தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்னை உட்பட 110 நகரங்களில் ஆன்-லைன் மின் மீட்டர்கள்

Go down

சென்னை உட்பட 110 நகரங்களில் ஆன்-லைன் மின் மீட்டர்கள் Empty சென்னை உட்பட 110 நகரங்களில் ஆன்-லைன் மின் மீட்டர்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Aug 23, 2011 11:08 am

இலவச மின்சாரம், மின்திருட்டை கண்டறியவும், அதிக பயன்பாடு
நேரத்தை கண்டறியவும், 65 லட்சம் இணைப்புகளுக்கு, ஆன்-லைன் மின் மீட்டர்கள்
பொருத்தப்பட உள்ளன. இதற்காக, தமிழக மின்வாரியத்திற்கு, மத்திய அரசு 400
கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது.தமிழகத்தில், 2 கோடியே 23 லட்சம் மின்
இணைப்புகள் உள்ளன. இதற்கு, தினமும் 23 கோடியே 70 லட்சம் யூனிட்கள்
மின்சாரம் செலவாகிறது. இதில், வீடுகளுக்கான ஒரு கோடியே 48 லட்சம்
இணைப்புகளுக்கு, மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதேபோல்,
தெருவிளக்குகள், வழிபாட்டுத் தலங்கள், அரசு கட்டடங்கள், உள்ளாட்சி
அமைப்புகள் ஆகியவற்றுக்கும் மானிய விலை மின்சாரம் சப்ளையாகிறது.

இதுமட்டுமின்றி,
20 லட்சம் விவசாய இணைப்புகளுக்கும், 10 லட்சம் குடிசைகளுக்கும் இலவசமாக
மின்சாரம் அளிக்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் சேர்த்து நடப்பு ஆண்டிற்கு
மட்டும், அரசின் சார்பில், 2,070 கோடி ரூபாய் மின்துறைக்கு மானியமாக
வழங்கப்படுகிறது.ஆனால், மானியத்தை விட அதிக அளவில் மின்சாரம்
பயன்படுத்தப்படுவதால், மின்துறையில் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதை
ஈடுகட்ட இலவச மின்சாரம், திருட்டு மின்சாரம் மற்றும் பயன்பாடு அதிகமுள்ள
நேரங்களில் பயன்படுத்தப்படும் மின் அளவு ஆகியவற்றை கண்டறிந்து, உரிய
நடவடிக்கை எடுக்க, மின்துறை முடிவு செய்துள்ளது.

மத்திய எரிசக்தி
துறை அமைச்சக வழிகாட்டுதல்படி, ஒவ்வொரு மாநில மின்வாரியத்திலும்,
தரமுயர்த்தப்பட்ட மின்சாரம் வழங்கும் திட்ட துறை (ஏ.பி.டி.ஆர்.பி.,) என்ற
தனித்துறை செயல்படுகிறது. இந்த துறை மத்திய அரசின் வழிகாட்டுதல்படி,
உயர்தொழில் நுட்பங்களை புகுத்துதல், மின் திருட்டு தடுப்பு நடவடிக்கை, அதிக
அளவு மின் பயன்பாட்டை கண்டறிந்து அதற்கேற்ற கட்டணம் வசூலித்தல் போன்ற
நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.இதன் ஒருகட்டமாக, அனைத்து மாநிலங்களிலும்,
ஆன்-லைன் மின் மீட்டர்கள் பொருத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும்
2012, ஜூன் 30ம் தேதிக்குள், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய எரிசக்தி
துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக மின் வாரியம் ஆய்வுகள்
மேற்கொண்டதில், 30 ஆயிரம் பேருக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட 110
நகரங்களில், 65 லட்சம் இணைப்புகளுக்கு ஆன்-லைன் மின் மீட்டர்கள் பொருத்த
முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, ஆன்-லைன் வசதிக்காக
தமிழக மின்வாரியத்திற்கு, 400 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

இதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, ஈரோடு, தஞ்சாவூர்,
திருப்பூர், நாமக்கல், வேலூர் உள்ளிட்ட 110 நகரங்களில், விவசாய மற்றும்
தொழிற்சாலை இணைப்புகள் உட்பட 65 லட்சம் இணைப்புகளுக்கு, ஆன்-லைன்
மீட்டர்கள் என்ற ரிமோட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன.

இதுகுறித்து
மின்துறை உயரதிகாரி கூறியதாவது:ஆன்-லைன் மீட்டர்களுக்காக, மத்திய
கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனத்திலிருந்து நிதியுதவி பெற்றுள்ளோம்.
சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், இதற்கான "டேட்டாபேஸ்' கம்ப்யூட்டர்
மையம் கட்டப்படுகிறது.இன்னும் இரு மாதங்களில், 65 லட்சம் மின் மீட்டர்கள்
வாங்கவுள்ளோம். அதில், தகவல் தொழில்நுட்ப வசதி கொண்ட ஆன்-லைன்
இணைப்புக்கான, "மைக்ரோ சிப்' மற்றும், "மோடம்' பொருத்தப்படும். இதற்கு,
ஒவ்வொரு மீட்டருக்கும் கூடுதலாக 3,000 ரூபாய் வரை செலவாகும். இந்த
மோடத்திலிருந்து, ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை, தன்னிச்சையாகவே மின்
அளவு கணக்கிடப்பட்டு, டேட்டா சென்டரில் பதிவாகும்.


இந்த
மீட்டர்களை யாரும் சேதப்படுத்தவோ, திருத்தவோ முடியாது. அவ்வாறு செய்தால்,
உடனடியாக அலாரம் அடித்து காட்டி கொடுத்து விடும்.இதற்கு, பிரபலமாகவுள்ள
இன்போசிஸ், ஹெச்.சி.எல்., டி.சி.எஸ்., ரிலையன்ஸ் போன்ற, பல முன்னணி
நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, மோடம் பொருத்தப்படும். இதற்கான நிறுவன
பட்டியலை மத்திய அரசு வரையறுத்துள்ளது. ஆன்-லைன் இணைப்புக்கு,
பி.எஸ்.என்.எல்., டெலிபோன் துறையுடன் ஒப்பந்தம் போடப்படும்.இந்த மீட்டர்
மூலம், 24 மணி நேரமும், நுகர்வோரின் பயன்பாட்டை அறிந்து கொள்ளவும், மின்
திருட்டு நடந்தால் கண்டுபிடிக்கவும் முடியும். இலவச விவசாய இணைப்புகளுக்கான
மின் பயன்பாட்டுக்கான சரியான அளவையும் கண்டறிய முடியும்.இவ்வாறு அவர்
கூறினார்.ஹெச்.ஷேக்மைதீன்.

நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum