தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தோனி - பட விமர்சனம்

Go down

தோனி - பட விமர்சனம்  Empty தோனி - பட விமர்சனம்

Post by நெல்லை அன்பன் Sat Feb 11, 2012 1:38 pm

[You must be registered and logged in to see this link.] எது நமக்கு பிடிக்கிறதோ அதை தொடர்ந்து செய்தால், அதற்கான ஆதரவும் கிடைத்தால் வெற்றி பெறுவது உறுதி. அது போல நல்ல படங்களை மட்டுமே தர வேண்டுமென்ற ஒரே நோக்கோடு படங்களை தயாரித்து வந்திருக்கும் ப்ரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ் படம். முதல் முறையாய் தமிழில் அவர் இயக்கி வெளிவந்திருக்கும் படமென்ற எதிர்பார்ப்பை எற்படுத்தியிருந்த படம். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமென்று சொல்வேன்.

மனைவியை இழந்து, தன் இரண்டு குழந்தைகளோடு, ஒரு மிடில் க்ளாஸ் குடும்பஸ்தனின் அத்துனை அவஸ்தைகளோடு வாழ்க்கையை நடத்தும் சாதாரணன். பெண் சூட்டிகை. பையன் படிப்பில் மந்தம். ஆனால் கிரிக்கெட்டில் படு ஷார்ப். விளையாட்டு முக்கியமில்லை படிப்புத்தான் முக்கியம் என்று நினைக்கும் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டியும், நூறு சதவிகித ரிசல்டுக்காக பையனை எதற்கு உதவாதவன் என்று சொல்லி வேறு ஸ்கூலுக்கு மாற்ற சொல்லவும், டெஷனாகி தன் மகனை முதல் முறையாய் அடிக்கிறார். அந்த அடி அவரின் வாழ்க்கையை திருப்பிப் போடுகிறது. அதன் மூலம் வாழ்கையின இன்னொரு பக்கத்தை, நம்முடைய கல்வி முறை எவ்வளவு தூரம் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் சுமையாய் மாறியிருக்கிறது? இந்த சமூகம் அக்குழந்தைகளின் எதிர்காலத்தை எதை வைத்து நிர்ணையிக்கிறது என்பது தான் கதை.
[You must be registered and logged in to see this link.] கதையைக் கேட்டதும் ஏதோ பிரசாரப் படமாய் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியாது. ஆனால் கொஞ்சமும் பிரசாரமில்லாமல், எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டு தனக்கென சுயமில்லாமல் வாழ்க்கையை ஓட்டும் ஒரு மிடில் க்ளாஸ் மனிதர்களின் உள்ள குமுறலை மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். தன் குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைக்க முடியவிட்டாலும், நல்ல கல்வியை தருவதற்காக தன் சக்திக்கு மீறிய பள்ளியில் படிக்க வைக்க, துண்டு விழும் பட்ஜெட்டை சமாளிக்க ஊறுகாய் விற்று சமாளிக்கும் சாமானியனை, அய்யோ பிள்ளையை புரிந்து கொள்ளாமல் இப்படி செய்துவிட்டோமே என்று குமுறி அழுது மன்னிப்புக் கேட்கும் பாசமுள்ள தகப்பனை, ப்ரச்சனை என்று வந்த பிறகு எழுந்து போராடும் ஒரு குடும்பத்தலைவனை கண் முன் உலாவ விட்டிருக்கிறார் ப்ரகாஷ்ராஜ் தன் நடிப்பின் மூலம்.
[You must be registered and logged in to see this link.]
நீயா நானா நிகழ்ச்சியில் பேசுவதற்காக அழைத்தவுடன் மீடியாவின் வெளிச்சமே படாமல் இருக்கும் ப்ரகாஷ் வெட்கத்துடன் ஆரம்பிக்க, ப்ரச்சனையைப் பற்றி பேச்சு திரும்பியவுடன், தான் எங்கு இருக்கிறோமென்ற ஒரு உணர்வையும் மீறி உணர்ச்சிவசப்பட்டு, ஆசிரியர், பள்ளி, சமூகம் என எல்லாவற்றையும் சாடி இதனால் தன் மகனின் இன்றைய நிலையைச் சொல்லி அநாதரவாய் அழும் காட்சியில் நெகிழாமல் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

பக்கத்து ப்ளாட் ராதிகா அப்தேவின் துணி மூட்டையில் தன் ஜட்டி மாட்டிக் கொண்டதும், அதை எப்படி கேட்பது என்று அல்லாடி, காமெடி செய்யுமிடத்தில், மிக எதார்த்தமாய் அறிமுகமாகும் ராதிகாவின் கேரக்டரை , அப்படியே தடாலடியாய் கால் கேர்ளாக வெளிப்படுத்துமிடத்தில் தூக்கி வாறிப் போடுகிறது. ஆனால் அவரின் கேரக்டருக்கு நியாயம் கற்பிக்காமல், யதார்த்தமாய் காரணம் சொல்லி, அதை உறுத்தாமல் நகர்த்தியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். என்னா கண்ணுடா இந்த பொண்ணுக்கு… இவரிடம் நடிப்பை வாங்க இன்னும் படம் வரவில்லை என்றே சொல்ல வேண்டும் இந்தப் படம் உள்பட.

பிரபு தேவா நட்பிற்காக ஒரு பாடலில் கடவுளாய் வருகிறார். ப்ரம்மானந்தம், சிங்கமுத்து, பசங்க சிவகுமார், தணிகல பரணி, நாசர் மேலும் ஒன்றிரண்டு தெலுங்கு பட பிரபல கேரக்டர் ஆர்டிஸ்டுகள் என எல்லோரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.
[You must be registered and logged in to see this link.]
கே.வி.குகனின் ஒளிப்பதிவு உறுத்தலில்லாமல் கதையோடு பயணிக்கிறது. பத்திரிக்கையாளர் த.செ. ஞானவேலின் வசனம் படத்திற்கு பெரிய பலம். பத்திரிக்கையாளர் என்பதால் சமூக கோபமும், சாமானியனின் இயலாமமை கலந்த வசனங்கள் நம்மை மேலும் படத்தோடு இணைந்து பயணப்பட ஏதுவாயிருக்கிறது. மகேஷ் மஞ்ச்ரேக்கரின் மராத்தி படத்தின் ரீமேக் தான். இசை இளையராஜாவாம். பாடல்களில் பெரிதாய் ஏதுமில்லை. ஏற்கனவே கேட்ட விஷயமாய்த்தான் இருக்கிறது. ”வாங்கும் பணத்துக்கும்” ”சின்னக் கண்ணிலே” பாடல் மட்டும் ரொம்பவே சுமாரன கேட்கும் ரகம். ராஜா வழக்கமாய் பின்னணியில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். நிறைய ரிப்பிட்டீஷன்கள். இன்னும் இன்னும் நிறையவே எதிர்பார்க்கிறோம் ராஜா உங்களிடமிருந்து.

படத்தின் மைனஸ் என்றால் நாடகத்தனமான திரைக்கதை. கதையை ஜாலியாய் கொண்டு போக திணிக்கப்பட்ட கேரக்டர்கள் மூலம் பேசப்படும் ஜோக்குளை பேசும் காட்சிகள். நாடகத்தனங்களின் உச்சமாய் பைனான்ஸ் செய்யும் அஞ்சு வட்டி கனி தடாலடியாய் உருக்கமாய் வசனம் பேசி காமெடி பீஸாய் மாறுவது, க்ளைமாக்ஸ் ட்ராமா போன்ற ஒரு சில சின்னச் சின்ன குறைகளைத் தவிர, முழுவதுமாய் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குனர் ப்ரகாஷ்ராஜ்.

என்னதான் சமூகத்தையும், பள்ளிகளின் ஆட்டிட்டியூடையும் நாம் குறை சொன்னாலும், வெறும் கிரிக்கெட்டோ, அல்லது,மற்ற திறமைகளோ தங்கள் குழந்தைகளுக்கு சோறு போடாது என்ற நிதர்சனத்தை எதிர்க் கொள்ளும் போது இவ்வளவு சீரியஸாய் பேசுவது கொஞ்சம் ஓவராய் தெரிந்தாலும், இப்படி அடி மேல் அடி வைத்தால்தான் அம்மியும் நகருமென்பதால் அடி கொடுத்திருப்பதும் நல்லதுக்கே. அதை முதல்வர் கேரக்டர் பேசும் வசனம் மூலம் மாற்றம் நிச்சயம் வருமென்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மாற்றமென்பது கேட்டால் மட்டுமே கிடைக்கும். இப்போது கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் இனி கேட்கக் கேட்க நிச்சயம் கிடைக்கும்.

தனக்கு கணக்குத்தான் வரவில்லையே தவிர கிரிக்கெட் எவ்வளவு வரும் என்பதை சொல்ல டோனியின் கேரக்டர் ரெக்கார்டை சொல்லுமிடத்திலும், நீயா நானா நிகழ்ச்சி காட்சி, ராதிகாவுக்கும் உனக்கும் ஏதாவதா? என்று ரவுடி கனி அவ்வப்போது கண்களாலேயே கேட்கும் காட்சி, ஸ்கூலில் பதினேழாம் வாய்ப்பாடு பற்றி டீச்சரிடம் கேட்டு பதில் சொல்லாததால் பெஞ்சு மேல் நிற்கச் சொல்லுமிடம், கோமாவிலிருக்கும் மகனிடம் மன்னிப்பு கேட்டு உருகுமிடமென்று நெகிழ வைக்கும் பல விஷயங்களை மிக அழகாக கையாண்டிருக்கிறார் ப்ரகாஷ்ராஜ்.

தோனி- நிஜமாகவே நாட் அவுட்

நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum