தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்by அ.இராமநாதன் Today at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Today at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Today at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Today at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Today at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Today at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Today at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Today at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Today at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Today at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Today at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» பெண்கள் உலகின் கண்கள் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Nov 01, 2024 6:43 pm
» உணவே மருந்து
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:05 pm
» மணம் கேட்கும் மலர்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:04 pm
» சுமைக்குள் இருப்பது
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:02 pm
சிந்திக்க வேண்டுகிறேன் ,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
2 posters
Page 1 of 1
சிந்திக்க வேண்டுகிறேன் ,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
சிந்திக்க வேண்டுகிறேன் ,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் சொல்கேளான் ஏ.வி.கிரி
அட்டைப்படமே நம்மை சிந்திக்க வைக்கின்றது. கோயில், மசூதி, தேவாலயம் வாசலில் வரிசையாக பிச்சைக்காரர்கள். நூலின் பெயருக்கு ஏற்றபடி உள்ள கவிதைகள் யாவும் சிந்திக்க வைக்கின்றன. நூல் ஆசிரியர் கவிஞர் சொல் கேளான் ஏ.வி.கிரி,தந்தை பெரியார் வழிவந்தவர், பகுத்தறிவுவாதி. நூல் ஆசிரியர் பற்றி அவரது நண்பர் திரு.ஜெயபாஸ்கரன் எழுதி உள்ளார் பள்ளியிறுதி வகுப்பிலே மூன்று முறை தோல்வியடைந்து, நின்று போனது அவரது கல்வி. குடும்பத்தை வறுமை வாட்டிய காலங்களில் தொழிற்சாலையில் கூலி வேலை செய்தார். மெழுகுசர்த்தி நிறுவனம் ஒன்று தொடங்கி தொழில் அதிபர் ஆனார். உழைப்பால் உயர்ந்த கவிஞரின் உள்ளக்குமுறல் தான் இந்நூல் பேசும் குறையையும் வென்று வாழ்க்கையில் சாதித்தவர், கவிதையாக வாழ்பவர்.
தென்காசி கோ.சுசாமிநாதன் அணிந்துரை வரிகள் இதோ!
கவிஞர்கள் பொதுவாக “கற்பனை உலகில் சுற்றிச் திரிவார்கள், கவிஞர் சொல்கேளான் அப்படி அல்ல, இவர் நடைமுறை உலகில் நடந்து திரிகிறவர்”. இலக்கிய வீதி இனியவன், கவிஞர் ஜெய பாஸ்கரன் ஆகியோரின் அணிந்துரை முத்திரை பதிக்கின்றது.
அட்சய திருதியில் தங்கம் வாங்கினால் தங்கம் குவியும் என்ற மூடநம்பிக்கை பரவி வருகின்றது.
ஊடகங்களும் தங்கள் வருமானத்திற்காக பரப்பி வருகின்றனர். செம்மறி ஆடுகளாக மக்கள் குவிந்து வருகின்றனர்.
அட்சய திருதி
பெருமுயற்சியில் ஒரு கிராம் நகை வாங்கி
வெற்றி புன்னகையுடன் வீடு திரும்பியவள்
அதிர்வடைகிறாள் கழுத்தில் இருந்த
இரண்டு பவுன் சங்கிலியைக் காணோம்.
அட்சய திருதியில் நகை வாங்கச் சென்று, இருந்த தங்கத்தையும் இழந்த அவலத்தைப் பதிவு செய்துள்ளார்.
புதிய சட்டமன்ற கட்டிடம் குறித்து ஒரு நல்ல கவிதை, சட்டமன்றத்தின் செயல்பாட்டை உற்றுநோக்கி எழுதிய கவிதை
சட்டைக் கிழிப்பு வேட்டி அவிழ்ப்பு கைகலப்பு வெளிநடப்பு ,
ஒலிபெருக்கி உடைப்பு கூச்சல் குழப்பம் அடிதடி தள்ளுமுள்ளு,
பரஸ்பர ஊழல் குற்றச்சாட்டு அதிகம் சொத்து சேர்;த்தது யார்?
யார் பதவி விலக வேண்டும், உன் மகனா ? என் மகனா?
சபாநாயகரைச் சுற்றி மறியல் , நாகரிகமில்லா வார்த்தைகள்
இவை போன்ற இன்னும் இத்யாதிகளுக்கு இடம் போவதில்லை
இருநூறு கோடியில் புதிய சட்டமன்றக் கட்டிடம்.
இடம் போதும், செயல்கள் மாறவில்லை என்பதே இன்றைய நடப்பு. இலங்கையில் நடந்து முடிந்த அவலத்தை பற்றி கவிதை வடித்தூள்ளார். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்குத் தான் அந்த வலி தெரியும். மூன்றாம் மனிதர்களுக்கு புரிவதில்லை அந்த வலி.
ஆறுதல்
என் மக்கள் போரைப் பார்த்ததில்லை
கண்ணிவெடி கண்டதில்லை, பதுங்கு குழி இறங்கியதில்லை
பீரங்கி சப்தம் கேட்டதில்லை, பசி அறிந்ததில்லை சொந்தம் பந்தம் இழந்ததில்லை வெயில்மழை நனைந்ததில்லை அகதி முகாம் நுழைந்ததில்லை, அடி உதை வாங்கியதில்லை
கை கால்கள் இழந்தில்லை, கற்பழிந்து துடித்ததில்லை ராணுவம் முன் நடுங்கியதில்லை, ராத்திரி பகலாய் அலைந்ததில்லை
பெற்ற பிள்ளைகளைத் தேடியதில்லை உற்றவர் பிணம் கண்டு வாடியதில்லை.
தொலைக்காட்சி, செய்தித்தாள் பார்த்து படித்து, இனப் படுகொலை கண்டு வேதனைப்படும் தமிழர்களுக்காக கோடியில் புரண்டு பதவியை விடாத எம் தலைவர்கள் ஆறுதல் அளிக்கிறார்கள். மானாட மயிலாட,சிரிப்பொலி, ஆனந்தம். சுக மனிதரை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கும் போது தொலைக்காட்சி பார்த்து மகிழ்ந்த மனிதர்கள் உண்டு.
தவறு
ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறார்கள் ஆறு,குளம்,குட்டை
காலை ஏரி ஓரங்களில்
நல்லது பொல்லது பார்க்கவிட்டு பேரன் பேத்திகளை
எடுக்கவிட்டு
இப்போது இடிக்க வருகிறார்கள் கடப்பாரை மன்வெட்டிக்கு
வேலை வைக்காமல் காவலர் சூழ்ந்த புல்டோசரடன்
குடும்பத்துடன் கதறியடித்து அழுது புரளும் இந்த
ஏழை எளிய மக்கள் செய்த தவறென்ன ?
ஓட்டுக்கு ஆயிரம் வாங்கியதைத் தவிர.
மனதில் பட்டதை சமரசத்திற்கு இடமின்றி, புதுக்கவிதையாக வடித்துள்ள துணிவிற்கு, நெஞ்சுரத்திற்கு கவிஞரைப் பாராட்ட வேண்டும். பணம் கொடுத்து வாக்குப் பெறும் அவலத்தைச் சுட்டிம் காட்டுகின்றார்.
அம்மா
என் கணவர் போகாத அம்மன் கோயில்களே இல்லை
இத்தனை அம்மன்களை வணங்கியும் என்னைத்
திட்டிக் கொண்டிருக்கிறார் “சனியனே,பொட்டப் புள்ளையா
பெத்திட்டியேடி”
இந்தக் கவிதையைப் படித்ததும் இன்றைக்கும் சில குடும்பங்களில் இந்தத்திட்டு ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் இன்று மகன் திருமணமானதும் மனைவியோடு சென்று விடுகிறான். கடைசி காலத்தில் மகள் தான் துணை இருக்கிறாள்;.நிறையக் குடும்பங்களில் இது நடந்து வருகின்றது.எனவே அனியாவது, மகனுக்குப் பதிலாக மகளையே பெற வேண்டும் என்ற சிந்தனையை விதைத்தது கவிதை. இது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி.
கணினி யுகத்தில் காளை அடக்குதல் எதற்கு? தமிழர்கள் வீரம் என்ற பெயரில் விலைமதிப்பற்ற உயிரை இழக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பற்றி கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்லும் கோடீஸ்வரர்கள் இறங்கி காளையை அடக்குவார்களா ?
காளைகளே
தமிழர்களே அலங்காநல்லூர் தமிழர்களே
சிந்தியுங்கள் காளையைப் பிடித்தது போதும்
இனியாவது எலிகளைப் பிடியுங்கள்
நாளைய உலகம் கம்ப்யூட்டர் எலி (மவுஸ்)
பிடிப்பவர் கையில் தான் உள்ளது.
இந்நூலில் புதுக்கவிதை மடடுமல்ல,சிந்தனை விதைக்கும் சிறப்பாக ஹைக்கூ கவிதைகளும் உள்ளது.
குடும்பம் இரண்டு
பட்டால் நாட்டுக்குப்
புதிய தொலைக்காட்சிகள்
இலங்கையில் குண்டுகள்
தலைவர் இங்கே விடுகிறார்கள்
காகித அம்புகள்
சனிப்பெயர்ச்சி
நல்ல பலன்
அர்ச்சகர்களுக்கு
பாட்டாளித் தலைவர்கள்
வலம் வருகிறார்கள்
டாட்டா சுமோக்களில்
மக்கள் வரிப்பணத்தில்
இலவசங்கள் மட்டுமல்ல
விளம்பரங்களும்
செல்போன் மட்டும்
பெருகவில்லை
கள்ளக் காதல்களும்
கிரிவலம் முடித்து
வந்தால் வீட்டில்
திருடனின் வலம்
உயிரையும் கொடுப்பேன்
என்கிறார் தலைவர்
அறுபது வருடங்களாக
மே தினம்
தலைவர்கள் வாழ்த்து
உழைக்காமல்
ஏமாற்று அரசியல் தலைவர்களையும், போலிச் சாமியார்களையும் கடுமையாகச் சாடி உள்ளார். நாட்டு நடப்பை உற்றுநோக்கி மனதில் பட்டதை பயமின்றி, துணிவுடன் புதுக்கவிதையாக ஹைக்கூ கவிதையாகப் பதிவு செய்து நூலாக்கிய நூல் ஆசிரியர் கவிஞர் சொல்கேளான் ஏ.வி கிரி பாராட்டுக்குரியவர். அடுத்த பதிப்பில் ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்தால்,இன்னும் சிறப்பாக இருக்கும்.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: சிந்திக்க வேண்டுகிறேன் ,நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
சமுதாய அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் உணரட்டும் படிப்போர் சமுதாயம் உன்னதம் பெற.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
NANDRI
வணக்கம்
மிக்க நன்றி
இரா .இரவி
மிக்க நன்றி
இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum