தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இலக்கியமும் சூழலியலும் நூல்ஆசிரியர் : முனைவர் யாழ் சு. சந்திரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

இலக்கியமும் சூழலியலும்  நூல்ஆசிரியர் : முனைவர் யாழ் சு. சந்திரா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty இலக்கியமும் சூழலியலும் நூல்ஆசிரியர் : முனைவர் யாழ் சு. சந்திரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Sat Nov 07, 2015 10:21 am

இலக்கியமும் சூழலியலும்
நூல்ஆசிரியர் : முனைவர் யாழ் சு. சந்திரா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்பமுதலி தெரு, மதுரை-1.  பேச : 0452 2345971, பக்கங்கள் : 120.  விலை : ரூ. 80.
*****
       ‘இலக்கியமும் சூழலியலும்’ நூலின் தலைப்பே மிக நுட்பமாக உள்ளது.  நூல் ஆசிரியர் இனியதோழி  முனைவர் யாழ் சு. சந்திரா அவர்கள், என்னுடைய நூல் தந்தவுடன் மதிப்புரை தந்து சிறப்பிக்கும் நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரர்.  மதுரையின் புகழ்மிக்க ஸ்ரீ மீனாட்சி அரசினர் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப்பணி செய்து வருபவர்.  பேச்சு, எழுத்து இரண்டு துறையிலும் முத்திரை பதித்து வருபவர். சைவ சமய சிறப்புப் பேச்சாளர் . செம்மொழி இளம் ஆயவாளர், குடியரசுத் தலைவர் விருது பெற்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்குப் புகழ் சேர்த்தவர்.

       இந்த நூலில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. திருமலை, ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளில் கலைக் கல்லூரி முதல்வர், முனைவர் கி. ஜானகி, விலங்கியல் துறை இணைப் பேராசிரியர், நூலாசிரியரின் உற்ற தோழி முனைவர் பெ. கபிலா ஆகியோரின் அணிந்துரைகளும் நூலாசிரியரின் மிக இயல்பான என்னுரையும் நூலின் மகுடத்தில் பதித்த வைரக்கற்களாக ஒளிர்கின்றன. 

இந்த நூலிற்கான அட்டைப்படத்தை நூலாசிரியரின் புதல்வி வடிவமைத்து கொடுத்துள்ளார்.  நூலின் தலைப்பிற்கு மிகப் பொருத்தமாக உள்ளது பாராட்டுக்கள். மலேசியாவில் படித்துக் கொண்டே  அம்மாவின் இலக்கியப் பணிக்கு உதவிய நல்ல உள்ளத்திற்கு பாராட்டுக்கள். நூலாசிரியர், தமிழ்ப்பேராசிரியர் என்ற காரணத்தால் தமிழ் இலக்கிய நூல்களை ஆழ்ந்து படித்தவர் மட்டுமல்ல, கல்லூரியில் தினமும் பாடம் நடத்தி வரும் அனுபவம் மிக்கவர் என்ற காரணத்தால் தமிழ் இலக்கியங்களில் உள்ள இயற்கைக் காட்சிகளை வாசகர் கண்முன் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.  சங்க காலத்திற்கே நம்மை அழைத்து செல்கிறார்.

       நூலாசிரியர் என்னுரையில் மதுரை பற்றி எழுதும் போது, தற்போது கழுகுகள் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.  நேற்று, இனிய நண்பர் திருமலை அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் முனைவர் ரவிச்சந்திரன் பேசியது நினைவிற்கு வந்தது.  பார்சி இனத்தவர் வட இந்தியாவில், இறந்தவர்களை எரிப்பதோ, புதைப்பதோ இல்லை.  மலையுச்சியில் வைத்து விடுவார்கள்.  வைத்தவுடன் கருவிகள் வந்து தின்று விடும்.  தற்போது 3 நாட்கள் ஆனாலும் கழுகுகள் வரவில்லை.  கழுகு இனம் அழிந்து விட்டது என்று குறிப்பிட்டார்.

       இந்த நூல் படித்தால், சுற்றுச்சூழல் ஆர்வம் பிறக்கும், இயற்கை நேசம் விதைக்கும் நல்ல நூல். அப்படி வாழ்ந்த நாம் ஏன் இப்படி ஆனோம்? என்று வருந்த வைத்து நூலாசிரியர் வெற்றி பெறுகின்றார்.  9 தலைப்புகளில் கட்டுரைகள் வடித்துள்ளார்.

       தொல்காப்பியம் காட்டும் ஐந்திணையை பாடலோடு குறிப்பிட்டுள்ளார்.  முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் – ஐய்வகை நிலம் குறிந்து அன்றே பாடி உள்ளனர்.  அவ்வளவு இயற்கை வளங்களையும் இன்று இழந்து நிற்கின்றோம். 

கல், மண் கொள்ளை அடித்து அண்டை மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து பணம் சுருட்டி இயற்கையை சூறையாடி வருகின்றனர்.  இயற்கை தொடர்ந்து சிதைக்கும் காரணத்தால் தான் இயற்கை சினம் கொண்டு சுனாமி, பூகம்பம், எரிமலை என்று திருப்பித் தாக்கி வருகின்றது.  பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் இயற்கை மீது அன்பு கொண்டு நேசம் காட்டி வாழ்ந்து வந்ததை நூல் நன்கு உணர்த்துகின்றது.

       எட்டுத்தொகையில் உள்ள மலைவளத்தை நூலில் காட்சிப்படுத்தி உள்ளார்கள்.

       அடுக்கம், அறை, கல், கவாஅன், குவடு, குன்றம், கோடு, சிலம்பு, துறுகல், பிறங்கல், பொருப்பு, மலை, வரை, வெற்பு.

       மலை என்பதற்கு இத்தனை சொற்கள் தமிழில் உள்ளன.  ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருள் இருக்கும். தமிழின் வளத்தையும் பறைசாற்றுவதாக உள்ளது.  அதன் விளக்கத்தையும் நூலில் மிக அருமையாக எழுதி உள்ள நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.

       நூலிலிருந்து சில துளிகள் :

      " மலையும் பெய்யும் மழையால் அருவி தோன்றுகிறது.  பெய்யும் மழையால் சுனையும் உள்ளது. இந்த நீர்நிலைகளால் மலை வளம் பெறுகின்றது.
       குறிஞ்சி, காந்தள் முதலிய மணம் மிக்க மலர்களும், பலா, வாழை, மூங்கில் முதலிய மரங்களும், மிளகு, தினை, கிழங்கு போன்ற உணவுப் பொருள்களும் விளைந்து வளம் செழித்து மலைப்பகுதி விளங்குகின்றது.  பன்றி, புலி, யானை, ஆடு, மான் முதலிய விலங்குகளும், மயில் முதலிய பறவைகளும் மலைவளத்தை மேம்படுத்துகின்றன.
       குறிப்பிட்ட பெயர் கொண்ட மலைப்பகுதிகளும் வளம் மிக்கிருப்பதையும் எட்டுத்தொகையில் காண முடிகிறது."

       ஆனால் இன்று மரங்களை அளவின்றி வெட்டி வீழ்த்தி வருகின்றோம்.  காடுகளை அழித்து வீடுகள் கட்டுகிறோம்.  இதனால் விலங்குகளும் அழிந்து விடுகின்றன. நான் முதுமலை காட்டில் பாதுகாப்பாக வாகனத்தில் பயணம் செய்து பார்த்த போது காட்டு மாடு தவிர வேறு எந்த விலங்கும் என் கண்ணில் படவில்லை.  அந்த நிகழ்வும் என் நினைவிற்கு வந்தது.

       தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயன் தரும் நூல்.  முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் உதவிடும் நூல்.

       மலைபடுகடாம் பாடல்கள் எழுதி விளக்கமும் எழுதி வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.  பழந்தமிழில் ‘ஐயவி’.  ‘ஐயவி’ என்றால் கழுகு என்று இந்த நூல் படித்த பின்பே அறிந்தேன்.  சங்க இலக்கியத்தில் மலர்ச்சூழலும் மங்கையர் மன உணர்வுகளும் கட்டுரையில்,

“பழந்தமிழர் வாழிடத்தை மலர்க்குறியீட்டால் பெயரிடுவது அவர்தம் இயற்கையோடு இயைந்த வாழ்விற்குச் சான்றாகிறது.  மேலும் மலர்களின் வண்ணத்தையும், வடிவத்தையும், மணத்தையும், அழகையும் போற்றும் பாடல்களும் அவற்றை உவமைகளாக உருவகங்களாக, படிமங்களாக, குறியீடாகப் போற்றிப் பேசும் முறைமை சங்கப் படைப்பாளர்களின் மரபாக உள்ளமையும் கருதத்தக்கது ஆகும்.”

       நூறு வகை மலர்கள் அன்று இருந்துள்ளது.  இன்று அவற்றை காண்பது அரிது.  காரணம் உலகமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் இயற்கையை அளவிற்கு அதிகமாக அழித்து வருகிறோம்.  வெப்பமயமாகி விட்டது, மழை குறைந்து விட்டது என்று வருந்துகின்றோம். இயற்கை மீது நேசம் கொண்டு மரங்களை வெட்டாமல் ,மலைகளை வெட்டாமல்,மணல் கொள்ளை நடத்தாமல் ,காடுகளை அழிக்காமல்,நிலத்தடி நீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு   விற்காமல்  ,நெகிழியை பயன்படுத்தாமல் வாழ்ந்தால் ,நாடு வளம் பெறும்.நன்மைகள் விளையும் .  பல விழிப்புணர்வுகளை விதைக்கும் விதமாக நூல் உள்ளது.  நூலாசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா அவர்களுக்கு பாராட்டுக்கள்.  தொடர்ந்து எழுதுங்கள்.  வாழ்த்துக்கள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !
» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : யாழ் சு. சந்திரா, பேராசிரியர், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. ***** மகிழ்வுரை : முனைவர் யாழ். சு. சந்திரா, இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை,
» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
» கனவெல்லாம் கலாம் ! நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum