தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இலக்கிய மாலை ! ( அணிந்துரைகளின் தொகுப்பு ) நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1

இலக்கிய மாலை !
( அணிந்துரைகளின் தொகுப்பு )
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர் ,சென்னை .600017.
விலை ரூபாய் 100.
மின்னஞ்சல் vanathipathippagam@gmail.com
பதிப்பு உலகில் தனி முத்திரைப் பதித்து வரும் புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .அட்டைப்படம் அச்சு ,வடிவமைப்பு யாவும் மிக நன்று .
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன்அவர்கள் அணிந்துரை எழுதுவதில் வல்லவர் .முதல் நூல் எழுதுபவர் கேட்டாலும் ,முப்பதாவது நூல் எழுதுபவர் கேட்டாலும் மறுக்காமல் அணிந்துரை நல்குவார்கள் .இவரிடம் அணிந்துரை வாங்கினால் அது தனி நூலாக வந்து விடும் என்பது படைப்பாளிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி .பல்வேறு பணிகளுக்கு இடையில் தன்னிடம் அணிந்துரை கேட்கும் அன்பர்களுக்கும் , நண்பர்களுக்கும், அனைத்துப் படைப்பாளிக்கும் நூல் முழுவதையும் படித்து விட்டு மிக நுட்பமாகவும் ,நூலின் சிறப்பை எடுத்து இயம்பும் விதமாகவும் ,நூலிற்கு தோரண வாயிலாகவும் அணிந்துரை தந்து மகிழ்வார்கள் .
இந்த நூலிற்கு .இலக்கிய மாலை ! என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள் .இலக்கியச் சோலையாக ,நந்தவனமாக உள்ளது நூல்.பாராட்டுக்கள்.இந்த நூலில் புகழ் பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுக்கு எழுதிய அணிந்துரையும் ,என்னுடைய நூலான சுட்டும் விழிக்கு எழுதிய அணிந்துரையும் இடம் பெற்றுள்ளது .அமெரிக்க செல்லும் பரபரப்பிலும் என்னுடைய புதிய நூல் ஆயிரம் ஹைக்கூ நூலுக்கு அணிந்துரையை மதுரை விமான நிலையத்தில் தந்து மகிழ்ந்தார்கள் .
.
அணிந்துரைகளின் தொகுப்பு மட்டுமல்ல இலக்கிய சுவையின் அணிவகுப்பாக உள்ளன .பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களிடம் அணிந்துரை வாங்குவது படைப்பாளிக்கு "அக் மார்க்" முத்திரைப் பெறுவதைப் போன்றது .இந்நூலில் 36 நூல்களின் அணிந்துரைகல் உள்ளது .எல்லோருக்கும் 36 நூல்கல் படிக்கும் வாய்ப்பு இருக்காது .இந்த ஒரு நூல் படித்தால் 36 நூல்கள் படித்த மகிழ்ச்சி வரும் என்று அறுதி இட்டுக் கூறலாம் .
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஒப்பிலக்கியத்துறையின் தலைவராக இருந்த காரணத்தால் ஆழ்ந்த படிப்பு ,அனுபவம் உள்ளதால் நூலைப் பற்றி மட்டும் எழுதாமல் நூலில் தொடர்புடைய கருத்துக்களை சங்க இலக்கியத்தோடு ஒப்பிட்டு ,பொருத்தமான இடத்தில திருக்குறளையும் ,மேல் நாட்டு அறிஞர்கள் கருத்தையும் மேற்கோள் காட்டி மிகச் சிறப்பாக அணிந்துரை வழங்கி வருகிறார்கள் .அணிந்துரை எழுதுவது தனிக்கலை .இக்கலையில் வல்லராகத் திகழ்கின்றார்கள் .அணிந்துரை எழுதுவதில் அவர்க்கு நிகர் அவரே ! என்று சொல்லும் அளவிற்கு அனைத்தும் சிறப்பாக உள்ளன .
.இந்திரா சௌந்தர்ராஜன் !
" தொட்டுத் தொடரும் ஓர் எழுத்துப் பாரம்பரியம் "
" முன்னைப் பழமையும் பின்னைப் புதுமையும் கைகோர்த்து செல்வது இந்திரா சௌந்தர்ராஜனின் மொழி ஆளுமையில் காணலாகும் ஒரு சிறப்புக் கூறு ஆகும் ."
பதச்சோறாக ஒன்று எழுதி உள்ளேன் .
ஒவ்வொரு அணிந்துரைக்கும் மிகப் பொருத்தமான தலைப்பு இட்டு .அந்தத் படைப்பாளியின் திறமையைப் பறை சாற்றுவதாக அமையும் .பட்டிமன்றத்திற்கு தலைப்பு வைப்பதிலும் நூலிற்கு பெயர் சூட்டுவதிலும் ,கட்டுரைக்கு தலைப்பு இடுவதிலும் வல்லவர் .யாரும் சிந்திக்காத கோணத்தில் சிந்தித்து வித்தியாசமாக தலைப்பு வைப்பார்கள் .முதலில் இவர் வைத்த பட்டிமன்றத் தலைப்பை பின் மற்ற நடுவர்கள் வைத்துக் கொண்ட வரலாறும் உண்டு .
"இயங்கிக் கொண்டே இருக்கும்ஆற்றல்சால்ஆளுமையாளர் ஏர்வாடியார்" .இந்த வரிகளே கலைமாமணி ஏர்வாடி.ராதா கிருஷ்ணன் அவர்களின் சிறப்பு இயல்புகளை சுட்டுவதாக உள்ளது .
" எடுப்பு தொடுப்பு முடிப்பு என்னும் மூன்று கூறுகளையும் திட்டமிட்டுச் சரிவரக் கையாளும் சதுரப்பாடு வாய்க்க பெற்றவராக ஏர்வாடியார் விளங்குகிறார் ."
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களின் எழுத்தில் புதுப் புது சொல்லாட்சியையும் காண முடியும் .சதுரப்பாடு என்ற சொல்லை நான் இப்போதுதான் அறிகிறேன் .
பாரதி கண்ட புதுமைப்பெண்களை பட்டியலிடும் விதமாக " வரலாறு படித்த வைர மங்கையர் "என்ற தொடரை புதுகைத் தென்றல் இதழில் திருமதி பானுமதி தருமராசன் அவர்கள் எழுதி வந்தார்கள் .மாதாமாதம் இதழில் படித்து வியந்தேன் .அவற்றை நூலாக்கியபோது நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களின் அற்புதமான அணிந்துரையுடன் வந்தது . .நூலிற்கு மகுடமாக இருந்தது அணிந்துரை.நூலிற்கு பல்வேறு பரிசுகளும் ,பாராட்டும் கிடைத்தது .அந்த அணிந்துரையும் இந்த நூலில் உள்ளது .
அணிந்துரைகளை மற்றவர்கள் போல கடமைக்கு மேலோட்டமாக எழுதாமல் ,நூல் முழுவதையும் ஆழ்ந்து படித்து ,அறிந்து ஆராய்ந்து ,ஆய்வுரையாக வழங்கி உள்ளார்கள் .சிறு கதைகள் என்றால் கதையில் உள்ள சிறந்த பாத்திரம் ,சிறந்த வசனம் ,நல்ல முடிவு அனைத்தையும் மேற்கோள் காட்டி மிகச் சிறந்த அணிந்துரை நல்கி உள்ளார்கள் .
கவிதை நூல் என்றால் சிறந்த கவிதைகளை மேற்கோள் காட்டி உள்ளார்கள் .நூலில் பல கவிதைகள் இருந்தாலும் ,எனக்கு மிகவும் பிடித்த சில மட்டும் உங்கள் பார்வைக்கு .இதோ .
கவிஞர் க .சண்முக சிதம்பரத்தின் கவிதை .
கண்டதை உண்ப வர்க்கு
கணக்கிலா நோய்கள் தோன்றும் !
உண்டது செரித்த பின்னே
உண்டிட நோய்கள் இல்லை !
கவிஞர் ஞான அனந்தராஜ் கவிதை .
மனதைத் திருடினால் இல்லறவாசம் !
மணலைத் திருடினால் சிறைவாசம் !
இந்த நூலில் மேற்கோள்களாக மரபுக் கவிதை ,புதுக் கவிதை ,ஹைக்கூ கவிதை மூன்று கவிதையு ம் உள்ளன .
கம்பம் புதியவன் ஹைக்கூகள் .
ஓநாய் நரி முதலை
பரிணாம வளர்ச்சியடைந்தன
அரசியல்வாதியாய் ..
குலம் கோத்திரம்
மாறாத திருமணம்
சாதி மறுப்புத் தலைவர்
பல்சுவை விருந்தாக நூல் உள்ளது .நந்தவனத்தில் நடந்து வந்த உணர்வைத் தந்தது .நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதைச்சுடர் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

» கவிதைச்சாரல் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum