தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தீதும் நன்றும் பிறர் தர வாரா-2
+4
அ.இராமநாதன்
தமிழ்1981
லெட்சுமி
கவியருவி ம. ரமேஷ்
8 posters
Page 1 of 1
தீதும் நன்றும் பிறர் தர வாரா-2
நன்றி [You must be registered and logged in to see this link.]
தலையங்கம்: தீதும் நன்றும் பிறர் தர வாரா-2
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்' என்பார் வள்ளுவப் பேராசான். அதாவது, தவறான ஆலோசனைகளைக் கூறுபவர்களை அரசன் பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பது எழுபது கோடிப் பகைவர்கள் இருப்பதற்குச் சமம் என்று பொருள். தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருக்கும் பஸ் கட்டண உயர்வும் ஏனைய மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வும், அந்தக் குறளைத்தான் ஞாபகப்படுத்துகிறது.
எந்தவோர் அரசும் வரிகள் போடாமலோ, கட்டணங்களை உயர்த்தாமலோ செயல்பட முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், வரிகளை அதிகரிப்பதும் கட்டணங்களை உயர்த்துவதும் வேறு வழியே இல்லாத நிலையில் அரசு எடுக்க வேண்டிய கடைசி முடிவாக இருக்க முடியுமே தவிர, நிர்வாகக் குறைபாடுகளையும் நஷ்டங்களையும் ஈடுகட்ட வரி போடுவதும், கட்டணங்களை உயர்த்திக்கொண்டே போவதும் தீர்வாக இருக்க முடியாது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறையும் சரி, மின்சார வாரியமும் சரி, ஆவின் நிறுவனமும் சரி தொடர்ந்து நஷ்டத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருப்பது நீண்டகால நடைமுறையாகவே மாறிவிட்டது. தொடர்ந்து ஆட்சிகள் மாறிக் கொண்டிருக்கின்றனவே தவிர, இந்த மூன்று அமைப்புகளிலும் காட்சி மட்டும் மாறாமலே தொடர்கிறது. இந்த அமைப்புகளின் நிர்வாகச் சீர்கேடுகளை அகற்றி, குறைந்தபட்சம் அகற்ற முயற்சி செய்துவிட்டு, பிறகு கட்டண உயர்வுக்கு அரசு முனைந்திருக்குமானால் யாரும் குற்றம் கூறி இருக்க வழியே இல்லை.
அரசுப் போக்குவரத்துத் துறையின் நஷ்டத்தை இந்தக் கட்டண உயர்வு குறைக்கப் போகிறது என்பது வெறும் பகல்கனவாகத்தான் இருக்கும். கூடுதல் வசூல், கூடுதல் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கப் போகிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திடீர் பஸ் கட்டண உயர்வால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி என்பது ஒட்டுமொத்தமாக முதல்வர் ஜெயலலிதாவின் தோள்களில் மட்டுமே இறக்கப்படுமே தவிர, கட்டணத்தைக் கூட்டி நஷ்டத்தைச் சரிப்படுத்தி விடலாம் என்று தவறான ஆலோசனை வழங்கிய அதிகாரிகளைப் பாதிக்கப் போவதில்லை.
முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதுபோல, போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலைமையில் இருக்கின்றன. இதற்கு முந்தைய திமுக அரசு, அரசியல் நோக்கத்துடன் டீசல் விலையேற்றத்திற்கேற்பக் கட்டணங்களை அதிகரிக்காததுதான் காரணம் என்பதும் உண்மை. பத்தாண்டுகளாக உயர்த்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டியது அவசியம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால், கட்டண உயர்வு எந்தத் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்கிற அறிவிப்பை மக்களிடம் வெளிப்படையாகச் சொல்லாமல் இரவோடு இரவாக உயர்த்தியதன் விளைவு, மக்கள் கொதித்துப் போய் அரசை வசைமாரி பொழியத் தொடங்கிவிட்டனர்.
சென்னையில் மட்டும் மொத்தம் 3,140 அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன. இதில் தினசரி 55 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். வேலைக்குப் போய்த் திரும்ப சென்னை மாநகரப் போக்குவரத்துதான் பெரும்பாலோரின் வாகனமாகத் தொடர்கிறது. தமிழகம் முழுக்க 21,169 அரசுப் போக்குவரத்து பஸ்கள் ஓடுகின்றன. இதில் தினசரி 2 கோடி பேருக்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கிறார்கள். ஏறத்தாழ மூன்று கோடி பேர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து ஊர்திகளின் கட்டணத்தை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் உயர்த்துவது எந்த விதத்தில் சரி?
பல விவசாயத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், அலுவலகத்தில் கணக்கர்களாக, உதவியாளர்களாக, துப்புரவுத் தொழிலாளர்களாக, சிறு சிறு தொழிற்சாலைப் பணியாளர்களாகப் பணிபுரிபவர்கள்தான் அரசு பஸ்களில் பெருவாரியாகப் பயணிப்பவர்கள். அதிகபட்சமாக மாதம் 5,000 ரூபாய் சம்பளம் பெறுபவர்கள் ஏராளம் ஏராளம். கையில் அன்றாடம் தேவைக்கான பஸ் கட்டணத்துடன் வேலைக்குப் போகிறவர், உயர்த்தப்பட்ட கட்டணத்தால் அதிர்ச்சி அடைந்து வேலைக்குப் போகாமல் வீடு திரும்பிய அவலம் பல இடங்களில் ஏற்பட்டதே, இதெல்லாம் அதிகாரிகளுக்கு எப்படித் தெரியும்?
மூன்று ரூபாயுடன் பஸ்ஸில் ஏறி ஒரு கிலோ மீட்டர் பயணித்த பிறகு, கட்டணம் ஆறு ரூபாய் என்கிற அதிர்ச்சிச் செய்தி கேட்டு, வழியில் இறங்கித் திரும்பி நடந்தவர்கள் அதிகாரிகளைத் திட்டவில்லை. முதல்வரை வசைபாடினார்கள். இப்படி நடக்கும் என்பதை முன்கூட்டியே முதல்வருக்குத் தெரிவித்து, முறையான அறிவிப்புடன் கட்டண உயர்வை படிப்படியாக ஏற்றுவதற்கு அறிவுறுத்த வேண்டிய அதிகாரிகள் செய்த தவறுக்கு முதல்வரும் அரசும் பொறுப்பேற்க வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது.
இப்போதும் கெட்டுப் போய்விடவில்லை. இத்தனை நிதிச் சுமையுடன் இலவசங்களை விநியோகிப்பதை ஒத்திவைத்துவிட்டு, அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்கு குறைக்கலாம். "டாஸ்மாக்' மது ரகங்களின் விலையை இரட்டிப்பாக்கி போக்குவரத்துக் கழக, மின்வாரியக் கடன் சுமையை சற்று இறக்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
பஸ் கட்டண, மின் கட்டண, பால் விலை உயர்வுக்கான காரணங்களை எடுத்துக்கூறி, ஏன் இந்தக் கட்டண உயர்வு என்பதற்கான தன்னிலை விளக்கத்துடன்கூடிய முதல்வரின் அறிக்கையில் உள்ள அத்தனை நியாயங்களையும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறோம். ஆனால்... உங்களுக்காகத் தமிழக மக்கள் சுமையைத் தாங்கிக் கொள்ளத் தயார்.
பாரத்தை ஏற்றி வையுங்கள், தாங்குவார்கள். அதற்காக, பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டால் தாங்கமாட்டார்கள்."தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பது மக்களுக்கு மட்டுமல்ல, ஆட்சியாளர்களுக்கும்கூடப் பொருந்தும்!

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தீதும் நன்றும் பிறர் தர வாரா-2
சென்னை மாநகர பேருந்து கட்டணம் தான் டீலக்ஸ் அந்தஸ்து பெற்றிருக்கிறது... ஆனால் பேருந்தின் தரம் இன்னும் M-Service கட்டணத்திலேயே தான் இருக்கிறது...
லெட்சுமி- புதிய மொட்டு
- Posts : 45
Points : 49
Join date : 05/11/2011
Age : 34
Location : நாகர்கோயில் / சென்னை
Re: தீதும் நன்றும் பிறர் தர வாரா-2
வணக்கம் நண்பரே,
உண்மையான, நல்ல சிந்தனை.... விலை உயர்வு என்பது காலத்தின் அவசியம்.... ஆனால் அது ஓரே இரவில் என்பது சில சமயங்களில் " சர்வாதிகார" ஆட்சியை நினைவுப் படுத்துகின்றது...... அதிகாரிகளும், அமைச்சர்களும் பேருந்தை பயன்படுத்துவதில்லை... அவர்கள் யாரும் ஆலோசனை கொடுத்து இருப்பார்களா என்பதும் சந்தேகமே.......
மேலும் நண்பர் சொன்னது போல,
"தமிழ்நாடு போக்குவரத்துத் துறையும் சரி, மின்சார வாரியமும் சரி, ஆவின் நிறுவனமும் சரி தொடர்ந்து நஷ்டத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருப்பது நீண்டகால நடைமுறையாகவே மாறிவிட்டது."
இச்சமயங்களில் உடனடியாக நட்டம் ஏற்படும் உண்மையான காரணத்தை ஆராய்ந்து, நிர்வாக அமைப்பை மாற்றி, முடிந்தவரை.... நஷ்டத்தை குறைக்க வழி வகைச் செய்ய வேண்டும்... இல்லையென்றால்.... அரசு துறைகளில் நஷ்டம் ஏற்படும் போதெல்லாம் விலை உயர்வு ஒன்று தான் வழி என்று பின்வரும் அரசும் யோசிக்கும்........
அதிகாரிகளின் தவறான நிர்வாகமோ, அதிகாரிகளின் தவறான யோசனையோ மக்கள் ஏசுவது, ஏளனம் பண்ணுவது எல்லாம் முதல்வர் ஒருவருக்கே சேரும்..... அது நன்மையானாலும் தீமையானாலும் என்பதை முதல்வர் யோசித்து விரைவில் ஒரு நிலையான முடிவெடுக்க வேண்டும்....... எந்தவொரு முடிவெடுத்தாலும், தமிழக்த்தின் கடைசி குடி மகனையும் நினைத்து முடிவெடுக்க வேண்டும்.......
நண்பர் சொல்லியது போல டாஸ்மார்க் சரக்குகளின் விலையை ஏற்றலாம்.... மேலும் இது போல இன்னும் ஆடம்பர பொருள்களின் உற்பத்தி விலைக்கு விற்பனை வரியைக் கூட அதிகரிக்கலாம்..... தலைமை நினைத்தால்...... தவறான நிர்வாக முறைகளை கூட மாற்றலாம்........ அது இலாபம் ஏற்படுதோ,இல்லையோ அது மீண்டும் நஷ்டம் ஏற்படாமல் தடுக்கலாம்.....

தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: தீதும் நன்றும் பிறர் தர வாரா-2
"டாஸ்மாக்' மது ரகங்களின் விலையை இரட்டிப்பாக்கி போக்குவரத்துக் கழக,
மின்வாரியக் கடன் சுமையை சற்று இறக்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
-
குடி மகன்கள் மட்டும் என்ன அப்பாவிகளா...!?

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தீதும் நன்றும் பிறர் தர வாரா-2
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தீதும் நன்றும் பிறர் தர வாரா-2
போற போக்கே சரி இல்லை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தீதும் நன்றும் பிறர் தர வாரா-2
உண்மைதான்! கட்டண உயர்வு தேவை தான்! ஆனால் அது பெரிய பாரமாக இருக்கக் கூடாது! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தீதும் நன்றும் பிறர் தர வாரா-2
" longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» உனைத்தேடி வீதிகள் வாரா
» நன்றும் இன்றே செய்தல் வேண்டும்
» சிந்தனை சிகிச்சை
» பிறர் மனதைப் புண்படுத்தாதீர்
» பிறர் கனவில் நடமாடும் வியாதி -..!
» நன்றும் இன்றே செய்தல் வேண்டும்
» சிந்தனை சிகிச்சை
» பிறர் மனதைப் புண்படுத்தாதீர்
» பிறர் கனவில் நடமாடும் வியாதி -..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum