தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பள்ளிகளில் "கிரேடு' முறை: கல்வியாளர்கள் கூறுவது என்ன?
4 posters
Page 1 of 1
பள்ளிகளில் "கிரேடு' முறை: கல்வியாளர்கள் கூறுவது என்ன?
தமிழக பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள "கிரேடிங்' முறைக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ள அதே வேளையில், இம்முறையின்படி மாணவர்களை மதிப்பிட ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும் என்று சிலரும், தொழிற்படிப்புகளை தேர்வு செய்ய அடிப்படையாக உள்ள பிளஸ் 2 படிப்புக்கு, "கிரேடு' முறை மதிப்பெண்கள் எந்த வகையில் பொருத்தமாக இருக்கும் என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று வேறு சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக பள்ளிகளில் ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்த கல்வி முறைகள் மாற்றப்பட்டு, இந்தாண்டு முதல் சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமச்சீர் கல்விக்கான புத்தகங்கள் அனைத்தும் என்.சி.ஆர்.டி.இ.,பாடத் திட்டத்தை தழுவியதாகவே உள்ளதால், மாணவர்களின் படைப்பாற்றல் திறன் மேம்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.சமச்சீர் கல்வி முறை அமலுக்கு வந்து விட்டாலும், ஒரே மாநிலத்துக்குள் செயல்பட்டு வரும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலும் பின்பற்றப்பட்டு வரும் மதிப்பீட்டு முறைகள் வெவ்வேறாகவே உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, அனைத்து பள்ளிகளிலும்"கிரேடிங்' முறையை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது தமிழக அரசு.
இது குறித்து கல்வியாளர்கள் பெற்றோர் தெரிவித்த கருத்துக்கள்:
விசாலாட்சி, மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்:
தமிழக அரசு கொண்டு வரும் புதிய மதிப்பீட்டு முறையை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மதிப்பெண்ணின் பின்னால் ஓடும் தற்போதைய ஆரோக்கியமற்ற கல்வி முறைக்கு கிரேடிங் முறை சமாதி கட்டும். ஏனென்றால் தற்போதைய மதிப்பீட்டு முறையில் 100 மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு எளிதாக மேற்படிப்பில் இடம் கிடைத்து விடுகிறது. அவனை விட ஒரு மதிப்பெண் குறைந்த மாணவனுக்கு கிடைப்பதில்லை. இருவரும் சமமான புத்திசாலிகளாக இருக்கும் பட்சத்தில் இந்த சிறு வேறுபாடு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. இன்று விடைத்தாள் மூலம் மாணவனின் பாட அறிவை மட்டுமே ஆசிரியர்களால் கிரகிக்க முடிகிறது. கிரேடிங் முறை மூலம் மாணவனின் தலைமை பண்பு, பேச்சாற்றல், தன்னம்பிக்கை உள்ளிட்ட "சாப்ட் ஸ்கில்ஸ்' திறன்களையும் கண்டறிந்து வளர்க்க முடியும். குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளை 100 சதவீதம் மனப்பாடம் செய்தால் பாஸ் ஆகி விடலாம் என்ற இப்போதைய நிலை மாறி, பாடங்களை புரிந்திருந்தால் மட்டுமே பாஸ் ஆக முடியும் என்ற ஆரோக்கியமான நிலை உருவாகும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகள், பொது நுழைவுத் தேர்வுகள், வேலைக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும் புதிய மதிப்பீட்டு முறை உதவும்.கிரேடிங் முறை மூலம் மாணவர்களை ஆசிரியர்களால் எளிதில் தரம் பிரிக்கவும் மதிப்பிடவும் முடியும். மாணவர்களின் திறமைகளை ஆசிரியர்களால் புரிந்து கொள்ள முடியும். மாணவர்களுக்கு தேர்வு கால நெருக்கடியும் மன அழுத்தமும் இருக்காது. ஆனால் எப்படி மதிப்பீடு செய்வது, எதன் அடிப்படையில் மதிப்பீடு செய்வது என்பது குறித்து அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.
ஆன்டனி, முதல்வர் சுகுணா ரிப் மெட்ரிக் பள்ளி:
மிகவும் நல்ல முயற்சி. அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற மன உளைச்சல் மாணவர்களுக்கு இருக்காது. மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிப்பது கட்டாயம் ஆகி விடுவதால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். மாணவர்களின் ஒட்டு மொத்த ஆளுமைத் திறன் மேம்படும் என்பதால் அனைத்து பள்ளிகளும் புதிய மதிப்பீட்டு முறையை வரவேற்கலாம். சமச்சீர் கல்வியை தவிர்க்க, சி.பி.எஸ்.இ., முறைக்கு மாறியவர்களுக்கு புதிய இந்த மாற்றம் ஏமாற்றம் தரும். மெட்ரிக் அல்லது அரசுப் பள்ளியிலேயே தொடர்ந்து படித்திருக்கலாமே என இப்போதே பேசத் துவங்கி விட்டனர்.
நந்தினி, முதல்வர் வித்ய விகாஸ் மெட்ரிக் பள்ளி:
இன்று மெட்ரிக் பாடத்திட்டங்களின் கீழ் படித்த மாணவர்களே அதிகளவில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர்; வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். சி.பி.எஸ்.இ., கல்வி முறையின்படி மதிப்பீட்டை மாற்றி அமைத்தால் கற்பித்தலிலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஆசிரியர்களிடமும் அர்ப்பணிப்பு மனப்பான்மை வேண்டும். சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் மதிப்பீட்டு முறை சரியாக இல்லை என்ற காரணத்தால் சில மாணவர்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கு மாறினர். இப்போது மெட்ரிக் பள்ளிகளிலும் அதே மதிப்பீட்டு முறை வந்து விட்டால் ஐ.சி.எஸ்.இ.,போன்ற பிற கல்வி முறைகளுக்கு மாறும் சூழல் ஏற்படும். சி.பி.எஸ்.இ., கல்வி முறையின்படி மதிப்பீட்டு முறையை பின்பற்றினால் ஓ.கே., ஆனால் பெயரளவுக்கு மட்டும் மதிப்பீட்டு முறையை பின்பற்றுவது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். மாணவர்களின் "ஐ.கியூ.,' குறையும். இதை தவிர்க்க, மதிப்பீட்டு முறை குறித்து தெளிவான பயிற்சி அளிக்க வேண்டியது முக்கியம். பாடப் புத்தகங்களும் என்.சி.ஆர்.டி.இ., படி இருக்க வேண்டும். மற்றபடி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இது எளிதான திட்டம்.
சத்தியசீலன், ஆசிரியர்:
குறிப்பிட்ட மதிப்பெண் அளவுக்குள் மதிப்பெண் பெறும் மாணவர்களை ஒரே "கிரேடின்' கீழ் கொண்டு வருவது நல்லதுதான். இதன் மூலம் மாணவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு குறையும். மோசமாக படிக்கும் மாணவனுக்கு கூட தானும் நன்கு படிக்கும் மாணவர்களின் பட்டியலில் இருப்பதாக ஒரு பாசிட்டிவ் மனப்பான்மை வரும். இது சிறு வகுப்புகளுக்கு ஓ.கே., உயர்கல்வி படிப்புகள், கல்லூரிகளை தேர்வு செய்ய உதவும் பிளஸ் 2 வகுப்புக்கும் இதே கிரேடிங் முறையை பின்பற்றுவது குறித்து அரசு தெளிவுப்படுத்த வேண்டும். ஏனென்றால் இன்று கவுன்சிலிங்கில் .1 அல்லது .2 மதிப்பெண் வித்தியாசத்தில் கூட நல்ல படிப்பு அல்லது கல்லூரி கிடைக்காமல் போய் விடுகிறது. மற்றபடி மாணவர்களின் ஒட்டு மொத்த ஆளுமைத் திறன்கள் வெளிப்பட கிரேடிங் முறை உதவும் என்பதால் வரவேற்கிறோம்.
பழனிச்சாமி, தலைமை ஆசிரியர், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி:
தமிழக அரசின் இந்த திட்டத்தை வரவேற்கிறேன். சிறு மதிப்பெண் வித்தியாசங்களால் மாணவர்கள் தற்கொலை செய்வது குறையும். தாழ்வு மனப்பான்மை அகலும்.
வீராசாமி, பெற்றோர்: சமச்சீர் கல்வி முறை வருகிறது என்றவுடன் பல பெற்றோர் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மாறியதில் இருந்தே, அக்கல்வி முறையின் அருமையை
உணரலாம். அதே கல்வி முறையின் மதிப்பீட்டு முறை அனைத்து பள்ளிகளுக்கும் வருகிறது என்றால் கட்டாயம் வரவேற்கத்தான் வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
வி.பார்த்தசாரதி (முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர், மேலூர்):
தேர்வில் "கிரேடிங்' முறை அமல்படுத்துவது பெரிதும் வரவேற்கத்தக்கது. கல்வியில் மாணவர்களின் சுமை குறைவதால் உண்மையிலேயே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும். மேலும் திறன்களையும் மதிப்பீடு செய்வதால் மாணவரின் திறமை வளரும். இம்முறை செமஸ்டர் சிஸ்டம்போல இருப்பதால், ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்கள் மீது தனிஅக்கறை காட்ட முடியும். இதுவரை மனப்பாடம் செய்யும் மாணவர்கள், சிந்தித்து பதிலளிக்க வேண்டும் என்பதால், சிந்தனை திறன் மேம்படும். தேர்வில் அகமதிப்பீடு மதிப்பெண் இருப்பதால், ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு பயம் கலந்த மரியாதை ஏற்படும்.
ஜி.கார்த்திக் ரகுநாத் (12ம் வகுப்பு, பி.கே.என்., மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம்):
மதிப்பெண் முறையில் மாணவர்களிடையே போட்டி ஏற்படும். ஒன்று, இரண்டு மதிப்பெண்கள் வேறுபடும் போது பொறாமையாகவும் மாறலாம். ஆனால் கிரேடு முறையில் அம்மாணவர்கள், ஒரே தரத்தில் இருப்பதால் போட்டியோ, பொறாமையோ ஏற்படுவதில்லை. பருவத் தேர்வு போல நடப்பதால், அந்தந்த பாடங்கள் அப்போதைக்கு அப்போது முடிந்து, பாடச்சுமை வெகுவாக குறையும். இதனால் சாதாரண மாணவர்களும் படிப்பில் ஆர்வம் காட்டுவர். அவர்கள் தேர்ச்சி பெறுவதும் எளிது. அதிகம் படிக்க வேண்டுமே என்ற மன
அழுத்தமும் இராது.
ப.சசிகலா (12ம் வகுப்பு, புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி, பழநி):
அரைத்த மாவையே அரைப்பதை தவிர்த்து, கல்வியின் வளர்ச்சிப் பாதையில் புரட்சிகரமான அம்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. "பி', "சி' கிரேடு பெறும் மாணவர்களுக்கு, "ஏ' கிரேடு பெறுவதில் சிரமமில்லை என்ற மனநிலை உருவாகும். இதனால் தன்னம்பிக்கையுடன் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. கல்லூரியில் உள்ள செமஸ்டர் முறை பற்றி, பள்ளியிலேயே அறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தந்த பருவத்துக்குரிய பாடங்களை மட்டும் படிப்பதால், மனஅழுத்தம், புத்தகச் சுமை குறையும்.
தமிழ்ப் பெரியசாமி (ஓய்வு பெற்ற ஆசிரியர், திண்டுக்கல்):
தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு கல்விக் கொள்கை, கட்டாய கல்வி சட்டம், சி.பி.எஸ்.இ., போன்ற கல்வித் திட்டங்களை தழுவி, இந்த நடைமுறை அமைந்துள்ளது. மாணவர்களை மையப்படுத்தும் கல்வி முறை வலுப்பெறும். மூன்று பருவத் திட்டங்களால், மாணவர்கள் மீது பாடங்களை திணிப்பது குறையும். உடனடியாக மதிப்பிடும் திட்டம், மாணவர்களின் பல்திறன் வளர்ச்சிக்கு உதவும். மாணவர்களின் ஆளுமைத்திறன் வளரும். இத் திட்டத்தின் வெற்றி ஆசிரியர்கள் கையில் உள்ளது.
எம். கோகுல் (10ம் வகுப்பு, என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி):
மாணவர்களுக்குள் ஈகோ பிரச்னை ஏற்படாது. படிப்பில் பொறாமை வராது. ஆரோக்கியமான ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சிக்கு கிரேடு முறைதான் சிறந்தது. மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கவும் இதுவே சிறந்த வழிமுறை.
பி.சவுந்திரராஜன், (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், பழனிச்செட்டிபட்டி):
"கிரேடு' முறையில் மாணவர்களுக்கு ஊக்கம் கிடைப்பதால் திறமை வளரும். மதிப்பெண் குறையுமே என்ற தாழ்வு மனப்பான்மை வராது. மூன்று பருவங்களாக பிரித்து நடத்துவதால், மொத்தமாக பாடங்களை மனப்பாடம் செய்வதும், கடைசி நேர பதட்டமும் ஏற்படாது. புரிந்து படிப்பதால் சிந்தனை திறன் வளரும். கல்வியுடன் விளையாட்டு திறன் வளரும்.
பி.சாந்தினி (9ம் வகுப்பு, செய்யது அம்மாள் மேல்நிலை பள்ளி, ராமநாதபுரம்):
கிரேடு முறையில் 80 மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும், 99 மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும் ஒரே கிரேடுதான், என வரும்போது, படிக்கும் ஆற்றல் குறைந்து விடும். கிரேடு முறையினால், 80 மதிப்பெண்ணுக்கு எவ்வளவு படிக்க வேண்டுமோ, அவ்வளவுதான் படிப்போம்.
வி.ரத்னம் (தலைமை ஆசிரியர், ராஜா மேல்நிலை பள்ளி, ராமநாதபுரம்):
கிரேடு முறை, ஆரம்ப கால முறையாகும். இதை நடைமுறைப் படுத்தும்போது என்னென்ன சிக்கல் வருகிறது, என்பதை பொறுத்துத்தான் இதன் நன்மை, தீமையை ஆராய முடியும். நகர் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றலை வளர்க்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. கிராமப்புற மாணவர்களும் தனித்திறனை வளர்க்கும் அளவில், தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
எஸ்.வீரப்பன், (11ம் வகுப்பு, எஸ்.எம். எஸ். வி., ஆண்கள் பள்ளி, காரைக்குடி):
சராசரியாக ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சியடைவதற்கு 35 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது. இதை தெரிந்து கொண்டு மாணவர்களின் கல்வி தரத்தை அறிய முடியும். நன்றாக படிக்காத மாணவர்கள் மேலும் படித்து முன்னேற முயற்சிப்பர். இப்படி "கிரேடு முறை' கொண்டு வருவதால் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இது சரிப்படலாம். சராசரி மாணவர்களுக்கு இது சரிவராது.
எஸ்.புவனேஸ்வரி, (ஆசிரியை, எஸ்.எம். எஸ்.வி., பெண்கள் பள்ளி, காரைக்குடி):
பள்ளிகளில் "கிரேடு' முறை கொண்டு வருவதால் நன்கு படிக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் தெரியாமல் போய்விடும். மாணவர்களை இந்த "கிரேடு முறை' மனதளவில் பாதிக்கும்.
ஸ்ரீரத்னமணி (8ம் வகுப்பு, சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்):
"கிரேடு' முறையை அரசு கொண்டு வந்தது வரவேற்கதக்கது. இதனால் மாணவர்களின் மனப்பாடம் செய்யும் எண்ணம் மாறும். பாடம்தவிர, இதர திறன்களுக்கும் மதிப்பெண்கள் ஒதுக்கப்படுவதால் பிற திறமைகளும் வளரும். முதல் மதிப்பெண் பெற்றவர் மீதான பொறாமை எண்ணம் மாறுவதுடன், மாணவர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையும் நீங்கும்.
சு.ஜோதிமணி ராஜன் (முதுநிலை ஆசிரியர், விருதுநகர்):
மாணவர்களிடையே வேறுபாடு இன்றி பழக வாய்ப்பு ஏற்படும். மதிப்பெண்ணை மறந்து, போட்டி, பொறாமையை மறைந்து, கிரேடுகளை பெறும் எண்ணம் மேலோங்கும். புத்தக சுமை குறைவதால் படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். படிக்கும் மாணவர், படிக்காத மாணவர் என ஆசிரியரும் வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை ஏற்படும்.
நன்றி:
[You must be registered and logged in to see this link.]

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பள்ளிகளில் "கிரேடு' முறை: கல்வியாளர்கள் கூறுவது என்ன?
இன்று மெட்ரிக் பாடத்திட்டங்களின் கீழ் படித்த மாணவர்களே அதிகளவில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர்; வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.
உண்மை
உண்மை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பள்ளிகளில் "கிரேடு' முறை: கல்வியாளர்கள் கூறுவது என்ன?
நல்ல திட்டத்திற்கு வழி துணையாக இருப்போம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பள்ளிகளில் "கிரேடு' முறை: கல்வியாளர்கள் கூறுவது என்ன?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை.
» அன்னை மேரி மற்றும் இயேசு நாதர் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?
» அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்கும் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட தமிழார்வலர்கள் கோரிக்கை
» TNPTFஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கையை குறைக்காமல் இருக்க மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தி சொல்லப்படுகிறதா? பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
» குடும்பம் என்ற தலைப்பில் கண்ணதாசன் கூறுவது…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum