தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
தொகை வகைகள்
Page 1 of 1
தொகை வகைகள்
தொகையென்பது யாது?
இரு சொற்கள் சேர்ந்து வருவது தமிழிலக்கணத்தில் தொகையெனப்படும். (உ-ம்) செந்தாமரை (செம்மை+தாமரை).
தொகைகள்:
வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை,
உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்று பலவகைப்படும். அவை
பின்வருமாறு:-
1 - வேற்றுமைத் தொகை:
இரு சொற்களுக்கிடையே "ஐ", "ஆல்", "கு", "இன்", "அது", "கண்"
முதலான உருபுகள் மறைந்திருக்குமானால் அது வேற்றுமைத் தொகையாம்: -
எடுத்துக்காட்டு:-
1 - இரண்டாம் வேற்றுமை:
(எ-கா)தமிழ் கற்றான் - "ஐ" மறைந்துள்ளது.
இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா): தயிர்க்குடம் - "ஐ" உருபும், உடைய எனும் சொல்லும் மறைந்துள்ளன.
2 - மூன்றாம் வேற்றுமை:
(எ-கா)தலை வணங்கினான் - "ஆல்" மறைந்துள்ளது
மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா): பொற்குடம் - "ஆல்" உருபும் செய்த எனும் பயனும் மறைந்துள்ளது.
3 - நான்காம் வேற்றுமை:
(எ-கா)நோய் மருந்து - "கு" மறைந்துள்ளது.
4 - ஐந்தாம் வேற்றுமை:
(எ-கா)மலையருவி - "இல்" (அ) "இன்" மறைந்துள்ளது
ஐந்தாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா)புண்ணீர் - "இல்" எனும் உருபும் இருந்து என்னும் பயனும் மறைந்துள்ளன
5 - ஆறாம் வேற்றுமை:
(எ-கா)தமிழர் பண்பு - "அது" மறைந்துள்ளது
(எ-கா)அவன் வண்டி - "உடைய" மறைந்துள்ளது
6 - ஏழாம் வேற்றுமை:
(எ-கா)மணி ஒலி - "கண்" மறைந்துள்ளது
ஏழாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(எ-கா)வயிற்றுத்தீ - "கண்" உருபும், தோன்றிய என்னும் பயனும் மறைந்துள்ளன.
2 - வினைத்தொகை:-
இறந்தகாலம்,
நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களும் இருசொற்களுக்கு இடையில்
மறைந்திருப்பின் இவை வினைதொகை எனப்படும். எளியவழி: (1) இத்தொகையில் இரு
சொற்களே இருக்கும் (2) முதலில் இருக்கும் சொல் வினைச் சொல்லாக இருக்கும்
(3) இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாகவும் இருக்கும்:-
(எ-கா)
"சுடுசோறு" -
சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
சுட்ட சோறு (இறந்தகாலம்)
சுடும் சோறு (எதிர்காலம்)
3 - பண்புத்தொகையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையும்:-
பண்புப்
பெயர்ச்சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்ந்து வருமாயின் அவை
பண்புத்தொகையெனப்படும். அதுபோல இரண்டு சொற்கள் கொண்ட ஒரு பண்புத்தொகையில்
முதலில் வரும் சொல் சிறப்புப் பெயர்ச்சொல்லாகவும் இரண்டாவது வரும்
பெயர்ச்சொல் பொதுப்பெயர்ச்சொல்லாகவும் இருப்பின் அது இருபெயரொட்டுப்
பண்புத்தொகையெனப்படும்:-
பண்பாவன: குணம்(நன்மை, தீமை), உருவம்(வட்டம், சதுரம்), நிறம்(நீலம், பசுமை), எண்ணம்(ஒன்று, பத்து), சுவை(துவர், காரம்).
(எ-கா)
பண்புத்தொகை:
"பண்புத்தொகை" "சேவடி", "செங்கண்", "நெடுங்கடல்", "மூதூர்", "தண்தயிர்",
"பைந்தொடி", "வெண்சிலை", "நாற்படை"
(எ-கா)
இருபெயரொட்டுப் பண்புத்தொகை:
"கைத்தலம்" "பலாமரம்", "மடித்தலம்", "இந்தியநாடு", "விற்படை", "வெண்தயிர்", "ஒண்டொடி", "கருஞ்சிலை", "நாற்படை"
4 - உவமைத் தொகை:-
உவமைத்
தொகை கண்டுபிடிக்க (1) இரு சொற்களுள்ள தொகைச் சொல்லாக இருக்கவேண்டும்.
அதில் முதற்சொல் ஒரு உவமைச்சொல்லாக இருத்தல் வேண்டும். இதுவே உவமைத்தொகை
(எ-கா)
பானைவாய்:
இதில் பானை என்பது உவமை (பானையின் வாயை போன்ற)
(எ-கா)
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"மதிமுகம்" "மலரடி", "துடியிடை", "கமலக்கண்", "கனிவாய்", "தேன்மொழி",
"செங்கண்", "மான்விழி", "வாள்மீசை"-
5 - உம்மைத் தொகை:-
உம்மைத் தொகை கண்டுபிடிக்க (1) சேர்ந்த இரு சொற்களும் தொடர்புள்ள சொல்லாக
இருக்கவேண்டும்.(எ-கா) மாடுகன்று. (2) இரு சொற்களுக்கிடையில் "உம்"
சேர்ப்பின், பொருள் சரியாக இருத்தல் வேண்டும். இவ்வாறு இருப்பின் அது
உம்மைத்தொகை என்று கொள்க:-
(எ-கா)
சேர சோழ பாண்டியர்:
இதில் சேரரும், சோழரும் , பாண்டியரும் என்று பொருள் தரும்
(எ-கா)
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"வேண்டுதல் வேண்டாமை" "அருளாண்மை", "தாய்தந்தை", "நரைதிரை",
"காயிலைக்கிழங்கு", "கபிலபரணர்"
6 - அன்மொழித் தொகை:-
இதுவரையிற்
கூறிய தொகைகளில் அல்லாத சொற்கள் மறைந்துவருமாயின் அது
அன்மொழித்தொகையாகும். மேலும் இவ்வன்மொழித்தொகை முன் சொன்ன ஐந்து தொகைகளில்
ஒன்றாக இருக்கும். (எ-கா) "ஆயிழை வந்தாள்" - இதில் ஆயிழையென்பது
காலங்காட்டாத வினைத்தொகை (ஆராய்ந்த இழை, ஆராய்கின்ற இழை, ஆராயும் இழை).
ஆயின் இவ்விடத்தில் அந்த இழையணிந்த பெண்ணென்று பொருளாததால், இது
வினைத்தொகைப் புறத்தெ பிறந்த அன்மொழித்தொகை எனப்படும். இவ்வாறே மற்ற
தொகைகளின் புறத்தே இந்த அன்மொழித்தொகை அமைந்திருக்கும்:-
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"கோற்றொடியைக் கொன்று என் செய",
"ஏந்திழை ஈமக் கடனிறுவிப் போது"
"வீமன் திருமகளாம் மெல்லியலை",
"ஆயமும் காவலும் ஆயிழை தனக்கு",
"தந்துயர் காணா தகைசால் பூங்கொடி",
"விளங்கிழை தமியன் ஆனாள்",
"அஞ்சொல் இளவஞ்சி அடியெந்தோள் ஏறு"

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மக்கள் தொகை!!!!!!!!!!!!!!
» மக்கள் தொகை விபரம்...
» இந்தியாவின் கடன் தொகை
» இந்திய மக்கள் தொகை 121 கோடி
» உலக மக்கள் தொகை எண்ணிக்கை 700 கோடி:
» மக்கள் தொகை விபரம்...
» இந்தியாவின் கடன் தொகை
» இந்திய மக்கள் தொகை 121 கோடி
» உலக மக்கள் தொகை எண்ணிக்கை 700 கோடி:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum