தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவி

3 posters

Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவி Empty சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவி

Post by eraeravi Sat Jun 26, 2010 12:10 pm

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவி


ஆலயங்களினால் தான் இன்று மனிதன் அமைதி இழந்து தவிக்கின்றான். இந்தியா முழுவதும் இராமருக்கு 7000 கோயில்கள் இருந்தபோதும். பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்தார். எனவே அங்குதான் ஆலயம் கட்டுவோம் என்று பாபர் மசூதியை இடித்ததன் விளைவாக நாடெங்கும் கலவரம் வெடித்தது. 1000-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாயின. விலை மதிப்பற்ற மனித உயிர்கள் மடிந்தன. கோத்ரா ரயில் படுகொலை இப்படி தொடரும் வன்முறை.

பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகள் சிலர் மசூதியில் தொழுது கொண்டு இருந்தவர்-களை குண்டு வைத்துக் கொன்றனர். இந்தியா-வில் உள்ள இந்துமதவெறி அமைப்புகள் வன்முறையை தூண்டி விடுகின்றன. ஒவ்வொரு பிள்ளையார், சதுர்த்தியின் போதும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டி உள்ளது.

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று பொறுமையும் சகிப்புத் தன்மையையும் போதித்த கிறித்துவ ஆலயங்-களை உடைப்பது, சிதைப்பது என்ற நிலை இன்று தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. வட மாநிலங்களில் கிறித்துவர்களை அடிப்-பது, விரட்டுவது, எரிப்பது என வன்முறை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

ஆலயங்களில் இருப்பவன், இலலாதவன் என்று வேறுபடுத்தும் விதமாக பணம் கட்டுபவர்களுக்கு அருகில் சிறப்பு தரிசனம், ஏழைகளுக்கு தூரத்தில் தர்ம தரிசனம் என வேறுபாடு. அது மட்டுமல்ல; பிறப்பால் பிராமணராக இருந்தால் மட்டும் கருவறை-யில் அனுமதி, அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றிய போதும், பயிற்சிகள் தந்த போதும் இன்னும் நாட்டில் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் நூலகத்தில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லோரும் சமம். யாரும் எங்கும் செல்லலாம்.

ஆலயங்களுக்குள் நுழைவதே பெரும் போராட்டமாக உள்ளது. பல்வேறு சோதனை-கள் செய்துதான் உள்ளே அனுப்புகின்றனர். காரணம் என்ன? இந்த நிலை ஏன் வந்தது? மதம், மனித மனங்களை நெறிப்படுத்து-வதற்குப் பதிலாக ஏன் இப்படி வெறிப்-படுத்தும் வேலையை செய்து கொண்டு இருக்கின்றது.

நூலகம் என்பது அறிவுத் திருக்கோயில், இங்கு வந்தவர்கள் IAS, IPS என்று உயர்-கின்றார்கள். மதுரை மாவட்ட மய்ய நூலகத்-தில் 2 இலட்சம் நூல்கள் இருக்கின்றன. அப்படி என்றால் 2 இலட்சம் அறிஞர்கள் இருக்கின்றார்கள் என்று பொருள். நூலகம் என்பது பெரிய சொத்து, மனிதனை, மனி-தனாக்கும், அறிஞனாக்கும், விஞ்ஞானியாக்கும் திறன் வளர்க்கும்.

ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், முதலில் அவர்களின் இலக்கியத்தை அழிக்க வேண்டும் என்பார்கள். அதனால் தான் இன்று இனவெறியோடு தமிழர்களை அழிக்கும் சிங்களத்-தினர், அன்று தமிழர்களின் இலக்-கியக் களஞ்சியமான மாபெரும் யாழ் நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச் சாலைகள் மூடப்படுகின்றன இது பொன்மொழி. ஆனால் இன்று, ஒரு ஆலயம் திறக்கப்படும்போது நூறு பேர் கொல்லப்-படுகின்றனர் என்பது புண்மொழி. ஆலயங்-கள் அன்பைப் போதிப்பதற்கு பதிலாக இன்று வம்பைப் போதிக்கின்றன.

தசாவதாரம் திரைப்படத்தில், கலைஞானி கமலஹாசன் ஒரு வசனம் பேசுவார். கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்று. இந்த வசனம் சிறப்பாக இருந்தது என்று நான் ஒரு சமயம் கமலை செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டிய போது, அவர் சொன்னார், இந்த வசனத்தைச் சொன்னது உங்கள் மதுரைக்காரரான அறிஞர் தொ. பரமசிவம் என்றார். இது வசனம் மட்டுமல்ல, நினைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றபோது நூலகரை வரவழைத்துத்தான் கவுரவப்படுத்தினார்கள். இன்று சந்திராயன் சந்திரனில் தேசியக் கொடியை நான்காவது நாடாக நட்டு இருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் அறிவியல் நூல் அறிவு. ஆலயத்தில் பூஜை மட்டும் செய்து கொண்டிருந்தால் சந்திராயனை நம்மால் அனுப்பி இருக்க முடியாது.

அறிஞர் அண்ணா படிக்கத் தொடங்கிய ஒரு நூலைப் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்தார்கள். கன்னிமாரா நூலகத்தில் எந்த நூல் எங்கு உள்ளது என்பது நூலகரைக் காட்டிலும் அறிஞர் அண்ணாவிற்கு நன்கு தெரியும். ஆங்கில அறிஞர்களிடையே அண்ணா பேசும்போது ABCD என்ற நான்கு எழுத்து வராமல் நூறு வார்த்தைகள் சொல்ல முடியுமா? என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. ஒரு பையனைக் கூப்பிட்டு one, two, three சொல்லச் சொல்லி Ninty nine வரை சொன்னதும், Stop என்றார். 100 வார்த்தை வந்துவிட்டது. இத்தகைய நுட்பமான அறிவு, அறிஞர் அண்ணாவிற்கு வரக் காரணம் நூலக அறிவு. அறிஞர் அண்ணா ஆலயம் செல்வ-தில்லை. ஆனால் நூலகம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் தான் அறிஞராக மாற முடிந்தது.

மாவீரன் பகத்சிங் தூக்குமேடைக்குச் செல்லும் வரை நூல்கள் படித்துக் கொண்டிருந்தார். 10-ஆம் நூற்றாண்டு பாரசீக மன்னன் அப்துல் காசிம் இஸ்மாயில் 1,70,000 நூல்கள் வைத்து இருந்தார். அவரது படைத்தளபதிகள் படையெடுத்துச் செல்லும்போது நூல்களைத் தான் அள்ளி வருவார்களாம். அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனாலும் நூல்களைப் படிக்கச் சொல்லி, கேட்டு அறிந்து மிகப் பெரிய அறிஞராக உருவானார். நெப்போலியன் சிறையில் இருக்கும் போது நூல்களைத்தான் படித்தார். ஜவகர்லால் நேருவிற்கு ஆலயம் செல்லும் பழக்கம் இல்லை. ஆனால் நூல்கள் படிக்கும் பழக்கம் நிறைய இருந்தது.

தந்தை பெரியார் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் நடத்தும்போது கோவிலிலிருந்து எடுத்து வந்து பிள்ளையாரை உடைக்க மாட்டார். தனது சொந்தப் பணம் கொடுத்து பிள்ளை-யார் சிலை வாங்கி வரச் சொல்லி உடைத்துக் காட்டி போராட்டம் நடத்தினார். அறிவு நாணயமும், பொது ஒழுக்கமும் மிகுந்தவர் தந்தை பெரியார். ஆனால் இன்று எந்த நாத்திகனும் ஆலயத்தைச் சிதைப்-பதில்லை. ஆனால் ஆத்திகர்கள் தான், மாற்று மதத்தினர் ஒருவருக்கொருவர் ஆலயங்களைச் சிதைத்துக் கொண்டு மோதிக் கொண்டு பலியாகின்றனர். மதுரை சிறையில் 3500 கைதிகளில் அனை-வரும் ஆத்திகர்கள் தான். ஆலயம் மனதை பண்படுத்தவில்லை என்-பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு.

காந்தியடிகளுக்கு வாசிக்கும் பழக்கம் அதிகம் உண்டு. அதனால்தான் திருக்குறளின் காரணமாக தமிழையும் நேசித்தார். சத்திய சோதனை நூல் வடிக்கக் காரணமாக இருந்தது நூல் அறிவு. மாமேதை அப்துல்கலாம், அக்னிச்-சிறகுகள் எனும் தன்னம்பிக்கை விதையை பல்வேறு மொழிகளில் படைத்து விற்பனை-யில் சாதனை படைத்தது. இந்நூல் வடிக்க காரணமாக இருந்தது நூல் அறிவு. தனிமையையும், கவலையையும் விரட்டுவது நூல்கள். வீடு கட்டும் போது வரவேற்பறை, படுக்-கையறை, பூஜையறை, கழிவறை கட்டு-கின்றோம். நூலக அறை கட்டுவதில்லை. இனி ஒவ்வொரு தமிழரும் வீடு கட்டும்போது நூலக அறை கட்ட வேண்டும். பட்டிமன்ற நடுவர். அறிஞர், முனைவர் இரா. மோகன் அவர்தம் வீட்டிற்குச் சென்றவர்களுக்கு இதன் உண்மை விளங்கும். வீட்டில் நூலக அறை வேண்டும் என்கிறோம். ஆனால் நூலகத்-திற்குள் வீடு உள்ளது என்று சொல்லும் அளவிற்கு திரும்பிய பக்கம் அனைத்திலும் நூல்கள்தான் இருக்கும். சங்கத் தமிழ் முதல் இன்று வந்த நூல்கள் வரை அனைத்தும் இருக்கும். அதன் காரணமாகத்தான் பட்டி-மன்றங்களில் நடுவராகக் கலக்குகின்றார். 75 நூல்கள் எழுதிக் குவித்துள்ளார்.

இது கணினி யுகம், இணைய தளங்கள், மின்னணு நூலகங்கள் வந்துவிட்டன. விஞ்-ஞான உலகில் இன்று இணைய தளங்களில் புகழ் பெற்ற தேடுதளங்களான கூகுள். யாகூ. என பல்வேறு தளங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்டால் அது தொடர்-பான அனைத்துத் தகவல்களும் உங்கள் விரல் நுனியில் வந்துவிடும், விழி-களுக்கும் செவிகளுக்கும் விருந்து தரும் பல தகவல்கள் களஞ்சியமாக உள்ளது. இணையம் என்பது தீ போன்றது, தீயை சமைக்கவும், வெளிச்சம் பெறவும், ஆக்க சக்தியாகப் பயன்படுத்தலாம். தீயை எரிக்கவும், கொளுத்-தவும் அழிவு சக்தியாகவும் பயன்படுத்தலாம். இணையத்தை இனி அறிவு வளர்க்கும் ஆக்க சக்தியாக மட்டும் பயன்படுத்துவோம். அறிவைத் சிதைக்கும் ஆபாச அழிவு சக்திக்குப் பயன்படுத்தாமல் இருப்போம்.

எனவே, சாலவும் நன்று எது? என்று கேட்டால் நூலகம் செல்வதே என்பது எனது கருத்து. ஆலயம் செல்வது இன்று ஆடம்-பரமாகி விட்டது. எனவே மனிதனைப் பண்-படுத்தும், நெறிப்படுத்தும் மகிழ்வூட்டும், அறிவுத்-திறன் வளர்க்கும் நூலகம் செல்வோம். நமது குழந்தைகளை நூலகம் அழைத்துச் சென்று பழக்குவோம். வாசிக்கும் பழக்கத்தை சுவாசிப்பதைப் போன்று வழக்கப்படுத்துவோம். நமது பண்பாட்டைச் சிதைத்துச் சீரழிக்கும் திரைப்படம் மற்றும் தொல்லைக்காட்சியாகி-விட்ட தொலைக்காட்சியிலிருந்து விடுபட்டு நூலகம் செல்வோம். ஆரோக்கியமான மனித சமுதாயம் படைப்போம். ஜாதி மத மோதல்-களை விடுப்போம். பகுத்தறிவைப் பயன்படுத்து-வோம். மனிதநேயம் வளர்ப்போம். மானுடம் காப்போம். சமத்துவ, சமதர்ம சமுதாயம் அமைப்போம்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவி

Post by eeranila Sat Jun 26, 2010 3:56 pm

ஆலயம் தொழுதல் சாலவும் நன்று என்பது முதுமொழி, மேலும் ஆலயங்கள் அந்த அந்த மதங்களை பிரதிபலிப்பதாகவே கருதப்பட்டன ஆனால் இன்றைய சூழலில் ஆலயங்கள் வியாபார கூடங்களாகவும், கௌரவத்தின் அடையாளங்களாகவும் மாறிவிட்டன.

மனிதனுக்காக மனிதனால் உறுவாக்கப்பட்டதே மதங்கள், அற்புதக் கருத்துக்களும், கோட்பாடுகளும், வாழ்வியல் முறைகளும் நிறைந்த மதங்கள், மனிதகுல பண்பாட்டிற்க்காகவும் அவர்கள் வாழ்வியல் முறைகள் பக்குவப்படவும் மனித குலத்தில் உதித்த மிகப்பெரிய அறிவிற் சிறந்த மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு இந்த மனித சமுதாயத்துக்கு வளங்கப்பட்டிருக்கிறது, ஆனால் அத்தகைய அரிய கருத்துக்கள் கொண்ட மதங்கள் இன்று இந்த உலகையே ஆட்டுவிக்கும் மிக பெரிய சக்தியாக மனிதனால் உறுவாக்கப்பட்டு வளம் வந்து கொண்டிருக்கின்றது.

இதில் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில், மதங்களின் கருத்துக்களை தவறாக புரிந்துக் கொண்ட மனிதர்கள், செய்கின்ற தவறுகளுக்கு மதங்கள் ஒரு போதும் பொருப்பேற்காது.

அறிவின் களஞ்சியங்கம் நூலகங்கள், அரிய கருத்துக்களும், கோட்பாடுகளும் அதன் சிறந்த பொக்கிஷமாய் விளங்குவது நூலகங்கள், அத்தகைய நூலகத்தில் மதங்கள் தொடர்பான கோட்பாடுகளையும் படித்துணர்வது அவசியமே.ஆலயம் செல்லா வருங்கால தலைமுறைகள் நூலகத்தின் வாயிலாக மதங்களையும் அதன் உயரிய கருத்துக்களையும் படித்தறியட்டும் பின் அவர்கள் மூலமாக உதயமாகும் ஆலயங்கள் மன அமைதியையும், மனித நேயத்தையும் பிரதிபலிக்கட்டும்.நூலகம் வழியே ஆலயங்களை ஆராதிப்போம்.
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவி

Post by Aathira Sat Jun 26, 2010 8:30 pm

//ABCD என்ற நான்கு எழுத்து வராமல் நூறு வார்த்தைகள் சொல்ல முடியுமா? என்று கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. ஒரு பையனைக் கூப்பிட்டு one, two, three சொல்லச் சொல்லி Ninty nine வரை சொன்னதும், Stop என்றார். 100 வார்த்தை வந்துவிட்டது. இத்தகைய நுட்பமான அறிவு, அறிஞர் அண்ணாவிற்கு வரக் காரணம் நூலக அறிவு. அறிஞர் அண்ணா ஆலயம் செல்வ-தில்லை. ஆனால் நூலகம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் தான் அறிஞராக மாற முடிந்தது.//
அறியாத செய்திகளை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
Aathira
Aathira
மல்லிகை
மல்லிகை

Posts : 124
Points : 177
Join date : 06/01/2010

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவி Empty NANDRI

Post by eraeravi Thu Jul 01, 2010 12:13 pm

வணக்கம். கட்டுரையைப்
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவி Empty Re: சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – கவிஞர் இரா.இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum