தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தபு சங்கர் பக்கங்கள்..!
+5
கவியருவி ம. ரமேஷ்
thaliranna
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைவேந்தன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தபு சங்கர் பக்கங்கள்..!
சீர் கொண்டு வா..!
நீ
அதிகாலை ஆற்றில் குளிக்க இறங்குகையில், "ஐயோ... யாராவது ஆற்றைக் காப்பாற்றுங்கள்! ஒரு அழகுப் பேய் குளிக்க இறங்குகிறது..." என்று கத்துவேன் நான் கரையிலிருக்கும் மரத்தின் பின்னாலிர்ருந்து!
ஆற்றில் இறங்காமல், அடித்துப் பிடித்து நீ என்னிடம் ஓடிவந்து, "கத்தாதே... என் தோழிகளெல்லாம் என்னைக் கேலி செய்கிறார்கள்" என்று சிணுங்குவாய்.
ஆனால், "உன் தோழிகளின் கேலியை நீ விரும்புகிறாய்" என்பதை உன் சிணுங்கலில் இருக்கும் நடிப்பு காட்டிக் கொடுத்துவிடும்!
உடனே நான், "கத்தாமல் இருக்க வேண்டும் என்றால், எனக்கொரு முத்தம் கொடு!" என்பேன். "அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்..." என்பாய் நீ.
"என்னது... கல்யாணத்துக்கு அப்புறமா! அப்ப, நமக்கு இன்னும் கல்யாணமாகலையா?" என்பேன்.
'இல்லை!' என்று அழுத்திச் சொல்வாய் நீ.
'அப்படின்னா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி முருகன் கோயில்ல வெச்சு, நான் ஒரு பொண்ணூக்கு தாலி கட்டினேனே... அது நீ இல்லையா?' என்பேன்.
'ஐயையோ... தாலி கட்டினியா! யாருக்கு?' என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்வாய். ஆனால், அதிலும் நடிப்புதான் இருக்கும்!
ஏனெனில், கொஞ்ச நேரம் கழித்து 'நான் தாலி கட்டினது வேற யாருக்கும் இல்லடி... உனக்குத்தான்! என் கனவில்...' என்று நான் சொல்வேன் என்பது உனக்குத் தெரியும்.
நம் காதல், நம் வீட்டுக்குத் தெரிந்து, அனைவரும் ஒப்புக்கொண்ட பிறகு, முகம் நிறையக் கவலையோடு என்னிடம் வந்தாய் நீ.
'என்ன?' என்று கேட்டதற்கு, 'நீங்க ரொம்பப் பணக்காரங்க... நாங்க ரொம்ப ஏழை! நம்ம கல்யாணத்துக்கு உங்க அம்மா, அப்பா நிறைய சீர் கேட்பாங்களோனு எங்க அம்மா, அப்பா பயப்படுறாங்க...' என்றாய் வருத்தத்துடன்.
நான் மெளனமாக இருந்தேன்.
'கேட்பாங்களா?' என்றாய் நீ.
'எங்க அம்மா, அப்பா கேட்க மாட்டாங்க... ஆனால், நான் கேட்பேன்... நிறைய!' என்றேன்.
'நிறையன்னா... எவ்ளோ?' என்றாய் விசனத்தோடு.
"நிறையன்னா... ரொம்ப நிறைய!
உன் கனவுகள் எல்லாவற்றையும் கல்யாணச் சீராக எடுத்து வரும்படி கேட்பேன்...
அவற்றை நனவாக்கித் தருவதற்காக!" என்றேன்.
நீ அழுதாய். ஆனால், அதில் நடிப்பு இல்லை!
- தபூ சங்கரின் "தேவதைகளின் தேவதை" புத்தகத்திலிருந்து..

கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
எனக்கு
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன்
வாசனையல்லவா வீசுகிறது.
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்..
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
அன்று
நீ குடை விரித்ததற்காக
கோபித்துக் கொண்டு
நின்று விட்ட மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால் நீ எங்கோ
குடை விரிப்பதாகவே
நினைத்துக் கொள்கிறேன்.
= தபூ சங்கர்
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.
கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன்
வாசனையல்லவா வீசுகிறது.
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்..
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
அன்று
நீ குடை விரித்ததற்காக
கோபித்துக் கொண்டு
நின்று விட்ட மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால் நீ எங்கோ
குடை விரிப்பதாகவே
நினைத்துக் கொள்கிறேன்.
= தபூ சங்கர்
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
அனைத்துமே சிறப்பு அண்ணே பகிர்வுக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
காதல் வரிகள்
காதல் கொள்ளச்சொல்கிறது
காதல் கொள்ளச்சொல்கிறது
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
சிறப்பான பகிர்வு! நன்றி!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
நன்றி யூஜின் கலை நிலா மற்றும் தளிர் அண்ணா..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
பொம்மிம்மா... தபு சங்கர்
என் அம்மா கறந்து கொடுக்கும் பாலைச் சொம்பில் ஊற்றிக்கொண்டு வந்து, தினமும் உன் வீட்டு வாசல் முன் அதிகாலையில் நிற்பேன். அதை வாங்குவதற்கு உன் வீட்டில் எத்தனையோ வேலைக்காரிகள் இருந்தாலும் நீதான் வருவாய்!
குளித்து முடித்த நீ நடந்து வந்து பால் சொம்பை வாங்கும் கணங்கள்தான் எனக்குத் தேவகணங்கள். என் ஒவ்வொரு நாளும் விடிவது அப்போதுதான்!
பாத்திரத்தில் பாலை ஊற்றிவிட்டு, சொம்பைத் திருப்பித் தருவாய். அந்தச் சொம்பிலிருக்கும் மிச்சத் துளிகள்தான் எனக்கு தேவாமிர்தம். யாருமில்லாத இடம் பார்த்து… தலையை உயர்த்தி, சொம்பைக் கவிழ்த்தால் என் நாக்கில் சொட்டும் அந்த அமிர்தத் துளிகள்!
என் கல்லூரி விடுமுறை நாட்களில், அப்பாவுக்குத் துணையாக நான் கல்யாணப் பந்தல் போடப் போகிறபோதெல்லாம்… என்றாவது ஒரு நாள் உனக்கும் திருமணம் நடக்கும்… அந்தத் திருமணத்தில் இப்படிப் பந்தல் போடுவதுதான் என் பங்காக இருக்கும் என்று நினைப்பேன். ஆனால்… ஆனால்… என் உள் மனதின் ஆழத்தில் அந்த மணப்பந்தலில் மாப்பிள்ளையாக அமரப் போவதே நீதானடா! என்று எப்போதும் ஒரு பட்சி சொல்லும்.
என் படிப்பு முடிந்ததும் ஒரு நாள் என்னை அழைத்தார் உன் தந்தை. தம்பி… நம்ம மில்லைப் பாத்துக்கிறீங்களா? என்றார்.
சரிங்க! என்று வேலையை ஆரம்பித்தேன்.
அடுத்து வந்த பொங்கல் திருநாளில்… உங்கள் வீட்டுக்கு வந்த என்னை உள்ள போய்ச் சாப்பிட்டு வாங்க தம்பி என்றவர், திரும்பி உன்னை அழைத்து தம்பிக்கு சாப்பாடு போடும்மா என்றார். ஆடிப்போய்விட்டேன் நான்.
பொங்கல் வைத்து அம்மனுக்குப் படையல் போடுவதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன். ஆனால், நீ பரிமாற வந்தது, அம்மனே எனக்குப் படையல் போடுவதைப் போல இருந்தது. நம்ப முடியாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்தேன்.
வேற என்ன வேணும் தம்பி? என்றார் உன் தந்தை.
ஒண்ணும் வேணாங்க… பொம்மிம்மா கையால சாப்பிட்டதே போதுங்க எனக்கு என்றேன்.
சிரித்தபடி என்னைப் பார்த்த உன் தந்தை, அந்த தேவ வார்த்தைகளை உதிர்த்தார்… பொம்மியை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சா கண் கலங்காமப் பாத்துப்பீங்களா..?
கண்கள் கலங்கின எனக்கு. உள்ளுக்குள் இருக்கும் பட்சியோ சொன்னேன்ல என்று கூவிக் குதிக்க ஆரம்பித்தது.
திருமணம் முடிந்த அடுத்த நாள் அதிகாலை சட்டென்று விழிப்பு வந்து, வேகவேகமாக முகம் கழுவிக்கொண்டு நான் கிளம்புகையில், பால் எடுத்துட்டு வரவா கௌம்பிட்டீங்க என்றாய் ஒரு மர்மப் புன்னகையோடு.
ஆமாம் என்றேன்.
அதெல்லாம் உங்க அம்மா எடுத்து வந்து கொடுத்துட்டாங்க என்றாய்.
அடடா! என்றேன்.
ஏன் ரொம்பக் கவலைப் படறீங்க… அந்த மூணு சொட்டுப் பால் போயிடுச்சின்னா என்றாய் சிரித்தபடியே.
தெரியுமா? என்றேன் வியப்பாக.
எப்பவோ! என்று புன்னகைத்துவிட்டு, மனசுக்குள்ள இவ்வளவு ஆசையை வெச்சிக்கிட்டு… ?பொம்மிம்மா கையால சாப்பிட்டதே போதும்?னு வசனம் பேசுனீங்க என்று கிள்ளினாய். ஆஹா… ராணி வம்சக் கிள்ளல் அது.
மூணு சொட்டு இனிமே மறந்துடுங்க. சொம்பு நிறைய பால் காய்ச்சித் தர்றேன். மூச்சு முட்டக் குடிங்க! என்று என் கன்னத்தில் தட்டிவிட்டு நகர்ந்தாய்.
அனுபவிடா! என்று கூப்பாடு போட்டது என் பட்சி.

பொம்மைக் கடைப் பக்கம் போகாதே
என்றால் கேட்கிறாயா
பார்…
குழந்தை ஒன்று தன் தாயிடம்
உன்னைக் காட்டி
இந்த பொம்மையை வாங்கிக்கொடு
என்று அடம்பிடிப்பதை....
என்றால் கேட்கிறாயா
பார்…
குழந்தை ஒன்று தன் தாயிடம்
உன்னைக் காட்டி
இந்த பொம்மையை வாங்கிக்கொடு
என்று அடம்பிடிப்பதை....
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
காதலிக்கும்போது
கவிதைதான் கிடைத்தது
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது
உன்னை என் வாழ்க்கைத்துணை என்று
எப்படிச் சொல்வது
எனக்கு
வாழ்க்கை
கொடுத்துக்கொண்டிருப்பதே
நீதானே !!!
- தபு சங்கர்
[திமிருக்கும் அழகென்று பெயர்]
கவிதைதான் கிடைத்தது
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது
உன்னை என் வாழ்க்கைத்துணை என்று
எப்படிச் சொல்வது
எனக்கு
வாழ்க்கை
கொடுத்துக்கொண்டிருப்பதே
நீதானே !!!
- தபு சங்கர்
[திமிருக்கும் அழகென்று பெயர்]
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் அண்ணே பகிர்வுக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
நன்றி நண்பர்களே.. இன்னும் சில தபூசங்கர் வரிகளைக் காண்போமா..?
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
உனக்கும் எனக்கும் இடையே
கொஞ்சம் இடைவெளிவிட்டு
நான் அமர்வதற்குக் காரணம்
நீ என்னைத் தொட்டுவிடக் கூடாது
என்பதற்காக அல்ல.
நம்மிடையே
காதல் அமரவேண்டும்
என்பதற்காகத்தான்.
- தபு சங்கர்
கொஞ்சம் இடைவெளிவிட்டு
நான் அமர்வதற்குக் காரணம்
நீ என்னைத் தொட்டுவிடக் கூடாது
என்பதற்காக அல்ல.
நம்மிடையே
காதல் அமரவேண்டும்
என்பதற்காகத்தான்.
- தபு சங்கர்
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.
நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.
ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்.
- தபு சங்கர்
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.
நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.
ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்.
- தபு சங்கர்
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
பகிர்வுக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
என்னை நல்லவன் என்று
நினைத்துக்கொண்டிருந்தேன்,
அந்த நினைப்பில்
மண் அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது
உன் மீதான காதல்.
உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும்
உனது ஆடையை திருடி வரச்சொல்லி
நச்சரிகிறதே மனசு..
- தபு சங்கர்
நினைத்துக்கொண்டிருந்தேன்,
அந்த நினைப்பில்
மண் அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது
உன் மீதான காதல்.
உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும்
உனது ஆடையை திருடி வரச்சொல்லி
நச்சரிகிறதே மனசு..
- தபு சங்கர்
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
//உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும்
உனது ஆடையை திருடி வரச்சொல்லி
நச்சரிகிறதே மனசு..// என்னாச்சு?
உனது ஆடையை திருடி வரச்சொல்லி
நச்சரிகிறதே மனசு..// என்னாச்சு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
நன்றி யூஜின்...
வாசகர்கள் குறைவு இத்திரியின் ரசனை இன்மையைக் காட்டுகிறது.
இன்னும் சில பகுதிகளுடன் நிறைவு செய்துகொள்கிறேன்..
வாசகர்கள் குறைவு இத்திரியின் ரசனை இன்மையைக் காட்டுகிறது.
இன்னும் சில பகுதிகளுடன் நிறைவு செய்துகொள்கிறேன்..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
Last edited by sarunjeevan on Tue Nov 29, 2011 10:41 pm; edited 1 time in total
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
ஒரே ஒரு முறைதான் எனினும்
உன் உன்னத நிழல் என்மீது பட்டபின் தான்
நான் ஒளியூட்டப்பட்டுக் கவிஞனானேன்..
- தபு சங்கர்
உன் உன்னத நிழல் என்மீது பட்டபின் தான்
நான் ஒளியூட்டப்பட்டுக் கவிஞனானேன்..
- தபு சங்கர்
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
காதல் தான் என் தவம்...
என் கடுந்தவத்தைக் கலைத்து
என்ன வரம் வேண்டுமென்று
எந்த தெய்வமும் என்னைக் கேட்காமலிருக்கட்டும்..
என் தவத்தை விடச் சிறந்ததாய்
எந்த வரத்தையும்
எந்த தெய்வத்தாலும்
தந்துவிட முடியாது...

ஒரு தாய் தன் குழந்தைக்குச் சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல்
எனக்கு உன்னைக்காட்டியது..!
- தபு சஙக்ர்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல்
எனக்கு உன்னைக்காட்டியது..!
- தபு சஙக்ர்
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தபு சங்கர் பக்கங்கள்..!
பாராட்டுகளுக்கு நன்றி யூஜின் மற்றும் ராமநாதன் ஐயா..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தபூ சங்கர் கவிதைகள் 2
» நதியலை இரு பக்கங்கள்
» கூகுள் டிஜிட்டல் வடிவில் 4 கோடி பக்கங்கள் உருவாக்குகிறது!
» தபூ சங்கர் கவிதைகள்
» தபூ சங்கர் கவிதைகள்
» நதியலை இரு பக்கங்கள்
» கூகுள் டிஜிட்டல் வடிவில் 4 கோடி பக்கங்கள் உருவாக்குகிறது!
» தபூ சங்கர் கவிதைகள்
» தபூ சங்கர் கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum