தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



“உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”

2 posters

Go down

“உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ” Empty “உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”

Post by kishore1490 Tue Feb 07, 2012 11:25 pm

“உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”

அன்னகி சனி கிழமை சாயந்திரம் 6 மணி இருக்கும் , சென்னைன்னு சொன்னாலே எல்லாருக்கும் மனசுக்குள்ள வரதுல அந்த தெருவும் ஒன்னு…அது பொங்கல் டைம்னால எங்க பாத்தாலும் மக்கள் கூட்டம்.. பஸ் ஸ்டாப் பக்கதுல இருந்து fly over வரைக்கும் காரும் பஸ்சுமா horn மாத்தி மாத்தி அடுச்சிட்டு நகர முடியாம fly over முழுக்க நின்னுகிட்டு இருந்துச்சு .. மக்கள் ரோட்ல கூட்டம் கூட்டமா போயிடு வந்துகிட்டு இருந்தாங்க ஆனா கூட்டம் குறைந்த மாதிரியே தெரியல .. Traffic constables கோவத்துடன் நல்ல சென்னை வார்த்தைகளில் ஷேர் ஆட்டோக்களை திட்டி தீர்த்து கொண்டிருந்தனர் , அவங்குளுக்கு மாட்டுன அடிமை ஷேர் ஆட்டோ ஒட்டுரவங்கதான ..

Flyover startinglaye trafficnaala மேல போக முடியாம நா வந்த பஸ் நின்னுடுச்சு .. பஸ்ல இருந்து மக்கள் இறங்கி flyoverin பக்கத்தில் இருந்து சிறிய ரோட்டில் நடந்து சென்றனர் .. நானும் இறங்கி நடக்க தொடங்கினேன் .. என்னோட frienduku போன் பண்ணேன் .. Flyover பக்கதுல இருந்த முருகன் ஸ்டோர்ஸ் கிட்ட நிக்கிறதா சொன்னான் .. Flyoveril இருநது இறங்கி முருகன் ஸ்டோர்ஸ் நோக்கி நடந்தேன் .. எங்கே நிற்கிறான் என்று பார்த்து கொண்டே வந்தேன் .. அந்த குறுகிய ரோட்டில் இருபுறமும் பல சிறிய சிறிய கடைகள் தரையில் பெட்ஷீட் விரித்து வைத்திருந்தனர் .. Teady bear, பெண்களுகாங்க பிளாஸ்டிக் அழகு பொருட்கள் , குறைந்த விலையில் டி ஷர்ட் , பெல்ட் , வாட்ச் என்று பல கடைகள் , அவற்றை சுற்றி மக்கள் கூட்டமுமென்று yerkanave குறுகிய ரோடை மேலும் சின்னதாக்கி இருந்தனர் .. அந்த சின்ன ரோட்டில் ஒருவர் நடந்து போவதே பெரிய விஷயம் ஆனால் அங்கு ஒரு அறிவாளி காரில் கொஞ்சமும் இரக்கமின்றி horn அடித்து கொண்டே வந்தான் .. அந்த காரை ஓட்டி வந்த டிரைவர் முன்னே செல்பவர்களை திட்டி கொண்டே horn அழுத்தினார் ..

என்னோட friend என்னை பார்த்து கை அசைத்தான்.. அவனை பார்த்து சிரித்து விட்டு அவனிடம் சென்றேன் .. சுரேஷ் இன்னும் வரலையா ? என்று கேட்டேன் .. அந்த நாய் இப்பதான் அவன் ஸ்டோப்லையே பஸ் ஏருனானாம் வரதுக்கு எப்டியும் இன்னும் ஒரு 15 நிமிஷமாச்சு ஆகும் என்றான் .. அப்ப அதுவரைக்கும் என்ன பன்றது ? என்றேன் .. வா வேணும் நா முருகன் ஸ்டாரை சுத்தி பாத்துட்டு வரலாம் நமக்காக AC லாம் போட்டு வச்சிருக்காங்க என்றான் .. நா கூட tஷர்ட் ஒன்னு எடுக்கணும் வா என்று கூறி கொண்டே முருகன் ஸ்டோர்ஸ் உள்ளே சென்றோம் .. வெளியே இருந்ததை விட உள்ளே கூட்டம் அதிகமாக இருந்தது .. எல்லோரும் வியர்வ சிந்தி டிரஸ் எடுத்துகிட்டு இருந்தாங்க .. இதுக்கு வெளியவே பெட்டெர் இப்ப போனா ஒன்னும் உருப்படியா வாங்க முடியாது வா அப்றம் பொங்கல் கழிச்சு வரலாம் என்று கூறி அவனை அழைத்து கொண்டு வெளியே வந்தேன் .. வெளிய நான் முன்பு பார்த்த கார் அதே இடத்தில நின்று கொண்டிருந்தது , அந்த கார் டிரைவர் யாரிடமோ சண்டை போட்டு கொண்டிருந்தார் ..

இளனி 10 ருபாய் என்று ஒரு ஓரத்தில் tri-சைக்கிள் காரர் விற்று கொண்டிருந்தார் . என்னடா குடிக்கலாமா ? என்றேன் .. வேணாம்டா ஏற்கனவே ஜலதோஷம் , வேற எதாச்சு சாப்டுவோம் என்றான் .. மூணு 5rubaai சார் மூணு 5rubaai என்று சைக்கிள்ள சமோசா வைத்து கொண்டு ஒருவர் விற்று கொண்டிருந்தார் .. 10 ருபாய் குடுத்து சமோசா வாங்கினோம் ..

அந்த கார் டிரைவர் பக்கத்தில் டி ஷிர்ட் விற்று கொண்டிருந்தவருடன் சண்டை போட்டு கொண்டிருந்தான் ..

அங்க பாருடா அந்த கார் காரன் இன்னமும் இங்கதான் நிக்கிறான் .. அவன் நாளைகுதாண்டா வீட்டுக்கு போவான் என்றேன் .. லூசு பய நிக்கிரதுகே வழி இல்ல இதுல இவருக்கு காரு .. பக்கத்தில் செருப்பு தைத்து கொண்டிருந்த பெரியவர் , நாங்கள் பேசுவதை கேட்டு சிரித்தார் ..

டிரைவர திட்டி என்னப்பா பண்றது அந்த சந்துக்குள்ள ஓட்ட சொல்லிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி உள்ள உட்காந்திருகாங்க பாரு ஒரு குடும்பம் அவங்கள்தான் திட்டனும் என்றார் .அந்த கார்குள்ள பின் சீட்ல பட்டு புடவைல ஒரு பெண்ணும், போன் பேசிக்கொண்டே ஒரு ஆணும் உட்காந்திருன்தனர் வெளியே நடக்கும் சண்டைக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாததுபோல் உட்காந்திருன்தனர் ..அவர்கள் இருவரும் cooling glass மாட்டி இருப்பதை பார்த்து விட்டு கார் குள்ள எதுக்கு மச்சி கூலிங் கிளாசு இவனுங்க அல்சாடியம் தாங்க முடியலடானு என்னோட friend சொன்னத கேட்டு நானும் அந்த செருப்பு தட்சுக்கிட்டு இருந்த பெரியவரும் சிரிச்சிடோம். முன் சீட்ல ஒரு சின்ன பையன் கைல ஐஸ் கிரீம் வச்சுகிட்டு சாப்டுகிட்டு அந்த சண்டைய ரசிச்சு பாத்துகிட்டு இருந்தான் .அந்த கார் டிரைவர்கூட சண்ட போட்டு கிட்டு இருந்த டி ஷிர்ட் விக்கிரவரோட சின்ன பையன் சண்டையை பெரிதாக எடுத்துகொள்ளாமல் அந்த கார்குள்ள இருந்த பையன் சாப்டு கிட்டு இருந்த ஐஸ் கிரீமையே பாத்துகிட்டு இருந்தான் .

பிறகு அங்கிருந்தவர்கள் கார் டிரைவரையும் டி ஷிர்ட் விற்பவரையும் சமாதான படுத்தினர் ..அந்த கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது ..என்ன மச்சி சண்ட அதுன்காடி முடுஞ்சிருச்சு ? என்றான் .. உனக்கு உன் கவலை என்றேன் .அந்த பெரியவர் கூட்டம் கூடி போலீஸ் வந்தா எங்களுகுதாம்பா பிரச்சன அதான் சுமூகமா பேசி அமுசுடாங்க, என்ன பண்றது இவனுங்களுக்கெல்லாம் தன்னோட வேலை சீக்கிரமா சொகுசா முடியனும் , நடந்து போறவங்க , ரோடோரம் கடை வச்சிருக்கவங்க என்ன ஆனா இவங்களுகென்ன சுயனலவாதிங்க இததான் அன்னைக்கே ஒரு கவிஞன் சொன்னான் “ ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள பக்கம் பாயாதடா ”என்றார் .. ச்ச ச்ச இவர்லாம் பார்லிமென்ட் இருக்கவேண்டியவர் மச்சி இவர பொய் செருப்பு தைக்க விட்டுடமேனு சொல்லி என்னோட பிரிண்டு சிரிச்சான் .. நானும் சிரிச்சிட்டேன் ..டை அவருக்கு கேட்க போகுதுடா கம்முனு இருடா என்று கூறினேன் ..

சுரேஷ்கு எங்க இருக்கானு கேட்டு சுரேஷ்கு msg அனுப்பினேன் .. Traffica இருக்கு இன்னும் 10 நிமிஷத்துல வந்துருவேன்னு reply பண்ணுனான் .. கிளிசாண்டா நாய் இப்பதான் வீட்டுல இருந்தே கிளம்பி இருக்கும் பொய் சொல்றாண்டானு என்னோட friendu சொன்னான் .. சரி அந்த டி ஷர்ட் கடை கிட்ட கொஞ்சம் நிழலா இருக்கு அங்க பொய் நிப்போம்னு என்னோட friendu சொன்னான் .. அங்கு சென்று நின்றோம் .. அந்த டீஷிர்ட் கடைகாரர் ஒரு டிஷர்ட் 60 ருபாய் என்று விற்று கொண்டிருந்தார் , அவனுடைய மகன் பக்கத்தில் ஓரமாக நின்று கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் ..

ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஒரு சிவப்பு கலர் டீஷிர்டை எடுக்க சொல்லி பார்த்து கொண்டிருந்தார் .. அந்த டீஷிர்ட் கடைகாரனின் மகன் யாருக்கும் கேட்காதபடி அவனோட அப்பாகிட்ட ஏதோ கேட்டான் .. அப்டி போய் ஓரமா நில்லு தரேன் என்று எரிச்சலுடன் கூறினான் அவனுடைய தந்தை .. அந்த சிறுவன் ஏமாற்றத்துடன் தள்ளி நின்றான் .. நாங்க ரெண்டு பெரும் அவன்தான் பாகுரோம்னு தெரிந்ததும் வேறு பக்கம் திரும்பி கொண்டான் .. அந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் சாயம் போயடாதிள்ள ?. என்று கேட்டார் .. அதெல்லாம் போகாது நம்பி வாங்கிட்டு போலாம் சார் என்று சொல்லி அந்த ரெட் கலர் டீஷிர்டை ஒரு கவரில் போட்டு குடுத்தான் .. அவரும் வாங்கி கொண்டு 50 ருபாய் நீட்டினார் .. சார் கட்டுபடியாகாது சார் இதே மாதிரி டீஷிர்டு பக்கத்துக்கு தெருல 80 ரூபாய்க்கு விக்கிறாங்க நா விக்கிறதே ரொம்ப கம்மி .. அதெல்லாம் கரெக்டுதான்பா டீஷிர்ட் நல்லா இருந்தா இதுகபுரம் உன்கிட்டதான் வந்து வாங்க போறேன் அப்ப பாத்துக்கலாம் இப்ப இதபிடி என்றார் .. அந்த டீஷிர்ட் விற்று கொண்டிருந்தவன் எதுவும் பேச முடியாமல் சரி என்று வாங்கி கொண்டான் .

அந்த 10 ருபாய் சேமிச்சு அவரு என்னடா பண்ண போறாரு , அவங்க கேக்குற காசு குடுத்து வாங்கிட்டா நமக்குளாம் தூக்கம் வராதுல என்றேன் .. டை 10 ருபாய் இல்லனா சத்யம் தியேட்டர்ல டிக்கெட் வாங்க முடியாது இங்க இருந்து உங்க வீட்டுக்கு பஸ்ல போறதுக்கு 10 வா இல்லேனா கண்டக்டர் களுத்த புடுச்சு வெளிய தள்ளிடுவான் ஞாபகம் வச்சுக, 10 ரூபாய பத்தி கேவலமா பேசாதன்னு என்னோட friendu சிரித்து கொண்டே சொன்னான் ..

அந்த டிஷர்ட் விற்பவரின் மகன் தன்னுடைய தந்தையே பார்த்து கொண்டிருந்தான் .. அந்த டி ஷர்ட் விற்பவர் ஒரு டீஷிர்ட் 60, ஒரு டீஷிர்ட் 60 என்று கத்திகொண்டே தன்னுடைய மகனை அருகில் வரும்படி கை அசைதான் .. சில்லரை வரட்டும் தரேன் என்றான் , அதை கேட்ட அந்த சிறுவன் முகம் சந்தோஷமாக மாறியது , சிரித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றான் .. ஒரு குடும்ப தலைவி தன்னுடைய மகனுக்கு டீஷிர்ட் பார்த்து கொண்டிருந்தார் .. இரண்டு டீஷிர்டை எடுத்து வைத்து கொண்டு , ரெண்டு டிஷிர்டும் எவ்ளோவ்னு விலை கேட்டால் .. 120 என்றான் .. 120ah? ரெண்டு டீஷிர்டும் 80௦ ருபாய் போட்டுக்க.. அந்த டீஷிர்ட் விற்பவர் கொஞ்சமாச்சு ஞாயமா கேளுமா ?. ரெண்டு டீஷிர்ட் 80rubaiku குடுத்தா நா பிட்சதாம்மா எடுக்கணும் என்றான் வெறுப்புடன் .. அதெல்லாம் சும்மா சொல்லாதிங்க எல்லாம் உங்களுக்கு லாபம்தான் என்று 100rubaai குடுத்து விட்டு 20rubaai சில்லறை கேட்டால் .. இல்லமா 40rubaaiku முடியாது என்று 100rubaayai திருப்பி கோபத்துடன் கொடுத்தான் .. அந்த பணத்தை வாங்கி கொண்டு 60rubaai குடுத்து tshirt வாங்குறதுக்கு நா பக்கதுல இருக்க பெரிய கடைங்கல்லையே வாங்கிடுவனே ? என்று முனகியபடி அந்த பணத்தை வாங்கி கொண்டு நடந்தால் .. அங்கேயே பொய் வாங்கிகமா யார் வேனாம்னானா , அங்க 60rubaaiku யாரு டீஷிர்ட் விக்கிறா?.

சனியன் புடிச்சவங்க , Ac ரூம்ல hangerla இதே டீஷிர்ட 200ku வித்தா வாய் பேசாம வாங்கிட்டு போவாங்க நாங்க ஒரு 10rubaai சம்பாதிச்சா இவங்களால தாங்க முடியாது என்று எரிச்சலுடன் முனு முணுத்தபடி டீஷிர்ட் 60rubaai sir, ஒரு டீஷிர்ட் 60rubaai சார் என்று கத்தி கொண்டே இருந்தான் .. நாங்க ரெண்டு பெரும் அங்கேயே நிக்கிறதை பார்த்து விட்டு வாங்க தம்பி சும்மா நிக்கிறதுக்கு டீஷிர்ட பாருங்க புடிச்சிருந்தா வாங்குங்க 60 ரூபாய்தான் என்றார் .. சரி சரி அவரு நம்ம கேவலமா வெட்டி பசங்கன்னு சொல்லுங்காடி , சும்மா நிக்கிறதுக்கு அதையாச்சு பாப்போம் என்று அங்கிருந்த டீஷிர்த்களை பாக்க தொடங்கினோம் .. பரவா இல்ல மச்சி டீஷிர்த்லாம் அவ்ளோவ் ஒன்னும் மோசமா இல்ல மச்சி நல்லாதான் இருக்கு என்று என்னோட friendu கிட்ட மெதுவா சொன்னேன் .. நல்லாதாண்ட இருக்கும் ஆனா ஒரு வாட்டி தொவைசேனா அதுக்கபுறம் போட முடியாது , தொவைக்காம போடுற வரைக்கும் நல்லா இருக்கும்னு என்னோட friend என்கிட்டே மெதுவா சொல்லிடு இருக்கும்போதே இன்ஸ்பெக்டர் வராரு , இன்ஸ்பெக்டர் வராருயா ஒடுங்க என்று கத்தி கொண்டே ஒருவர் நடந்து வந்தார் .. ரோட்டில் பெட் சீட் விரித்து கடை போட்டிருந்த அனைவரும் பெட் ஷீடோட தூக்கி கொண்டு பக்கத்தில் இருந்த சந்துகளிலும் வீடுகளிலும் மறைத்து வைத்தனர் .. டீஷிர்ட் விற்று கொண்டிருந்தவர் தம்பி ஒரு 5 நிமிஷம் வெயிட் பண்ணுங்கப்பா இதோ வந்துடறோம் என்று கூறி விட்டு தன்னுடைய மகனை போர்வையின் ஒரு பாகத்தை தூக்கும்படி கூறி விட்டு இன்னொரு பக்கத்தை பிடித்து கொண்டு ஓடினான் .. ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை கொஞ்சம் வழி விடுங்க சார் வழி வழி என்று கத்தியபடி அவனும் அவனுடைய மகனும் தூக்கி கொண்டு ஓடினர் .. அந்த சின்ன பையன் ரோட்டில் தடுக்கி விழுந்தான் டீஷிர்ட்கள் ரோட்டில் விழுந்தன..

தூரத்தில் போலீஸ் ஜீப் horn அடித்தபடி வந்தது .. விழுந்த டீஷிர்துகளை எடுத்து முடிக்கும் முன் அந்த ஜீப்பிலிருந்த போலீஸ் காரர் அவர்களை பார்த்து விட்டார் ஜீபிடம் வரும்படி போலீஸ் காரர் கை அசைத்தார் .. அந்த டீஷிர்ட் கடை காரரும் போலீஸ் காரரிடம் சென்றார் .. அவங்க என்ன பேசுறாங்கனு எங்களுக்கு கேட்கல ,ஆனா போலீஸ் காரர் பேசுவதற்கு சரி சரி என்று அந்த டீஷிர்ட் விற்பவர் பயந்தபடி தலை யாடுவதுபோல் தோன்றியது .. சிறிது நேரத்தில் அந்த ஜீப் எங்களை கடந்து சென்றது .. அந்த டீஷிர்ட் விற்பவர் தன்னுடைய மகனை பளார் என்று அறைந்தார் அந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் கத்தி அழ தொடங்கினான் .. பெட்ஷீட்டின் ஒரு பாகத்தை அவன் பிடித்தபடி மற்றொரு பக்கத்தை தூக்கு என்று தன்னுடைய மகனை பார்த்து கோவத்துடன் கத்தினான் , அந்த சிறுவன் அழுது கொண்டே அந்த பெட்ஷீட்டின் ஒரு பக்கத்தை பிடித்தபடி தூக்கி வந்தான் ..

பழைய இடத்திலேயே பெட் சீட்டை விரித்து மறுபடியும் டீஷிர்டுகளை அடுக்க தொடங்கினான் .. மற்றவர்களும் தங்களுடைய பழைய இடங்களில் பெட்ஷீட்டை விரித்து கடைகளை போட்டனர் .. அந்த சிறுவன் அழுது கொண்டே ஓரமாக போய் நின்றான் .. நானும் என்னோட friendum ஒன்னும் புரியாம நின்னு கிட்டு இருந்தோம் ..

அந்த டீஷிர்ட் கடைகாரர் கோபத்தில் அந்த போலீஸ் காரர்களையும் அவர்குலடைய குடும்பங்களையும் சென்னை தமிழில் திட்டி கொண்டிருந்தார் .. நாங்கள் இருவரும் அமைதியாக avaraye பார்த்து கொண்டிருந்தோம் . பொறம்போக்குங்க nightu வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி அவனுங்கள போய் பாகனமுமாம் .. இங்க நாங்க கடை போட்டு பொழப்பு நடத்துறது எல்லாருக்கும் தெரியும் , ஆனா இவனுங்களுக்கு என்னமோ தெரியாத மாதிரி ஒவ்வொரு மாசமும் வந்துடறானுங்க .. சாயந்திரம் போனா 500 கேட்டு வாங்கிபானுங்க , பொது மக்களுக்கு முன்னாடி என்னமோ யோகியனுங்க மாதிரி திட்ரானுங்க .. ஒவ்வொரு மாசமும் மாமுல் அழுவுறது பத்தாதுன்னு இப்டி அவனுங்க கிட்ட ரௌண்ட்ஸ் வரப்பையும் மாட்டிகிட்டா தனியா வேற வசூல் பண்ணுவானுங்க .. நாங்க பண்றதும் தப்புதான் ஆனா என்னபா பண்றது வேற வாழ்க்கை எங்களுக்கு வாழ தெரியல .. முன்னாடி ஒரு பொம்பளை கிட்ட 10 ருபாய் கொரைகமாடேனு கோவமா pesi அமுசுடேன் .. இப்டி 10 20 சம்பாதுச்சு நாங்க என்ன அண்ணாநகர்லையோ இல்ல டி.நகர்லையோ வீடா வாங்க போறோம் .. சம்பாதிகிரதுல பாதிய இந்த மாதிரி பணகொதின்களுக்கு கொடுத்துட்டு மீதி இருகருதுல நாங்க என்ன பெரிய வாழ்கைய வாழ முடியும் .. அவருடைய மகனை பார்த்து ஒரு போர்வைய கூட ஒழுங்கா புடிக்க தெரியல இவன்லாம் இவனுங்ககிட்ட எப்டிதான் குப்ப கொட்ட போறான்னு தெரியல , இதுல காலைல இருந்து ஐஸ் கிரீம் வாங்கி தர சொல்லிவேற அடம் புடிச்சிட்டு irukaan .. சரி நீங்க டீஷிர்ட பாருங்க தம்பி தப்பு என்கமேலயும்தான இருக்கு என்று தன்னை தானே சமாதான படுத்தி கொண்டார் ..

அவனுடைய மகன் இன்னும் அழுதுகொண்டே இருந்தான் பாவம் தெருவுல கடை போட்டது இவரோட தப்பு , லஞ்சம் வாங்குறது போலீஸ் காரன் தப்பு பாவம் இதுல இந்த சின்ன பையன அடுச்சு அழ வைக்கிறாங்க .. ஒரு black கலர் டீஷிர்டை எடுத்து கொண்டு 100 ருபாய் தந்தேன் .. அதை வாங்கிகொண்டு அவர் சில்றை இல்லபா frienduku ஒரு டீஷிர்ட் வாங்கிகங்க ரெண்டும் செத்து 110 குடுங்க என்றார் .. என்னடா நீ ஒன்னு வாங்கிகிரியானு கேட்டேன் .. சரி எல்லாரும் ரொம்ப ஆச படறிங்க உங்களுக்காக ஒன்னு வாங்கிகிறேனு சொல்லி ஒரு blue கலர் டி ஷிர்டை எடுத்து கொண்டான் .. என்னுடைய friend 10 ருபாய் எடுத்து என்னிடம் குடுத்தான் ..

அங்கு அழுது கொண்டிருந்த அவருடைய மகனின் முகம் என் மனதை உறுத்தி கொண்டே இருந்தது இங்க வா னு வர சொல்லி கை அசைத்தேன் .. அவன் அழுது கொண்டே வந்து தன்னுடைய தந்தையின் அருகில் நின்றான் .. இந்த 10 ருபாய் உனக்குதான் போய் ஐஸ் கிரீம் வாங்கிக்கோ என்று நீட்டினேன் .. ஆனால் அந்த சிறுவன் ஒன்னும் புரியாம அவனுடைய தந்தையையும் என்னையும் மாறி மாறி பார்த்தான் .. அவனுடைய தந்தை வாங்கிக்னு சொன்னவுடன் சிறிய புன்னகையுடன் வாங்கி கொண்டான் .. நா அந்த பக்கம் போனப்புறம் பையன்கிட்ட இருந்து காச புடுங்கி அந்த போலீஸ் காரர்கு குடுதடலாம்னு நினைக்காதிங்க அந்த ரெண்டாவது டீஷிர்டே நா அந்த பையனுக்கு ஐஸ் கிரீம் வாங்க 10 ருபாய் கிடைகுமேனுதான் வாங்குனேன் என்றேன் .. அட பாவி அப்ப எனக்காக வாங்கலயாடானு என்னோட friendu கேட்க, நானும் அந்த கடை காரரும் சிரித்து விட்டோம் . . அந்த சிறுவன் அழுகையை நிறுத்தி விட்டு அந்த 10 ருபாய் நோட்டையே பார்த்து கொண்டிருந்தான் .. தூரத்திலிருந்து என்னோட friend சுரேஷ் கூபிடான் இருடா வரோம் என்று கை அசைத்து விட்டு அந்த டீஷிர்ட் கடைகாரரிடம் கிளம்புறோம் என்று தலை அசைத்தேன் .. அவர் முகம் முழுக்க புன்னகையுடன் உன்னோட பேரேன்னபா? என்று கேட்டார் .. என்னோட பேர சொல்லிடு நகர்ந்தோம் .. அவர் என்னோட பேர கேட்டதை நினைக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு .. அவர் எனக்கு நன்றின்னு சொல்லி இருந்தா கூட இவ்ளோவ் சந்தோஷ பட்டிருக்க மாட்டேன் .. என்னோட friend என்னை பார்த்து அம்புட்டு நல்லவனாடா நீ என்றான் .. விடு மச்சி எவ்ளோவ்வோ வெட்டியா செலவு பண்றோம் அந்த 10 ருபாய் செலவு எவ்ளோவ் சந்தோஷம் தந்திருக்கு பாரு மச்சி .. சுரேஷை பார்த்து எவ்வளவு நேரம்டா வெயிட் பண்றது நாதாரி என்றேன் .. சரி அதா விடு டீஷிர்த்லாம் எடுதிருகிங்க ஏதாவது சாப்ட வாங்கிதறது என்று டீஷிர்டை வாங்கி பார்த்தான் .. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு விக்ரமன் பட scene ஓடிட்டு இருந்துச்சு நீ மிஸ் பண்ணிட போ நு என் friendu சுரேஷ் கிட்ட சொன்னான் ..

முழு கதையையும் என்னோட friendu சுரேஷ் kitta சொல்ல ஆரம்பிக்க .. இருவரும் சேர்ந்து என்னை கலாய்த்து கொண்டே வந்தனர் .. Project centreku லேட் ஆகிடுச்சு வாங்கடா போலாம் என்று சொல்லி சமாளித்து வேகமாக எங்களுடைய வேலையே பார்க்க சென்றோம் ...

நாம எவளவோ காசு படம் பாக்குறதுக்கு , ஊர் சுதுரதுகுனு செலவு பண்றோம் ஆனா உண்மையா கஷ்டப்பட்டு உளைகுரவங்க கிட்ட பேரம் பேசிக்கிட்டு இருப்போம் .. ஒருத்தன் formala dress பண்ணி வாய் நிறைய இங்கிலீஷ் பேசுனா அவன் கேட்குற காச குடுத்துட்டு வந்துருவோம் ஆனா வேர்வை சிந்தி கஷ்டப்பட்டு உளைகிரவன்களுக்கு அவங்களுக்கு ஞாயமா சேர வேண்டிய காச அவங்களுக்கு குடுக்கறதுக்கு நமகெல்லாம் மனசு வராது . . என்ன பண்றது நாம இன்னும் இங்கிலிஸ் காரனையும் , இங்கிலீஷ் பேசுரவனயும்தான இப்பவரைக்கும் ஒசத்தியா நினைகுறோம் .. எல்லாம் ஒரு நாள் மாறும் … அது வரை நா .முத்து குமாரின் பாடல் வரி களிலுள் வருவதுபோல் “ உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம், நடப்பவை நாடகமென்று நாமும் சேர்ந்து நடிதிடுவோம் ”

- கிஷோர் குமார்.
kishore1490
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 34
Location : ambathur

Back to top Go down

“உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ” Empty Re: “உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 2:00 pm

நல்லா இருக்கு [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

“உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ” Empty Re: “உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”

Post by kishore1490 Thu Feb 09, 2012 8:49 am

nandri
kishore1490
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 34
Location : ambathur

Back to top Go down

“உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ” Empty Re: “உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum