தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சர் சி.வி. இராமன்

4 posters

Go down

சர் சி.வி. இராமன் Empty சர் சி.வி. இராமன்

Post by பட்டாம்பூச்சி Thu Oct 27, 2011 11:27 am

சர் சி.வி. இராமன் Cvraman


நோபெல் பரிசு பெற்ற ஒரு இந்திய விஞ்ஞானியைப் பற்றி உங்களுக்குச்
சொல்லப்போகிறேன். அவர் யார் தெரியுமா? அவர்தான் சர். சந்திரசேகர
வெங்கடராமன் (சர் சி.வி. இராமன்).

இராமன் 1888-ஆம் வருடம் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இவரது தந்தை
சந்திரசேகரய்யர். தாயார் பார்வதி அம்மையார். தஞ்சைக்கருகிலுள்ள
புரசைக்குடியைச் சேர்ந்தவர்.

1892-ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் இந்துக் கல்லூரியில் பௌதிக போதக ஆசிரியராக
சந்திரசேகரய்யர் பணியேற்று, குடும்பத்துடன் விசாகப்பட்டினத்தில்
குடியேறினார்.

இளைமையிலிருந்தே இராமன், பௌதிகம், கணிதம், இலக்கியம் இவற்றில் சிறந்து விளங்கினார். சங்கீதத்திலும் அவருக்கு அதிக விருப்பம் உண்டு.

இராமன் பதின்மூன்றாவது வயதில் எஃப்.ஏ. (இப்போதைய ப்ளஸ் 2) தேர்ச்சி
அடைந்து, பி.ஏ. படிப்பதற்காக சென்னை வந்தார். பௌதிகத்தை முதன்மையான
பாடமாகக் கொண்டு ராஜதானிக் கல்லூரியில் மாணாக்கரானார்.
1904ல் எம்.ஏ. வகுப்பில் சேர்ந்தார். இராலி ப்ரபு (Lord Rayleigh), ஹெம்
ஹோல்ட்ஸ் (Helm holtz) இவர்கள் இயற்றிய பௌதிக விஷயங்களை எளிதில்
கற்றுணந்தார்.

ஒரு நாள் இவர் நண்பர் அப்பா ராவ் பரிசோதனை செய்தபோது ஒரு கிரியை தவறாக
செயல்பட்டது. ஏன் அப்படி ஆயிற்று என்று புரியாமல் தன் ஆசிரியர் "ஜோன்ஸ்"
என்பவரிடம் கூறினார். ஆசிரியர் பதில் ஒன்றும் கூறவில்லை. ஆனால் திரு இராமன்
அது எதனால் என்று ஆராய்ந்து, அப்படி ஏற்படாமல் இருக்க வழியும் வகுத்து,
ஒரு ஆய்வுக் கட்டுரையும் எழுதினார். திரு ஜோன்ஸ் அவர்களிடம் தந்து "பிழை
திருத்தித் தாருங்கள், பத்திரிகைக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன்
என்றார்.

திரு ஜோன்ஸ் இராமனின் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக்காமல்
வைத்துவிட்டார். இதை அறிந்த இராமன் ஆசிரியரிடம் இருந்து திரும்பப் பெற்று
அந்தக் கட்டுரையை இலண்டலில் உள்ள ஒரு சிறந்த விஞ்ஞானப் பத்திரிகையின்
ஆசிரியருக்கு அனுப்பினார். அந்தக் கட்டுரையை அவர்கள் பிரசுரித்தனர்.

கட்டுரை வெளிவந்த பத்திரிகையை, இராமன் ஆசிரியர் ஜோன்ஸிடம் காண்பித்தார்.
ஆசிரியர், தனக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டு, அது பிரசுரமாகி இருப்பதைப்
பார்த்து முகம் சுளித்தாலும் பிறகு இராமனைப் பாராட்டினார்.
இதன் பிறகு எம்.ஏ. படித்துக்கொண்டிருக்குபோதே இராமனை இங்கிலாந்துக்கு
அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை ஜோன்ஸ் செய்தார். ஆனால், மருத்துவ நிபுணர்கள்
அயல் நாட்டில் வாழ இன்றியமையாத தேக நிலையை இச்சிறுவன் பெறவில்லை என்று
முடிவு செய்த்ததால் இவர் இங்கிலாந்து செல்ல முடியவில்லை.

1907-ஆம் ஆண்டு எம்.ஏ. பரிட்சையில் முதல் வகுப்பில் தேறிய ஒரே மாணாக்கர்
இவர்தான்.
இதனிடையில் எஃப்.சி.எஸ். பரிட்சையும் எழுதி முதல்வராகத் தேறினார்.
அப்பொழுது இவருக்கு வயது 19. அந்த வயதில் டெபுடி அகௌண்டண்டு ஜெனரலாகப்
பதிவு எற்றவர் இராமனே ஆவார்.

1907 முதல் 1917 வரை அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்தார். அகௌண்டெண்டு ஜெனெரல் பதவியும் வகித்தார்.

இராமன் 1907-ஆம் ஆண்டில் வேலை பார்பதற்காக கொல்கத்தா சென்ற போதும், இவர் மனம் பௌதிகத்திலேயே கண்ணாயிருந்தது.
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

சர் சி.வி. இராமன் Empty Re: சர் சி.வி. இராமன்

Post by பட்டாம்பூச்சி Thu Oct 27, 2011 11:27 am

பௌதிகத்தில் ஆர்வம் கொண்ட இராமனுக்கு, கொல்கத்தாவில் கண்ணில் பட்டது,
"இந்தியாவின் விஞ்ஞான அபிவிருத்தி சங்கம்" என்ற பெயர்ப் பலகை. உடனே அதில்
அங்கத்தினராக சேர்ந்துவிட்டார். நாளடைவில் அவருக்கு அமிருதலால் சர்கார்
சங்கத்தின் காரியதரிசி, கொல்கத்தா ச்ர்வகலாசாலையின் உப நிர்வாகத் தலைவர்
அஷுடோஷ் முகர்ஜி, பேரறிஞரான சர் குருதாஸ் பானர்ஜி இவர்கள் அறிமுகமானார்கள்.
இவர்கள் யாவரும் இராமன்பால் மிக அன்பு கொண்டிருந்தனர். சங்கம் இராமனை
வளர்த்துத் தானும் வளர்ந்தது.
மூன்று ஆண்டுகளில் இராமன் பௌதிகத்தில் பல ஆராய்ச்சியுரைகளை வெளியிட்டார்.

1910 ம் ஆண்டு இரங்கூனுக்கு மாற்றப்பட்டார். இரங்கூனுக்கு இவர் சென்ற சில
நாளைக்குள் இவர் தந்தையார் இறந்துவிட்டார். அதனால் ஆறு மாதம் ஓய்வு
எடுத்துக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். ஓய்வுக் காலம் முடிந்ததும்
நாக்பூருக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து அகௌண்டண்டு ஜெனரலாகப் பதவி உயர்வு
பெற்று, கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டார். இராமனின் உள்ளம் பூரித்தது.
விஞ்ஞான சங்கமும் இவரை வரவேற்றது.

1914ஆம் ஆண்டு உலக சரித்திரத்திலேயே ஒரு முக்கியமான ஆண்டு. கொல்கத்தா சர்வ
கலாசாலைக்கு இறக்கை முளைத்தது. தாரநாத் பாலிட் என்பவரும் ராஷ் பிகாரி கோஷ்
என்பவரும் நிதி உதவி செய்தனர். சர்வ கலாசாலையில் ஆராய்ச்சி நிகழ்த்தத்
தக்கதான "விஞ்ஞானக் கல்லூரியும் ஏற்பட்டது. அகௌண்டண்டு பதவியை விட்டு,
விஞ்ஞானக் கல்லூரியில் தலைமை ஸ்தானத்தை இராமன் ஏற்றார்.

இராமனின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்த வண்ணமாய் இருந்தன. பேரும்
புகழும் இராமனை நாடின. 1921ஆம் ஆண்டில் கொல்கத்தா சர்வ கலாசாலை இவருக்குப்
பேராசிரியர் பட்டமளித்தது. 1924ல் இலண்டனிலுள்ள 'ராயல் சங்கம்" (Royal
Society London) இவரைத் தோழராக ( Fellow) தேர்ந்தெடுத்தது. மேலை
நாடுகளிலிருந்து இவர் சொற்பொழிவு ஆற்ற அழைப்புகள் வந்தன. இராமனின்
வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் 1924-ல் ஆரம்பித்தது.

முதலில் இலண்டனுக்கும், பிறகு கனடாவிற்கும் சென்றார். அமெரிக்காவிலேயே
முதன்மை பெற்ற இராபெர்ட் ஆண்ட்ரூ மில்லிகன், பாஸ்டேணாவில் (Pasadena)
இருந்த தன்னுடைய ஆராய்ச்சிக் கழகத்திற்கு வந்து சொற்பொழிவு ஆற்ற இராமனை
அழைத்தார். மில்லிகனின் ஆராய்ச்சிக் கழகம் மிகவும் பேர் பெற்றதாகும்.
இராமன் கனடாவிலிருந்து புறப்பட்டு, அமெரிக்க ஐக்கிய நாடு, நார்வே, ஸ்வீடன்,
டென்மார்க், ஜெர்மனி, ஃப்ரான்ஸ் பல தேசங்களுக்குச் சென்றார். ஆங்காங்கே
நடந்த " விஞ்ஞானப் புலவர் மகாநாடு"களின் விவாதங்களிலெல்லாம் இராமன்
தலைசிறந்து விள்ங்கினார். இது காரணமாக நோபெல் பரிசு பெற்ற பல பேரரிஞர்களின்
நன்மதிப்பைப் பெற்றார்.

"இராமன் நிகழ்ச்சி" (Raman effect) என்னும் நூதனத்தைக் கண்டுபிடித்ததற்காக
சி.வி. இராமன் 1930ஆம் ஆண்டு நோபெல் பரிசு அளிக்கப்பட்டார்.

இந்தக் கண்டுபிடிப்பு இரசாயன ஆராய்ச்சிக்கே ஒரு பெரிய ஊன்று கோலாகும்.
எவ்வாறெனில் குறித்த பண்புகளையுடைய ஒரே வகை கிரணங்களினால் ஏற்பட்ட குறித்த
மாறுபாட்டைக் கொண்டு திராவகத்திலுள்ள கூட்டணு எத்தகைய அமைப்பைப்
பெற்றுள்ளது என்பதைக் கண்டறிய முடியும். இது காரணம் பற்றியே "இராமன்
நிகழ்ச்சி" உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

"இராமன் நிகழ்ச்சியைப் பற்றி மேலை நாடுகளில் மட்டும் 1700 ஆராய்ச்கி
உரைகளுக்கும் அதிகமாக வெளிவந்திருக்கின்றன என்பதே அது பௌதிகத்தின் பெரு
நிகழ்ச்சிகளில் ஒன்றாகும் என்பதனை அறிவிக்கும்.

வாயுப் பொருள்களின் காந்த சக்தி; கீத வாத்தியங்களின் தொனித் தத்துவம்;
செவிக்கெட்டாத தொனி விளக்கம் முதலிய பல துறைகளில் இவர் விசேஷ ஆராய்ச்சிகளை
வெளியிட்டிருக்கின்றார்.

அறிவை வளர்ப்பவனும், இளைஞரை ஆராய்ச்சித் துறையில், 'எவர்க்கும் இவர்
பிற்பட்டவர் அல்லர்' என்ற முறையில் தேர்ச்சி செய்விப்பவனும், தன் ஜன்ம
பூமிக்கு மிகவும் மேலான தொண்டு ஆற்றுபவனே ஆவான். மேனாட்டுக்கு செல்லாமலேயே
நம் நாட்டு இளைஞர், சாஸ்திரப் பயிற்சியில் முதன்மை பெற வேண்டும் என்னும்
இவரது உள்ளக் கருத்தினை இவர் பிரசங்கங்கள் ஒவ்வொன்றிலும் காணலாம்.

1929ஆம் ஆண்டு இராமன் "ஸர்" பட்டம் அளிக்கப்பட்டார்.கொல்கத்தா
சர்வகலாசாலையில் பதினைந்து ஆண்டுகள் இருந்த பின் 1933ல் இவர் பெங்களூர்
ஆராய்ச்சிக் கழகத்திற்குத் தலைவருமானார். இராமன் பெங்களூர் வந்த பிறகு,
அந்த ஆராய்ச்சிக் கழகம், பௌதிகத்தில் இந்தியாவில் முதன்மை பெற்று
விளங்குகிறது.
தம் மனம் எதனை நாடியது என்றறிந்ததும், தம்மைக் கட்டிய தளைகள் அனைத்தையும்
களைத்தெறிந்து, பொன், புகழ், பதவி முதலியவற்றில் ஒன்றிலும் நாட்டமில்லாமல்,
ஆராய்ச்சியிலேயே தன் வாழ்நாள் முழுவதும் கழித்த பெரியாருள் இராமனும்
ஒருவராவர்.

1970ஆம் ஆண்டு இராமனுடைய உடல் நிலை க்ஷீணமடைய ஆரம்பித்தது. ஆஸ்பத்திரியில்
சிகிச்சைக்காக சேர்த்தபோது அவர் டாக்டரிடம், "இந்த உடல் பாதிப்பிலிருந்து
குணமாகி 100 சதவிகிதத்திற்குக் குறையாமல் என்னுடைய ஆரோக்யமும், செயல்கள்
சுறுசுறுப்பாய் இருக்குமானால் தவிர நான் பிழைத்திருக்க விருப்பமில்லை என்று
கூறினாராம். உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் தெரிந்ததும் அவரை
வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அவர் வெளியில் தோட்டத்தில் உலாவும் வழக்கம்
உடையவர். அது கூட முடியமல் அறையிலேயே இருந்தார்.
அப்பொழுது அவர் சொன்னார், " நான் இந்த அறையில்தான் சாகப்போகிறேன் என்று
தெரிந்திருந்தால் இந்த ஜன்னல்களைத் தாழ அமைத்திருப்பேன் என்றாராம். சுற்றி
இருந்தவர்கள் முதலில் இதைக் கேட்டுத் திகைத்தாலும், பிறகு தான்
படுத்திருக்கும் இடத்திலிருந்து தோட்டத்திலிருந்த மரங்களையும்,
செடிகளையும், பூக்களையும் பார்க்க முடியவில்லையே என்று அங்கலாய்க்கிறார் என
அறிந்து அவர் படுத்திருந்த கட்டிலை உயர்த்தித் தோட்டம் தெரியும்படி
வைத்தார்கள்.

21-ம் நாள் நவம்பர் மாதம் 1970 சனிக்கிழமை அவர் இறைவன் திருவடி சேர்ந்தார்.
இன்ஸ்டிட்யூட் இருந்த காம்பௌண்டிலேயே அவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த
சுற்றுப்புறத்திலேயே அவர் பூத உடல் தகனம் செய்யப்பட்டது. அவர் விருப்படியே
சடங்குகள் ஏதும் இன்றி நடந்தேறியது. ஆயிரக்கணக்கில் ஜனங்கள் இறுதி அஞ்சலி
செலுத்தக் கூடியிருந்தனர். அந்த இடத்தில் ஒரு செடி நடப்பட்டது. அது
இப்பொழுது (1986) மரமாகி முதன் முறையாகப் பூத்து குலுங்குகிறது என்று
ஜி.வெங்கடராமன் தான் எழுதிய "JOURNEY IN TO LIGHT" ( 1986 ல் வெளிவந்தது)
புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

சர் சி.வி. இராமன் Empty Re: சர் சி.வி. இராமன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 27, 2011 12:07 pm

அருமையான பகிர்வு பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சர் சி.வி. இராமன் Empty Re: சர் சி.வி. இராமன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 27, 2011 1:57 pm

பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி பட்டாம்பூச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சர் சி.வி. இராமன் Empty Re: சர் சி.வி. இராமன்

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 2:33 pm

ராமன் effect மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சர் சி.வி. இராமன் Empty Re: சர் சி.வி. இராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum