தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா....
3 posters
Page 1 of 1
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா....
[color=darkblue]வெற்றிக்கு வழி காட்டிடும் டிஸ்லெக்சியா
ஒரு மிகப்பிரபலமான பள்ளியில் ஒரு மாணவன் தமிழ் பாடத்தைப் படிக்காமலே ஓட்டிக்கொண்டு இருந்தான். அவனைப் படிக்கக் கூறினால் மிஸ் நான் டிஸ்லெக்சியான்னு சர்டிஃபிகேட் அபளை பண்ணியிருக்கேன். அது வந்துடும். அதனால் தமிழ் பாடம் எனக்கு தேர்வு எழுதத் தேவையில்லை. தேரிவில் இருந்து விலக்கு கிடைத்து விடும் என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. விளக்கமாகக் கூறு என்றேன், எனக்கு இந்தப் பாடத்தில் இஷ்டமில்லை மிஸ். அதனால் மருத்துவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து சர்ட்டிஃபிகேட் வாங்கி விட்டேன். அரசுக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் ஆர்டர் வந்து விடும். என்று சிரித்துக் கொண்டே கூறினான். இப்படியும் ஒரு மாணவனா என்று சிரித்த அதே நேரத்தில் அது என்ன டிஸ்லெக்சியா எனச் சிந்திக்கும் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்த அந்த மாணவனுக்கு மனதால் நன்றி சொல்லியபடி அதனைப் பற்றி அறிந்து கொண்டேன்.
. இக்காலத்தில் பல பள்ளிகளில மிக அதிகமாகப் பயன்பட்டுக் கொண்டுள்ள சொல் டிஸ்லெக்சியா. முக்கியமாக செல்வந்தர்களின் குழ்ந்தைகளிடம் இக்குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. (நான் பார்த்த வரையில்) சரி டிஸ்லெக்சியா என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
மூளை இரண்டு பகுதிகளாகப் பிளவு பட்டு இருக்கும். இடது மூளைக்கும் வலது மூளைக்கும் இடையில் சரியாகத் தொடர்பு இல்லாத நிலைதான் இந்த ‘டிஸ்லெக்சியா’ குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக வலக்கண் பார்க்கும் காட்சி மூளையின் இடப்புறம் பதிவாகிறது. இடக்கண் பார்க்கும் காட்சி மூளையின் வலப்புறம் பதிவாகிறது. இந்தத் தொடர்பு விஷயத்தில் தொடர்பு கெடும்போது பார்க்கின்ற காட்சியின் ஒட்டுமொத்தத் தோற்றம் மூளைக்குப் போய்ச்சேர்வது இல்லை. இதனால் குழந்தைகள் வாசிப்பதில், எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு திறமை குறைகிறது. டிஸ்லெக்சியா உள்ள மாணவன் ஆசிரியர் ஒன்றை எழுதினால் அதைத் தப்பும் தவறுமாகத் தன் நோட்டில் எழுதுவான். இவ்வாறு வார்த்தைகளைத் தவறு தவறாக எழுதுவதை வார்த்தைக் குருடு (Word Blindness) என்று கூறுவர்.
டிஸ்லெக்சியா என்ன காரணத்தால் வருகிறது? முன்னோர்களிடம் இருந்தும் பரம்பரையாகாவும், சுற்றுச்சூழல் காரணமாகவும் வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
இதன் காரணமாக குழந்தைகளுக்குக் கற்றுக்கொள்ளூம் திறன் குறைந்து போய் விடுகிறது. பத்தில் ஒரு குழந்தைக்கு முழுவதும் இல்லையென்றாலும் சிறிதளவாவது உள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
வரி வரியாக விரல் வைத்து வாசிப்பது, எழுதுகோலை ஒரு பக்கமாகச் சாய்த்துப் பிடித்து எழுதுவது, பேனாவைச் செங்குத்தாக பிடித்துக் கொண்டு எழுதுவது, இரண்டு விரலால் மட்டும் எழுதுகோலைப் பிடித்து எழுதுவது, பார்த்து எழுதும்போது தப்பும் தவறுமாக எழுதுவது போன்றவை டிஸ்லெக்சியா இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
டிஸ்லெக்சியா வந்துவிட்டதே என்று அதிகமாகக் கவலைப் படத் தேவையில்லை. இதில் ஒரு நல்ல அம்சமும் உள்ளது டிஸ்லெக்சியாவால்தான் நான் இவ்வாறு பெருமைப் பட முடிந்தது என்று சொல்லி இன்புறும் காலமும் உண்டாகலாம். யார் கண்டது? அப்படிப் பெருமைப் பட்டவ்ர்க்ளைப் பற்றிய் பெரிய பட்டியலைப் பார்த்தீர்களானல் எனக்கும் டிஸ்லெக்சியா வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணத்தோன்றும்.
நோபல் பரிசுக்குச் சொந்தக்காரரான ஆல்பர்ட் ஐன்ஸ்டினைப் பற்றிப் பார்ப்போம். இவர் ஒன்பது வயது வரை எதையும் படிக்கும் திறனின்றி இருந்தாராம். ஒரு திடீர் திருப்பமாகப் பனிரெண்டாம் வயதில் கணிதத்திலும், இயற்பியலிலும் சக்கைப் போடு போட ஆரம்பித்தாராம்.
இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய திசையறி கருவியொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும், பொழுதுபோக்காகச் செய்துவந்தார்.. இவருடைய உறவினரிருவர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம்..
இவரைத் தெரியாதவர்களும் இருக்க முடியாதே. தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன், பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். பள்ளிகளிலும் சரி வெளியிடங்களிலும் சரி அறிவியல் கண்டுபிடிப்பு பற்றி எழும் வினாக்களுக்கு, முக்கியாமாக ஒரு பொருளைக் கண்டுபிடித்தவர் யார் என்று நமக்குத் தெரியாவிட்டால் நாம் என்ன செய்வோம். ஒற்றையா ரெட்டையா கூடப் போட மாட்டோம். கண்களை மூடிக்கொண்டு குருட்டாம் போக்கில் தாமஸ் ஆல்வா எடிசன் என்று கூறிவிடுவோம்.. அது சரியான விடை என்று பாராட்டும் பெற்று விடுவோம். அப்படி இன்று காண்கின்ற பொருள்களில் பெரும்பானமையான் பொருள்களுக்குச் சொந்தக்காரராக இருக்கும் தாமஸ் ஆல்வா எடிசனும் இந்த டிஸ்லெக்சியாவுக்கு ஒருவாறு அல்வா கொடுத்தவரே.
அமெரிக்க ஜனாதிபதியாகவும், மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்த தாமஸ் உட்ரோ வில்சன். தமது பதினோராம் வயது வரை ஒரு எழுததைக் கூட வாசிக்க முடியாதவராக இருந்தார் என்றால் நம்மால் நம்ப் முடிகிறதா? அதுதான் உண்மை.
..இதைப் படித்தவுடன் மேலே கூறியதைப் போல நமக்கும் டிஸ்லெக்சியா வந்தால் பரவாயில்லை என்று எண்ணத் தோன்று கிறதல்லவா? ஆனால் எல்லோரும் இப்படி உயர்ந்து விட முடியுமா? இத்தகு குறைபாடு ஒன்றைப் பெற்றவர்கள் தம் வாழ்வில் சாதித்து எப்படி? ஒரு கதைவை அடைத்தால் இன்னொரு கதவைத் திறந்து விடுவான் என்பது போல இறைவனின் படைப்பில் ஒரு திறன் குறைந்தால் அதனையும் மிஞ்சி வெற்றி பெறும் அளவுக்கு வேறு ஒரு திறன் நிறைந்து இருக்கும். அதனாலேயே இன்று ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளி என்று கூறத் தொடங்கியுள்ளோம். அது எத்துனைச் சரியானது. மேலே கூறிய இவர்களையும் மாற்றுத்திறனாளி என்று அழைப்பதில் தவறு இல்லையே!
.
இவர்களிடம் முயற்சியும் தொடர்ந்து எதையும் செய்யக்கூடிய பயிற்சி மனப்பானமையும் இருந்ததே இவர்கள் எளிதில் இக்குறைபாட்டை வெற்றி கொண்டமைக்கும், உலகையே வெற்றி கொண்ட்மைக்கும் இது முற்றிலும் தனிப்பட்ட முயற்சியால் கிடைத்த வெற்றி. இதனைத் திறன் (INDUVIDUAL EFFORTS) எனலாம். குறைபாடு எதுவாக இருந்தாலும் அதனை போக்கடித்து. வெற்றி கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது.
ஒன்று கண்டிப்பாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு சிறு குறைபாடே அன்றி பெரிய நோய் அல்ல. எனவே இருந்தாலும் குழந்தைகளால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.. அதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் பெரிதளவில் உறுதுணையாக இருக்க வேண்டும். நல்ல முறையான அணுகுமுறையும், சிறந்த பயிற்சியும் அம்மாணவர்களுக்குக் கொடுத்து உதவுவது இவர்களின் கடமையே.
குறைபாடு எதுவாக இருந்தாலும் அதனைப் போக்கடித்து. வெற்றி கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது என்றாலும் உதவவேண்டியது பெற்றோர், ஆசிரியர்களின் கடமை ஆகும். ஏனெனில் சிறந்த வெற்றிக்கு அடிப்படையாய் இருப்பவை 1% உள்ளூக்கமும் 99% விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சியுமே ஆகும்.. இதனை வள்ளுவர்,
”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாளாது உஞற்று பவர்”
சோர்வு இல்லாமலலும் தன் முயற்சியில் குறைவு இல்லாமலும் முயல்கின்றவர் தம் முயற்சிக்கு இடையூறாக வரும் ஊழ்வினையையும் புறமுதுகிட்டு ஓடச்செய்து விடுவர். அப்படி இருக்க, டிஸ்லெக்சியா என்ன அம்னீஷியா என்ன... எல்லாம் புறமுதுகுக் காட்டி ஓடுவது உறுதி...ஆகையால் ஆசிரியர்களே! பெற்றோர்களே! உதவுங்கள் வருங்கால் இந்தியாவுக்கு. ஆக்குங்கள் டிஸ்லெக்சியா குறைபாட்டுக் குழந்தைகளை, ஒரு எடிசனாக், ஒரு ஐன்ஸ்டினாக, ஒரு உட்ரோ வில்சனாக!!!
ஆதிரா..

Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா....
அருமையான தகவல்கள்! அத்துடன் ஒவ்வொரு மனிதனிடனும் திறமைகள் பல உள்ளன அதனை அடையாளம் கண்டு அதன் வழியில் செல்ல வாய்ப்புக்களை உறுவாக்குவதே வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் என்பதை அழகாக வரலற்று நிகழ்வுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளீர்கள், வாழ்த்துக்கள்.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா....
நீண்ட கட்டுரையைப் படித்து க்ருத்து பகர்ந்தமைக்கு மிக்க நன்றி ஈரநிலா.
Aathira- மல்லிகை
- Posts : 124
Points : 177
Join date : 06/01/2010
Re: வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா....
அருமையான பகிர்வு அக்கா பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வெற்றிக்கு
» வெற்றிக்கு ஆசை
» வெற்றிக்கு 7 வழிகள்
» வெற்றிக்கு முதல் படி
» பச்சக் - வெற்றிக்கு ஒரு புத்தகம்
» வெற்றிக்கு ஆசை
» வெற்றிக்கு 7 வழிகள்
» வெற்றிக்கு முதல் படி
» பச்சக் - வெற்றிக்கு ஒரு புத்தகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum