தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கலைமகள்

+5
ஹிஷாலீ
அ.இராமநாதன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவினா
9 posters

Go down

கலைமகள் Empty கலைமகள்

Post by கவினா Sat Jan 28, 2012 12:02 am

வெள்ளைத்தாமரை நடுவினிலே
வீற்று இருக்கும் கலைமகளே
கொள்ளை போகுது உன் செல்வம்
கூறுகட்டித் தெருவெங்கும்.

கல்விகூடமா கடைத்தெருவா?
கல்வியென்ன கடைசரக்கா
எல்லோருக்கும் கல்வியெனும்
திட்டம் எரிந்து போனதுவா?

கலைமகள் நீ விலைமகளாய்
கடையில் ஏனோ சரக்கானாய்?
விலைக்குதான் நீயென்ற
நிலைக்கு ஏனோ உருவானாய்?

வாடிப்போயே பிறந்தாயோ?
வற்றியகுளத்தில் மலர்ந்தாயோ?
தேடிய செல்வம் யாவையுமே
தெருவில் போட்டு உடைத்தாயோ?

இல்லாத ஏழை உன் வீட்டுக்கு
வருவதைகூட தடுக்கின்றாய்.
எல்லாம் உள்ள செல்வந்தனிடமோ
படுக்கையில் கூடப்படுக்கின்றாய்.

சமுதாய வீனையினை
குழந்தையைபோல கையிலேந்தி
அமுதாயும் அழகாயும்
கல்வியென்ற இசை இசைத்தாய்.

இசைத்து நீ பாடுகையில்
பலருக்கு காதில் கேட்கலையாம்
அசைந்து ஆடும் அனைவருமே
செல்வ செழிப்பில் உள்ளவராம்.

வீசும் காற்றில் கலந்திருக்கும்
கல்வியென்கிற கானத்தை
காசும் பணமும் இருந்தால்தான்
காதுகளாலே கேட்கனுமாம்.

கம்பள ஆடை நெய்கின்ற
மீர்ஜாபூர் பதோலியிலே
சம்பளமைந்தே பெறுகின்ற
சிறுவர்களுக்கு கேட்கலையாம்.

சிறுசிறு தொழிலும் கைத்தொழிலும்
செய்துவாழ்க்கை நடத்துகிற
சிறுவர்களுக்கும் மாதர்களுக்கும்
உனது கீதம் கேட்கலையாம்.

உணவு விடுதியில் உணவாகும்
உதிரிக்குழந்தைகள் அவர்களுக்கும்
கனவு நிலையிலும் உனது கீதம்
காதுகளில் போய் விழவில்லையாம்.

குட்டி ஜப்பான் என்று அழைபடும்
சிவகாசி மாநகரினிலே - தீப்
பெட்டி பட்டாசு சிறையிலிருக்கும்
சிறுவர்களுக்கும் கேட்கலையாம்

வானம் அதனை பார்த்தாயா?
சாதியின்றி இனமின்றி - அஞ்
ஞானம் மதமும் இன்றி
ஏழை செல்வர் பிரிவின்றி

எல்லோருக்கும் குடைபோலிருக்கும்
வானபகவான் அவனைப்போல
கல்லாமை இருளை அகற்றும்
கல்விகானம் இசைத்திடு தாயே.

இல்லை இனிமேல் பழையவானம்.
இசைத்திடுவோமா புதிய கானம்
எல்லோருக்கும் கல்வியென்றால்
அதுதான் சமூக விஞ்ஞானம்.


Last edited by சுந்தரபாண்டி on Sat Jan 28, 2012 12:08 am; edited 1 time in total
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 28, 2012 12:06 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by pakee Sat Jan 28, 2012 2:39 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by அ.இராமநாதன் Sat Jan 28, 2012 9:51 am

எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி என்பது இப்போதும் நடைமுறையில் உள்ளது..
-
இலவசமாகவும் வழங்கப்படுகிறது...!
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by ஹிஷாலீ Sat Jan 28, 2012 12:15 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by கவினா Thu Feb 02, 2012 9:16 am

தமிழ் தோட்டம் யூஜின்,பகீ, ஹிஷாலி ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by கவினா Thu Feb 02, 2012 9:23 am

அ.இராமநாதன் wrote:எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி என்பது இப்போதும் நடைமுறையில் உள்ளது..
-
இலவசமாகவும் வழங்கப்படுகிறது...!
-

ஒவ்வொரு அரசும் தன் ஆட்சியின் சிறப்பை பிதற்றிக் கொண்டு திரிவதற்காக இப்படி ஆயிரத்தெட்டு திட்டங்களை தீட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதையேதான் நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள்.

ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு விஞ்ஞானப் பூர்வமான கல்வி அனைவரையும் சமமாக மதித்து வழங்கப் படவில்லை என்பதுதானே நிதர்சனமான உண்மை.

நன்றி அய்யா.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by கலைவேந்தன் Thu Feb 02, 2012 1:02 pm

சில வார்த்தைகளைக் கவனமாகப் போடவேண்டிய அடிப்படையை அறிந்துகொள்ளுதல் நலம்.

உங்களின் மிக நல்ல கவிதைகளை வாசித்து வந்த எனக்கு அதிர்ச்சி..

வருந்துகிறேன்..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by தங்கை கலை Thu Feb 02, 2012 3:25 pm

கலைவேந்தன் wrote:சில வார்த்தைகளைக் கவனமாகப் போடவேண்டிய அடிப்படையை அறிந்துகொள்ளுதல் நலம்.

உங்களின் மிக நல்ல கவிதைகளை வாசித்து வந்த எனக்கு அதிர்ச்சி..

வருந்துகிறேன் Sad Sad ..
சியர்ஸ் சியர்ஸ்


எனக்கும் தான் அண்ணா கொஞ்சம் அதிர்ச்சி ...

கவிதை அருமை ...ஆனால் ஸ்டார்ட்டிங் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஒர்டினரியா கலைமகளை திட்டுற மாறி இருக்கு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by அரசன் Thu Feb 02, 2012 3:56 pm

அன்பின் தோழருக்கு வணக்கம் ,...
உங்களின் கவிதையின் நோக்கம் புரிகின்றது ..

இருப்பினும் கலைமகளை சாடிய விதம் எனக்கு நியாயமாக புலப்படவில்லை ..
கலைமகளின் பெயரை கொண்டு குறுக்கு வழியில் சுரண்டும் மனித மிருங்கங்களை , அரசியல் அயோக்கியர்களை சாடீருந்தால் நான் மகிழ்வை அடைந்திருப்பேன்...
நன்றி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by கவினா Thu Feb 02, 2012 9:16 pm

கலைவேந்தன் wrote:சில வார்த்தைகளைக் கவனமாகப் போடவேண்டிய அடிப்படையை அறிந்துகொள்ளுதல் நலம்.

உங்களின் மிக நல்ல கவிதைகளை வாசித்து வந்த எனக்கு அதிர்ச்சி..

வருந்துகிறேன்..

உங்களை வருந்த வைத்ததற்காக நானும் வருந்துகிறேன் தோழரே.

கல்வி வியாபாரமாகிவிட்டதில் ஏற்பட்ட கோபத்தால் கொப்புளித்த கவிதைதான் இது.

நூலேந்தும் வயதில் நூல் நூற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்க்கிற போது மனசாட்சி உள்ள எந்த கவிஞன்தான் பொறுத்துக் கொண்டிருப்பான்?

மேலே உள்ள கவிதை என் பதினான்காவது வயதில் எழுதப்பட்டக் கவிதை.

இன்று இன்னும் கொஞ்சம் பக்குவம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

இப்போது உள்ள பக்குவத்தில் அதை எழுதி இருந்தால் மேலே உள்ள உங்கள் விமர்சனத்தை நான் தவிர்த்திருக்க இயலும்.

ஆனால் இப்போது உள்ள என் திறனைப் பயன் படுத்தி அதை அறுவை சிகிச்சை செய்ய நான் விரும்பவில்லை.

என்ன எழுதப் பட்டதோ அதை அப்படியே வெளியிடவே நான் விரும்பினேன்.

ஆனாலும் எனக்கென்னவோ பக்குவத்தால் எழுதப் படும் கவிதைகளைவிட கோபத்தில் எழுதப் படும் கவிதைகளே சற்று உயிர்ப்பு உள்ளதாக தோன்றுகிறது.

ஏனென்றால் அந்த கோபம் உங்களுக்குப் பிடித்த அதே பாரதியிடமிருந்துதான் கடன் வாங்கப் பட்டது.

அன்பு நண்பரின் கருத்துக்கு நன்றி.



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by கவினா Thu Feb 02, 2012 9:32 pm

தங்கை கலை wrote:
கலைவேந்தன் wrote:சில வார்த்தைகளைக் கவனமாகப் போடவேண்டிய அடிப்படையை அறிந்துகொள்ளுதல் நலம்.

உங்களின் மிக நல்ல கவிதைகளை வாசித்து வந்த எனக்கு அதிர்ச்சி..

வருந்துகிறேன் Sad Sad ..
[You must be registered and logged in to see this image.]


எனக்கும் தான் அண்ணா கொஞ்சம் அதிர்ச்சி ...

கவிதை அருமை ...ஆனால் ஸ்டார்ட்டிங் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஒர்டினரியா கலைமகளை திட்டுற மாறி இருக்கு

அன்புத் தங்கை கலை அதிர்ந்துபோனதில் நானும் சற்று அதிர்ந்து போனேன்.

கலைமகள் என்பது கலைமகளை குறிக்காமல் கல்வித்துறையைத் தான் குறிக்கும் தங்கையே.

பல முன்னணி கவிஞர்களே கூட பாரதமாதாவை குறை சொல்லி எழுதியுள்ளதால் அவர்கள் தேசப் பற்று இல்லாதவர்கள் என்று பொருளில்லை.மாறாக வேறு யாரையும் விட அவர்களே அதிகம் தேசப் பற்றுள்ளவர்கள்.ஏனென்றால் உண்மையில் அவர்கள் எதிப்பது பாரதமாதாவை அல்ல; ஆட்சியாளர்களை.

அதேப் போல்தான் கலைமகளை நான் பெரிதும் போற்றுகிறேன்.சொல்லப் போனால் மேலே உள்ள கவிதையை எழுத வைத்தவளே அவள்தான்.

நன்றி கலை



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by கவினா Thu Feb 02, 2012 9:44 pm

அரசன் wrote:அன்பின் தோழருக்கு வணக்கம் ,...
உங்களின் கவிதையின் நோக்கம் புரிகின்றது ..

இருப்பினும் கலைமகளை சாடிய விதம் எனக்கு நியாயமாக புலப்படவில்லை ..
கலைமகளின் பெயரை கொண்டு குறுக்கு வழியில் சுரண்டும் மனித மிருங்கங்களை , அரசியல் அயோக்கியர்களை சாடீருந்தால் நான் மகிழ்வை அடைந்திருப்பேன்...
நன்றி

கவிதையின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட தோழருக்கு நன்றி.

கலைமகள் என்னும் கற்பனை தெய்வத்தின் மீது எனக்கும் அளவு கடந்த பக்திதான் நண்பரே.நீங்கள் சொல்லும் அயோக்கியத் தனத்தை தான் நானும் சாடியிருக்கிறேன் தோழா. அது ஒருவகையான உருவகம்; அவ்வளவுதான்.

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 02, 2012 10:25 pm

ஆரோக்கியமான விவாதங்கள் தோட்டத்தின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது... நாம் வளரவும் படைப்பாளர்கள் வாசகர்கள் கூர்மையடையவும் தோட்டம் சிறந்த களமாக இருக்கிறது

மகிழ்ச்சியே...

கலைமகளின் கையில்
தங்க வீணை
பெற்றோர்களின் வியர்வை

இது என் கல்விப் பற்றிய ஒரு சென்ரியு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by கவினா Thu Feb 02, 2012 10:29 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ஆரோக்கியமான விவாதங்கள் தோட்டத்தின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது... நாம் வளரவும் படைப்பாளர்கள் வாசகர்கள் கூர்மையடையவும் தோட்டம் சிறந்த களமாக இருக்கிறது

மகிழ்ச்சியே...

கலைமகளின் கையில்
தங்க வீணை
பெற்றோர்களின் வியர்வை

இது என் கல்விப் பற்றிய ஒரு சென்ரியு

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்

Back to top Go down

கலைமகள் Empty Re: கலைமகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum