தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கலைமகள் காளியாகிறாள்!

+3
கவியருவி ம. ரமேஷ்
HemeldaJohn
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
7 posters

Go down

கலைமகள் காளியாகிறாள்!   Empty கலைமகள் காளியாகிறாள்!

Post by ரௌத்திரன் Fri Jan 11, 2013 2:16 pm

வெள்ளைத் தாமரையில்
வீற்றிருந்து வீற்றிருந்து
வெறுத்துவிட்ட எனக்கு

சிம்மவாகனம் கொஞ்சம்
சிலிர்ப்பைத் தருகிறது....

வீணையை மீட்டி மீட்டி
விரல்கள் பத்திலும்
விரக்தி....

எனவே

வீணையை வளைத்து
வில்லாக்குகிறேன்

நாதம் சுரக்கும்
நரம்புகளை அறுத்து
நாணாக்குகிறேன்

அட்சரக் கோலை
அம்பாக்குகிறேன்

ஆம்,

திசைகள் எட்டிலும்
முரசு கொட்டி
முழங்குங்கள்

"கலைமகள்
காளியாகிறாள்...." என்று.

வேதத்தின்
வேராய் இருப்பதைவிட

நாதத்தின்
நாடியாய் இருப்பதைவிட

நீதியின்
நிழலாய் இருக்கலாமென்று
தீர்மானித்துவிட்டேன்.

எனவே

திசைகள் எட்டிலும்
முரசுகொட்டி
முழங்குங்கள்

"கலைமகள்
காளியாகிறாள்....." என்று.

நான்
காளியாவதற்கு
காரணங்கள் ஆயிரம்.

ஆயினும்
அவற்றுள்
நான்
முக்கிய காரணமாய்
முன்வைப்பது ஒன்றைத்தான்.

முத்தமிழ்க் கவிகளென்று
முண்டாசு கட்டிக் கொண்டவர்களே
நீதியின் கண்களுக்கு
தம்
கவிதைத் தறியால்
கறுப்புத்துணி நெய்துகொண்டிருப்பதைத் தான்!

அது
கனவுகளே
கரையான்களாகி
கருமணியை அரித்துவிடும்
கொடூரம்....

வீணையின் நரம்புகளே
சுரங்களுக்கு
சிறைக்கம்பிகளாகிவிடும்
சித்ரவதை.....

அன்று கண்ணனாய் இருந்து
பாரதம் வெல்லப்
"பா" "ரதம்" ஓட்டிய
பாரதி போல்

இன்னொரு புலவன்
இங்கு வரும்வரை

நான்
காளியாவது
கட்டாயமாதலால்

திசைகள் எட்டிலும்
முரசுகொட்டி
முழங்குங்கள்

"கலைமகள்
காளியாகிறாள்....." என்று.

இதோ!
இதோ வருகிறேன்!

கள்ளக் கவிஞர்களின்
குரல்வளை கடித்து
ரத்தம் குடித்துக் கொள்ள...

தமிழைத்
தலைகுனிய வைத்தவர்
மண்டை ஓடெடுத்து
மாலை அணிந்துகொள்ள.....

பொய்யெழுதும் புலவர்தம்
மெய் எரித்த
சாம்பல் எடுத்து
சரீரம் பூசிக் கொள்ள.....

ருத்ர மூர்த்தியும்
தொடை நடுங்க

ஆடி ஆடி
அதர்மம் அழிக்க

திசைகள் எட்டிலும்
முரசு கொட்டி
முழங்குங்கள்

"கலைமகள்
காளியாகிறாள்...." என்று!



-----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

கலைமகள் காளியாகிறாள்!   Empty Re: கலைமகள் காளியாகிறாள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 11, 2013 2:21 pm

அருமை பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலைமகள் காளியாகிறாள்!   Empty Re: கலைமகள் காளியாகிறாள்!

Post by HemeldaJohn Fri Jan 11, 2013 5:17 pm

[You must be registered and logged in to see this image.] பாராட்டுக்கள்
HemeldaJohn
HemeldaJohn
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 51
Points : 95
Join date : 18/12/2012
Age : 37
Location : chennai

Back to top Go down

கலைமகள் காளியாகிறாள்!   Empty Re: கலைமகள் காளியாகிறாள்!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 11, 2013 11:00 pm

காத்திருக்கிறோம்... காளியாக மாறட்டும்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கலைமகள் காளியாகிறாள்!   Empty Re: கலைமகள் காளியாகிறாள்!

Post by அ.இராமநாதன் Fri Jan 11, 2013 11:08 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கலைமகள் காளியாகிறாள்!   Empty Re: கலைமகள் காளியாகிறாள்!

Post by pakee Mon Jan 14, 2013 8:28 pm

கவிதை அருமை மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

கலைமகள் காளியாகிறாள்!   Empty Re: கலைமகள் காளியாகிறாள்!

Post by பார்த்திபன் Thu Jan 17, 2013 4:24 pm

சிறப்பான கவிதை. வாழ்த்துகள்! மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

கலைமகள் காளியாகிறாள்!   Empty Re: கலைமகள் காளியாகிறாள்!

Post by ரௌத்திரன் Thu Jan 17, 2013 7:36 pm

மிக்க‌ நன்றி நண்பரே!
ரௌத்திரன்
ரௌத்திரன்
மல்லிகை
மல்லிகை

Posts : 82
Points : 210
Join date : 13/07/2012
Age : 38
Location : வேலூர் மாவட்டம்

Back to top Go down

கலைமகள் காளியாகிறாள்!   Empty Re: கலைமகள் காளியாகிறாள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum