தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தோல்வியை தவிர்ப்பது எப்படி ?

Go down

தோல்வியை தவிர்ப்பது எப்படி ?  Empty தோல்வியை தவிர்ப்பது எப்படி ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 21, 2011 5:27 pm

எந்த விடயத்திலும் நாம் உடனே வெற்றி பெற முடியாது . பல தோல்விகளை கண்டுதான் வெற்றியை அடைகின்றோம் . இது எல்லோருக்கும் பொதுவானது . நாம் எப்போதுமே வெற்றி பெற வேண்டும் , உடனே இந்த விடயத்தில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பது தவறு . ஆறு அடி ஏறி நான்கு அடி சறுக்கி கஷ்டப்பட்டு பெறும் வெற்றி தான் மகத்தானது . நிலைத்து நிற்கக்கூடியது .
தோல்வியை தவிர்ப்பது எப்படி ?  4
நாம் எல்லோரும் பொதுவாக பரீட்சையில் தோல்வி அடைகிறோம் . சிலர் காதலில் தோல்வி அடைகிறார்கள் , பலர் விளையாட்டில் தோல்வி அடைகிறார்கள் , வாழ்க்கையில் தோல்வி என பலவற்றை சொல்லிக் கொண்டு போகலாம் . வெற்றி, தோல்வி, ஏமாற்றம், கோபம், துரோகம், காதல்,கண்ணீர், வலி, அவமானம் என்று தவிர்க்கவே முடியாதவைகளாக நிறைய உள்ளன. வலி, அவமானம், தோல்வி, ஏமாற்றம் என்று மேற் கண்டவைகளை தவிர்த்து விட அல்லது அதிலிருந்து மீண்டு ஓடி விட நினைப்போம். ஆனால் தவிர்க்கவே முடியாமலே போகிறது .ஏதாவது சந்தர்ப்பத்தில் நாம் இவற்றை எல்லாம் அனுபவிக்கின்றோம் .
தோல்வியை தவிர்ப்பது எப்படி ?  1897134
விளையாட்டில் பதினைந்து பேர் கலந்து கொள்ளும்போது அதில் ஒருவருக்கு மட்டுமே முதல் இடம் கிடைக்கும் . மற்றவர்கள் உடனே நாம் தோல்வி அடைந்து விட்டோமே என சோர்ந்து விடக்கூடாது . ஏன் நாம் தோற்றோம் . பயிற்சி போதவில்லை . எனவே அதன் காரணத்தை கண்டறிந்து போதிய அளவு பயிற்சி பெற்று இன்னுமொருமுறை விளையாடும் போது வெற்றி அடைகிறோம் . வெற்றி என்பது மாறி மாறி வரும் . ஒருவர் எல்லா தடைவைகளும் வெற்றி பெற முடியாது . ஒருவர் எல்லதடைவைகளும் தொற்றுக் கொண்டும் இருப்பதில்லை .
http://uyirvani.com/image/images/sad.jpg
வாழ்க்கை எனும் வட்டப் பாதையில் வெற்றி - தோல்வி , சந்தோசம் - துக்கம் , நன்மை- தீமை என ஒவ்வொன்று உள்ளது . இக்கரையில் இருந்து அக்கறைக்கு கடக்க வேண்டும் என்று நாம் முடிவு எடுத்து விட்டோமானால் சிரமங்கள் வரத்தான் செய்யும் . அவற்றை எல்லாம் தாண்டி வெற்றி பெற வேண்டும் . அப்படி பெற்ற வெற்றி எமக்கு எவ்வளவு சந்தோசத்தை தருகிறது .

கிரிக்கட் விளையாட்டில் ஒவ்வொரு முறையும் எல்லா நாடுகளிடமும் தோல்வி அடைந்து விட்டு ஒருமுறை வெற்றி பெறுகிறது அந்த அணி அப்போது அவர்களின் உவகைக்கு அளவே இல்லை .இதே ஒருமுறையும் தோல்வி அடையாமல் வெற்றி பெற்ற அணி ஒருமுறை தோல்வி அடைகின்ற போது அந்த அணியால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை . ஜீரணித்து கொள்கிறார்கள் இல்லை . விளையாடும் போது ஒன்றில் வெற்றி வரும் அல்லது தோல்வி வரும் . நாம் நாணயத்தை சுண்டும் போது ஒன்றில் பூவிழும் அல்லது தலை விழும் . இதுதான் நியதி .

தோல்வியை தவிர்ப்பது எப்படி ?  4237
நமது தோல்வி, அடுத்தவரின் வெற்றி என்றாகும் போது -அந்த தோல்வியை எப்படி தவிர்க்க முடியும். ஒரு வேளை நாம் வெற்றியாளராக மாறினால், எதிராளி தோல்வியை தவிர்க்க முடியாதவராக ஆகிறார். தோல்வியை தவிர்க்க விரும்பினால் – நாம் வெற்றியையும் தவிர்த்தே ஆக வேண்டும். அதனால் நாம் தோல்வியை தவிர்க்கவே முடியாது

ஆசைப்பட்டதை அடைவதட்க்கும் , போட்டிகளில் ஜெயிக்கவும் , கனவை நனவாக்கவும் , எதிலும் முதன்மை பெறுவதற்க்கும் எமக்கு வெற்றி முக்கியம் என எண்ணுகின்றோம் . தோல்விதான் வெற்றியின் முதல் படி . தொவியை கண்டவுடன் துவண்டு விடாது இருக்க வேண்டும் . அடுத்தமுறை எப்படி வெற்றி பெறுவது எப்படி என சிந்தியுங்கள் . முக்கியமாக இளையர்கள் எல்லோரும் தோல்வியை கண்டு துவண்டு விடுகிறார்கள் .

தோல்வியைப் பற்றிய பயம் என்றால் ஒரு உண்மையைத் திரும்பத் திரும்ப மனதில் பதியுங்கள். ”இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன் இது வரை தோன்றவில்லை. இனி தோன்றப் போவதுமில்லை”. நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள். முன்பு கூறியது போல மாபெரும் வெற்றியாளர் கூட பத்து முயற்சிகளில் சராசரியாக நான்கு முயற்சிகளில் தோல்வி அடைகிறார்கள் என்றால் தோற்பதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?
தோல்வியை தவிர்ப்பது எப்படி ?  I_m_too_sad_to_tell_you
"வெற்றி நமது நோக்கம். அதற்குத் தேவை ஊக்கம். தோல்வியால் வரக்கூடாது ஏக்கம்" .
“வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. புத்திசாலி மனிதரெல்லாம் வெற்ற காண்பதில்லை” என கண்ணதாசன் ஒரு பாடல் வரியில் குறிப்பிட்டுள்ளார் .
ஒருவனுக்குத் தோல்வி வரலாம். தோல்வி மனப்பான்மை வந்துவிடக்கூடாது.வெற்றி என்பது முதலிடத்தைப் பிடிப்பதுதான் என்பது சரியே. ஆனால், எந் இடத்தைப் பிடித்தாலும், சென்ற ஆண்டைவிட ஒரு படியாது முன்னேற்றம் இருந்தால் அதுவும் வெற்றிதான் என்பது எப்படித் தவறாகும்? அடுக்கடுக்காக தோல்விகளை மட்டுமே கண்டுவந்த ஆபிரகாம் லிங்கனை, அமெரிக்க ஜனாதிபதி என்ற இறுதி வெற்றி, வெற்றியாளர் ஆக்க வில்லையா? ஆரம்பத்தோல்விகளை மட்டும் வைத்து, ஒருவரைத் தோல்வியாளர் என்று சொல்லிவிடமுடியுமா?
தோல்வியை தவிர்ப்பது எப்படி ?  Goal-setting-the-90-day-challenge
நாம் தோல்விகளை எப்படி தவிர்த்துக் கொள்ளலாம் என்றால் ஆண்டுக்கு ஆண்டு நாம் எம்மை முன்னேற்றி கொள்வது , செய்ய நினைத்ததை செய்து முடிப்பது ,
ஒன்பது முறை தோற்றாலும் பத்தாவது முறையும் முயற்சிப்பது,

அடைய முடியாத்தை எண்ணி ஆதங்கப்படாமல், அடைந்தவைகளை ஆனந்தமாய் அனுபவிப்பது,

எதையும் சாதிக்காவிட்டாலும், எதிலும், யாரிடமும் ஏமாந்து விடாமல் இருப்பது,

தோல்வியைக் கண்டால் துவண்டுவிடாமல், வெற்றிப்பாதையை விட்டு விலகாமல் இருப்பது,

நினைத்த இலக்கை அடையும்வரை, முயற்சிகளை நிறுத்தாமல் தொடர்வது. இவைதான் நாம் தோல்விகளை தவிர்க்கும் வழிகள்.


கஷ்டம் எமக்கெல்லாம் மகிழ்ச்சியின் அருமை, பெருமையை சொல்கிறது. வலியும் அவமானமும், எம்மை எல்லோரையும் நேசிக்க வைக்கிறது . தோல்விகள், தேக்கங்கள் – எமக்கெல்லாம் வாழ்க்கையின ஏற்ற இறக்கங்களை சொல்கிறது.நாம் எல்லோரும் தோல்வியை கண்டு துவண்டு விடாது வெற்றிக்காக பாடுபட வேண்டும் .


நன்றி பவி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum