தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முன்னேற்றத்தின் முகவரி,நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
2 posters
Page 1 of 1
முன்னேற்றத்தின் முகவரி,நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
*முன்னேற்றத்தின் முகவரி,நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி* www.kavimalar.com
*நூல் ஆசிரியர் : கவிஞர் ஞர்;.சந்திரன்*
இளையோரை விருட்சங்களாக்க என்று நூலின் நோக்கத்தை நூலாசிரியர் கவிஞர்
ஞா.சந்திரன் தெளிவாகக் குறிப்பிடுள்ளார். மதுரை தூய மேல்நிலைப் பள்ளியில்
முதுநிலை தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டே இலக்கியப் பணி யினையும் இனிதே
செய்து வருகிறார்.
மாணவர்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அற்புத நூல். எனக்கு முகவரி
கொடுத்த இரத்தமும் சதையும் தந்து இந்த மண்ணில் மடியில் தவழவிட்ட, வாழும் என்
பெற்றோர்களுக்கு. என்று நூலை காணிக்கையாக்கியதன் மூலம் நூலாசிரியரின் பெற்றோர்
பாசம் புரிகின்றது. வேரை மறக்காத விழுதாக உள்ளார்.
தென்னைக்குத் தெரியாது இழநீரின் சுவை அது போல,இன்றைய இளைஞர்களில் பலர் தன்
திறமையை அறியாமலே இருந்து வருகின்றனர். “முடங்கிக் கிடக்கும் இளைஞர்கள்
முன்னேறச் சரியான முகவரி கொடுத்தே ஆக வேண்டு;ம் என்று யோசித்த போது, பகிர்ந்து
கொண்டதன் விளைவாக மலர்ந்த நூல் இது” என்று கவிஞர் ஞா.சந்திரன் குறிப்பிடுகிறார்
முனைவர் அப்துல் காதர் தொடங்கி, ஜெரி வரை 47 முத்தான சாதனை படைத்த அறிஞர்களின்
வெற்றி ரகசியங்களின் தொகுப்பு நூல் இது. அவர்களைப் பற்றி சிறு குறிப்பும்,
அவர்களது கட்டுரையும் உள்ளது. கட்டுரைகளை பெற தொகுப்பாசிரியரின் உழைத்த உழைப்பு
பிரமிக்க வைக்கின்றது.
47 பேரில் சாதரண நபர் யாருமில்லை, எல்லோருமே சாதனையாளர்கள் தான்.
தொகுப்பாசிரியர் கேட்டதும் கட்டுரை தந்து உதவிய சாதனையாளர்களையும் பாராட்ட
வேண்டும்.
*முனைவர் அப்துல் காதர்: *நம்பிக்கை என்பது உள்ளே நிகழும் உயிர்ச்சுவாசம்
இளைய செடிகளுக்கு இது ஒரு தாரக மந்திரம்
*கவிக்கோ அப்துல் ரகுமான்*: இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளை
டாக்டராக வேண்டும் அல்லது இன்ஜீனியராக வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.
ஓவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட ஆற்றல்களோடு பிறக்கிறது. ஆனால் பெற்றோர்களோ
ஜெராக்ஸ் படிகளையே விரும்புகிறார்கள்.
*முனைவர் ஆர்.கே.அழகேசன்*: தடைக்கற்களை நாம் தாண்டி வந்தாலும், இனியுங் கடந்த
வர இருப்பதாலும் நாம் விலங்கிலிருந்து வேறுபடுகிறோம்.
*முனைவர் க.ப. * *அறவாணன்* புலி கூடத் தயார் நிலையில் இல்லை என்றால் எலி கூட
ஏறெடுத்துப் பார்க்காது.
*டாக்டர்: என்.பி.இம்மானுவேல் *: அதிர்ச்சியில் அதிர்ச்சி என்னவென்றால்,
இஞைர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய பெரியவர்கள் போதை அடிமைகளில் இடம்
பெற்றிருப்பது தான். பெரியவர்கள் முன்உதாரண புருசராக வேண்டும்.
*ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் .* கல்வி வாழக் கற்றுக் கொடுக்கிறது, ஆனால்
வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கவில்லை.
*முனைவர் அரங்க இராமலிங்கம்:* சமுதாயம் ஒழுக்கம் ஒருவரிடம் இல்லையானால் அவர்
சார்ந்துள்ள சமுதாயமும், நாடும் பாழாகிவிடும்.
*முனைவர் ஜே.ஆர்.இலட்சுமி* டார்வின்: வாழ்க்கையின் வெற்றிக்கும்
அதிர்ஷ்டத்திற்கும் தொடர்பு இல்லை.
*இளசை சுந்தரம்*: சுயநலமின்றிப் பொதுநலனே கருவியாகக் கொண்டு தொண்டாற்றும்
இளைஞர்களே வாழ்வில் வெற்றி பெற முடியும்.
*முனைவர் வெ.இறையன்பு இ.ஆப*: ஒழுகுகின்ற பானைகளல் ஓரத்தில் முளைக்கும் நட்புச்
செடிகளுக்கு நீர் கிடைக்கின்றது.பூமி யின் முகத்தில் அவை பூக்கள்களி ன்
புன்னகையைப் படர விடுகின்றன.
*முனைவர் ஜா. எவாஞ்சலின் மனோகரன்:*ஒருமனப்பட்டு எந்தக் காரியத்தில்
இறங்குகிறோமோ அந்தக் காரியத்தில் வெற்றி நிச்சயம்
*கவிஞர் கபிலன் வைரமுத்து*: மனிதநேயத்தையும் ஒட்டுமொத்தச் சமூகத்தின்
முன்னேற்றத்தையும் இதயத்தில் ஏற்றிய இயக்கங்கள் முளைக்க வேண்டும்.
*அமரர் கருணைதாசன்*: யாரிடமும் பகை கொள்ளாமல் வாழ்வதே இளைஞர்களின் குறிக்கோளாக
இருக்க வேண்டும்.
*அமரர் முனைவர் சக்தி பெருமாள்:* மனிதன் என்பவன் எல்லையற்ற ஆற்றல்களின் ஊற்று
கணக்கிடமுடியாத திறமைகளின் புதையல்.
*இந்நூல் தொகுப்பாசிரியர் ஞா.சந்திரன்*: நமது இன்றைய சிந்தனையும், செயலும் நமது
நாளைய வாழ்க்கையை வடிவமைக்கும்.
*சர்க்கரைச் செல்வன்*: எச்சரிக்கை உணர்வு நமது அனுபவங்களிலிருந்து மட்டுமன்று,
பிறர் அனுபவங்களிலிருந்தும் கற்க வேண்டிய பாடம்.
*சுகி சிவம்*: திறமையோடு கூடப் பொறுமையும் கலந்தால் இளைய தலைமுறைக்கு வெற்றி
நிச்சயம்.
*அமரர் சுஜாதா*: உலகில் மிகச் சுலபமான வேலை அறிவுரைப்பது, கடினமான வேலை
கடைபிடிப்பது.
*அமரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன்: *இந்த உலகத்திலே இருக்கிற ஒவ்வொரு
மனிதனுக்கு ஒரு தனித்தன்மை உண்டு.
*அருட்தந்தை எம்.ஏ. சேவியர்,சே.ச*.: இலட்சியவாதிக்கு அனைத்துமே வாய்ப்புகளாகத்
தானே வாய்க்கும் வானமே எல்லை.
*எம்.ஏ. ஜோ* : இளைஞர்களுக்கு விவேகம் இல்லாமல் வேகம் இருப்பதால் தான் அதை வீரம்
என்று நினைத்து தங்களையும் அழித்துக் கொள்கிறார்கள். பிறரையும் அழித்துக்
கொள்கிறார்கள்.
*முனைவர் கு. ஞானசம்பந்தன்:* தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்ற அறங்கள்
முழுவதும் தனி மனிதனைச் செம்மைபடுத்த வேண்டும் என்னும் நோக்கில் படைக்கப்பட்டவை
தாம். அந்த அறநெறிகளின் வழி நின்றால் நல்ல முறையில் வைக்கப்படுவோம்.
*முனைவர் தமிழண்ணல்*: மாந்தர் பழகும் முறையிலே தான் சரியான பண்பாடு இருக்கிறது.
*லேனா தமிழ்வாணன்*: இன்றைய தினம் தான் சரியான தினம்.
*முனைவர் ம.திருமலை :* வெற்றி பெற்றவர்கள் வித்தியாசமான பல செயல்களில் ஈடுபட
மாட்டார்கள். ஆனால் ஒரு செயலை வித்தியாசமான முறையில் செய்வார்கள்.
*திலகவதி இ.கா.ப. : *கோபமாகப் பேசுகிறவரிடம் நிதானமாகப் பேசுங்கள், உங்கள்
சகிப்புத்தன்மையே எதிராளியை மாற்றி விடும்.
*தேமு : *முடிந்து போன கல்யாணத்திற்கு மேளம் தட்டக் கூடாது, அடுத்து என்ன
இருக்கிறது என்று ஒருவினாடி யோசித்தால் போதும், உலகம் விரிந்திருப்பதைக்
காணலாம்.
*என். நன்மாறன் *: இளமை என்னும் போதே இதயத்தில் விளையது இனிமை, அதனுள்
அடங்கியிருப்பது வலிமை.
*முனைவர் நிர்மலா மோகன் *: விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உழைத்துக்
கொண்டே இருப்போம்.
*பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன்:* நீ நடந்து வந்த பாதையைத் திரும்பிப்
பார்த்தால் உன் மனச்சான்று உனக்குக் கைதட்ட வேண்டும்
*அருள் தந்தை முனைவர் இலா. பிரான்சிஸ் சே.ச*. : தோள் வலித்தாலும், பிறருக்காகத்
துடுப்பு வலிப்பது தொண்டு.
*டாக்டர் பூவண்ணன் *: சாதனைக்கு வயது வரம்பு இல்லை.
*முனைவர் முத்து சந்தானம் :* ஆசைகள் இல்லாமல் போனால் வாழ்க்கை
உப்புச்சப்பில்லாமல் போய் விடும்.
*மரபின் மைந்தன் ம.முத்தையா : *சந்தேகம் என்பது சாலையில் ஒரு வேகத்தடை போல்
இருக்கும் வரைக்கும் சிக்கவில்லை. அந்த வேகத்தடை உங்கள் பாதையையே தடை செய்யக்
கூடாது.
*கவிஞர் மூரா. *: விழிகளுக்குத் தெரியாமல் புகைந்து கிடப்பதைப் தோண்டிப்
பார்க்கத் துடிப்பவனே சிகரத்தைத் தொடுகிறான்.
*கவிஞர் மு.மேத்தா*: அந்நியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த போது இந்தியாவில்
சிறைச்சாலைகள் இருந்தன. சுதந்திர சூர்யோதத்திற்குப் பிறகோ இந்தியாவே ஒரு
சிறைச்சாலையாகி விட்டது.
*முனைவர் இரா.மோகன்*: வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் வாய் மூடி மௌனியாய்
அடங்கி ஒடுங்கியே இருக்க வேண்ம். அப்போது தான் வாழ்க்கையில் நீங்கள் முத்திரை
பதிக்க முடியும்.
*எஸ். இராஜா*: எந்தக்காலத்திலும், எந்த நேரத்திலும் இயங்குவதே இளமை.
*போ.ம.ராசமணி:* அன்புள்ள குடும்பம், ஆனந்தமான குடும்பம், தினமும் அந்த வீட்டில்
திருவிழாக் கோலமே!
*பேரா.த.இராஜாராம்:* தியாகிகளை மதித்துப் போற்றாத எந்த நாடும் சிறந்து
விளங்கியதாக வரலாறு பதிவு செய்யவில்லை.
* கவிஞர் பா.விஜய்*: பயம் என்பது உன்னுள் இருக்கும் இனத் துரோகி. என்னால் தான்
முடியும் என்று நம்பி, உன் இலக்கினை அடைய முயற்சி செய்.
*கவிஞர்.**கா.வேழவேந்தன் *: பணம் சம்பாதிப்பதில் கூட அளவில்லாப் பேராசை
இருக்குமானால், வாழ்க்கையில் நிம்மதி அடியோடு தொலைந்து போய்விடும்.
*கவிஞர் வைரமுத்து*: சிறுமை கண்டு பொங்கும் சிந்தை இருக்கிறதே, அது இளமையின்
கம்பீரமான அடையாளம்.
*அ.ஸ்டீபன் ** *தனது எதிர்காலத்தை பற்றிச் சிந்திப்பவன் சுயநலவாதி,
அடுத்தவர்களின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பவனே சமூகவாதி.
*ஜோ.அருண்:* இன்றைய மக்களிடம் இயற்;கை வாழ்வும், எதார்த்த சிந்தனையம் குறைந்து
செயற்கை வாழ்வும், பூசி மெழுகுகிற சிந்தனையும் பெருகி விட்டது.
*ஜெரி*: எல்லாம் தெரிந்தவர்கள் மேலும் தங்களுக்கு எல்லாம் தெரியம் என்று
தெரிந்தவர்கள் இவர்கள் விழிப்பானவர்கள். உடலால் மறைந்தவர்களும் பொன்மொழிகளால்
வாழ்கிறார்கள்.
இப்படி 47 சாதனையாளர்களின் வெற்றியாளர்களின் வைர வரிகள் கட்டுரையின்
தொடக்கத்தில் உள்ளது. இந்த நூலை படிப்பதற்கு முன் இருந்த மனநிலையும் படித்து
முடித்தபின் உள்ள மனநிலைக்கும் உள்ள முன்னேற்றமே நூலின் வெற்றி.
தொகுப்பாசிரியர் கவிஞர் ஞா.சந்திரன் உழைப்பை உணர முடிகின்றது. இந்த நூல்
அவருக்கு முகவரியைப் பெற்றுத் தந்துள்ளது. வாழ்வில் சாதிக்க விரும்புபவர்கள்
படிக்க வேண்டிய நூல்.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: முன்னேற்றத்தின் முகவரி,நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
கருத்துக்கள் நிறைந்த பொன்மொழிகளின் தொகுப்பு, தவறாது பின்பற்றினால் நல்லதோர் அனுபவபாடங்களை கற்கலாம்.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Similar topics
» ஹைக்கூ தோப்பு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசி ! நூல்விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்பேத்கர் , நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
» Feathered Festoons நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
» அறிஞர் அண்ணா , நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
» கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் - (நூல்விமர்சனம் - கவிஞர் இரா.இரவி)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum