தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
நெஞ்சம் நிறைந்து அருளும் அனுமன்
2 posters
Page 1 of 1
நெஞ்சம் நிறைந்து அருளும் அனுமன்
வேண்டுதல் எதுவானாலும் சரி… வெவ்வேறு கோயிலுக்குப் போக வேண்டாம். எல்லாவற்றையும் ஒரே தலத்தில், ஒரே கடவுளிடம் சொன்னால் போதும்; விரைவிலேயே அனைத்தும் ஈடேறிவிடும்!
அந்த ஆனந்தத்தை அனுபவித்து உணர , சென்னை தாம்பரம் அருகே உள்ள கௌரிவாக்கத்தில் அருளாட்சி செய்கிறார் பஞ்சமுக அனுமன். பொதுவாக பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும்.
ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ அமைப்பில் இத்தலத்தில் காணப்படுபவர்தான் எல்லா கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய (பஞ்சமுக) அனுமன். இப்படி ஒரு வித்தியாசமான கோலத்தில் இவர் இங்கே கோயில் கொண்டது எப்படி?
குடியிருப்புகள் மிகக் குறைவாக இப்பகுதி இருந்த காலகட்டம். இந்து மதத்துக்கு உரிய கோயில்கள் இங்கே குறைவாகவே இருந்தது. அப்போது இப்பகுதியில் வசித்த ஒரு பக்தருக்கு எல்லா வரங்களையும் தரக்கூடிய தெய்வத்துக்கு ஒரு கோயில் கட்டும் எண்ணம்....
எப்போதும் வணங்கும் காஞ்சி மாமுனிவரை நினைச்சுகிட்டே உறங்கப்போயிருக்கார். அப்போது அவர் கனவுல பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை பண்ணலாம்னு அசரீரி மாதிரி கேட்டிருக்கு உடனடியா அப்படி ஒரு சிலையைத் தேடிப்போனபோது, வித்தியாசமாக ஒரே நேர்க்கோட்டுல, ஐந்து முகங்களும் அமைந்த, பக்தர்களைத் தன் ஐந்து முகங்களாலும் பார்க்கிற மாதிரியான அபூர்வமான அமைப்புள்ள இந்த அனுமன்சிலை கிடைச்சிருக்கு.
சிலை வந்தாச்சு. கோயில்கட்ட இடம் பார்த்தாச்சு. அப்புறம் என்ன பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டியதுதான் பாக்கி. இப்படித்தான் அப்பகுதியில் இருந்த நாங்க எல்லோருமே நினைச்சோம். ஆனா, அங்கே கோயில் கட்ட முடியாதபடி பல்வேறு சர்ச்சைகள் வேற்று மதத்தவரால் ஏற்படுத்தப்பட்டு, கோயில் அமைக்க தடைபோட்டுட்டாங்க.
ரெண்டு வருஷம் போராடியும் தீர்வு கிடைக்கவே இல்லை. கடைசியில – சஞ்சீவி மலையையே தூக்கிட்டு வந்த அனுமன், நம்ப பாரத்தைத் தாங்க மாட்டாரா என்ன?ன்னு நினைச்சு, அவர்கிட்டேயே பொறுப்பை ஒப்படைச்சு… அதன்பிறகு மளமளன்னு எல்லாம் நடந்து முடிஞ்சு அனுமன் ஜம் என்று பிரதிஷ்டையாகி கும்பாபிஷேகமும் நடந்துச்சு.
ஏகப்பட்ட தடைகளைத்தாண்டி கோயில் வளர்ந்து கம்பீரமா நிற்குது. . தன் வால் கோட்டையைத் தானே தனக்கு சிம்மாசனமா அமைச்சுக்கற அனுமன், இந்த கோயிலையும் தன் இருப்பிடமா தானே அமைச்சுகிட்டு எழுந்தருளி இருக்கார் என்பதுதான் உண்மை! . ஒரே ஒரு சன்னதியோடு இருந்த இந்தக் கோயிலில் இன்று விஜய கணபதியும் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
மூன்றுநிலை ராஜகோபுரம் ராமநாமத்தைச் சொல்லும் அனுமன்போல் கம்பீரமாக நிமிர்ந்து நின்று நம்மை அழைக்கிறது. ஜடாரிமுன் பவ்யமாக தலைவணங்கும் பாவத்துடன் ராஜகோபுரத்தின் வழி உள் நுழைகிறோம்.
நேர் எதிரே உள்ள சன்னதியில் ஐந்து முகங்கள், பத்துக்கரங்களுடன் அருள்நிறை விழிகளோடு அன்பர்களுக்கு அருளக் காத்திருக்கிறார் அனுமன். சின்னஞ்சிறு சன்னதி. அதன் முன்னே சென்று நின்றதும், பக்தர்களுக்கு எளியவராக சிலை வடிவில் காட்சிதரும் அனுமன்மீது நம் பார்வை படர்கிறது.
மறுநிமிடம் அந்த அஞ்சுமுக அனுமன் சட்டென விஸ்வரூபம் எடுத்து தன்பார்வையை நம்மீது பதித்து நெஞ்சு முழுவதும் நிறைந்த அஞ்சேல் என்று அபயக்கரம் நீட்ட உடல் சிலிர்க்கிறது. பெரும்பாரமாக இருந்த கஷ்டங்கள் அப்போதே நீங்கி விட்டது போன்று உணர்வு எழ, காற்றின் மகன் வந்து அமர்ந்துவிட்டதில் மனம் லேசாகிறது.
கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும். நரசிம்மமுகம் தீமையைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், இவர் சன்னதிமுன் நிற்கும் ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டியதைக் கேட்கிறார்கள்.
மெதுவாக சன்னதியை வலம் வந்தால் ஏராளமான மட்டைத் தேங்காய்கள் ஓரிடத்தில் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அமாவாசைகளில் இங்கு வரும் பக்தர்கள் காரியத்தடைகள் விலகவும், மணப்பேறு, மகப்பேறு வேண்டியும் அனுமனை வழிபட்டுக் கட்டியவையாம் இவை, ஒவ்வொரு அமாவாசையின்போதும் அதிகரித்து அனுமன் வால்போல் நீண்டு இன்று ஆயிரக்கணக்கினையும் தாண்டியுள்ளதே, இந்த அனுமனின் ஆற்றலுக்கு சாட்சியாக இருக்கிறது. அதிகபட்சம் தொண்ணூறு நாட்களுக்குள் வேண்டுதல் நிறைவேறிவிடுகிறதாம்.
அனுமனின் ஒவ்வொரு முகத்திற்கும் உரிய தனிச்சிறப்பாக, வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமத்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி என தனித்தனியே எல்லா விசேஷங்களும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தினமும் பிரசாத விநியோகமும் உண்டாம்.
விரைவில் விஜய விநாயகர் இங்கே புதிய சன்னதியில் கோயில் கொள்ளப்போவது தனிச்சிறப்பு.. மாணவர்களின் தேர்ச்சிக்காக ஹயக்ரீவ ஹோமம் இங்கு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இப்படி ஹோமம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் பூஜிக்கப்பட்ட நோட்டுப்புத்தகம், பேனா போன்றவையும் இலவசமாக அளிக்கிறார்களாம்.
இத்தலத்தில் கோயில் கொண்டு அஞ்சு முகத்துடன் பக்தர்தம் நெஞ்சம் நிறைந்து அருளும் அனுமன், கொஞ்சமும் குறைவிலாது பக்தர்கட்கு அளிக்கிறார் தன் குளிர்வான அருளை.
சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் 6 கி.மீ.யில் உள்ள கௌரிவசக்கத்தில், பழனியப்பா நகரில் இருக்கிறது இந்தப் பஞ்சமுக அனுமன் ஆலயம். பிராட்வே மற்றும் தி.நகரிலிருந்து கிழக்கு தாம்பரம் செல்லும் பேருந்துகளில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.

rjaghamani- புதிய மொட்டு
- Posts : 40
Points : 110
Join date : 20/10/2011
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ராம தூதன் அனுமன்
» அனுமன் பெற்ற வரங்கள்...!
» அனுமன் சாலிஸாவைப் பாடியவர்....
» அருளும் குருவும் திருவும்
» சிங்காரவேலனாக முருகன் அருளும் தலம்...
» அனுமன் பெற்ற வரங்கள்...!
» அனுமன் சாலிஸாவைப் பாடியவர்....
» அருளும் குருவும் திருவும்
» சிங்காரவேலனாக முருகன் அருளும் தலம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum