தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புடவையின் அமைப்பும் உருவத்தோற்றமும்
2 posters
Page 1 of 1
புடவையின் அமைப்பும் உருவத்தோற்றமும்
பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே
மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது. புடவையில் உள்ள டிசைன்
வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு
புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக
மாற்றிவிடக்கூடும்.
உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில்
அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக
இருப்பது போன்ற பிரமை பார்ப்பவர்களுக்கு தோன்றும். புடவையில் அமைந்த
கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயரமாக இருப்பது போல
காட்சி தருவார்கள்.
கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்றால்
கடற்கரை
போன்ற பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் நெருக்கமாக
கட்டம் போடப்பட்ட மிகவும் அழுத்தமான சாயம் கொண்ட கைத்தறி சேலைகளை உடுத்திச்
சென்றால் பாந்தமாக இருக்கும்
மேலும் சில தகவல்கள்
ஆடைத்தெரிவு:
அழகாக
இருக்க வேண்டும் என்று எல்லா பெண்களுக்குமே ஆசை இருக்கும். இயற்கை
தந்துள்ள அழகை இன்னும் மெருகூட்டுவது ஆடைகள் தான். அந்த ஆடையை அணிந்து
கொள்ளும் விதமே அழகை நிர்ணயிக்கிறது. தங்கள் உடல் அளவுக்கு ஏற்ப, வயதுக்கு
ஏற்ப ஆடையை அணிந்து கொண்டால் எந்த பெண்ணும் அழகியாக ஜொலிக்கலாம்.
ஒல்லியாகவும், உயரமாகவும் கலராக உள்ள பெண்கள் கோடு அல்லது கட்டம் போட்ட ஆடைகள் பக்கம் போய்விட வேண்டாம்.
முடியைக்
கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக் கூடாது. சிறிய பார்டர்
சேலை அல்லது நீள வாக்கில், அதாவது மார்பில் இருந்து நுனி வரை பூ வேலை செய்த
சுடிதார் அணியவும் கூடாது.
கொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட
பளிச்சென்று மின்னும் சேலைகள் அல்லது சுடிதாரும், பாட்டமும் பூ போட்ட
சுடிதார்கள் அணிந்தால் நீங்கள் அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள்.
நீளமான,
அகலமான பிளெயின் துப்பட்டாவை பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கருப்பு
நிறங்களில் அணிந்து நீங்கள் நடந்து வந்தால் உங்களை ‘ஜொள்’ளுபவர்களின்
எண்ணிக்கையை தவிர்க்க முடியாததாகி விடும். அந்த அளவுக்கு நீங்கள்
எடுப்பாகத் தெரிவீர்கள்.
ஒல்லியாகவும், உயரமாகவும் உள்ள கருப்பு
அல்லது மாநிறமாக உள்ள பெண்கள் மிகவும் டார்க்கான கலர் ஆடைகளை தேர்வு
செய்யக் கூடாது. அப்படியே தேர்ந்தெடுத்தாலும், டார்க் மற்றும் லைட் கலர்கள்
மாறி, மாறி வருவது போல் ஆடையைத் தேர்வு செய்யலாம்.
இப்படி ஆடையைத்
தேர்வு செய்யும் போது, அந்த ஆடையில் உள்ள ஏதாவது ஒரு கலரில், முடிந்தால்
ஆடையில் உள்ள லைட் கலரில் ப்ளவுஸோ, துப்பட்டாவோ அணியலாம்.
குட்டையாகவும்,
சிகப்பு கலருமாக இருக்கும் பெண்கள் ப்ளெயின் கலரில் ஆடை அணியக்கூடாது.
அதையும் மீறி அணியும்போது, அணிந்திருக்கும் ஆடை புடவையாக இருந்தால் ப்ளவுஸ்
காண்ட்ராஸ்டாகவோ அல்லது வேலைபாடுகள் கொண்டதாகவோ இருக்கலாம்.
கருப்பாகவும்,
குள்ளமாகவும் இருப்பவர்கள் மெல்லிய சரிகை பார்டர் வைத்தோ அல்லது மெல்லிய
பார்டருடனோ புடவை அணியலாம். முடிந்தவரை பார்டரும், தலைப்பும் உள்ள புடவைகளை
தவிர்ப்பது நல்லது.
மிகவும் டார்க் நிற ஆடைகளை கருப்பு நிறம்
கொண்டவர்கள் அணியக் கூடாது. அப்படியே அணிந்தாலும், அதில் சிறிய வெளிர்
நிறப்பூக்களோ அல்லது புள்ளிகளோ இருக்கும்படியான ஆடைகளை தேர்வு செய்து
அணியலாம்.
இவர்கள், ஒற்றை ஒற்றையாக தனித்தனி டிசைன்களும், அந்த
டிசைன்களுக்கு நடுவே நிறைய இடைவெளியும் இல்லாமல் இருப்பது போன்ற புடவைகளை
தேர்வு செய்து அணிந்தால் அம்சமாக இருக்கும்.
குண்டாக இருப்பவர்கள்,
உடலுடன் ஒட்டியவாறு எந்தவொரு ஆடையையும் அணியக் கூடாது. அப்படி அணிந்தால்
பப்ளிமாஸ் என்று தான் கிண்டல் செய்வார்கள்.
ஒல்லியாக இருப்பவர்கள்
ஸ்டார்ச் செய்த காட்டன் ஆடைகளை அணியலாம். டாப்பும், பாட்டமும் வெவ்வேறு
கலரில் இருப்பதுபோல் சுடிதார் அணிந்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.
மிடியில்
கூட முன்பக்கம் பட்டையாக தைத்து, அதில் அடி நுனி வரை பூ வேலைபாடுகள்
அல்லது மணி சம்கி அமைந்திருந்தால் தோற்றத்தை சற்று உயர்த்திக் காட்டும்.
ஆடையும் அழகாக இருக்கும்.
ஒல்லியாக இருப்பவர்கள் பிரில் வைத்த
ஆடைகளை அணிந்தால் சிறிது குண்டாக தூக்கிக் காட்டும். இவர்கள் இறுக்கமான
ஆடைகளை தவிர்த்து விட வேண்டும்.
பேன்ட், டீ ஷர்ட் அணியும் பெண்கள்
டீ சர்ட்டை இன் செய்யாமல் அணியலாம். பேன்ட், ஷர்ட் அணிபவர்கள், ஷர்ட்டில்
ஒரு எம்பிராய்டரியோ, மோடிபோ, பேன்ஸி பட்டனோ இருக்கும்படி அணியலாம்.
மொத்தத்தில்,
என்ன விலை கொண்ட ஆடை அணிகிறோம் என்பது முக்கியமல்ல, மேட்சிங்கான ஆடையை
தேர்வு செய்கிறோமா என்பது தான் முக்கியம். உங்கள் தேர்வு சரியாக இருந்தால்,
இனி நீங்களும் அழகி தான்...!

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum