தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
டூவீலர் இருந்தால் 4 சிலிண்டர் தான்; பார்லி நிலைக்குழு பகீர் பரிந்துரை
Page 1 of 1
டூவீலர் இருந்தால் 4 சிலிண்டர் தான்; பார்லி நிலைக்குழு பகீர் பரிந்துரை
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கோவை:டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு நான்கு
காஸ் சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வழங்க வேண்டுமென்ற பார்லிமென்ட்
நிலைக்குழு பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சர்வதேச
அளவில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போதெல்லாம், இங்கு விலையைக் கூட்டும்
எண்ணெய் நிறுவனங்கள், அது குறையும் போது சத்தமே காட்டுவதில்லை. பெட்ரோல்,
டீசலை அடுத்து, இந்த எண்ணெய் நிறுவனங்களின் பார்வை, காஸ் சிலிண்டர்களின்
மீது திரும்பியுள்ளது. காஸ் சிலிண்டர் மானியத்தை குறைப்பதற்கான வேலைகளில்
இவை இறங்கியுள்ளன.இதற்காக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு தொடர்பான
பார்லிமென்ட் நிலைக்குழுவிடம் இந்த எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த
கணக்கெடுப்பு விபரங்கள் தரப்பட்டு, அதன்பேரில் அந்த குழுவும் மத்திய
அமைச்சரவைக்கு சில கருத்துருக்களை அனுப்பியிருக்கிறது. அதில்
கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அத்தனையும் "பகீர்' ரகமாகவுள்ளன.
காஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள நுகர்வோர் ஒருவருக்கு சொந்தமாக வீடு
அல்லது டூ வீலர் இருந்தால், அவருக்கு ஆண்டுக்கு நான்கு சிலிண்டர்கள்
மட்டுமே மானிய விலையில் தர வேண்டுமென்பது, இந்த குழுவின் முதல் பரிந்துரை;
ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில்
சிலிண்டரே தரக்கூடாது என்பது அடுத்த யோசனை.
இதன்படி, டூ வீலர் அல்லது சொந்தமாக குடிசை வீடு வைத்துள்ள ஒருவரின்
குடும்பத்துக்கு, ஆண்டுக்கு 4 சிலிண்டர் மட்டுமே மானிய விலையில்
கிடைக்கும்; அதற்கு மேல் தேவைப்பட்டால், ஒரு சிலிண்டரை 645 ரூபாய் கொடுத்து
வாங்க வேண்டும் என்கிறது குழுவின் பரிந்துரை. இது அமலுக்கு வரும்போது,
இந்த விலை 700லிருந்து 900 ரூபாய் வரை அதிகரிக்கலாம்.இன்றைய நிலையில்,
நகர்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள சாதாரண விவசாயி,
கட்டுமானத் தொழிலாளி, கூலித்தொழிலாளிகள் அனைவருமே தங்களது வேலைக்காக
சொந்தமாக "டூ வீலர்'கள் வைத்துள்ளனர் என்பதே உண்மை.
அதேபோல, பெரு நகரங்களில் 50 ஆயிரம் ரூபாய் மாதச்சம்பளம் என்பது மிகச்
சாதாரணமாகி விட்டதையும் யாரும் மறுக்க முடியாது. இந்த சம்பளம்
வாங்கினாலும், நகரங்களில் உள்ள செலவுக்கு அந்த குடும்பத்தால் வசதியாக
வாழவோ, பெரிதாகச் சேமிக்கவோ முடியாது என்பதும் நிஜம். அதனால், இந்த 2
பரிந்துரைகளுக்கும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்புவது நிச்சயம்.
இந்த பரிந்துரைகளைவிட, நிலைக்குழு கூறியுள்ள ஒரு தகவல், எல்லோரையும்
அதிர்ச்சியடைய வைக்கிறது. பெரும்பாலான வீடுகளில், ஆண்டுக்கு 20லிருந்து 30
காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக அந்த குழு தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளது. உண்மையில், எந்த குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 12
சிலிண்டர்களுக்கு மேல் கிடைப்பதேயில்லை என்பதே யதார்த்தம்.நிலைக்குழு
பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டதாக தகவல் பரவியுள்ள
நிலையில், இதனை அமல்படுத்தக்கூடாது என்று மனுப்போரைத் துவக்கியுள்ளது
கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு. பிரதமருக்கு இவ்வமைப்பின் செயலர்
கதிர்மதியோன் அனுப்பியுள்ள கடிதம், 3 விஷயங்களை வலியுறுத்தியுள்ளது.
அதில் "மானிய விலை சிலிண்டர் கட்டுப்பாடு பட்டியலில் டூவீலர்தாரரை நீக்க
வேண்டும்; மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிப்பவர்க்கு மானிய விலை
சிலிண்டர்க்கு கட்டுப்பாடு விதிக்கலாம்; ஆண்டுக்கு 4 மானிய விலை சிலிண்டர்
என்பதை 12 ஆக உயர்த்தலாம்; நிலைக்குழு தகவல்படி, பார்த்தாலும் அதில் 18
சிலிண்டர்கள் குறையும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கதிர்மதியோன் கூறுகையில்,
""இன்றைய நிலையில் டூவீலர் வைத்திருப்பவரை "பணக்காரர்' என்று பார்லிமென்ட்
நிலைக்குழு பட்டியலிடுவது, வேடிக்கையானது. கார் வைத்திருப்பவரை அந்த
பிரிவில் கொண்டு வந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். குடும்ப நபர்களின்
எண்ணிக்கையை வைத்து மானிய விலை காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை
நிர்ணயிக்கலாம்,'' என்றார்.
கோவையிலிருந்து மட்டுமின்றி, தேசம் முழுவதிலிருந்தும் இதேபோன்ற
கோரிக்கைகள் குவிந்துள்ளன. அதனால், இந்த பரிந்துரை அப்படியே
நடைமுறைப்படுத்தப்படுவது சந்தேகமே. அவ்வாறு நடைமுறைப்படுத்தினால், ஊழலுக்கு
எதிராக தேசமே திரண்டது போல இதற்கும் நாடு தழுவிய எதிர்ப்பு, காங்கிரஸ்
அரசுக்கு எதிராகக்கிளம்புவது உறுதி.
எல்லாமே கொள்ளை!
பெரும்பாலான குடும்பங்களில் ஆண்டுக்கு 20லிருந்து 30 காஸ் சிலிண்டர்கள்
பயன்படுத்துவதாக நிலைக்குழு சொன்ன தகவல், ஓர் உண்மையை வெளிச்சத்துக்குக்
கொண்டு வந்துள்ளது. ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 12 காஸ்
சிலிண்டர்கள் மட்டுமே தரப்படுகின்றன; மீதமுள்ள 18 காஸ் சிலிண்டர்களும்
நுகர்வோர் பெயர்களில் காஸ் டீலர்களால் அல்லது அவர்களின் ஆட்களால் கள்ள
மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன என்பதே அந்த உண்மை.
டிஸ்கி} ஏற்கனவே சிலிண்டருக்கு நாயா பேயா
அலைய வேண்டியிருக்கு! இன்னிக்கு டூ வீலர் இல்லாத வீடுகளே இல்லே!
பார்லிமெண்ட் நிலைக்குழுவா? பைத்தியக்காரங்க குழுவா? நடுத்தரமக்களோட
விளையாடறத விட்டுட்டு உருப்படியா ஏதாவது யோசிக்கட்டும் அரசு! இல்லேனா
இருக்கவே இருக்கு துருப்புச் சீட்டு! அதாங்க நம்ம ஓட்டு!
நன்றி தினமலர்
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» சுவர் இருந்தால் தான்...!
» டூவீலர், கார் திருட்டுகளை தடுக்க "செக்யூரிட்டி வெகிக்கிள் ஸ்டார்ட்டர்' : ஸ்ரீவி., ராணுவ வீரர் சாதனை
» கர்நாடகா : 900 சிலிண்டர் வெடித்து விபத்து
» கேஸ் சிலிண்டர் பாதுகாப்பு
» நடந்தது என்ன?: 'எல்லாம் ப.சிதம்பரத்துக்கும் தெரியும்'.. ராசா 'பகீர்'!
» டூவீலர், கார் திருட்டுகளை தடுக்க "செக்யூரிட்டி வெகிக்கிள் ஸ்டார்ட்டர்' : ஸ்ரீவி., ராணுவ வீரர் சாதனை
» கர்நாடகா : 900 சிலிண்டர் வெடித்து விபத்து
» கேஸ் சிலிண்டர் பாதுகாப்பு
» நடந்தது என்ன?: 'எல்லாம் ப.சிதம்பரத்துக்கும் தெரியும்'.. ராசா 'பகீர்'!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum