தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
கிறிஸ்துவின் பிறப்பு
Page 1 of 1
கிறிஸ்துவின் பிறப்பு
உலகில் வாழும் மக்கள் தங்கள் சமயத்தையும் சமூக சிந்தனைகளையும் கடந்து கொண்டாடுகின்ற ஒரு பண்டிகை கிறிஸ்மஸ் ஆகும். இதற்கு காரணம் இறைவன் மனுக்குலத்தின் வரலாற்றில் குறுக்கிட்டார். இதனால் தான் வரலாற்று ஆசிரியர்கள் கி. மு., கி. பி. என உலக வரலாற்றையே இரண்டாக பிரிக்கின்றார்கள்.
இந்த வரலாறு ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இது ஒரு சரித்திரம். இச் சரித்திரம் மகா புனிதமானது.
மெசியா ஒருவர் வருவார் என யூதர்கள் எல்லாரும் நம்பியிருந்தார்கள் இந்நம்பிக்கை இறைவாக்கினர்கள் மூலம் பல சந்தர்ப்பங்களில் சொல்லப்பட்டது. இச்செய்தி இறுதியாக கன்னியாகிய மரியாளுக்கு சொல்லப்படுகின்றது. லூக்கா 1.31 இல் ‘இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்’
இயேசு என்பதின் பொருள் இரட்சகர். கிரேக்க பாஷையில் யோசுவா என அழைக்கப்படுகின்றது. இயேசு என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட பெயர் ‘ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்’ என மத்தேயு 1 : 21 இல் காணலாம்.
கிறிஸ்துவின் பிறப்பு கி. மு. 4 ஆம் ஆண்டில் நடைபெற்றதாகத் தான் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். அந்தக் காலத்தில் அகுஸ்து அரசன் ரோம் சக்கரவர்த்தியாயும் பெரிய ஏரோது யூதேயா தேசாதிபதியாகவும் இருந்தார்கள். உலகமெங்கும் ஒரே அரசு. கிரேக்க பாஷை எங்கும் பேசப்பட்டது. யூதர்கள் எல்லா இடமும் சிதறி வாழ்ந்தார்கள். இந்தக் காலம் கிறிஸ்து உலகில் பிறப்பதற்கு தகுதியான ஒரு காலமாக இருந்தது.
மரியாளுக்கு இப் பிறப்பின் செய்தி சொல்லப்பட்ட பின்னர் மரியாள் ஒரு புரட்சிப் பாடல் பாடுகின்றார். இதனுடைய பின்னணியை சற்று பார்த்தால் லூக்கா நற்செய்தி நூல் ஆசிரியர் மரியாளுக்கு குழந்தை இயேசுவின் பிறப்பை முன்னறிவித்த கபிரியேல் தூதன் வயது முதிர்ந்த நிலையிலும் கருவுற இயலாத எலிசபேத் 6 ஆம் மாதமாக கர்ப்பவதியாக இருக்கின்றார் என்ற செய்தி சொல்லப்படுகின்றது. ‘லூக்கா 1 : 36 இல் காணலாம்.
இச்செய்தியைக் கேட்ட மரியாள் நாசரேத்தூரிலிருந்து எலிசபேத் வாழ்ந்த ஊருக்கு போகிறார். மரியாள் ஏறக்குறைய 155 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று அல்லது நான்கு நாட்கள் பயணித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
மரியாள் எலிசபெத்தை சந்தித்தபோது எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை (முழுக்கு முனிவர்) மகிழ்ச்சியால் துள்ளியது என லூக்கா 1 : 41 இல் காண்கின்றோம். இந்நூல் ஆசிரியர் சொல்கின்ற மீட்பரைக் கண்ட மகிழ்ச்சி, மெசியாவின் தாயைக் கண்ட மகிழ்ச்சியில் எலிசபெத்தின் குழந்தை துள்ளும் நேரத்தில் தான் அப்புரட்சிப் பாடல் ஒலிக்கின்றது. ஒரு அருமையான பாடல் ஒரு யூதப் பெண்ணாக இருந்தும் துணிந்து பாடுகின்றார்.
லூக்கா 1 : 46 – 56 வரையுள்ள பகுதியில் இறைவன் தனக்கு செய்துள்ள நன்மைகளுக்காக நன்றி கூறி தம் முன்னோருக்கு இறைவன் செய்துள்ள நன்மைகளுக்காக நன்றி கூறிப் பாடலை முடிக்கின்றார். இதில் இறைவன் யார் என்று மரியாள் லூக்கா 1 : 49 – 50 இல் கூறுகின்றார். இறைவன் வல்லமையுள்ளவர். அவர் தூயவர் இரக்கமுள்ளவர். இவையெல்லாம் இஸ்ரவேல் மக்களின் விடுதலைப் பயணத்தில் இம்மக்கள் அனுபவித்த உண்மையாகும்.
இந்த நேரத்தில் நாம் இன்னுமொரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். சாதாரண கிராமத்துப் பெண்ணாகிய மரியம்மாள் இறைவன் யார் என்பதை கூறியதைப் போல் திருவிவிலியத்தில் எகிப்தியப் பெண்ணாகிய ஆகார் (புறஜாதி பெண்) தான் இறைவனுக்கு முதல் பெயர் வைத்த பெண்ணாகும். தொடக்க நூல் 16 : 13 இல் காணலாம். பெண்கள் வரலாறு படைத்தவர்கள். வரலாற்றில் செயற்படும் இறைவன் என்ன செய்வார் எனப்பாடுகின்றார்.
இறைவன் நேற்றும் இன்றும் நாளையும் நடத்தி வரும் நடாத்தவிருக்கும் சமூக மாற்றத்தை காட்ட விரும்புகின்றார். இறைவன் வரலாற்றில் மனுவுரு எடுத்து வந்ததன் நோக்கத்தை காண்கின்றோம். மரியாள் தான் பெற்றெடுக்கும் மகவு இந்த உலகில் என்ன செய்யப் போகிறார் என தெளிவுபடுத்துகின்றார். லூக்கா 1 : 53 இல் உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகின்றார். அதாவது ஒரு ஒழுக்கப் புரட்சியை ஏற்படுத்துகின்றார்.
செருக்கு பிறரை இகழ்ந்து நோக்கும் இயல்பு கொண்டது. ரோமர் 1 : 29 – 31இல் காணலாம். நெறிகேடுகள் பொல்லாங்கு, பேராசை, தீமை, பொறாமை, கொலை, சண்டை, சச்சரவு, வஞ்சகம், தீவினை, புறங்கூறுபவர்கள், இழித்துரைப்பவர்கள், செருக்குற்றவர்கள், வீம்பு பாராட்டுபவர்கள், பெற்றோருக்கு கீழ்படியாதவர்கள், சொல் தவறுபவர்கள், மதிகெட்டவர்கள், பாசம் அற்றவர்கள், இரக்கம் இல்லாதவர்கள் இப்படிப்பட்டவர்கள் சாவுக்குரியவர்கள் இப்படி வாழ்பவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என 2 தீமோத்தேயு 3 : 2 இலும் யாகோபு 4 : 6 1 பேதுரு 5 : 5 இலும் காணலாம். இந்த ஒழுக்கம் கெட்ட நடத்தை வாழும் மனுக்குலத்தை சீர்படுத்தி புதிய சமூகத்தை உருவாக்க இறைவன் மனுவுரு ஏற்றார்.
ஒழுக்கம் என்பது உயிரிலும் மேலானது என வள்ளுவப் பெருந்தகை 131ம் குறளில் கோடிட்டுக் காட்டுகிறார்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் – ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
ஒழுக்கம் ஒருவரின் மிகப்பெரிய சிறப்பு. அது உயிரைக் காட்டிலும் விலை மதிப்புள்ளது. மனுவுரு எடுத்து வந்த இறைவன் சமூகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்துகின்றார். லூக்கா 1 : 52 இல் வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். அதாவது தங்கள் பலத்தில் நம்பிக்கையுள்ளவர்களை தூக்கி எறிகிறார்.
எதிர் மறையாக தாழ் நிலையில் இருப்பவர்களை தூக்கிவிடுகிறார். இவ்வாறு தூக்கி நிறுத்தப்படுபவர்கள் யார் என்றால். ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டிருக்கும் ஏழை எளிய மக்கள். திருப்பாடல்கள் 146 : 7 – 8 இல் ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்.
பசித்தோருக்கு உணவளிக்கின்றார். சிறைப்பட்டோருக்கு விடுதலை அளிக்கின்றார். ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார். நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
இது தான் சமூகத்தில் செய்த உண்மை. இறைவனின் பார்வையில் எல்லாரும் சமம். இதனால் தான் பிறப்பின் செய்தியை அறிவித்த தேவதூதன் ‘எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன் லூக்கா 2 : 10 இல் காண்கின்றோம்.
கிறிஸ்துவின் பிறப்பு சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. ஆனால் இன்று சமூகம் இழிநிலைக்குச் சென்றுவிட்டது. சமூக சீர்கேடுகள் மலிந்து போயுள்ளன. சமூகம் ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கின்றது. சமூக மாற்றம் தான் கிறிஸ்துவின் பிறப்புக்கு வழிவிடும்.
தான் கருவுற்று பிறக்க இருக்கும் மகவு பொருளாதாரத்திலும் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்துவார் என மரியம்மாள் பாடுகின்றார். எப்படியென்றால் பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். செல்லரை வெறுங்கையராய் அனுப்பி விடுகின்றார்.
இதனுடைய நோக்கம் ஏழ்மை உலகில் இருக்கக் கூடாது. சமதர்மப் பொருளாதாரம் இயேசுவின் பிறப்பிலேயே சொல்லப்பட்டாயிற்று. இதனை இயேசு தன் திருப்பணியிலும் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு உணவளித்த நிகழ்வில் அறியலாம். வைத்திருப்பவர்கள் பகிர வேண்டும். ஒருவர் நன்றாக உண்டு குடித்து இருக்க இன்னொருவர் பசியால் சாகக் கூடாது. பகிர்வு என்பது இறைவன் மக்கள் மனங்களை மாற்றுவதன் மூலம் நடைபெறுவது. அப்போதுதான் இறையரசு முழுமையடையும்.
ஆகவே இன்று அகில உலகும் குதுகலத்தில் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றன.
ஆனால் கிறிஸ்து பிறப்பின் உண்மைத் தன்மையை உணராமல் இந்நாளை கேளிக்கை நாளாக்கி விட்டார்கள். அது மட்டுமல்ல திருச்சபைகள் இறைவன் ஏன் மனுவுரு எடுத்தார் என்பதை மறந்து மனுவுரு ஏற்பைச் சொல்லி சமூகத்தில் ஒழுக்கங்களை விதைக்காமல் வன்முறைகளையே விதைக்கின்றார்கள்.
நல்ல சமூகத்தை உருவாக்காமல் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் சாதிக்கொரு கோயில் சமூகத்திற்கு ஒரு கோயில் என கட்டி சமூகத்தை கூறுபோடுகிறார்கள். அதைவிட கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிக் கொண்டு பொருளாதாரச் சுரண்டல்கள் தலைவிரித்தாடுகின்றன. இந்நிலையை மாற்ற திரும்பவும் இயேசு பிறக்க வேண்டுமென்று உலகு எதிர்பார்க்கின்றது. இயேசு திரும்பவும் பிறக்க மாட்டார். ஆனால் வருவார். எப்படி வருவார் என்றால் நியாயதிபதியாக வருவார். அப்போது அவரை சந்திப்பதற்கு இக்கிறிஸ்மஸ் காலங்களில் எம்மை ஆயத்தம் செய்வோம்.
ஆயத்தம் என்பது ஆடைய லங்காரங்களில் அல்ல. மனங்களை மாற்றுவோம். புதுவாழ்வை கண்டடைவோம். கிறிஸ்து எம்மில் பிறப்பார், புதுவாழ்வைத் தருவார்.
அருட்திரு டி. எஸ். மதியாபரணம்
நன்றி தினகரன்
(கிளிநொச்சி)

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கிறிஸ்துவின் உடன் சுதந்தரர்
» இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் நட்சத்திரம் தரும் நம்பிக்கையும்
» பிறப்பு
» காதலின் பிறப்பு!!!!!!!!
» கர்த்தர் பிறப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum