தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்..!
3 posters
Page 1 of 1
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்..!
கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்து பெட்ரோல், டீசல்
முதலிய எரிபொருள்கள் தயாரிக்கப்படும்போது வரும்
கழிவுகள்தான் பிளாஸ்டிக்காக உருப்பெருகின்றன.
இந்தப் பிளாஸ்டிக் கழிவுகள் நெடுநாட்கள் பூமியில்
மட்காமல் இருப்பதால், மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது.
-
இப்போது பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்
தயாரிக்கலாம் என்று தெரிகிறது.
-
சென்னை மாநகரில் தினம்தோறும் 300 டன் குப்பைகள்
கொடுங்கையூர், பெருங்குடியில் சேமிக்கப்படுகின்றது.
இதிலிருந்து 3,00,000 லிட்டர் அளவு கச்சா எண்ணெய்
தயாரிக்கலாம். ஆனால் இதைத் தயாரிக்கத் தகுந்த தொழில்
நுட்பம் தெரிந்திருப்பினும், அதற்கான ஆலைகள் வேண்டும்.
-
பங்களூரு மாநகராட்சி இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரியான
முயற்சியில் ஈடுபட முடிவெடுத்துள்ளது. பழைய மகாபலிபுரம்
சாலையில் அமைந்துள்ள எம்.கே. ஆரோமாடிக்ஸ் எனும்
நிறுவனம் ஆலத்தூர் எனும் இடத்தில் இம்மாதிரி தொழிற்சாலை
அமைத்து, ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா
எண்ணெய் தயாரித்து வருவதைக் கண்ட தமிழ்நாடு மாசுக்
கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரித் தொழில் நுட்பத்தைப்
பயன்படுத்தி, கச்சா எண்ணெய் தயாரிக்க எண்ணியுள்ளது.
-
ஆரோமாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து அவர்களது
தொழிற்சாலையில் தயாராகும் கச்சா எண்ணெயிலிருந்து
செய்யப்பட்ட டீஸலை வாங்க இவ்வாரியம் முடிவு
செய்துள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி கூறுகிறார்.
-
இந்நிறுவனத்தின் தலைவரான திரு மகேஷ் மர்ச்சென்ட
இந்தத் தொழிற்சாலை தற்போது பத்து டன் பிளாஸ்டிக்
கழிவுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 10,000 லிட்டர் கச்சா
எண்ணெய் தயாரிப்பதாகக் கூறுகிறார்.
-
“பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படாததால் காற்று மாசுடைவதில்லை;
பிளாஸ்டிக் கழிவுகளைத் திரவ நிலைக்கு உருக்கி அதில் சில
இரசாயனப் பொருள்களைச் சேர்த்து, ஆவியாக்கி, அதன் மூலமாகக்
கச்சா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது’ என்கிறார் இவர்.
-
இதற்காகக் கழிவுப் பொருளான பிளாஸ்டிக்கைக் கழுவிச் சுத்தம்
செய்வதற்கோ, அல்லது தனியாகப் பிரிப்பதற்கோ அவசியம்
இல்லையாம். இவர்களால் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய்யை
டீசலாகச் செய்வதற்கான தொழில்நுட்பமும் அதற்கான
உபகரணங்களும் இவர்களிடம் உள்ளதாம்.
-
நமது மாநகராட்சியின் கஷ்டமெல்லாம் குப்பைகளில் இருந்து
தனியாகப் பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதுதான்.
வீடுகளில் சேரும் குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துப்
போடுவதற்கான பச்சை, சிவப்பு நிற தொட்டிகள் கொடுக்கப்பட்டாலும்,
மக்கள் இவ்வாறு தரம் பிரித்துப் போடுவதற்கு ஒத்துழைக்கவில்லை.
-
இந்த நிலையைச் சமாளிக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம்
வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிப்பட்ட முறையில்
விலை கொடுத்து வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளது.
இதற்காகவென்றே தமிழ்நாடு அரசு சென்னை மாநகரம்
முழுவதும் கலெக்ஷன் சென்டர்களை அமைக்கலாமென்றும்
உள்ளது. ஒவ்வொரு கலெக்ஷன் சென்டருக்குமான செலவு
8 லட்சம் ரூபாய்களாகுமாம்.
-
இது தவிர, பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலைகளில் போடுவதையும்
தடுக்க நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறது அரசு.
-
நாமும் அரசின் முயற்சியைப் பாராட்டுவதுடன், நமது வீடுகளில்
விழும் குப்பைகளைத் தரம்பிரித்து உதவி செய்தோமானால்,
அரசின் முயற்சி வெற்றியடையலாமல்லவா?
-
======================================================
>சுமன் (நன்றி: மஞ்சரி)

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்..!
பயனுள்ள பகிர்வு நன்றி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்..!
வினிதா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஏறுமுகத்தில் கச்சா எண்ணெய் விலை
» ஏற்றஇறக்கத்தில் கச்சா எண்ணெய் விலை
» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
» ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum