தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Today at 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Today at 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Today at 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Today at 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Today at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Today at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Today at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Today at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Today at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Today at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Today at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Today at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Today at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Today at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Today at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
கவிதையாவது கழுதையாவது - நூல் விமர்சனம்: (கவிஞர் இரா.ரவி
2 posters
Page 1 of 1
கவிதையாவது கழுதையாவது - நூல் விமர்சனம்: (கவிஞர் இரா.ரவி
கவிதையாவது கழுதையாவது - நூல் விமர்சனம்: (கவிஞர் இரா.ரவி)
நூல் ஆசிரியர்: கவிஞர் ராசை.கண்மணிராசா,
நூலின் தலைப்பைப் பார்த்தவுடனே நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் வருகிறது. வித்தியாசமான தலைப்பு.அட்டைப்படத்தில் உள்ள சிறுவர்கள் சிறுமி புகைப்படம் அருமை. நூலின் வடிவமைப்பு நேர்த்தியாக உள்ளது. மக்களைப் பாடுவதே மகத்தான இலக்கியம் என கற்றுக்கொடுத்த தோழர் R.T.சுப்பிரமணியம் அவர்களின் நினைவிற்கு நூலை சமர்பித்து உள்ளார்.
நூலாசிரியர் இராசை.கண்மணிராசாவின் முதல் நூல் என்பதை நம்ப முடியவில்லை கவிதைகளில் நல்ல முதிர்ச்சி,அனுபவ முத்திரை உள்ளது. புதுக்கவிதை என்ற பெயரில் ஒரு கூட்டம் புரியாத கவிதை எழுதி வருகின்றது,அவர்களின் கவிதை புரிய வேண்டுமென்றால் அதனை எழுதியவர்கள்தான் விளக்கவுரை போடவேண்டும் அப்போது தான் புரியும்.ஆனால் இந்நூலில் உள்ள கவிதைகள் எல்லோருக்கும் எளிதாக புரியும் வண்ணம் மிக எளிதாகவும் அதே நேரத்தில் கருத்துக்களை வலிமையாகவும் பதிவு செய்துள்ளார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொதுச்செயலர் இரவீந்தர பாரதி,திரு அழகிய பெரியவன் இருவரின் அணிந்துரையும் நூலின் சாரத்தை, சிறப்பை, உயர்வை நமக்கு நன்கு விளக்கி விடுகிறது.
ஆசிரியரின் "உங்களோடு" என்ற தன்னுரையில் கூட இலக்கிய நயம் சொட்டச் சொட்ட கூறி உள்ளார். சமூகத்தை காதலிக்கும் ஆசிரியர் பாராட்டுக்குறியவர். காதல் என்ற பெயரில் சமூகத்தை சீரழிக்கும் காலத்தில் சமூகத்தை காதலிக்கும் மாறுபட்ட இளைஞர் நூலாசிரியர். முதல் கவிதையிலேயே முத்திரை பதிக்கிறார்.நூலின் தலைப்பு இப்படி உள்ளதே கவிதை எப்படி?இருக்கும் என்ற கேள்விக்கு முதல் கவிதையிலேயே விடை சொல்லி விடுகிறார்.உழக்கும் வர்க்கத்தின் இன்னலை இதைவிட எளிமையாக யாரும் சொல்ல முடியாது.
சாணிப்பால் முற்றத்தில் நிலாக்காயும் இரவொளியில்
உன்னோடு கவிதை பேச ஆசை ஆனால்
பகலெல்லாம் பாரவண்டி இழுத்த களைப்பில் நானும்
தீப்பெட்டி ஆபிசில் தீயாய் பறந்த களைப்பில் நீயும்
கண்ணயர்ந்து உறங்குகையில் கவிதையாவது கழுதையாவது
ஒரு நல்ல கவிதை எப்படி? இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் தருகிறார். உணர்ச்சிகளை கவிதை வடிக்கும் இளைஞர்கள் மத்தியில் உணர்ச்சிக் கவிஞராக மிளிருகின்றார்.
செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்
நல்ல கவிதை
இந்த கவிதையின் பின்புலத்தில் பாட்டால் உலகை ஈர்த்த உன்னதக் கவிஞர் பாரதியின் ஓவியம் அழகு சேர்க்கின்றது. கவிதைக்கு உரம் சேர்க்கின்றது.
சமூக நீதிக்காக உரக்கக்குரல் கொடுக்கிறார்.தேர் இழுப்பதில் சாதிச்சண்டை நிகழும் அவலத்தைச் சாடிடும் புதுக்கவிதை இதா
ஏர் இழுத்து எருமையோடு மல்லுக்கட்ட நாங்கள்
தேர் இழுத்து தெருவில் பவுசு காட்ட நீங்களா?
சரித்தான் மக்கா
இதுக்கும் வேணும் இடஒதுக்கீட்டு சட்டம் போல
வட ஒதுக்கீட்டு சட்டம்
(தேரும் வேண்டாம் கலவரமும் வேண்டாம் அம்மன் வேண்டியது இது என் ஹைக்கூ)
இந்தியா வல்லரசாகும் என ஒரு பக்கம் மார்தட்டினாலும் மறுபக்கம் ஒருவேளை சோற்றுக்கு வழியின்றி இருக்க இடமின்றி அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் கோடி மக்கள் வாடும் குமறலை மிக நன்றாகப் பதிவு செய்து இருக்கிறார். கிராமிய மொழியில்,பேச்சு நடையில் கவிதைகள் இருப்பது கூடுதல் சிறப்பு."கருவாச்சி" என்ற சொல்லின் மீது நமக்கு ஒரு ஈர்ப்பு வரும் வண்ணம் கவிதைவடித்துள்ளார். உழைப்பின் நிறம் கருப்பு என்பதை,கருப்பு அழகு என்பதை உணர்த்தி வருகிறார் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் உழைக்காமல் உண்ணும் சோம்பேறிகளின் உளறலை உண்மை என்று நம்பி வீட்டை,அலுவலகத்தை இடித்து கட்டி நொடித்து போகும் மூடர்களின் தலையில் கொட்டு வைக்கும் கவிதை இதோ!
அக்னி மூலை,வாயு மூலை,ஈசான மூலை,
அந்த மூலை இந்த மூலை அடடடா!
என்னதான் ஆனது சொந்த மூளை
இக்கவிதையை படிக்கும் போது பகுத்தறிவுப் பகலவன்,வெண்தாடி வேந்தன் இறுதி மூச்சுவரை இன விடுதலைக்காக குரல் கொடுத்த ஈடு இணையற்ற பெரியாரின் ஏன்? ஏதற்கு?எப்படி? என்ற பகுத்தறிவு நினைவிற்கு வந்தது.
இந்தியா ஜனநாயக நாடு,கருத்து சுதந்திரம் மிக்க நாடு என்று ஒருபக்கம் உலக அரங்கில் பறை சாற்றுகின்றோம்.ஆனால் மறுபக்கம் போராளிகள் பற்றி யாராவது பேசிவிட்டாலோ, எழுதிவிட்டாலோ சிறை தண்டனை தருகின்றோம். இந்த முரண்பாட்டை எள்ளல் சுவையுடன் விளக்கிடும் நல்ல ஒரு புதுக்கவிதை
வாருங்கள் கவிஞர்களே வட்டமாய் அமர்ந்து
பூக்களைப் பாடுவோம்
போராளிகளைப் பாடத்தான் நமக்கு தெம்பில்லையே
சின்ன திருத்தம் போராளியைப் பாட கவிஞர்கள் எல்லோருக்கும் தெம்பு இருக்கின்றது. ஆனால் பாடுபவர்கலை வம்பில் மாட்டி விடும் ஆளும்வர்க்கம் கருத்து சுதந்திரத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை. கவிஞனுக்கு கருத்து சுதந்திரத்தை கொடுத்துப் பாருங்கள் கவிதைகளை அருவியாக கொட்டிவிடுவான்.
நூல் முழவதும் சிந்தனை விதைக்கும் சிறப்பான புதுக்கவிதைகள் பொருத்தமான புகைப்படங்கள் பகுத்தறிவு விதைக்கும் நல்ல பல கவிதைகளின் தொகுப்பு. ஒரு கவிதை நூல் எப்படி? இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக உள்ளது.படித்து முடித்தவுடன் படித்த வாசகரின் உள்ளத்தில் அதிர்வுகள் ஏற்படுத்துகின்றன. இது தான் படைப்பாளியின் வெற்றி.முன்னணி கவிஞராக வலம் வருவார் நூலாசிரியர் ராசை.கண்மணிராசா என்பதை பறைசாற்றும் அற்புதபடைப்பு.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: கவிதையாவது கழுதையாவது - நூல் விமர்சனம்: (கவிஞர் இரா.ரவி
சமுதாய அவலத்தை ஆய்கிறது நூல், அழகிய எடுத்தாய்வு
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: கவிதையாவது கழுதையாவது - நூல் விமர்சனம்: (கவிஞர் இரா.ரவி
வணக்கம் பாராட்டுக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
www.kavimalar.com
http://wtrfm.com/?cat=3
http://eraeravi.wordpress.com/
அன்புடன்
இரா .இரவி
www.kavimalar.com
http://wtrfm.com/?cat=3
http://eraeravi.wordpress.com/
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» மகரந்தச் சேர்க்கை நூல் ஆசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ramesh.vdm@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum