தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கிரண் பேடியின் தில்லு-முல்லுக்கள் அம்பலம்!

2 posters

Go down

கிரண் பேடியின் தில்லு-முல்லுக்கள் அம்பலம்! Empty கிரண் பேடியின் தில்லு-முல்லுக்கள் அம்பலம்!

Post by thaliranna Fri Oct 21, 2011 8:46 pm


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]

டெல்லி: அரசு தரும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் செய்யும்
கிரண்பேடி, தன்னை அழைப்பவர்களிடம் முழுக் கட்டணத்தையும் வசூலித்து
வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

ஹஸாரே குழுவில் முக்கிய அங்கம்
வகிப்பவர் கிரண் பேடி. ரமோன் மக்சாசே விருதுபெற்றவர். இந்திய அரசின்
உயர்ந்த கேலன்டரி விருதை குடியரசுத் தலைவரிடம் பெற்றவர். இதனால் அவர்
வாழ்நாள் முழுவதும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்ள அரசு
வகை செய்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி விருப்ப ஓய்வு
பெற்று, டீம் அன்னா பெயரில் டிவிக்களில் குழாயடிச் சண்டை நடத்தி வருகிறார்.
ஹஸாரேவின் கூட்டங்களில் இவர்தான் பிரதான பேச்சாளர். ஊழலை எதிர்ப்பு என்ற
பெயரில், இவரது பேச்சில் தெறிக்கும் அராஜகமும் சர்வாதிகார மனோபாவமும்
பலரையும் முகம் சுழிக்க செய்து வரும் நிலையில், கிரண் பேடியின்
அல்பத்தனத்தை தோலுரித்துக் காட்டியுள்ளன ஆங்கில நாளிதழ்கள்.

ஓய்வில்
உள்ள கிரண் பேடியை, பல்வேறு என்ஜிஓக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளிகள்,
கல்லூரிகள், கார்ப்பொரேட் நிறுவனங்கள் சொற்பொழிவாற்ற அழைக்கின்றன.

இந்த
சொற்பொழிவுக்காக அவருக்கு பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட், ஐந்து நட்சத்திர
தங்குமிடம் என சகல வசதிகளும் செய்து தருகிறார்கள். தனி அன்பளிப்புகளும்
உண்டு.

ஆனால் கிரண்பேடியோ, இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தனக்கு அரசு
வழங்கும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் செய்துள்ளார். ஆனால், தனியார்
அமைப்புகளிடமிருந்து முழுக் கட்டணத்தையும் வசூலித்துள்ளார். அதுமட்டுமல்ல,
பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு, எகானமி வகுப்பில்
பயணம் செய்துள்ளார்.

கிரண்பேடி கேலன்டரி விருது பெற்றவர். இவருக்கு
அனைத்து ஏர் இந்தியா விமானங்களிலும் 75 சதவீத சலுகை வழங்கப்படும். இவரது
கேலன்டரி விருது எண் 433. இந்த சலுகையை முழுதாக அனுபவிக்கும் கிரண்பேடி,
பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டுக்கான பணத்தை முழுவதுமாகப் பெற்று வந்துள்ளார் பல
ஆண்டுகளாக.

அவர் பயணம் செய்த எகானமி விமான டிக்கெட்டுகள்,
என்ஜிஓக்களிடம் பிஸினஸ் கிளாஸுக்காக பணம் வசூலித்ததற்கான ரசீதுகள் என
12-க்கும் மேற்பட்ட ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. கடைசியாக கடந்த செப்டம்பர்
29-ம் தேதி, இதுபோல பயணம் செய்து அதிகப்படியாக கட்டணத்தை வசூலித்துள்ளார்
கிரண் பேடி.

2006-ம் ஆண்டு இவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில்
இருந்தபோதே இதுபோன்ற ஏமாற்று வேலையைச் செய்துள்ளார். அரசு அதிகாரியான இவர்,
இதுபோல செய்திருப்பது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். நேரடியாக லஞ்சம்
பெற்றதற்கு சமமான இந்தக் குற்றச்சாட்டுக்கு பிசிஏ எனப்படும் அரசு ஊழியர்கள்
மீதான லஞ்ச ஒழிப்பு சட்டப்படி தண்டனை உண்டு!

இந்த டிக்கெட்டுகள்
மற்றும் பில்களுக்கான தொகையை கிரண் பேடி, தான் தலைவராக உள்ள இந்தியா விஷன்
பவுண்டேஷன் பெயரில் காசோலைகளாகப் பெற்றுள்ளார். இவரது கணக்காயர் வியாஸ்
இதுகுறித்துக் கூறுகையில், கிரண்பேடி தனது சொற்பொழிவுகள் மற்றும்
நிகழ்ச்சிகளுக்கு வசூலித்த தொகையை விட மிகக் குறைவாகத்தான்
செலவிட்டுள்ளார். இதனால் அவரது கணக்கு பொருந்தி வரவில்லை. ஆனால் இது ஒரு
சேமிப்பாக காட்டப்பட்டுள்ளது, என்றார்.

கிரண்பேடியின் தில்லு முல்லு - சில ஆதாரங்கள்:

செப்டம்பர்
29, 2011: டெல்லி - ஹைதராபாத் பயணம் - ஏர் இந்தியா ஃப்ளைட் எண் ஏஐ 560-
எகானமி க்ளாஸ். அடுத்த நாள் ஏஐ 539 விமானத்தில் டெல்லி திரும்பியுள்ளார்.
இதற்கு அவர் செலவிட்ட தொகை ரூ 17134 மட்டுமே.

ஆனால் கிரண்பேடி கணக்கு காட்டியுள்ள தொகை ரூ 73,117!

டெல்லி
- ஹைதராபாத் - சென்னை விமானத்தில் வந்த கிரண் பேடி, மீண்டும் டெல்லி -
சென்னை - டெல்லி விமானத்தில் திரும்பியுள்ளார். சலுகைக் கட்டணத்தில் பயணம்
செய்த அவர், பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டுக்கான முழுத் தொகையை
வசூலித்துள்ளார்.

மே 30, 2011: டெல்லி - புனே கிங்பிஷர் விமானத்தில்
பயணம் செய்த அவர், ஜெட் ஏர்வேஸில் திரும்பியுள்ளார். இதற்கு மொத்த பயணக்
கட்டணம் ரூ 12458. ஆனால் கிரண்பேடி வசூலித்துள்ளது ரூ 26386.

நவம்பர்
25, 2010: டெல்லி - மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்ற அவர் அடுத்த
நாள் ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார். இதற்கான பயணக் கட்டணம் ரூ
14097. கிரண்பேடி வசூலித்த தொகை ரூ 42109.

2009, 2008, 2007
மற்றும் 2006-ம் ஆண்டுகளிலும் இதுபோல பல முறை சிக்கன வகுப்பில் பயணித்த
கிரண்பேடி, தான் செலவழித்ததை விட 5 மடங்கு அதிக தொகையை வசூலித்துள்ளார்.

ஊழல்
ஒழிப்பு பற்றி வாய்கிழிய பேசும் கிரண் பேடி, தனக்கு கிடைத்த வாய்ப்புகளைப்
பயன்படுத்தி இந்த அளவு முறைகேடு செய்துள்ளது எந்த வகையில் சேரும் என
கேள்வி எழுப்பியுள்ளனர் ஹஸாரே எதிர்ப்பாளர்கள்.


டிஸ்கி} வாய்கிழிய நேர்மை பேசி தலைமறைவில்
திருட்டுத்தனம் செய்யும் கயவர்களை என்ன செய்வது? புகழுக்காக இவர் அடித்த
கேலிக்கூத்துக்களை உலகம் அறியும் பாவம் இவரை நம்பும் அப்பாவிகள்!


நன்றி தட்ஸ் தமிழ்!




thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

கிரண் பேடியின் தில்லு-முல்லுக்கள் அம்பலம்! Empty Re: கிரண் பேடியின் தில்லு-முல்லுக்கள் அம்பலம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 21, 2011 8:49 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum