தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்
3 posters
Page 1 of 1
மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்
சென்னை: லஞ்சப் பணம் கொடுத்து டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வானவர்கள்,
தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பவர்கள் என, தமிழகம் முழுவதும்
70க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர்
அதிரடியாக சோதனை நடத்தி, ஆவணங் களை கைப்பற்றியுள்ளனர். தமிழக அரசில்
பல்வேறு பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு தேர்வு
செய்யப்படுபவர்களில் குறிப்பிட்ட சிலர், தேர்வாணையத் தலைவர், உறுப்பினர்களை
கவனித்து, அதற்கான பட்டியலுக்குள் நுழைந்து விடுவதாகபுகார்கள் அவ்வபோது
எழுந்து வருகின்றன. சமீபத்தில் தான் இவ்வாறான புகார்களுக்கு விடிவுகாலம்
பிறந்துள்ளது. குறிப்பாக, உதவி பல் மருத்துவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட
விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்,
பார்வையிடக் கோரியது; 2006 முதல் 2008ம் ஆண்டுக்கான மோட்டார் வாகன
ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், தகுதியற்றவர்களை
தேர்வு செய்து ஊழல் புரிந்தது; குரூப்-1 அலுவலர் தேர்வுகளில் லஞ்ச
லாவண்யங்களில் ஈடுபடாமல் தடுக்க முயன்ற, டி.என்.பி.எஸ்.சி., செயலரை பணி
செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட புகார்களின் மேல், லஞ்ச ஒழிப்புத்
துறையில் வழக்கு பதியப்பட்டது. தலைவர், உறுப்பினர் வீடுகளில்... வழக்கிற்கு
தேவையான ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு, அவற்றை சமர்ப்பிக்கும் படி, லஞ்ச
ஒழிப்புத் துறை கேட்டுக் கொண்டது. டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும்
உறுப்பினர்கள்,இவற்றை ஆஜர்படுத்த மறுத்துவிட்டனர். இதையடுத்து, அதிகார
துஷ்பிரயோகம் செய்ததாகவும் வழக்கு பதியப்பட்டது. வழக்கு விசாரணை துவங்கிய
நிலையில், கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தலைவர்
செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள்
கைப்பற்றப்பட்டன. தேர்வாணைய ஊழியர்கள், புரோக்கர்கள்... தொடர்ந்து,
இவ்வழக்கில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு உதவிகரமாகச் செயல்பட்டதாகக்
கருதப்பட்ட தேர்வாணையத்தின் சார்பு செயலர்கள், உதவிப் பிரிவு அலுவலர்கள் என
பலரது வீட்டில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி சோதனை நடத்தப்பட்டு,
பணம், தேர்வானவர்கள் பட்டியல், மதிப்பெண் சான்று உள்ளிட்டவை
கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, இந்த விவகாரத்தில் இடைத்தரகர்களாகச்
செயல்பட்ட, பயிற்சி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சிலரது வீடுகள்,
அலுவலகங்களில் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி, சோதனை நடத்தப்பட்டு
ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 73 இடங்களில்... இவற்றையடுத்து, பணம் கொடுத்து
தேர்வானவர்கள், தேர்வு எழுதி முடிவிற்காக காத்திருப்பவர்கள் வீடுகளில்
ரெய்டு நடத்த, லஞ்ச ஒழிப்புத் துறை முடிவெடுத்தது. நேற்று காலை, சென்னை,
மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில், 73 பேரது வீடுகளில்,
டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
இதில், மதுரையில் 13 பேர் மற்றும் சென்னையில் 10 பேர் வீடுகள் அடக்கம்.
சோதனை பட்டியலில் இடம் பெற்றவர்களில் 53 பேர், ஏற்கனவே குரூப்-1 மற்றும்
குரூப்-2 தேர்வுகளில் பங்கேற்று தேர்வாகி, அரசு டாக்டர், டி.எஸ்.பி.,
டி.ஆர்.ஓ., மற்றும் தலைமைச் செயலகப் பணிகளில் உள்ளனர். இவர்கள்
வீடுகளிலும், கடந்த இரண்டாண்டுகளில் நடத்தப்பட்ட குரூப்-1, 2 தேர்வுகளை
எழுதி காத்திருப்போரும் அடக்கம். இவர்கள் அனைவரும், தங்கள் விடைத்தாள்களில்
சில குறியீடுகளை பதிவு செய்து, அதன் மூலம் மதிப்பெண்கள் அதிகளவில்
பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையைத் தொடர்ந்து, இவர்கள்
மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், விரைவில் பதவி நீக்கம் செய்யப்படலாம்
என்ற கருத்தும் உள்ளது. செல்லமுத்து ராஜினாமா... லஞ்ச ஒழிப்புத்
துறையினரின் இந்த சோதனைகளுக்கிடையில், டி.என்.பி.எஸ்.சி., தலைவர்
செல்லமுத்து, தனது பதவியை ராஜினாமா செய்து, கடிதம் அனுப்பியுள்ளார். லஞ்ச
ஒழிப்புத் துறையினர் செல்லமுத்துவின் வீட்டில் சோதனை நடத்தியதைத்
தொடர்ந்து, இந்த வழக்கில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்
துறையினருக்கு அதிகாரம் இல்லை என்று அவர் ஐகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்திருந்தார். இந்நிலையில், கடந்தசில தினங்களுக்கு முன், அவர் தன்
ராஜினாமா கடிதத்தை, அரசுக்கு அனுப்பியதாகவும், அக்கடிதம் தற்போது
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செல்லமுத்துவின்
பதவிக்காலம், வரும் மே மாதத்துடன் முடியும் நிலையில், நான்கு மாதங்களுக்கு
முன் ராஜினாமா செய்துள்ளார். அரியலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.,
அதிகாரியான ஆர்.செல்லமுத்து, கடந்த தி.மு.க., ஆட்சியில், 2010 ஜன., 4ல்,
டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்கப்பட்டார். விதிகளின்படி, ஆறாண்டுகள்
அல்லது 62 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை, பதவியை வகிக்கலாம்.
அதன்படி, செல்லமுத்துவுக்கு 62வது வயது, வரும் மே மாதத்துடன் முடிகிறது.
ஊழல் புகார் எதிரொலி காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன் ராஜினாமா
செய்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தொடர்ச்சியான ரெய்டு மற்றும் அதிரடி
நடவடிக்கைகளால், விரக்தியடைந்து பதவியை ராஜினாமா செய்ததாக, துறை
வட்டாரங்கள் தெரிவித்தன. இவரைத் தொடர்ந்து, உறுப்பினர்களும் வரிசையாக
ராஜினாமா செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர்

தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்
எல்லாரையும் தூக்குல போடணும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: மீண்டும் வெடிக்கிறது TNPSC விவகாரம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இதயம் வெடிக்கிறது
» முதல்வர் நாற்காலியில் ஜீயர் சுவாமி: தெலங்கானாவில் வெடிக்கிறது சர்ச்சை
» தலாய்லாமா விவகாரம்: இந்திய தூதருக்கு சீனா சம்மன்
» கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
» ஸ்பெக்ட்ரம் விவகாரம்-கேள்விக்குள்ளாகும் கலைஞர் டிவி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum