தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அனிச்சங்கள் கிளைத்த கொடி , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
2 posters
Page 1 of 1
அனிச்சங்கள் கிளைத்த கொடி , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
அனிச்சங்கள் கிளைத்த கொடி , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் கவிவாணன்
நூலின் பெயரே இலக்கியத்தரமாக, கவித்துவமாக உள்ளது. கவிஞர் ஜீவி-யின் அணிந்துரை நூலின் சிறப்பைப் பறைசாற்றுகின்றது. நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் திண்டுக்கல் மாவட்ட தமுஎச-வின் மாவட்ட துணைச் செயலர், சிற்றிதழ்களில் தொடர்ந்து இயங்கி வருபவர், இளைஞர், பெயருக்கேற்றபடி கவிதை பொழிந்து வருபவர்.
சிலர் புதுக்கவிதை என்ற பெயரில் புரியாத கவிதை எழுதி வருகின்றனர். ஆனால் இவர் கவிதை வாசிக்கும் போது அனைவருக்கும் புரியும் எளிய நடை.”அம்மாவின் விருப்பம்” என்ற கவிதை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் அம்மா நினைவு வந்து விடுகிறது. இது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி.ஆனாதிக்க சிந்தனையை நமது சமுதாயம் குழந்தை பருவத்திலேயே விதைத்து விடுகின்றது. ஆண் குநை;தைக்கு துப்பாக்கி பொம்மையும், பெண் குநை;தைக்கு சிட்டி பானை பொம்மைகளும் வாங்கிக் கொடுக்கும் பழக்கத்தை உழிக்க வேண்டும்.
இதோ ! கவிஞரின் சிந்தனை
தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் என்னிடம் “ஆம்பளைகளை இந்த வேளையைச் செய்யுறது என்று
சொல்லிச் செல்பவளிடம் எப்படி சொல்வது
வேலையில் ஆண் பெண் பேதமில்லையென்று”
ஆண், பெண் சமத்துவத்தை இயல்பாக சொல்லி உள்ளார் புதுக்கவிதையில்.
அன்பாக வளர்த்த மகளை மணமுடித்து கொடுத்து பின்பு மகளின் வருகைக்காக ஏங்கும் தாயின் பாசத்தை பதிவு செய்யும் கவிதை இதோ!
வீட்டுக் கூரையில் காகம் கரையும் போது
வீட்டுக் கதவை எவரோ தட்டும் போதும்
தொலைபேசி மணி ஒலிக்கும் போதும்
திருமணமாகிப் போன தன் மகளின் முகம் பார்க்க
ஏக்கத்தோடு விரைகிறாள் அம்மா.
இந்த நூலின் ஹைக்கூ கவிதைகளும் உள்ளது:
வெட்டிய பிறகும்
வேரில் மணம்
கண்ணீர்
குழந்தையின் அழுகை
பேருந்து இறுக்கம்
கசங்கிப் போனது மனசு
இரவின் மடியில்
இதமாய் இருக்கிறது
இரயிலின் சன்னஸ் சுகம்
நிழல் பரப்பிய மரம்
குறைந்த அணில்கள்
மண்தாமரை எங்கும் பூக்கள்
நிறைய பேச
நினைக்கின்றது மனசு
பிரிவின் கணத்தில்
நிசப்தம் உடைத்து
பிறந்த வாசத்தோடு குழந்தை
மலரெங்கும் கண்ணீர்
ஓவ்வொரு ஹைக்கூ கவிதைகளும் சிந்தனையை விதைக்கின்றது. சொற்சிக்கனத்துடன் மிக நேர்த்தியாக எழுதி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன்.
இல்லத்தில் அம்மாவின் பணிச்சுமையை, அதனை மதிக்காத மகன்களின் அலட்சியத்தை உணர்த்திடும் புதுக்கவிதையை. இந்த புதுக்கவிதையை படித்த பின்பு, அம்மாவின் உழைப்பை, மனைவியின் உழைப்பை உணர்வார்கள் ஆண்கள் என்பது உண்மை !
மகளின் திருமணத்திற்குப் பிறகு
சுமை அதிகமாகிப் போனது
அம்மாவிற்கு சமைத்தல், பரிமாறுதல், துவைத்தல்
என எல்லா வேலைகளும்
உதவியேதும் செய்யாமல்
வேவைக்குச் செல்லும் அவசரத்தில்
கடிந்து போகிற மகனை
“பார்த்துப் போ” என்கிறார் அம்மா.
இப்படி குடும்ப உறவின் மேன்மையை,பாசத்தை,உள்ளத்து உணர்வுகளை நயம்பட பதிவு செய்துள்ளார். கவிஞர் உணர்ந்த உணர்வை,வாசகனுக்கும் உணர்த்திடும் கவிதைகளின் தொகுப்பு.
வாழ்க்கை முழுவதும் உழைத்துப் போட்ட அப்பாவும்
வீட்டு மனிதராகப் போனார்
இப்போது இரவு பகல் பாராது பாடுபடும்
அம்மா மீது சுமைகளை ஏற்றி
புகுந்த வீட்டுக்குப் போன பின்னும்
நிறைமாத கர்ப்பிணியானாலும்
பெற்றவளுக்குப் பணிவிடை செய்யும்
ஏக்கத்தோடு ஒடி வருகிறாள் தங்கை.
மணமான பின்னும் குடும்ப பாசத்துடன், நேசத்துடன் பெண் மகள் இருக்கிறாள் என்ற நடப்பு உண்மையைச் சொல்லி,நமக்குக் காட்சிப்படுத்தி பெண் இனத்தை பெருமைபடுத்துகின்றார்.
இன்று கோடீஸ்வரர்கள் மேலும் கொடீஸ்வரர்கள் ஆகின்றனர். கோடித்துணியே காண முடியாத ஏழைகள்,வறுமையில் வாடுகின்றனர். இந்தியா,அக்கினி ஏவகனை ஒன்று இரண்டு ஏவுp விட்டோம். மூன்று ஏவப் போகிறோம் என ஒருபுறம் மார்தட்டி கொண்டாலும்,மறுபுறம் வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பதெ உண்மை.
பறை அடித்துக் கொண்டிருக்கிறது
ஒனின் உயிர்க்கசிவு
தன்னை அறியாது இருவரின் கண்களிலும் வடிகிறது கண்ணீர்
நினைவுகள் நீள்கிறது. இருவருக்கும் பாத்திர பண்டங்களும்,
அடகுக்கு ஆகாமல் கிடக்கிறது.
மனைவியின் தாலியில் ஒரு குண்டுமணி தங்கமும் கிடையாது.
எந்த எஜமானனும் இந்த நேரத்தில் குடிசையைக் கொளுத்தவுமில்லை
அப்படியாவது ஆத்தாளுக்கு கொள்ளி போட்டிருப்போம்
அப்படியுமில்லை எங்க வீட்டு எழவுக்கு
தப்படிக்க எவனக் கூப்புடறது சீக்கிரமாக தூங்குங்க சாமி,
எங்க ஆத்தா எழவுக்கு நாங்களே தப்படிக்கனும்.
இந்தக் கவிதையைப் படித்தமும் நெகிழ்ந்து போனேன். கொடுமை,கொடுமை,வறுமை கொடுமை என உணர்த்திடும் கவிதை. ஏழ்மையைப் பற்றி இதை விட எளிமையாக, இயல்பாக காட்சிப்படுத்த முடியாது. இது வெறும் கற்பனைக் கவிதை அல்ல. இன்றைக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் உள்ள வாழ்க்கைப் போராட்டத்தை உணர்த்திய கவிஞஞருக்குப் பாராட்டுக்கள். நிறைய இடங்களில் எழுத்துப்பிழை உள்ளது. அடுத்தப் பதிப்பில் கவனமாக பிழை நீக்கி வெளியிடுங்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: அனிச்சங்கள் கிளைத்த கொடி , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி
சமுதாய சறுக்கல்களுக்கு நல்லதோர் சவுக்கடி இந்த நூல், மதிப்புரையாளர் ஏற்றங்களை மட்டும் எடுத்துரைப்பதோடு நிறுத்திவிடாமல், எழுத்துபிழைக் குற்றங்களையும் நயமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு நூலினை மதிப்புரைப்பது என்பது மிகவும் பொருப்புமிக்க பணி, மதிப்புரையாளர், நூலாசிரியரால் நூலில் எடுத்தான்டுள்ள அனைத்து கருத்துக்களையும் ஆய்வு செய்து மதிப்புரைத்தல் அவசியம், மேலும் கருத்துகுற்றமோ, எழுத்துபிழையோ காணப்படின் அதனை நயம்பட எடுத்துரைத்தல் அவசியம். ஒரு நூலில் காணப்படும் பிழையானது, மதிப்புரை செய்த ஒருவரால் தேவையான வரம்பின் அடிப்படையில் விமர்ச்சிக்க தவறிவிட்டால், அத்தகைய குற்றத்திற்க்கு மதிப்புரையாளரும் பொருப்பாவார் என்பது மறுக்கத்தக்கது அல்ல.
தன் பணியின் பொருப்புணர்ந்து மதிப்புரைத்திருக்கிறார். வாழ்த்துக்கள்
ஒரு நூலினை மதிப்புரைப்பது என்பது மிகவும் பொருப்புமிக்க பணி, மதிப்புரையாளர், நூலாசிரியரால் நூலில் எடுத்தான்டுள்ள அனைத்து கருத்துக்களையும் ஆய்வு செய்து மதிப்புரைத்தல் அவசியம், மேலும் கருத்துகுற்றமோ, எழுத்துபிழையோ காணப்படின் அதனை நயம்பட எடுத்துரைத்தல் அவசியம். ஒரு நூலில் காணப்படும் பிழையானது, மதிப்புரை செய்த ஒருவரால் தேவையான வரம்பின் அடிப்படையில் விமர்ச்சிக்க தவறிவிட்டால், அத்தகைய குற்றத்திற்க்கு மதிப்புரையாளரும் பொருப்பாவார் என்பது மறுக்கத்தக்கது அல்ல.
தன் பணியின் பொருப்புணர்ந்து மதிப்புரைத்திருக்கிறார். வாழ்த்துக்கள்
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum