தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கண்ணதாசன் எழுதிய ஸ்ரீ கிருஷ்ணா கவசம்

3 posters

Go down

கண்ணதாசன் எழுதிய ஸ்ரீ கிருஷ்ணா கவசம்  Empty கண்ணதாசன் எழுதிய ஸ்ரீ கிருஷ்ணா கவசம்

Post by Atchaya Fri Mar 02, 2012 4:08 pm

அகரம் முதலே அழியாப் பொருளேஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமேஈதல் மரபாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையேஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலேஏழை மனதில் வாழும் அருளே
ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரேஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியேஓடும் நதியில் பாடும் அலையே
அவவ் வுலகை ஆக்கும் நிலையேஅடியேம் சரணம் சரணம் சரணம்!
அறமே அறமே அறமே அறமேதிறமே திறமே திறமே திறமே
தவமே தவமே தவமே தவமேவரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளைவேநாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய்உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்!
பொய்யா மொழியே பொங்கும் நிலவேபூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்கபாஞ்ச் சன்னியம் பக்தனைக் காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்கமுள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்கதேடும் விழியைத் திருமால் காக்க
கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்ககண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துண்பம் என்றொரு சுமையைத் தீர்க்கதூயோன் வருக! துணையே தருக!
மாதர் கற்பும் மடவார் நோன்பும்மாயோன் காக்க மலைபோல் வருக!
தகிடக் தகிடக் தகிடக் தகவெனதறிபடு துன்பம் தறிகெட ஒட
திகிடத் திகிடத் திகிடத் திகிடத்திசைவரு கவலை பசைஇல் தாக!
துருவத் துருவத் துருவத் துருவிடத்தொலையாப் பொருளே அலையாய் வருக!
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருககர்மசந் யாசக் களமே வருக
ஞானம் யோகம் நல்குவன் வருகநல்லோர் வாழ்வில் நலமே நிறைக!
அடியேன் துயரம் அதிகம் அதிகம்அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்
பொங்கும் வேலும் புண்ணாக் காதுபொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்தாளில் விழுந்தேன் சரணம் சரணம்
மதுசூ தனனே மனிதன் சரணம்இருடீ கேசா இயலான் சரணம்
கீதா சாரிய கிருஷ்ணா சரணம்வேதா சாரிய வேந்தே சரணம்
தேவகி மைந்தா சிறியேன் சரணம்யசோத குமரா அடியேன் சரணம்
உன்னை விட்டொரு உறவுக ளில்லைஎன்னை விட்டொரு இனியவ னில்லை
நம்மை விட்டொரு நண்பர்க ளில்லைநன்மையில் உன்போல் நாயக னில்லை!
எங்கெங் கேநான் இருந்திடும் போதும்அங்கங் கேநீ அருள்செய வருக
கோசலை ஈன்ற குமரா வருககோதையின் மாலை கொண்டவன் வருக
ரகுவம் சத்தின் நாயகன் வருகயதுவம் சத்தின் யாதவன் வருக
மதுவை வென்ற மாதவன் வருகமலைக்குடி கொண்ட மாலவன் வருக!
திருப்பதி யாளும் திருமால் வருகதிருவரங் கத்துப் பெருமாள் வருக
இராவணன் கொடுமை தீர்த்தாய்; துன்பம்'இரா'வணம் எமக்கும் இன்னருள் புரிக
கம்சன் கொடுமை களைந்தோய் வருககாலனை வெல்லக் கைவலி தருக
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்காதில் குண்டலம் கையில் வில்லொடு
தண்டைக் காலில் சலங்கை குலுங்கஅண்டையில் வந்து அருளே புரிக
கெளரவர் காக்கக் கண்ணா வருகபார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவம் ம்கிழப் பரமே வருகமூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி அணைத்தேன்சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்கோக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன்இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவ னேநீ தயவுடன் அருள்க!கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையே அன்று!உன்னால் தானே உலக இயக்கம்
கண்ணனி லாமல் கடல்வான் ஏது?கண்ணனி லாமல் கடவுளு மில்லை
கண்ணனி லாமல் கவிதையு மில்லைகண்ணனி லாமல் காலமு மில்லை
கண்ணனி லாவிடில் காற்றே இல்லைஎத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்!சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிக ளிலை நீபேசிய பேச்சுஉலகில் போதும் ஒருமுறை மூச்சு
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்குஇங்கே நாங்கள் இருக்கும் வரையில்
சங்கு முழங்கு தர்மம் நிலைக்க!
பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்தொல்லை என்பது துளியு மிலாமல்
தொற்றும் நோய்கள் பற்றி விடாமல்முதுமை துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்எந்றும் பதினா றிளமை வழங்கு
இப்பணி தொடர அற்புதம் காட்டுதளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போ லிருந்து சாதம் ஊட்டுவாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு!உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டுசிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை அசைக்கபொலிபொலி பொலியெனப் புகழும்விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்ககலகல கலவெனக் காசுகள் சேர
தளதள தளவெனத் தர்மம் தழைக்கவரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்கஐயா சரணம் சரணம் சரணம்
அடியவன் வாழ்வில் நீயே கவசம்கவசம் கவசம் கவசம் கவசம்
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம்கவசம் கவசம் கவசம் கவசம்
வாழ்க்கை என்றும் கோபுரக் கலசம்!
அரிஒம் அரிஒம் அரிஒம் அரிஒம்
அவனே துணையென அறிவோம் அறிவோம்அரிஒம் அரிஒம் அரிஒம் அரிஒம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெயஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய!

- கண்ணதாசன்
Atchaya
Atchaya
ரோஜா
ரோஜா

Posts : 242
Points : 296
Join date : 02/03/2012

Back to top Go down

கண்ணதாசன் எழுதிய ஸ்ரீ கிருஷ்ணா கவசம்  Empty Re: கண்ணதாசன் எழுதிய ஸ்ரீ கிருஷ்ணா கவசம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 02, 2012 9:32 pm

பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கண்ணதாசன் எழுதிய ஸ்ரீ கிருஷ்ணா கவசம்  Empty Re: கண்ணதாசன் எழுதிய ஸ்ரீ கிருஷ்ணா கவசம்

Post by pakee Fri Mar 02, 2012 10:46 pm

பகிர்வுக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

கண்ணதாசன் எழுதிய ஸ்ரீ கிருஷ்ணா கவசம்  Empty Re: கண்ணதாசன் எழுதிய ஸ்ரீ கிருஷ்ணா கவசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum