தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
'காப்பியக் கவிஞர் வைரமுத்து...
3 posters
Page 1 of 1
'காப்பியக் கவிஞர் வைரமுத்து...
• 40 ஆண்டுகளுக்கு முன்னால் கிராமத்தை விட்டுச் சென்னைக்கு வந்தாலும் இன்னும் மண் வாசனை மறக்காதவர். இப்போது ஊருக்குச் சென்றாலும் சாமைச் சோறு, வரகுச் சோறு காலையில் தயிரோடு உண்கிறார். வல்லாரையும் தூதுவளையும் கட்டாயம் இருந்தாக வேண்டிய கீரைகள்!
• மற்ற மொழிக் கவிஞர்களுக்கு இவர் மீது மதிப்பு அதிகம். 'ஆளவந்தான்' படப் பாடல்கள் ஊட்டியில் தயாரானபோது, அதன் ஹிந்திப் பதிப்புக்குப் பாட்டெழுத வந்த ஜாவேத் அக்தர், 'முதலில் வைரமுத்து பாட்டு எழுதட்டும். அவர் கற்பனையைக் கடன் வாங்கிப் பாட்டு எழுதுவது எனக்கு வசதியாக இருக்கும்' என்று சொல்லி வைரமுத்து எழுதும் வரை சீட்டாடிக்கொண்டு இருந்தாராம்!
• 'காப்பியக் கவிஞர்' என்று அந்த நாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இவரை அழைத்தாலும், 'கவிசாம்ராட்' என்று அந்நாள் பிரதமர் வாஜ்பாய் இவரை விளித்தாலும், கலைஞர் வழங்கிய கவிப்பேரரசு பட்டம்தான் நிலைத்துவிட்டது!
• கள்ளிக்காட்டு இதிகாசத்தின் 5 பிரதிகளை வாட்டர் ஃப்ரூப் செய்து வைகை அணை நீரில் வீசி எறிந்திருக்கிறார். நாளை அணையே தூர்ந்துபோனாலும், அந்த மண்ணின் ஆவணமாக அது இருக்குமாம்!
• கவிஞருக்கு மருத்துவத் துறையில் ஏராளமான நண்பர்கள் உண்டு. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் யாருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும், அவரே டாக்டர்களுக்கு போன் செய்து, அப்பாயின்மென்ட் வாங்கி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார். உணவு, மருத்துவம், கல்வி இதற்குச் செய்வதுதான் உதவி; மற்றது எல்லாம் ஆடம்பரம் என்பது கவிஞரின் கருத்து!
• 'கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் விளம்பரப் படங்களில் தோன்றுவது இல்லை. குரல் கொடுப்பது இல்லை' என்று கொள்கை வைத்திருக்கிறார்!
• பி.சுசீலா, சித்ரா இருவருக்கும் ரசிகர். பி.சுசீலாவின் சில பாடல்களை சித்ராவின் குரலில் பாடவைத்து, தனக்கென்று ஒரு தனி சி.டி. வைத்திருக்கிறார் இறுக்கமான மனசுக்கு இதமாக இருக்கிறதாம்!
• பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்தபோது வெளியிட்ட 'வைகறை மேகங்கள்' என்ற முதல் கவிதைத் தொகுதி, இவர் மாணவராக இருந்தபோதே ஒரு மகளிர் கல்லூரியில் பாடமாக இருக்கும் பெருமை பெற்றதாம். இப்போது விற்பனையாகிக்கொண்டு இருப் பது வைகறை மேகங்களின் 29-ம் பதிப்பு!
• எந்த ஊரில் இருந்தாலும் எந்த நாட்டில்இருந் தாலும் காலை 7 மணிக்குக் கலைஞரோடு பேசத் தவற மாட்டார். 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறதாம் இந்தத் தொலைபேசிக் காதல்!
• 8 மணி நேரம் எடுத்துக்கொண்டு இவர் எழுதிய பாடல்: 'சங்கீத ஜாதி முல்லை' (காதல் ஓவியம்) 8 நிமிடத்தில் எழுதி முடிக்கப்பட்ட பாடல்: 'எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ!' (பாட்ஷா).
• கவிஞராக இருந்தாலும், இவர் ஒரு சிறுகதைப் பைத்தியம். ஓ ஹென்றி, மாப்பசான், ஆண்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி முதல் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, தஞ்சை பிரகாஷ் வரை உலக, உள்ளூர்ச் சிறுகதைகளைச் சேர்த்து வைத்திருக்கிறார்!
• '7 ஆயிரம் பாடல்கள், 34 புத்தகங்கள், மூன்று முறை உலகை வலம் வந்த அனுபவங்கள்... என்று இயங்கிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இளமை தீர்வதில்லை' என்பார்!
• தனக்குப் பரிசாகக் கிடைக்கும் தங்க நகைகளை ஒருபோதும் அணிந்துகொள்ள மாட்டார். உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, பணியாளர்களுக்கோ, திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்களுக்கோ கொடுத்துவிடுவார். ஆனால், அண்ணாமலை, 'பாட்ஷா, முத்து, அருணாசலம் படங்களுக்கு ரஜினி தந்த தங்கச் சங்கிலிகளைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்!
• இரவு எவ்வளவு தாமதமாகத் தூங்கச் சென்றாலும், அதிகாலை 5 மணிக்கு எழுந்து நடைப் பயிற்சிக்குத் தயாராகிவிடுவார். இவரோடு யாரும் உடன் நடப்பதில்லை. நடந்தால் ஓட வேண்டி இருக்கும், அவ் வளவு வேகம்!
• கவிஞரின் ஆடைகள் சென்னையில் வெளுக்கப்படுவதில்லை. எல்லாத் துணிகளும் ஊருக்கு அனுப்பப்பட்டு சலவை செய்யப்பட்டு வருகின்றன. 20 ஜோடி போகும்; 20 ஜோடி திரும்பும். 'தண்ணீருக்கும் சலவைக்கும் சம்பந்தம் இருக்கிறது' என்பார்!
• கவிஞருக்கு மிகவும் பிடித்த உணவு: அம்மா அங்கம்மாள் வைக்கும் கோழிச் சாறும் குழைந்த சோறும்!
• கவிஞர் பேசினால் இளைய மகன் கபிலன் கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால், மூத்த மகன் கார்க்கியைப் பேசவிட்டுக்கேட்டுக் கொண்டே இருப்பார்!
• மருத்துவமனையில் இருந்தும், சிறை யில் இருந்தும் வரும் கடிதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் பதில் போடும் பழக்கம்கொண்டவர்!
• வாய்விட்டுச் சிரிப்பார்; சிரித்தால் பக்கத்து ஆளை அடிப்பார். அதனால் எல்லோரும் இரண்டு அடிகள் தள்ளியே உட்கார்வார்கள்!
• இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 5 முறை பெற்றவர். அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் மாநில விருதோடு சேர்த்து இரண்டு விருதுகளும் தலா 5 என்று சமன் செய்துவிட்டார்!
• 'அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்' இவரது கவிதைகளை, இவரது குரலில் ஒலிப்பதிவு செய்து, உலக இலக்கிய ஆவணங்களில் ஒன்றாக வாஷிங்டன் டி.சி-யில் பாதுகாத்து வருகிறது!
• கிராமத்து வரப்புகளில் நடக்கும்போது தொட்டாற்சிணுங்கிச் செடிகளைக் கண்டால் அப்படியே உட்கார்ந்துவிடுவார். தொட்டுத் தொட்டு அந்த இலைகள் அடங்கும் அழகை ரசிப்பார். சில நேரங்களில் மீண்டும் விரியுமா என்று காத்திருப்பதும் உண்டு!
• தான் மற்றவருக்குச் செய்ததை மறந்துவிடுவார். மற்றவர்கள் தனக்குச் செய்ததை மறக்கா மாட்டார். தன் வீட்டு வரவேற்பறையில் உள்ள ''ஏ.சி... ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிக் கொடுத்தது'' என்று பலபேருக்குச் சொல்லி இருக்கிறார்!
• கனடா நாட்டு அரசாங்கத்தோடு இணைந்து ஒரு தமிழ் அமைப்பு, இவர் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இவரது அஞ்சல் தலை ஒட்டப்பட்டு இவருக்கு வந்த தபாலை இவரே பிரித்தார்!
• கவிஞரின் தோட்டத்துப் பண்ணை வீட்டில் இரண்டு உரல்கள் இருக்கின்றன. அவை தாய்வழி-தந்தைவழி தாத்தாக்களின் வீட்டில் இருந்தவையாம். வைகை அணைக்குள் மூழ்கிப்போன மெட்டூர், கரட்டுப்பட்டி இரண்டு ஊர்களில் இருந்தும் தோண்டி எடுத்து வரப்பட்டவை

dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: 'காப்பியக் கவிஞர் வைரமுத்து...
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 'காப்பியக் கவிஞர் வைரமுத்து...
மிகச்சிறந்த கவிஞர். இளையாராஜாவின் வரட்டு வீம்பினால் கிட்டத்தட்ட 10 வருடம் அவரை பாட்டு எழுத விடாமல் ஆக்கிவிட்டது.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Similar topics
» தமிழின் தேவை கவிஞர் வைரமுத்து ...
» ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 4. தத்துவம்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 2. காதல்
» கவிஞர் வைரமுத்து குறளுக்கு குரல் கொடுத்து பாடகரானார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum