தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
rjaghamani
6 posters

Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by rjaghamani Thu Oct 20, 2011 2:10 pm

மனைதோறும் மங்களகரமாகக் கொண்டாடப்படும் தெய்வீகப் பண்டிகை தீபாவளி
ஒளிமயமான எதிர்காலத்துக்காக நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளும் பண்டிகை. அனைவரையும் ஒரு சேர இணைக்கும் உன்னதத் திருநாள்.
கதிரவன் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு துலாம் ராசியில் நுழைகிறான். மராத்தியர்கள் தாம்பூலம் அணியும் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

“தைலே லக்ஷ்மி: ஜலே கங்கா” என்பது துலாபுராணத்தின் மணியான வாசகம்.தீபாவளி அன்று லட்சுமி எண்ணெயிலும், கங்கை வெந்நீரிலும் இருப்பதாக ஐதீகம்.

தீபாவளி அமாவாசை காசியில் கங்கையில் ஸ்நானம்மிகவும் விசேஷம்.
கங்கா ஸ்நானம் ஆச்சா?’ - காசியிலும் கேட்பார்கள். இங்கே காஞ்சிபுரத்திலும் கன்யாகுமரி வரை கேட்பார்கள்.
கலாசாரப் பாலமான தீபாவளி..
தேவர்களுக்கும், தவசிகளுக்கும் அடுக்கடுக்காகத் தொல்லைகளைக் கொடுத்து வந்த நரகாசுரன் அரக்கனைக் கண்ணபிரான், சத்திய பாமாவின் துணை கொண்டு சம்ஹாரம் செய்த நாளைத் தான் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

நரகாசுரன் பரந்தாமனால் தண்டிக்கப்பட்டதும், பூமா தேவியானவள் கண்ணபிரானின் பாதகமலங்களைப் பணிந்து, “சுவாமி! நீங்கள் வராஹ சொரூபியாக எழுந்தருளியபோது நமக்குப் பிறந்தவன்தான் நரகாசுரன். தேவரீர் இவனுக்கு ஞானோபதேசம் செய்து மோக்ஷம் அளித்து அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தாள்.
எம்பெருமானுக்கு பிராட்டியார், ரத்தின குண்டலங்களும், வன மாலையும் கௌஸ்துப மணியும், பீதாம்பரமும், வெண் கொற்றக் குடையையும் காணிக்கையாகச் சமர்ப்பணம் செய்தாள். மகனின் மரண நாளை மற்றவர்களின் மங்கல நாளாகத் திகழப் பிரார்த்தித்த அன்னையின் அருளைத் தான் என்னென்பது?
பூமா தேவியின் பிரார்த்தனைப்படி எம்பெருமான், நரகாசுரனுக்குப் பேரருள் புரியத் திருவுள்ளம் கொண்டார்.தீபாவளிப் பண்டிகையை முதலில் கொண்டாடியவன் நரகாசுரனின் மைந்தன் பகதத்தன்! .
தந்தை இறந்த தினத்தில் கண்ணபிரானுக்கும் அவனுடைய இராஜ கன்னிகைகளுக்கும் பெரும் வரவேற்பளித்தான். எண்ணெய் தேய்த்து, கங்கை நீராடி பட்டு வஸ்திரம் தரிக்கச் செய்தான். வாண வேடிக்கைகளாலும், வண்ண விளக்குகளாலும் அரண்மனையை அலங்கரித்தான். அதே போல் அனைவரையும் கொண்டாடச் செய்தான்.

கண்ணபிரான் அவனது பக்தியைப் பாராட்டி அவனது “ப்ராக்ஜயோதிஷம்” என்ற பட்டணத்துக்கு பகதத்தபுரம் என்ற திருநாமம் சூட்டினார்.
அந்நகரம் தான் தற்போதைய “பேக்டாட்.”

பிரகலாதனுடைய பேரனான மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாளே தீபாவளி என்றும் அந்நாளில் ஒளியூட்டப்படும் தீபமே ‘யமதீபம்’ என்றும் வாமனபுராணம் இயம்புகிறது.

தியாக மூர்த்தியான மகாபலியை இத்திருநாளில் வழிபடுவது பண்டைய இந்து மன்னர்களின் வழக்கம் என்பதை வரலாற்றுச் சான்றுகள் அறிவிக்கின்றன. இன்றும் வடநாட்டில் சில பகுதிகளில் மகாபலியின் உருவத்தைச் செய்து தீபாவளி அன்று வழிபாடு செய்கின்றனர்.
ஸ்ரீஇராமபிரான் வனவாசத்தை முடித்துக்கொண்டு சீதையோடும் லக்ஷ்மணனோடும் அயோத்திக்குத் திரும்பி அரியணை அமர்ந்த நன்னாள் தீபாவளித் திருநாளாகும். அன்றைய தினம் அயோத்தி மாநகரமே வண்ண விளக்குகளால் ஜகத்ஜோதியாகப் பிரகாசித்தது. பதினான்கு ஆண்டுகள் இருள் சூழ்ந்திருந்த அயோத்தி, ஞான தேவனான ஸ்ரீஇராமனின் வருகையால் பிரகாசம் பெற்றது. சீதை கௌசல்யா தேவியின் மனம் மகிழ பொன் விளக்குகளை அரண்மனை முழுவதும் ஏற்றி வைத்தாள். அதுவே தீபாவளி ஆனது என்றும் சிலர் கூறுவர்.
மகாவீரர் முக்தி அடைந்தார்.
விக்கிரமாதித்யன் முடிசூடிக் கொண்டான்.
மாவீரன் சிவாஜி, தனது எதிரிகளை வென்று கோட்டைக்குள் விளக்கு ஏற்றினார்.
கோதார விரதம் மேற்கொண்டு சக்திதேவி சிவபெருமானின் உடலில் பாதி பெற்றார்.

சுவாமி ராமதீர்த்தர் தீபாவளி அன்று பிறந்து, தீபாவளி அன்று சந்நியாசம் பெற்று, ஒரு தீபாவளி அன்றே சமாதி அடைந்தார்.
ஆதிசங்கரர் ஞானபீடங்களை ஸ்தாபித்தார்.
சீக்கிய மதகுருவான குருநானக் முக்தி அடைந்தார்.
குபேரன் சிவபெருமானை வழிபட்டு பல பொக்கிஷங்களைப் பெற்றார்.
காளிதேவி 64 ஆயிரம் யோகினிகள் புடைசூழ காட்சி தந்தாள்.

தீபாவளி மறுநாளில் செய்யப்படும் பூஜை...லட்சுமி குபேர பூஜை
தீபாவளி என்றாலே செல்வத்தின் அதிதெய்வம் திருமகளின் நினைவும் கூடவே வரும். தீபாவளி நாளன்று நாடெங்கும் லட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது.

தீபாவளிக்கு அடுத்தநாள் நடக்கும் கேதாரகெளரி விரத பூசையில் முடிக்கயிறு வைத்துப் பூசித்து அன்பர்களுக்குத் தருகின்றனர். இதை அணிந்து கொண்டால் தேவையற்ற அச்சம், பிணி, பில்லி சூனியம் ஆகியவைகளிலிருந்து விடுபட முடியும் என்பது மக்களின் நம்பிக்கை.!
தீபாவளியன்று லட்சுமிதேவி பூஜிக்கப்படுவதால், அவளுடைய வாகனமாகிய ஆந்தையும் தனி மரியாதைக்குரிய பறவையாக மதிக்கப் படுகிறது.
"இரவின் அரசன்' ஆந்தைக்கு பறவைகளில் தனிச்சிறப்பு உண்டு. . விவசாயத்துக்குத் தீங்கு செய்யும் எலி, பூச்சிகள், நத்தை போன்றவற்றை வேட்டையாடி அழிப்பதால் "விவசாயியின் நண்பன்' !!!

இந்தியில் ஆந்தைக்கு "உல்லு' என்று பெயர். அதே சொல் முட்டாளையும் குறிக்கும். எனவே அவர்கள் ஆந்தையை முட்டாள் பறவை என்றே வழங்குகின்றனர். இருப்பினும், அது திருமகள் லட்சுமியின் வாகனம் என்பதால் தனிச் சிறப்பிடம் வகிக்கிறது.

ஐரோப்பாவில் ஆந்தை அறிவுடைமைக்கு அடையாளம்.

தன் முன்னோர்களுக்கு நற்கதி கிடைக்கச் செய்வதற்காக பகீரதன் கடும் முயற்சி செய்து தேவலோகத்திலிருந்து கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தான். அன்று முதல் தன்னில் நீராடுபவர்களின் பாவங்களைப் போக்கி நற்கதி வழங்கு பவளாகத் திகழ்ந்து வருகிறாள் கங்கை.

தீபாவளி நாளில் அனைத்து நீர்நிலை களிலும் ஆறுகளிலும் கங்கை கலந்திருப்பாள் என்பது புராணக் கூற்று. அதுமட்டுமின்றி, வடக்கே ஓடும் கங்கை நதி தென்பகுதியில் பொங்கி வந்த சில சிறப்புத் தலங்களும் உள்ளன.

வடதிசை கங்கையானவள் இறை அருளால் தென்திசையிலும் பொங்கி மக்களுக்கு அருளாசி வழங்கி வருகிறாள். தீபாவளி நாளில் அனைத்து தீர்த்தங்களிலும் நிறைந்திருந்து நம்மைப் புனிதப்படுத்துகிறாள்.
அவளைப் போற்றி வணங்குவோம்

"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது' என்பது முன்பு பிரம்மவனம் என்று சிறப்பிக்கப்பட்ட மாயூரம்,..

பார்வதி தேவி மயில் வடிவம் கொண்டு சிவனைக் குறித்துக் கடுந்தவம் செய்தாள்.
மாயூரக் காவிரி ரிஷபத் தீர்த்தம் எனப்படுகிறது. "இங்கே நீராடுபவர்களுக்கு அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிட்டும்' என்று வரமும் அளித்தார் சிவபெருமான்.

கங்கையின் பாவத்தைப் போக்க மாயூரக் காவிரியில் நீராடும்படிக் கூறினார் சிவபெருமான். கங்காதேவி காசியிலிருந்து தீபாவளி அமாவாசை நாளில் இங்கு வந்து நீராடித் தன் பாவத்தைப் போக்கிக் கொண்டதோடு, துலா மாதம் (ஐப்பசி) முழுவதும் அங்கேயே தங்கினாள். கங்கை மட்டுமல்ல; காசி விஸ்வநாதர், அன்னபூரணி, காசி விசாலாட்சி, துண்டி விநாயகர், பைரவர் ஆகியோரும் இங்கு எழுந்தருளினர். அவர்களுடன் கயா தீர்த்தம், விஷ்ணு பாதம், ஆலமரம் ஆகியவையும் வந்தன.

இதனால் மயிலாடுதுறை பன்மடங்கு புனிதமடைந்து காசிபோலவே மாறி காசியிலும் வீசம் அதிகமான புண்ணியத்தலமானது.
.
திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் கங்கையில் நீராடி வரவேண்டும் என்ற நிபந்தனை ஸ்ரீதர ஐயாவாள் மனமுருகி "கங்காஷ்டகம்' என்னும் எட்டு துதிகளைப் பாடினார். அவர் பாடி முடித்ததும், அவர் வீட்டு கிணற்றிலிருந்து கங்கை பொங்கி எழுந்தாள். கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து ஓடியது. கலியுக அதிசயமாகக் கருதப்படும் இந்நிகழ்ச்சிஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசை நாளில் இந்தக் கிணற்றில் எவ்வளவு பேர் நீராடினாலும் நீர் குறையாமல் பொங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

கடலூர் கயைக்குச் சமமான தலம் . இங்கு ஆண்டுதோறும் மாசித் திருவிழா நடக்கும் சமயம், சிவகர தீர்த் தத்தில் கங்கை பொங்கி வர அருள்புரிந்தார் சிவபெருமான். ஆண்டுதோறும் மாசித் திருவிழாவின்போது இந்தக் குளத்தில் நீராடி கங்கையில் நீராடிய பலனைப் பெறுகின்றனர் பக்தர்கள்

திருக்கோட்டியூர் தலத்திலுள்ள கோவிலின் நடுவே அமைந்திருக்கும் கிணற்றில் கங்கையைப் பொங்கச் செய்து, அதன் நடுவே நின்று புரூர சக்கரவர்த்திக்குக் காட்சி தந்தார் மகாவிஷ்ணு. இந்த கிணறு கங்கா கிணறு என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

மாசித் திருவிழாவின்போது பெருமாள் கருட வாகனத்தில் வந்து இந்த கிணற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். இந்தக் கிணற்று நீரைத் தலையில் தெளித்துக் கொண்டாலே கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம் என்பர்.

வியாழ பகவான் சிம்ம ராசியில் அமையும் போது- மாசி மாத மக நட்சத்திரத்தில் பௌர்ணமியும் சேரும் நிலை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே ஏற்படுகிறது. அந்த நாளில் கங்கை உள்ளிட்ட புனித நதிகள் அனைத்தும் கும்பகோணத்திலுள்ள மகாமகக் குளத்தில் சங்கமிக்கின்றன. அன்றைய தினம் இதில் நீராடினால் அனைத்து புனித நதிகளிலும் நீராடிய புண்ணியத்தைப் பெறலாம்.

கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவிலை அடுத்து அமைந்துள்ள அய்யாவாடி திருத்தலத் தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது.

பதினெட்டு சித்தர் பெருமக்கள் வழிபட்ட தலம்- அகத்திய மாமுனிவருக்குத் தேவி காட்சி தந்த திருத்தலம் அய்யாவாடி!இழந்த அரச பதவியையும் நாட்டையும் மீண்டும் பெற பஞ்சபாண்டவர்கள் பூஜை செய்த திருத்தலம் இது. அதன் காரணமாகவே இத்தலத்திற்கு ஐவர் பாடி என்ற காரணப் பெயர் ஏற்பட்டு, அதுவே மருவி தற்போது அய்யாவாடி எனப்படுகிறது.

இத்தலத்தில் அருள்மிகு தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் அருள்புரிகிறார்.

அதர்வண காளியாக தனிச் சந்நிதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பிரத்தியங்கரா தேவியானவள் சிம்ம முகத் தோடு பதினெட்டு கரங்களுடன் சிரித்தபடி அருள் புரிகிறாள். தேவியின் அருகே ஸ்ரீலட்சுமியும் ஸ்ரீசரஸ்வதியும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.

"நிகும்பலா யாகம்' இதில் 108 வகையான மூலிகைகள், ஹோமத்துக்குரிய பொருட்கள், பழங்கள், மலர்கள், பட்டாடைகள், பால்குணம் கொண்ட மரக்கட்டைகள், சமித்துக்கள், நெய் ஆகிய பொருட்களை அர்ப்பணிப்பதுடன் மிளகாய் வற்றலும் மூட்டை மூட்டையாக அர்ப்பணிக்கப்படுகிறது.

ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளித் திருநாளில் வரும் அமாவாசை நாளில் மட்டும் நடைபெறும் நிகும்பலா யாகத்தில் மேலே சொல்லப்பட்ட ஹோமப் பொருட்களை யாகக் குண்டத்தில் அர்ப்பணிப்பதில்லை. மேலும், யாருடைய உபயமாகவும் செய்யாமல் கோவில் நிர்வாகத்தினரின் முழுச் செலவில் இந்த யாகம் நடை பெறும்.

அந்த யாகத்தில் பதினோரு ஆயிரம் எண்ணிக்கையில் இனிப்புப் பொருட்களான லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு என ஏதாவது ஒன்றினை யாகத்தில் சமர்ப்பிப்பார்கள். அன்று மிளகாய் வற்றல் சமர்ப்பிப்பது இல்லை. இனிப்புப் பண்டத்துடன் சமித்துக்கள், நெய் மட்டும் சேர்க்கப்படுகின்றன. இந்த யாகத்தை இனிப்பு யாகம் என்பர்.

இங்குள்ள தலவிருட்சமான ஆலமரம் மிகவும் சிறப்பு பெற்றது. இந்த ஆலமரத்தில் ஐந்து வகையான இலைகள் துளிர்த்து, செழித்து இருக்கும் அதிசயத்தை இன்றும் காணலாம். பல பெருமைகளைக் கொண்ட ஸ்ரீபிரத்தியங்கரா தேவியை வழிபடுபவர்களின் இல்லங்களில் செல்வம் பெருகும். பகைவர்கள் அழிவர். அனைத்துக் காரியங்களும்- அது நியாயமாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறும். ஆரோக்கியமான சூழ்நிலையில் வளமான வாழ்வு கிட்டும்!
-
rjaghamani
rjaghamani
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 110
Join date : 20/10/2011

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 2:15 pm

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி 548321 உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி 548321 உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழன் Thu Oct 20, 2011 4:28 pm

Rolling Eyes Rolling Eyes Rolling Eyes அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 4:35 pm

தமிழன் wrote:Rolling Eyes Rolling Eyes Rolling Eyes அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.
அண்ணா நன்றி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 4:39 pm

நன்றி டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழன் Thu Oct 20, 2011 4:41 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி டமில்

எதற்கு ஐயா நன்றி?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 4:42 pm

வாழ்த்துக்கு தான் டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by அ.இராமநாதன் Thu Oct 20, 2011 4:50 pm

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி 106820
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழன் Thu Oct 20, 2011 4:53 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துக்கு தான் டமில்

நன்றி மட்டும் சொன்னால் போதாது. தீபாவளிக்கு பரிசு கொடுக்க வேண்டும் ஐயா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 4:54 pm

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Deepavali3-full
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழன் Thu Oct 20, 2011 5:03 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Deepavali3-full

இப்படியெல்லாம் ஏமாற்ற முடியாது. தீபாவளிக்கு பட்டாசு வாங்கி அனுப்புங்க.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 5:04 pm

பட்டாசா? அது எப்படி இருக்கு டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழன் Thu Oct 20, 2011 5:08 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பட்டாசா? அது எப்படி இருக்கு டமில்

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி 38535 உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி 38535 உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி 38535 உங்களுக்கு பட்டாசு என்ன என்று தெரியாதா? சரி, பராவாயில்லை. பணமாக அனுப்பிவிடுங்கள். நான் இங்கே பட்டாசு வாங்கிக் கொள்கிறேன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 5:17 pm

பணமா? உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி 146682அது எப்படி இருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழன் Thu Oct 20, 2011 5:20 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பணமா? உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி 146682அது எப்படி இருக்கும்

ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் அப்போ கல்லூரியில் தங்களுக்கு சம்பளமாக பணம் கொடுப்பதில்லையா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 5:21 pm

சம்பள பணம் கொடுக்க மாட்டாங்க டமில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 5:23 pm

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ,,, இப்பவே கொண்டாட்டங்கள் ஆரம்பிச்சிட்டீங்களா ,,, நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழன் Thu Oct 20, 2011 5:25 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சம்பள பணம் கொடுக்க மாட்டாங்க டமில்

அப்போ சம்பளம் வாங்காமல் வேலை செய்கிறீர்களா ஐயா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 5:26 pm

இல்லை வங்கியிலிருந்து தான் பெறுகிறேன்... Laughing
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழன் Thu Oct 20, 2011 5:29 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இல்லை வங்கியிலிருந்து தான் பெறுகிறேன்... Laughing

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி 1510611536 உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி 1510611536 உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி 1510611536 சரி எங்களுக்கு பரிசை வங்கி மூலமாகவே அனுப்பி விடுங்கள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 5:30 pm

சரி வங்கி கணக்கு எண்னை கொடுங்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by அரசன் Thu Oct 20, 2011 5:39 pm

இவ்வளவு இருக்கா ..
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி Empty Re: உல்லாசம் பொங்கும் அன்பு தீபாவளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum