தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திருக்குறள் அமைப்பும் அழகும்
Page 1 of 1
திருக்குறள் அமைப்பும் அழகும்
திருக்குறள் அமைப்பும் அழகும்
நூல் ஆசிரியர் : திரு. ச.தண்டபாணி தேசகர்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
உலகில்
தமிழை அறியாதவர்கள் கூட திருக்குறளை அறிந்து இருப்பார்கள். அந்த அளவிற்கு
உலகப்புகழ் பெற்ற ஒப்பற்ற திருக்குறள் பற்றிய மிகச்சிறந்த ஆய்வு நூல் இது.
நூல் ஆசிரியர் திரு. ச.தண்டபாணி தேசகர் திருக்குறளில் ஆழ்ந்து, தோய்ந்து
மிக அற்புதமாக எழுதி உள்ளார்கள். இந்நூலை படித்து பின்பு வாசகர்
உள்ளத்தில் உச்சத்தை அடைந்து விடுகின்றது திருக்குறள்.
திருக்குறள்
மக்களின் வாழ்க்கை இயல்புகளை மட்டும் அறிவிக்கிறது. அதனால்
இலக்கியமாயிற்று. ஒரு குறிக்கோள் வாழ்வின் இலக்கணங்களை அறிவிப்பதால் இதனை
இலக்கிய இலக்கணம் என்று கூடக் கூறி விடலாம். இதனைக் கொண்டு உலக மக்கள்
தமது வாழ்க்கையைத் திருத்தி கொள்வர் என்பதே திருவள்ளுவரின் ஆசையாகும்.
திருவள்ளுவரின்
திருக்குறளில் அரசனின் ஆண்மை புலப்படுகிறது. அமைச்சர் அறிவலை பாய்கிறது
ஒற்றருடைய அரசியல் தந்திரம் ஆழங்காணற்படுகிறது. தூதருடைய சொல்வண்மை
தோன்றுகிறது. எழில் நிறைந்த இளமங்கையோடு நுகரும் இன்பத்தேன் எங்கும்
களியூட்டுகிறது. அறவோராகவும், துறவோராகவும் இருந்து செய்யும் அறவுரைகள்
ஒளிவிடுகின்றன. செம்பொருள் திகழ்கிறது. இதிலிருந்து இவர் எத்தகையை
வாழ்க்கையினர் என்று துணியக் கூடும்? முடியாது, இதனாலேயே இந்நூல் எல்லார்
வாழ்வோடும் கூடி எல்லார்க்கும் இன்பம் பயப்பதாக, பொது நூலாக அழியாப்
பெருமையுடன் விளங்கிக் கொண்டிருக்கிறது.
நூல் முழுவதும் திருக்குறளின் பெருமையை பறைசாற்றுகின்றார் நூல் ஆசிரியர்.
பெயர்க்காரணம் :
திருக்குறள்
என்பது அழகிய குறள் வெண்பாவினால் ஆகிய நூல் எனப் பொருள்படும். குறள்
என்னும் பாவின் பெயர் அதனால் ஆகிய நூலிற்று ஆனது கருவி ஆகுபெயர் அது, திரு
என்னும் அடைமொழி அடுத்து வந்தமையின், அடை அடுத்த கருவி ஆகு பெயராயிற்று
என்பது இலக்கண உரையாசிரியர் கருத்து.
அழகிய குறள் வெண்பாக்களை உடைய
நூல் எனப் பொருள்பட்டு அன்மொழித் தொகையாய், நூலுக்குக் காரணக் குறி
ஆயிற்று” என்பர், தமிழ் வரலாறு எழுதிய ச.பூபாலப்பிள்ளை அவர்கள்.
‘திரு
என்பது கண்டாரல் விரும்பப்படும் தன்மை நோக்கம்” என்று திருக்கோவையார்
உரையில் பேராசிரியர் கூறுகிறார். இப்படி பெயர் விளக்கமே சான்றோர்களின்
மேற்கோள்களுடன் மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்.
திருக்குறளின்
மறுபெயர்களை முப்பால், பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, முதுமொழி,
உத்தரவேதம், தெய்வ நூல், தமிழ் மறை, பொதுமறை இப்படி விளக்கி வருகிறார்
மறுபெயர்களுக்கான காரணங்களை.
வேதத்திற்கும், திருக்குறளிற்கும் பொருள் ஒன்றே, அதனால் அது அந்தணர்க்கே உரியது. இது அனைவர்க்கும் உரியது என்கிறார் வெள்ளி வீதியார்.
படிக்க
எளிமையாய், உணர அருமையாகி நினைக்கும் தோறும் நெஞ்சத்தை இல்லை. சொல்
பெருகிய பாக்களால் என்ன பயன்? என்கிறார் மதுரைத் தமிழ் நாகனார்.
மணற்கேணி
தோண்ட நீர் சுரக்கும். குழந்தைகள் வாய் வைத்துக் குடிக்கத் தாய்ப்பால்
சுரக்கும். திருக்குறள் புலவர்கள் ஆராய அறிவு சுரக்கும் என்கிறார்
உருத்திர சண்மகண்ணர்.
உலகத்தில் திருவள்ளுவரே புலவரன்றி வேறு சிலரையும்
புலவர் என்றால் நிலவோடு கூடிய அழகான அந்திப் பொழுதையேயன்றி, இருள் சூழ்ந்த
அந்தியையும் மாலை என்றது போலும் என்று எடை போடுகிறார், தமிழாசிரியர்
செங்குன்றூர்க்கிழார்.
மனத் தாமரையை மலர் நூதலாலும், இருளைப் போக்குதலாலும், திருக்குறளும் செஞ்சூரியனும் ஒக்கும் என்கிறார் குளம்பாதாயனார்.
திருக்குறள் சிந்தைக்கும், செவிக்கும், வாய்க்கும் இனிய மருந்து என்கிறார் கவுணியானார்.
திருக்குறள் தேவாமுதத்தை விடத் சிறந்தது. அதனை உண்பார் தேவர்களே, இதனை அனைவரும் உண்பார்கள் என்கிறார் ஆலங்குடி வங்கனார்.
மலைகளிற் சிறந்த மேரு மலை போல, எல்லா நூல்களிலும் சிறந்தது, இத் தெய்வத் திருக்குறளே என்பர் தெய்வநாயகம் பிள்ளை அவர்கள்.
இப்படி
மாபெரும் தமிழ் அறிஞர்கள், முன்னோர்கள் திருக்குறள் பற்றித் தந்த அருமையான
விளக்கங்களை மிக அற்புதமாக எழுதி உள்ளார் நூல் ஆசிரியர்.
‘மனு நூலிலும், மற்ற சாத்திரங்களிலும் கூறும் மூடப் பழக்கங்களை நீக்கிக் குறள் மேம்பாட்டுடன் விளங்குகின்றது” என்கிறார் ரெவரெண்ட்.
நூல் அமைப்பு :-
இந்நூலில்
பெரும் பிரிவு பால் எனவும், சிறு பிரிவு இயல் எனவும் அதனிற் சிறு பிரிவு
அதிகாரம் எனவும் அமைக்கப் பெற்றுள்ளது. அவற்றுள் பால் என்பது பகுதி, பண்பு
முதலிய பல பொருளில் வழங்கும் பெயர்ச் சொல். இயல் என்பது இலக்கணம். தன்மை
என்னும் பொருளது. பாலின் உட்பகுதியாகிய இல்லறம் முதலாயவற்றின் இலக்கணம்
உணர்த்துதலின் இயல் என்றாயிற்று. இதனாலும் இது நால்வகை உறுதிப பொருள்களின்
வழிவகைகளைக் கூறாது, அவற்றின் இலக்கணம் ஒன்றுமே உணர்த்துவதாதல் காண்க.
இப்படி நூலின் அமைப்பு பற்றி ஆராய்ந்து விளக்கி உள்ளார் நூல் ஆசிரியர்.
ஒழுக்கம்
தான் ஒருவனுக்கு உயிர். அது தான் குடிப்பிறப்பு. அது தான் உயர்வு
அளிப்பது. அது தான் நன்மைக்கெல்லாம் அடிப்படை. ஏட்டில் எழுதப் பெற்றது
எல்லாம் ஒழுக்கமன்று, உலகத்தோடு ஒத்ததே ஒழுக்கம். ஒழுக்கம் உடையார்
தருமவான்கள் அவர்களே, உலகில் எல்லா நல்ல காரியங்களுக்கும் தலைமை தாங்க
உரியவர்கள்.
ஒழுக்கத்தை திருக்குறளில் எவ்வளவு உயர்வாகக்
குறிப்பிட்டுள்ளார் என்பதை மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும்
குறிப்பிட்டுள்ளார். உலகப் பொதுமறையான திருக்குறளின் வளமையை, பெருமையை
பறைசாற்றும் நூல் இது. தமிழராகப் பிறந்ததற்காகவும், தமிழ் மொழியில்
திருக்குறள் இருப்பதற்காகவும் உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரும் பெருமைப்படும்
விதமாக நூல் உள்ளது. நூல் ஆசிரியரின் ஆய்வுரைக்குப் பாராட்டுக்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» புடவையின் அமைப்பும் உருவத்தோற்றமும்
» அழகும் பத்திரிகையும்
» அழகும் அசிங்கமும்
» பனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும்!
» பனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும்!
» அழகும் பத்திரிகையும்
» அழகும் அசிங்கமும்
» பனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும்!
» பனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum