தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

+6
அப்துல்லாஹ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஆளுங்க
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
eraeravi
10 posters

Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by eraeravi Sat Oct 15, 2011 9:36 am

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? –
சாலவும் நன்று நூலகம் செல்வதே
கவிஞர் இரா.இரவி
ஆலயங்களினால் தான் இன்று மனிதன் அமைதி இழந்து தவிக்கின்றான். இந்தியா முழுவதும்
இராமருக்கு 7000 கோயில்கள் இருந்தபோதும். பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான்
இராமர் பிறந்தார். எனவே அங்குதான் ஆலயம் கட்டுவோம் என்று பாபர் மசூதியை
இடித்ததன் விளைவாக நாடெங்கும் கலவரம் வெடித்தது. 1000-க்கும் மேற்பட்ட மனித
உயிர்கள் பலியாயின. விலை மதிப்பற்ற மனித உயிர்கள் மடிந்தன. கோத்ரா ரயில்
படுகொலை இப்படி தொடரும் வன்முறை.


பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகள் சிலர் மசூதியில் தொழுது கொண்டு
இருந்தவர்களை குண்டு வைத்துக் கொன்றனர். இந்தியாவில் உள்ள இந்துமதவெறி
அமைப்புகள் வன்முறையைத் தூண்டி விடுகின்றன. ஒவ்வொரு பிள்ளையார், சதுர்த்தியின்
போதும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டி உள்ளது.


ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று பொறுமையும் சகிப்புத்
தன்மையையும் போதித்த கிறித்துவ ஆலயங்களை உடைப்பது, சிதைப்பது என்ற நிலை இன்று
தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. வட மாநிலங்களில் கிறித்துவர்களை அடிப்பது,
விரட்டுவது, எரிப்பது என வன்முறை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.


ஆலயங்களில் இருப்பவன், இலலாதவன் என்று வேறுபடுத்தும் விதமாக பணம்
கட்டுபவர்களுக்கு அருகில் சிறப்பு தரிசனம், ஏழைகளுக்கு தூரத்தில் தர்ம தரிசனம்
என வேறுபாடு. அது மட்டுமல்ல; பிறப்பால் பிராமணராக இருந்தால் மட்டும் கருவறையில்
அனுமதி, அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றிய போதும்,
பயிற்சிகள் தந்த போதும் இன்னும் நாட்டில் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால்
நூலகத்தில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லோரும் சமம். யாரும் எங்கும் செல்லலாம்.


ஆலயங்களுக்குள் நுழைவதே பெரும் போராட்டமாக உள்ளது. பல்வேறு சோதனைகள்
செய்துதான் உள்ளே அனுப்புகின்றனர். காரணம் என்ன? இந்த நிலை ஏன் வந்தது? மதம்,
மனித மனங்களை நெறிப்படுத்துவதற்குப் பதிலாக ஏன் ? இப்படி வெறிப்படுத்தும் வேலையை
செய்து கொண்டு இருக்கின்றது.


நூலகம் என்பது அறிவுத் திருக்கோயில், இங்கு வந்தவர்கள் IAS, IPS என்று
உயர்கின்றார்கள். சென்னை கன்னிமாரா நூலகத்திலும்,அண்ணா நூலகத்திலும் லட்சக் கணக்கான


நூல்கள் உள்ளது.


மதுரை மாவட்ட மைய நூலகத்தில் 2 இலட்சம் நூல்கள் இருக்கின்றன.
அப்படி என்றால் 2 இலட்சம் அறிஞர்கள் இருக்கின்றார்கள் என்று பொருள். நூலகம்
என்பது பெரிய சொத்து, மனிதனை, மனிதனாக்கும், அறிஞனாக்கும், விஞ்ஞானியாக்கும்
திறன் வளர்க்கும்.


ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், முதலில் அவர்களின் இலக்கியத்தை அழிக்க
வேண்டும் என்பார்கள். அதனால் தான் இன்று இனவெறியோடு தமிழர்களை அழிக்கும்
சிங்களத்தினர், அன்று தமிழர்களின் இலக்கியக் களஞ்சியமான மாபெரும் யாழ் நூலகத்தை
தீயிட்டுக் கொளுத்தினார்கள்.


ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச் சாலைகள் மூடப்படுகின்றன .இது
பொன்மொழி. ஆனால் இன்று, ஒரு ஆலயம் திறக்கப்படும்போது நூறு பேர்
கொல்லப்படுகின்றனர் என்பது பு்துமொழி. ஆலயங்கள் அன்பைப் போதிப்பதற்கு பதிலாக
இன்று வம்பைப் போதிக்கின்றன.


தசாவதாரம் திரைப்படத்தில், கலைஞானி கமலஹாசன் ஒரு வசனம் பேசுவார். கடவுள் இல்லை
என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்று. இந்த வசனம் சிறப்பாக
இருந்தது என்று நான் ஒரு சமயம் பேராசிரியர் கு .ஞான சம்பந்தன் மூலமாக கமலை
செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டிய போது, அவர் சொன்னார்,


இந்த வசனத்தைச் சொன்னது உங்கள் மதுரைக்காரரான
அறிஞர் தொ. பரமசிவம் என்றார். கடவுளைக் கேலி செய்து அறிஞர் தொ. பரமசிவம்பேசியபோது


பேராசிரியர் கு .ஞான சம்பந்தன் கடவுள் இல்லை என்கிறீர்களா என்ற போது கடவுள் இல்லை
என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும். என்றார் .இந்தவசனம் பேசும் போது


நானும் உடன் இருந்தேன் .அதைத்தான் படத்தில் சொன்னேன் .என்றார் கமல் இது வசனம் மட்டுமல்ல,
நினைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.


மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றபோது நூலகரை
வரவழைத்துத்தான் கவுரவப்படுத்தினார்கள். இன்று சந்திராயன் சந்திரனில் தேசியக்
கொடியை நான்காவது நாடாக நட்டு இருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் அறிவியல்
நூல் அறிவு. கோவை அருகே கோதவாடி என்ற கிராமத்தில் பிறந்த மயில்சாமி அண்ணாத்துரை என்ற தமிழர்.


ஆலயத்தில் பூஜை மட்டும் செய்து கொண்டிருந்தால் சந்திராயனை நம்மால்
அனுப்பி இருக்க முடியாது.


அறிஞர் அண்ணா படிக்கத் தொடங்கிய ஒரு நூலைப் படித்து முடிக்க வேண்டும்
என்பதற்காக அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்தார்கள். கன்னிமாரா நூலகத்தில்
எந்த நூல் எங்கு உள்ளது என்பது நூலகரைக் காட்டிலும் அறிஞர் அண்ணாவிற்கு நன்கு
தெரியும். ஆங்கில அறிஞர்களிடையே அண்ணா பேசும்போது ABCD என்ற நான்கு எழுத்து
வராமல் நூறு வார்த்தைகள் சொல்ல முடியுமா? என்று கேட்டார். யாருக்கும்
தெரியவில்லை. ஒரு பையனைக் கூப்பிட்டு one, two, three சொல்லச் சொல்லி Ninty
nine வரை சொன்னதும், Stop என்றார். 100 வார்த்தை வந்துவிட்டது. இத்தகைய
நுட்பமான அறிவு, அறிஞர் அண்ணாவிற்கு வரக் காரணம் நூலக அறிவு. அறிஞர் அண்ணா
ஆலயம் செல்வதில்லை. ஆனால் நூலகம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் தான்
அறிஞராக மாற முடிந்தது.


மாவீரன் பகத்சிங் தூக்குமேடைக்குச் செல்லும் வரை நூல்கள் படித்துக்
கொண்டிருந்தார். 10-ஆம் நூற்றாண்டு பாரசீக மன்னன் அப்துல் காசிம் இஸ்மாயில்
1,70,000 நூல்கள் வைத்து இருந்தார். அவரது படைத்தளபதிகள் படையெடுத்துச்
செல்லும்போது நூல்களைத் தான் அள்ளி வருவார்களாம். அக்பருக்கு எழுதப் படிக்கத்
தெரியாது. ஆனாலும் நூல்களைப் படிக்கச் சொல்லி, கேட்டு அறிந்து மிகப் பெரிய
அறிஞராக உருவானார். நெப்போலியன் சிறையில் இருக்கும் போது நூல்களைத்தான்
படித்தார். ஜவகர்லால் நேருவிற்கு ஆலயம் செல்லும் பழக்கம் இல்லை. ஆனால் நூல்கள்
படிக்கும் பழக்கம் நிறைய இருந்தது.


தந்தை பெரியார் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் நடத்தும்போது கோவிலிலிருந்து
எடுத்து வந்து பிள்ளையாரை உடைக்க மாட்டார். தனது சொந்தப் பணம் கொடுத்து
பிள்ளையார் சிலை வாங்கி வரச் சொல்லி உடைத்துக் காட்டி போராட்டம் நடத்தினார்.
அறிவு நாணயமும், பொது ஒழுக்கமும் மிகுந்தவர் தந்தை பெரியார். ஆனால் இன்று எந்த
நாத்திகனும் ஆலயத்தைச் சிதைப்பதில்லை. ஆனால் ஆத்திகர்கள் தான், மாற்று
மதத்தினர் ஒருவருக்கொருவர் ஆலயங்களைச் சிதைத்துக் கொண்டு மோதிக் கொண்டு
பலியாகின்றனர். மதுரை சிறையில் 5000 கைதிகளில் அனைவரும் ஆத்திகர்கள் தான்.
ஆலயம் மனதை பண்படுத்தவில்லை என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு.


காந்தியடிகளுக்கு வாசிக்கும் பழக்கம் அதிகம் உண்டு. அதனால்தான் திருக்குறளின்
காரணமாக தமிழையும் நேசித்தார். சத்திய சோதனை நூல் வடிக்கக் காரணமாக இருந்தது
நூல் அறிவு. மாமேதை அப்துல்கலாம், அக்னிச்சிறகுகள் எனும் தன்னம்பிக்கை விதையை
பல்வேறு மொழிகளில் படைத்து விற்பனையில் சாதனை படைத்தது. இந்நூல் வடிக்க காரணமாக
இருந்தது நூல் அறிவு. தனிமையையும், கவலையையும் விரட்டுவது நூல்கள். வீடு
கட்டும் போது வரவேற்பறை, படுக்கையறை, பூஜையறை, கழிவறை கட்டுகின்றோம். நூலக அறை
கட்டுவதில்லை. இனி ஒவ்வொரு தமிழரும் வீடு கட்டும்போது நூலக அறை கட்ட வேண்டும்.
பட்டிமன்ற நடுவர். அறிஞர், முனைவர் இரா. மோகன் அவர்தம் வீட்டிற்குச்
சென்றவர்களுக்கு இதன் உண்மை விளங்கும். வீட்டில் நூலக அறை வேண்டும் என்கிறோம்.
ஆனால் நூலகத்திற்குள் வீடு உள்ளது என்று சொல்லும் அளவிற்கு திரும்பிய பக்கம்
அனைத்திலும் நூல்கள்தான் இருக்கும். சங்கத் தமிழ் முதல் இன்று வந்த நூல்கள் வரை
அனைத்தும் இருக்கும். அதன் காரணமாகத்தான் பட்டிமன்றங்களில் நடுவராகக்
கலக்குகின்றார். 85 நூல்கள் எழுதிக் குவித்துள்ளார்.


இது கணினி யுகம், இணைய தளங்கள், மின்னணு நூலகங்கள் வந்துவிட்டன. விஞ்ஞான உலகில்
இன்று இணைய தளங்களில் புகழ் பெற்ற தேடுதளங்களான கூகுள். யாகூ. என பல்வேறு
தளங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்டால் அது தொடர்பான அனைத்துத்
தகவல்களும் உங்கள் விரல் நுனியில் வந்துவிடும், விழிகளுக்கும் செவிகளுக்கும்
விருந்து தரும் பல தகவல்கள் களஞ்சியமாக உள்ளது. இணையம் என்பது தீ போன்றது, தீயை
சமைக்கவும், வெளிச்சம் பெறவும், ஆக்க சக்தியாகப் பயன்படுத்தலாம். தீயை
எரிக்கவும், கொளுத்தவும் அழிவு சக்தியாகவும் பயன்படுத்தலாம். இணையத்தை இனி
அறிவு வளர்க்கும் ஆக்க சக்தியாக மட்டும் பயன்படுத்துவோம். அறிவைத் சிதைக்கும்
ஆபாச அழிவு சக்திக்குப் பயன்படுத்தாமல் இருப்போம்.


எனவே, சாலவும் நன்று எது? என்று கேட்டால் நூலகம் செல்வதே என்பது எனது கருத்து.
ஆலயம் செல்வது இன்று ஆடம்பரமாகி விட்டது. எனவே மனிதனைப் பண்படுத்தும்,
நெறிப்படுத்தும் மகிழ்வூட்டும், அறிவுத்திறன் வளர்க்கும் நூலகம் செல்வோம். நமது
குழந்தைகளை நூலகம் அழைத்துச் சென்று பழக்குவோம். வாசிக்கும் பழக்கத்தை
சுவாசிப்பதைப் போன்று வழக்கப்படுத்துவோம். நமது பண்பாட்டைச் சிதைத்துச்
சீரழிக்கும் திரைப்படம் தவிர்த்து அத்தி பூத்த மாதிரி வரும் சில நல திரைப்படங்களை மட்டும் பார்போம்
தொல்லைக்காட்சியாகிவிட்ட பழிக்குப் பழி வாங்கும் வக்கிரம் வளர்க்கும் தொலைக்காட்சித் தொடர்கள்
பார்ப்பதை விடுத்து ,நூலகம் செல்வோம். ஆரோக்கியமான மனித சமுதாயம்
படைப்போம். ஜாதி மத மோதல்களை விடுப்போம். பகுத்தறிவைப் பயன்படுத்துவோம்.
மனிதநேயம் வளர்ப்போம். மானுடம் காப்போம். சமத்துவ, சமதர்ம சமுதாயம் அமைப்போம்.

avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by அ.இராமநாதன் Sat Oct 15, 2011 10:03 am


உன்மீது உனக்கு நம்பிக்கை இல்லையென்றால்
கடவுள் நேரில் வந்தாலும் பயனில்லை – விவேகானந்தர்.

உன்மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் கடவுள்
தேவையில்லை – தந்தை பெரியார்.

ஒரே கருத்தை தான் இரு துருவங்களும் வலியுறுத்துகின்றன.

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Oct 15, 2011 10:15 am

ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச் சாலைகள் மூடப்படுகின்றன .இது பொன்மொழி. ஆனால் இன்று, ஒரு ஆலயம் திறக்கப்படும்போது நூறு பேர் கொல்லப்படுகின்றனர் என்பது பு்துமொழி. ஆலயங்கள் அன்பைப் போதிப்பதற்கு பதிலாக இன்று வம்பைப் போதிக்கின்றன.
- உண்மைதான் மறுப்பதற்கு இ்ல்லை
தசாவதாரம் திரைப்படத்தில், கலைஞானி கமலஹாசன் ஒரு வசனம் பேசுவார். கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்று. இந்த வசனம் சிறப்பாக இருந்தது என்று நான் ஒரு சமயம் பேராசிரியர் கு .ஞான சம்பந்தன் மூலமாக கமலை செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டிய போது...
- அவரைப் பாராட்டியதற்காக நாங்கள் உங்களைப் பாராட்டுகிறோம்
சாலவும் நன்று எது? என்று கேட்டால் நூலகம் செல்வதே என்பது எனது கருத்து.
- என்னுடைய கருத்துமாகும்

என் விளக்கம்:

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அன்றைய தமிழ் உலகுக்கு ஏற்புடையதாக இருந்தது. ஆலயத்தில்தான் (மடங்களில்) கல்வி கற்பிக்கப்பட்டது. இன்று வன்முறைகள் போதிக்கப்படுகின்றன


சமய போதனைகள்
கத்தல் மிரட்டல் பயம் உறுத்தல்
பாவம் பக்தர்கள்

- © ம. ரமேஷ் லிமரைக்கூ
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by அ.இராமநாதன் Sat Oct 15, 2011 10:29 am

ஆங்கிலப் பழமொழி ஒன்று கூறுகிறது,

'ஆலயம் ஒன்றில் பிறப்பது நன்று.
ஆனால் அதிலேயே இறப்பது தீது'.


மனிதன் மதத்தில் பிறக்கிறான்.
அறிந்து அறிந்து மதத்தைக் கடக்கிறான்
என்பதைத்தான் அது சுட்டுகிறது.

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Oct 15, 2011 10:35 am

மனிதனை மனிதனாக்க மதம் அன்று உதவியது.
இன்று பேய்களின் கூடாரமாகி விட்டது

-என்பார் அப்துல் ரகுமான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by ஆளுங்க Sat Oct 15, 2011 12:24 pm

உங்கள் கருத்தில் இருந்து மாறுபடுவதற்கு வருந்துகிறேன்...

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்பது ஒளவை வாக்கு..
இதனை மட்டும் வைத்து வாதிடல் நன்றோ?

ஆலயம் தொழுவது சாலவும் நன்று
என்று தான் எழுதப்பட்டுள்ளது...
"ஆலயம் தொழுவது மட்டுமே சாலவும் நன்று" என்று சொல்லவில்லையே??

அதே கொன்றை வேந்தனில் இருக்கும் கீழ்காணும் வரிகளையும் படியுங்கள்:
கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
இதன் மூலம் கல்விச் செல்வமே அனைத்தை விட உயர்ந்தது என்று கூறவில்லையா?

அதே போல, ஓதுவதை விட ஒழுக்கம் முக்கியம் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது!!
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

எனவே, சாலவும் நன்று ஆலயம் தொழுவது..
எனினும், கல்வியும் ஒழுக்கமும் அதை விட முக்கியம் என்று தான் ஒளவை கூறுகிறார்..

பி.கு:
கடவுள் மேல் நம்பிக்கை இருந்தாலும் சரி இல்லாவிடிலும் சரி , "ஆலயம் தொழுவது மட்டுமே சாலவும் நன்று" என்றே கூறுவேன்..

தாயினையும் தந்தையையும் தெய்வமாகத் தொழலாமே!

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 12:41 pm

நன்றி ஆளுங்க நண்பரே, தொடர்ந்து வாங்களேன் நமது தோட்டத்துக்கு அருமையான விளக்கம் கொடுத்திருக்கீங்க பாராட்டுக்கள் உங்கள் வளமையான பூக்களை நமது தோட்டத்தில் பூக்க விடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by ஆளுங்க Sat Oct 15, 2011 12:47 pm

நிச்சயமாக!!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 12:51 pm

ஆளுங்க wrote:நிச்சயமாக!!
சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி 64660 சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி 669333 சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி 579418 சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி 608753 சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி 509975 சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி 336913
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by eraeravi Sat Oct 15, 2011 1:40 pm

வணக்கம்
எனது கட்டுரை ஆரோக்கியமான விவாதப் பொருளானது .விவாதிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by அப்துல்லாஹ் Sat Oct 15, 2011 1:50 pm

உண்மை தான் ரவி...
ஆலயம் என்பது ஞானம் வீற்றிருக்கும் இடம்...அது கடவுள் இருக்கும் இடமாகவோ களஞ்சியங்களான புத்தகங்கள் இருக்கும் இடமாகவோ இருக்கலாம்..
எனவே ஆலயம் தொழுவது நுலகம் சென்று ஞானம் கற்பது இரண்டும் ஒன்று தான்..


Last edited by அப்துல்லாஹ் on Sat Oct 15, 2011 1:59 pm; edited 1 time in total
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by eraeravi Sat Oct 15, 2011 1:54 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by தங்கை கலை Sat Oct 15, 2011 3:47 pm

சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by vinitha Sat Oct 15, 2011 3:51 pm

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி 446419
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by muthuselvi Sat Oct 15, 2011 4:24 pm

நூலகம சென்று கற்றவர்கள் தான் (படித்தவர்கள்)மதத்தையும், மதத்தின் நோக்கமும் புரியாமல் பிரச்சனையை உருவாக்குகின்றார்கள் என்பது என் வாதம்.
மனிதனை புரிந்து கொள்ள முடியாயாதவர்கள் கடவுளை எப்படி புரிந்து கொள்ள முடியும்? இன்று படித்தவர்கள் தான் உறவையும் மதிப்பதில்லை, மனித நேயமும் இல்லாமல் இருக்கிறார்கள். தன்னை உணர்ந்தால் தான் மனிதன் ஆவான். அதன் பிறகு தான் அவன் கடவுளை உணர முடியும்.
கடவுளின் பெயரை வைத்து போராட்டம் செய்தவர்களும் , கடவுள் இல்லை என்று போராட்டம் செய்தவர்களும் அடிப்படை விசயத்தை புரிந்துகொள்ளவில்லை என்பது தான் உண்மை. தன்னை உணர ஒரு மனிதன் கோவிலுக்கு செல்ல வேண்டாம் .....புத்தகமும் பயில வேண்டாம்.
தினமும் ஒரு மனிதன் அரை மணி நேரம் எடுத்து கொண்டு தனது தவறை திருத்த முயன்றால்..... அவனே ஒரு நாள் மனிதன் ஆகிவிடுவான். இதற்கு தியானமும் தேவை படலாம். தவறக கூறி இருந்தால் மன்னிக்கவும்.
muthuselvi
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 4:28 pm

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by அ.இராமநாதன் Sat Oct 15, 2011 4:30 pm

விதியை வெல்ல முடியாது..

ஆனால் விதியால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை
தாங்கிக் கொள்ளும் மனோ பலத்தை தெய்வ
நம்பிக்கை தருகிறது...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 15, 2011 4:34 pm

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by கலைநிலா Sat Oct 15, 2011 5:35 pm

மனமே காரணம் .
அது அவதாரம் எடுக்கும் போது,
மாறுபடுகிறது !
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum