தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சுட்டும் விழி நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா

3 posters

Go down

சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Empty சுட்டும் விழி நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா

Post by eraeravi Tue Oct 25, 2011 10:55 pm

சுட்டும் விழி நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

நூல் விமர்சனம் .
குடியரசுத் தலைவரின் விருதுப் பெற்ற



முனைவர் யாழ் சு .சந்திரா,
பேராசிரியர்,மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரி .


சுட்டும் விழியின் மின்னல்கள்

ஹைக்கூ கவிஞர் என்றே இலக்கிய உலகில் அறியப்படும் கவிஞர் இரா .இரவியின்
பதினோராவது நூல் சுட்டும் விழி இந்த நூல்தான், தலைப்பிலேயே ஹைக்கூ வைப்
பெறாத இரவியின் ஹைக்கூ நூல்! ஆனால் ,புத்தகத்துள் ஹைகூக்கள் குவியல் .
ஹைக்கூ வின் தோற்றத்தைப் பேசும் அறிஞர்கள் அவை ஜப்பானிய தன்கா,ரெங்கா கவிதைகளில் இருந்து பிறந்தவை என்பர் .ஜப்பானிய மொழி
ஹைகூவின்பிதாமகன்களாக மார்ஷிவோ பாஸோ,யோஷா பூஷான் ,கொபயாகஷி இன்ஷா ,மாஷஒகாஷிகி ஆகிய நால்வரையும் குறிப்பிடுவர். அவர்களுள்

பாஸோ ஹைகூவின் பிதாமகன் ஆவார் .எழுதும்போது உனக்கும் உன்
கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது .உன் மனதை
நேரடியாகப் பேசு ....எண்ணங்களைக் கலையவிடாமல் நேராகச் சொல் .என
ஹைக்கூவின் ஆன்மாவைத் தொடும் வித்தையைச் சுட்டுவார்.அந்த வித்தை
இரவிக்கு இயல்பாக உள்ளது .

இனிமையானது
உற்றுக் கேளுங்கள்
நதியின் ஓசை

என்ற நதியின் ஓசை ,கவிதையைப் படிக்கும் போதே காதில் ஒலிக்கிறது.
பாரதியின் இன்பத்தேன் நதியின் இசையாகிறதோ ?
கலை கலைக்காகவே என்ற அழகியல் கோட்பாட்டை விட கலை வாழ்க்கைக்காகவே என்ற
வாழ்வியல் கோட்பாடு உயர்ந்தது! உன்னதமானது ! அந்த வகையில் ,இயற்கையின்
சிலிர்ப்பையும் ,ரசனையையும் வருணிப்பையும் எழுதுவதை விட இன்றைய சமூக
நிலையின் பதிவுகளை எழுதுவது அவசியமான ஒன்றாகும் .அத்தகு பதிவுகள் இரவியின்
படைப்புகளில் பரவலாக ,இல்லையில்லை முழுமையாகவே இடம் பெறுகின்றன எனலாம் .

வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி

என்ற ஹைக்கூ இடபெயர்தலின் நுண்ணிய உணர்வோடு சொந்த நாட்டில் அகதிகளாக்கப்படும் சகோதரர்களின் வலியையும் குறிப்பிடுகிறதே !

தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா !


என்ற
ஹைக்கூவில் தமிழுணர்வு பெரும் இடம் சுட்டப்படுகிறது .

தீமையின் உச்சம்
மக்காத எச்சம்
பாலிதீன் !

தள்ள வேண்டிய ஒதுக்க வேண்டிய குப்பைகளையும் பதிவு செய்கிறார் கவிஞர் !
பழமொழிகளும் ,பழந்தமிழ் இலக்கியமும் கூட கவிஞரின் கைவண்ணத்தில்,
ஹைக்கூவாகிறது .சுத்தம் சோறு போடும் என்ற பழமொழி !

அசுத்தம்
சோறுபோடும்
துப்புரவு தொழிலாளி !

என்றும் வெள்ளத்தனைய மலர் நீட்டம் ! என்ற குறள் தொடர் ,

குளத்தின் உயரம் கூட
தானும் வளர்ந்தது
தாமரை !

என்றும் வடிவம் பெறுகிறது !பெண்களை வருணிக்கும் இலக்கிய மரபின் மீது உள்ள கவிஞரின் மனத்தாங்கல் ,

பெண்ணை விட
ஆணே அழகு
மயில் !

என ஹைக்கூவாகிறது.சிதைவுகளும் சிதலங்களும் கூட காலத்தின் பதிவாக அமையும் யதார்த்த உண்மையை ,

கூறியது
வரலாறு
குட்டிச்சுவர் !

என்பார் இரவி !மென்மையான காதலும் பதிவாகிறது கவிஞரிடம் ,

நடமாடும் நயாகரா
நடந்துவரும் நந்தவனம்
என்னவள்

என்பதும் ,


உயிரோடு
கண்தானம்
காதலர்கள்


என்பதும் ,

வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கிறது
'தாஜ்மகால்

என்பதும் காதலின் ஹைக்கூ வாகிறது .சமுதாயத்தின் கோபத்தை ,

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை

என ஒலிக்கிறார்.அதேபோல்

முளைச்சாவு
பயன்பட்டது
உறுப்புதானம் !

என்ற ஹைக்கூவில் அனைவருக்குமான சமுதாயக் கடப்பாடு தொக்கி நிற்கிறது .
வெறும் வார்த்தைகளால் சித்திரம் மட்டும் இல்லாமல் அதன் பின்னணியில்
சிந்தனைகள் ,அர்த்தங்கள் இருந்தால் சிறப்பு .என்பார் எழுத்தாளர் சுஜாதா !
இவ்வாறெல்லாம் இரவியின் ஹைக்கூ வில் இடம் பிடிக்கின்றன .இன்னமும் கொஞ்சம்
அழகியல் இழையாடினால் கவிதையின் உச்சமும் உன்னதமும் இரவியின்
ஹைக்கூவிற்கு வாய்க்கும் !

ஹைக்கூவின் அனுபவங்களைச் சூட்டியதோடு நின்றுவிட முடியவில்லை ! நூலின்
அட்டையே - வரைபடமே ஓர் அனுபவமாகிறது .நூல்களால் செதுக்கப்பட்ட சிற்ப
ஓவியமாக அமைகிற அட்டைப்படம் ,
ஏதாவதொரு வாசகனின் அடியாழ மனதில் செருகிக் கொண்டு இருக்கிற கவிதை நுட்பத்தை நிச்சயமாக வெளிக்கிளப்பும் !
.

avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Empty Re: சுட்டும் விழி நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 25, 2011 11:42 pm

சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா 548321 சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Empty Re: சுட்டும் விழி நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Oct 26, 2011 8:51 am

இன்னமும் கொஞ்சம்
அழகியல் இழையாடினால் கவிதையின் உச்சமும் உன்னதமும் இரவியின்
ஹைக்கூவிற்கு வாய்க்கும் !

- இதை கொஞ்சம் கடைபிடியுங்கள் என்பதும் என்னுடைய பணிவான வேண்டுகோள்

நன்றி கவிஞரே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Empty Re: சுட்டும் விழி நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 26, 2011 9:00 pm

சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சுட்டும் விழி  நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா Empty Re: சுட்டும் விழி நூல் விமர்சனம் முனைவர் யாழ் சு .சந்திரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நூல்:சுட்டும் விழி ஆசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை;முனைவர் ச.சந்திரா
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !
» இலக்கியமும் சூழலியலும் நூல்ஆசிரியர் : முனைவர் யாழ் சு. சந்திரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
» சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum