தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி
2 posters
Page 1 of 1
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி
இலக்கிய சங்கமம்
நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
காவ்யா பதிப்பகம் சென்னை விலை ரூ 90
தமிழகத்தில் இலக்கிய இணையர் என்றால் தமிழ்த்தேனீ இரா .மோகன் ,தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் .கர்னாடகத்தில் இலக்கிய இணையர் என்றால் முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி.இருவரும் பெங்களூர்த்தமிழ்ச்சங்கத்தில் தங்களை இணைத்துக்
கொண்டு தமிழ்ப்பணி செய்து வருகின்றனர் .தமிழ் இலக்கியங்களை கன்னடத்தில்
மொழி பெயர்க்கும் பணி செய்து வருகின்றனர் .திருக்குறளை கன்னடத்தில் படித்து
இருந்தால் திருவள்ளுவர் சிலை திறப்பிற்கு பல வருடங்கள் தடை செய்து இருக்க
மாட்டார்கள் என எண்ண தோன்றுகிறது .
நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரிஅவர்கள் இலக்கிய சங்கமம் என்ற
இந்த நூலில் தமிழ் இலக்கியத்தில் உள்ள நுட்பங்களை, பெருமைகளை ,ஆற்றல்களை
வெளிப்படுத்தும் விதமாக மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள் . நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி தமிழ் பேராசிரியராகவும் ,தமிழ்த்துறைத்
தலைவராகவும் இருந்த காரணத்தால் இலக்கிய ஈடுப்பாட்டின் காரணமாக நல்ல ஆய்வு
செய்து நூல் எழுதி உள்ளார்கள் .இந்த நூலைப் படித்து விட்டு ஒவ்வொரு
தமிழரும், தமிழ் இலக்கியத்தில் உள்ள அளவிற்கு நல்ல கருத்துக்கள் உலகத்தில்
வேறு எந்த மொழியிலும் இல்லை என்று மார் தட்டிக் கொள்ளலாம் .
12 தலைப்புகளில் மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பாக நூல் வந்துள்ளது
.தமிழ் இலக்கியங்களில் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டி உள்ளார் . மனோன்மணீயம் ,முத்தொள்ளாயிரம் ,பெரிய புராணம் ,திருக்குறள் ,கம்ப ராமாயணம் இவற்றில் உள்ள இயற்கைக் காட்சிகளை பாடல் வரிகளுடன் மிக அழகாக விளக்கி உள்ளார்கள் .
திருவள்ளுவர் -சமுதாய வழிகாட்டி என்ற தலைப்பில் உள்ளக் கட்டுரை உலகப் பொது மறையான திருக்குறளின் சிறப்பை நன்கு எடுத்து இயம்பி உள்ளார் .
திருக்குறள் அ என்னும் உயிர் எழுத்தில் தொடங்கி ன் என்னும் மெய் எழுத்தில் முடிகின்றது என்ற தகவல் நூலில் உள்ளது .
அறத்தின் சிறப்பு
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்
இன்நான்கும் இழுக்கா இயன்றதறம் குறள் 35
முக்கியமான திருக்குறளும் அதற்க்கான விளக்கமும் மிகச் சிறப்பாக உள்ளது .
சித்திரம் வரையும் ஓவியன் ,தன்னுடைய அகக் கண்ணால் உணர்ந்து ,அழகான
சித்திரத்தை வரைந்து ,தானும் மகிழ்வதுடன் பிறரையும் மகிழ்வடையச் செய்கிறான்
.அதுபோல திருவள்ளுவர் தன் அகக் கண்ணால் உணர்ந்தவற்றை
திருக்குறளின் வாயிலாக வடித்துக் காட்டி தானும் மகிழ்ந்து பிறரையும் மனம்
மகிழச் செய்துள்ளார் .அதுபோல இந்நூல் முனைவர் அ.சங்கரி தமிழ் இலக்கியங்களில் தான் படித்து மகிழ்ந்த காட்சிகளைக் கட்டுரையாக்கி வாசகர்களை மகிழ்வித்துள்ளார் .
தமிழ் இலக்கியங்களில் கணிதம் என்ற கட்டுரைப் படித்து வியந்துப்
போனேன்.கால அளவையாக தமிழன் அன்றே பயன்படுத்தியச் சொற்கள் பாருங்கள் .இமை
,நொடி , கடிகை ,நாழிகை,மணி இந்தச் சொற்கள் எந்தப் பாடலில் உள்ளது என்பதை
விளக்கி உள்ளார்.
தமிழர்களின் விருந்தோம்பல் பற்றி எழுதுவதோடு நின்று விடாமல் , பெங்களூர்த்தமிழ்ச்சங்கத்தில் பட்டி மன்றம் பேச வந்த தமிழ்த்தேனீ
இரா .மோகன் அணியினர் அனைவரையும் இல்லத்திற்கு அழைத்து ,தன் கைப்பட சமைத்து
அருஞ்சுவை உணவு கொடுத்து ,தன் படைப்புகளான அரிய நூல்களில் கையொப்பம்
இட்டுக் கொடுத்து ,அன்பைப் பொழிந்து முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி இணையர் தமிழர்களின் விருந்தோம்பல்இன்றும் கடைப் பிடித்து வருகின்றனர் .
புகழ்ப்பெற்ற தசராப் பண்டிகை வரலாறு பற்றி ஒரு கட்டுரை உள்ளது
.திருக்குறள் புறநானூறு ,தொல்காப்பியம் ,பரிபாடல் ,கம்ப ராமாயணம் தமிழ்
இலக்கியங்களை ஆழ்ந்துப் படித்து ஆராய்ந்து நூல் எழுதி உள்ளார்கள் . பெண்ணியம் அன்றும் இன்றும் கட்டுரை மிகச் சிறப்பு .
ஆணாதிக்கம் விதைக்கும் சொல்லாடல்களுக்கான கன்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளார் .
பொம்புளை சிரிச்சாப் போச்சு
புகையிலை விரிச்சாப் போச்சு
அறியாமை பெண்ணிற்கழகு
இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே
இது போன்ற சொல்லாடல்கள் சமுதாயத்தில் ஒழிக்கப் பட வேண்டும் .
ஆளுமைத்திறன் பற்றிய கட்டுரையில் நற்றிணை பாடல் ,மகா கவி பாரதியார் வைர வரிகளுடன் மிகச் சிறப்பாக மேற்கோள் காட்டி உள்ளார்கள் .
பெரிய புராணம் பற்றிய ஆய்வுக் கட்டுரை மிக நன்று .பாரதியார்
கவிதைகளில் மனித நேயம் மிக நல்ல ஆய்வு .மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளின்
தொகுப்பு இந்நூல் .தமிழ் இலக்கியங்கள் என்ற மலர்களில் இருந்து தேன்
எடுத்து இலக்கியத் தேன் விருந்து படைத்துள்ளார் .இலக்கிய சங்கமம் என்ற
இந்த நூல் .தமிழ் இலக்கியத்தின் சங்கீதமாக காதில் ஒலிக்கின்றது .
கர்னாடகத்தின்இலக்கிய இணையர் முனைவர் இரா .சீனிவாசன் ,
முனைவர் அ.சங்கரி.இருவரும் இளம் வயதில் ரகுநாத் என்ற மகனை இழந்த சோகத்தை
மறக்க, இலக்கியத்தில் ஈடுபட்டு வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர் .
அன்புடன்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» இலக்கிய மாலை ! ( அணிந்துரைகளின் தொகுப்பு ) நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum