என்று கூறுகிறோம். பி.சி.சி.ஐ. இந்த நம்பர் 1 பிராண்டை விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனம்.


கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்றவர்கள் கிரிக்கெட்டின் நுணுக்கங்களை வர்ணிக்கும் வர்ணனையாளர்கள் அல்ல. அவர்கள் பி.சி.சி.ஐ. என்ற வர்த்தக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்கள். பி.சி.சி.ஐ. என்ற அமைப்புக்கு குரல் கிடையாது, எனவே ரவி சாஸ்திரி, கவாஸ்கர் அதன் இரட்டைக் குரலாகச் செயல்படுகின்றனர்.

மேற்கிந்திய
தொடருக்குச் சென்றால் அது கவர்ச்சியற்ற அணி எனவே விளம்பர வருவாய் என்று
பெரிதாக எதையும் பார்த்து விட முடியாது. அதனால் அதற்கு இளம் வீரர்கள்
அல்லது அனுபவமற்ற வீரர்கள் கொண்ட அணியை அனுப்புவது. ஆனால் இங்கிலாந்து,
ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா என்றால் அது பெரிய விளம்பர வருவாயைத்
தருவது. இந்திய வாரியத்திற்கு மட்டுமல்ல, மேற்கூறிய அனைத்து
வாரியங்களுக்கும்தான். எனவே, இதற்கு உடற்தகுதி இல்லாவிட்டாலும் நட்சத்திர
பிராண்ட் வீரர்களை அனுப்புவது. அவர்களின் கிரிக்கெட் ஆட்டம் அப்போது எந்த
நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளாத வெறும் பிராண்ட் தேர்வு
மட்டுமே நடைபெறுகிறது.


ஒருநாள் போட்டிகளுக்கு மீண்டும் ராகுல் திராவிட்! கேட்டால்
ஆட்டக்களத்திற்கேற்ப அணியைத் தேர்வு செய்கிறோம் என்ற சாதுரியப் பேச்சு.
ஆட்டக்களத்திற்கேற்ப என்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு ஏன் சுனில்
கவாஸ்கரைத் தேர்வு செய்யவில்லை?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நம்பர் 1 அணியல்ல! நம்பர் 1 பிராண்ட்! Empty Re: நம்பர் 1 அணியல்ல! நம்பர் 1 பிராண்ட்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 18, 2011 1:32 pm

[You must be registered and logged in to see this image.]
FILE

எந்த
ஒரு வாரியமும் இந்தியாவுடன் தொடரை ஒப்பந்தம் செய்யும் போது 4 டெஸ்ட்
போட்டிகள், 7 ஒருநாள் 2 இருபதுக்கு 20 போட்டிகள் என்று ஒப்பந்தம் செய்து
கொள்கின்றன.


ஆஸ்ட்ரேலியாவில்
கடைசியாக நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா வென்றது. அத்துடன்
முத்தரப்பு ஒருநாள் தொடரே வேண்டாம் என்று ஆஸ்ட்ரேலியா முடிவு கட்டியது,
காரணம் ஆஸ்ட்ரேலியா அல்லாத அணிகள் விளையாடும்போது ஸ்பான்சரகள் வருவதில்லை,
வருவாய் பாதிப்பு என்று காரணம் கூறியது.


ஆனால்
தற்போது இந்தியா அங்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இதில் இந்தியா,
இலங்கை, ஆஸ்ட்ரேலியா முத்தரப்பு தொடர் மீண்டும் விளையாடப்படுகிறது. ஏன்
இலங்கையை அழைக்க வேண்டும், ஏன் நியூசீலாந்து இல்லை அல்லது மேற்கிந்திய
தீவுகள் இல்லை, ஏன் பிற அணிகள் இல்லை என்று யாரும் கேட்டுவிடக்கூடாது.
இந்தியா விளையாடினால் ஒளிபரப்பு உரிமைகள் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான
டாலர்கள் தொகையை குறிவைத்து மீண்டும் முத்தரப்பு தொடரை ஆஸ்ட்ரேலியா
நடத்துகிறது.


ஐ.சி.சி.யின்
எதிர்கால கிரிக்கெட் பயணத் திட்டத்தில் இந்தியா, ஆஸ்ட்ரேலியா,
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதில்
தலையாய ஆதிக்கம் இந்தியாவினுடையது என்ற குற்றச்சாற்றுக்கள் தற்போது பரவலாக
எழுந்துள்ளன.


எனவே
நம்பர் 1 பிராண்ட் ஆன இந்திய அணி அதிகம் கிரிக்கெட் ஆட்டங்களில்
விளையாடுகிறது என்பது இந்த அணியின் கிரிக்கெட் ஆட்டத் திறன்களுக்காக அல்ல
மாறாக பிராண்ட் இமேஜ்.


வருடம்
முழுதும் எங்காவது விளையாடிக் கொண்டிருப்பது கிரிக்கெட் ஆட்டத்தில்
மட்டும்தான் நடைபெறுகிறது. கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, அதிகம் பணம்
கொழிக்கும் என்.பி.ஏ. கூடைப்பந்து ஆகியவையெல்லாம் ஒரு சீசனில் மட்டுமே
நடைபெறுகிறது. அதனால் அங்கு களைப்பு என்ற பேச்சு எழுவதில்லை.


இத்தனைக்கும்
கால்பந்து கிளப் மட்ட போட்டிகளே அதிக பிரபலம், அதிகம் விளையாடப்படுவதும்
கூட. அதற்கான பயிற்சிகள் மிகவும் கடுமையானது என்பதையும் நாம் இங்கு
கூர்ந்து கவனிக்கவேண்டும். அதனை ஒப்பிடும்போது கிரிக்கெட் ஆட்டத்தை
விளையாட்டு என்பதில் சேர்க்க முடியாது என்றே கூறப்படுகிறது..

நன்றி வெப்துனியா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum