தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி
2 posters
Page 1 of 1
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி
நூல் ஆசிரியர்:செமினி மார்கரெட் செல்லத்துரை
நூலின் பெயரைப் படித்தவுடன் புகழ்பெற்ற திரைப்படப் பாடல் நம் நினைவிற்கு வருவது உண்மை.நூலிற்கான அட்டைப்பட ஓவியம் மட்டுமல்ல,நூலின் உள்ளே உள்ள ஒவ்வொரு படங்களும் நூலாசிரியர்,கவிஞர்,எழுத்தாளர்,ஓவியர் செமினி மார்கரெட் செல்லத்துரை அவர்களின் கைவண்ணத்தில் உருவான உன்னதப் படைப்பு.
தமிழ் அழியாமல் இன்றும் கால மாற்றத்தை தாங்கி இணையத்தளங்களிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றது என்றால் அதற்கு முதற்க் காரணம் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தான்.அதற்கு அடுத்தபடியாக தமிழழுக்கு தொண்டு செய்து வருபவர்கள் சிங்கப்பூர்,மலேசிய தமிழர்கள்.அந்த வகையில் நூல் ஆசிரியர் தமிழுக்குத் தொண்டு செய்யும் விதமான தனது ஆற்றலை,திறமையை பல்வேறு வடிவங்களில் கவிதை,துணுக்கு, சிறுகதை,கட்டுரை என பல்சுவை விருந்தாக படைத்து உள்ளார்.
பாரதி கண்ட புதமைப் பெண்ணாக வலம் வருகின்றார். ஆண்களை விட பெண்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்நூல் அமைந்து உள்ளது.இந்தப் பெண்ணின் வெற்றிக்கு அவரது கணவர் செல்லத்துரை துணை நிற்பது கூடுதல் சிறப்பு.மற்ற ஆண்களும் தன் துணைவியின் ஆற்றல் உலகறிய உதவிடும் உள்ளம் பெற வேண்டும்.புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வைர வரிகளோடு நூல் தொடங்குகின்றது.
"நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லை என்றால்,நான் என்றைக்கோ தற்கொலை செய்து இறந்திருப்பேன்"என்றார் காந்தியடிகள்.அந்தக் கருத்தை வலியுறுத்தும் வைர வரிகள் இதோ!
"சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒரு போதும்".ஓவியம் அற்புதமாக உள்ளது.கேலிச் சித்திரங்கள் சிரி;ப்போடு சிந்திக்கவும் வைக்கின்றன.கவிதைகள் இனிமையாக உள்ளது.சிறுகதைகள் சிந்தையை செதுக்குகின்றன.கட்டுரை கருத்தாழம் மிக்கதாக உள்ளது.சகலகலாவள்ளியாக உள்ளார் நூலாசிரியர். வியப்பாக உள்ளது ஒருவருக்கு இவ்வளவு ஆற்றலா?மலைத்துப் போனேன்.
இன்றைய மாணவர்களிடம் நமது முன்னால் பிரதமர் யார்? என்று கேட்டால் தெரிவதில்லை,ஆனால் ஒரு நடிகரின் திரைப்படத்தின் பெயர் கேட்டால் உடனே சொல்லி விடுகின்றனர்.இந்த நாட்டு நடப்பை கேலிச்சித்திரமாக பதிவு செய்துள்ளார்.குடி குடியைக் கெடுக்கும்,தெரிந்தே குடிக்கும் குடிமகன்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் துணுக்கு
உங்க தோட்டத்தில் தண்ணிக்கு ரொம்ப கஷ்டமுனு கேள்வி
எப்படி சமாளிக்கிறீங்க?
ச்சே ச்சே அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே இங்கேயெ
சீனங்கடையிலேயே பைத்தண்ணி கிடைக்கும்.நல்ல
சரக்கா வேணுமின்னா டவுன்லா ஒரு பார் இருக்கு�..
பாருக்குள்ளெ நல்ல நாடு நம் பாரத நாடு.ஆனால் குடிமகன்கள் "பாருக்கு"நல்ல நாடு நம் தமிழ்நாடு என பாடும் நிலை வந்தது.அரசாங்கமே பார் நடத்தும் அவலம்.இப்படி பல நினைவுகளை தோற்றுவிக்கின்றது.
தமிழன் வீடுகளில் தமிங்கிலமும்,ஆங்கிலமும்
விளையாடுவதை விளக்குகின்றார் கவிதையில்
எந்தமிழர்
தமிழ் என் பேச்சு,தமிழ் என் மூச்சு,
மேடை முழக்கம் முடிஞ்சுப் போச்சு
வீட்டுக்குச் செல்ல
நேரமாச்சு
வாசலில்
டேடி கம் பேக் ரெடி மம்மி இது
அவரின் கடைக்குட்டி
ஹேவ் சம் டீ டார்லிங் இது
பெண்டாட்டி நோ டியர் ஐயெம் டையட்
ஆங்கிலம் இவருக்கு வைப்பாட்டி
ஏன்ன எழவொ போங்கடா
தலையில் அடித்துக் கொண்டாள்-நம்
ஆத்திச்சூடி தமிழ்ப்பாட்டி
இந்தக் கவிதையைப் படித்த போது உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தரின் தமிழா நீ பேசுவது தமிழா என் நினைவிற்கு வந்தது.ஆங்கிலேயனை விரட்டி விட்டோம்.ஆனால் ஆங்கிலத்தை விரட்டிட மறந்து விட்டோம்.அது தன் தமிழைச் சிதைத்து வருகின்றது.
ஆணாதிக்க சமுதாயம் பெண்களை ஏமாற்றி வருவது குறித்து விழிப்புணர்வு விதைக்கும் வகையில் கவிதை எழுதி உள்ளார்.
நம்பாதே பெண்ணே
ஆண்களை நம்பாதே பெண்களே ஆண்களை நம்பாதே
பொய்யாய் சிரித்துப் பேசி கழுத்தை அறுக்கும்
ஆண்களை நம்பாதே பெண்களே ஆண்களை நம்பாதே
இப்படி பெண்ணியக் குரலாக ஓங்கி ஒலிக்கின்றது.
அன்பின் உயர்வை உணர்த்தும் சிறுகதை.சிறுகதை நடையும் சிறப்பாக உள்ளது.சிறுகதை மட்டுமல்ல,சிந்திப்போமா இனி சந்திப்போமா? நாடக வடிவில் எழுதி உள்ளார்.5 காட்சிகளாக இடம் பெற்றுள்ளது.சிந்தனை செய் மனமே கட்டுரையில் இன்றைய இளைய சமுதாயத்திற்கு பண்பாட்டை பாங்காக உணர்த்துகின்றார்.மொத்தத்தில் பல்சுவை விருந்தாக ஒரே எழுத்தாளரின்,கவிஞரின் நூலை இப்போது தான் பார்க்கிறேன்.மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.நூலின் அட்டையில் உள்ள வைர வரிகள்; நூல் ஆசிரியரின் தமிழ்ப்பற்றை பறைசாற்றுகின்றது.
ஆவி பிரியும் வேளையிலும் தாயினும் மேலாம்
அமுதே தமிழே உனை நினைத்து கேட்பேன்
தா நீ வரமொன்று வருவாய் அதிலும் தமிழே என் தாய்மொழியின்று
-மார்கரெட் செல்லத்துரை
இது போன்ற தாய்மொழிப்பற்று ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும்

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி
நமது தமிழ் இன்றைய தமிழ் சிறார்க்கு எட்டா தூரத்தில் விலகிபோய்க்கொண்டிருப்பதை தெளிவுப்படுத்துகிறார் ஆசிரியர், சமுதாய அவலங்களை படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது நூல். பெண்ணா? என்று மூலையில் புறம் தள்ளினார்கள் ஒரு காலத்தில், இன்று பெண்ணும் படைக்கின்றார் சாதனைகளை, கடந்த கால பெண் சமுதாயம் கண்ட அவலங்களின் தீஞ்சுவடுகள் மலர்ந்திருக்கின்றது சாதனைகளாய். வாழ்த்துக்கள்
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum