தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தொட்டு விடும் தூரம் தான் வெற்றி கவிஞர் இரா.இரவி
2 posters
Page 1 of 1
தொட்டு விடும் தூரம் தான் வெற்றி கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் கவிதாசன்
கோவை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.பழனிக்குமார் இஆப அவர்களின் அணிந்துரை இந்த
நூலின் வரவேற்பறையாக உள்ளது. “கோவைக்கு கிடைத்த மிகப்பெரிய கவிதைச் சொத்து” என்று நூலாசிரியர் கவிஞர் கவிதாசன் பற்றி குறிப்பிடுகின்றார், உண்மை தான். கவிஞராக இருந்து தன்முன்னேற்ற சிந்தனையில் கால் பதித்து, வெற்றிக் கொடி நாட்டி வரும் நூலாசிரியரின் பெருமைமிகு படைப்பு. நூலைப் படிப்பதற்கு முன் வாசகர் மனநிலைக்கும், படித்து முடித்த பின் உள்ள மனநிலைக்கும் உள்ள முன்னேற்றமே இந்த நூலின் வெற்றி.
தினந்தந்தி நாளிதழில், வாரந்தோறும் “இளைஞர் மலரில்” வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தினந்தந்தியில் வந்த போது ஆர்வமாக இக்கட்டுரை படித்து வந்த வாசகன் நான். இதனை நூலாகப்படிப்பதில் கூடுதல் மகிழ்ச்சி. நூலாசிரியர் இல்லத்தின் பெயரே “கவியரங்கம்” என்றால்
பாருங்கள். கவிதையின் மீது அவருக்கு எவ்வளவு ஈடுபாடு இருக்கும். பல்வேறு விருது, பாராட்டு பெற்ற போதும் கவிஞர் என்பதை மட்டுமே தன் பெயரில் சேர்த்துக் கொண்டவர். எனக்கும் நூலாசிரியருக்கும் ஒரு ஒற்றுமை, நானும் கவிஞர் என்பதை மட்டுமே என் பெயருடன் பயன்படுத்தி வருகிறேன்.
இந்நூலில் 20 கட்டுரைகள் உள்ளது. கட்டுரைகளின் தலைப்பைப் படித்தாலே நமக்குள் தன்னம்பிக்கை விதை விதைக்கப்படுவதை உணருவீர்கள். எல்லாம் உன் கையில், நம்புங்கள் முடியும், தன்னம்பிக்கை தரும் வெற்றி, சிறகை விரி! பிறகு சிரி!! முயன்றால் இமயமும் இடுப்பளவு தான், எண்ணங்களே
ஏணிப்படிகள்,வெற்றியின் விலாசம், முன்னேற்றத்தின் முகவரி, வெற்றியின்
விருதுகள், வெற்றியின் ரகசியம், திட்டம் தரும் வெற்றி, நம்பிக்கை தரும்
வெற்றி, அறிவுச்சுடர் ஏற்றுங்கள், சிந்தனையே சிறந்த தொடக்கம், துணிவே
தோழன், வியர்வைப் பூக்களில் வெற்றித் தேன், பிறந்தது வெல்வதற்கே,
அச்சத்தை அகற்றுங்கள், ஆர்வம் பொங்கட்டும், முயற்சிகளே மூலதனம் – இந்த
தலைப்புகளை இன்னோரு முறை வாசித்துப் பாருங்கள், நூலின் சிறப்பை உணர்ந்து
விடுவீர்கள்.
ஒரு கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக
மிகச் சிறந்த கட்டமைப்பு, சொல்லாட்சி, மேற்கோள்கள், இதயத்தில் பதியும்
கவிதை வரிகள் என மிக நேர்த்தியாக எழுதி உள்ளார், ஒவ்வொரு கட்டுரையும்
கவிஞரின் வைர வரிக் கவிதைகளால் தொடங்கப்பட்டு முத்தாய்ப்பாக முத்திரை
வரிகளால் முடிவு பெறுகின்றது.
“எல்லாம் உன் கையில்” கட்டுரையில்,
முடியும் என்றால் முடியும் – உன் முயற்சிகள் தொடர்ந்தால்
முடியும், வெற்றியின் விடியல் தொடரும் – அது
வியர்வையின் விலாசம் எழுதும் என்று தொடங்கி
முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் நம்மைச் சிறை பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் நமக்கு வழி கொடுக்கும்
இந்த வரிகளைப் படிக்கும் வாசகனுக்கு புத்துணர்வு பிறப்பது உறுதி என்று
அறுதியிட்டுக் கூறலாம்.
முடியாது என்று முடங்கி விட்டால் மூச்சுக்காற்று நின்று விடும் முடியும்
என்று துணிந்து விட்டால் மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும்
சிந்தனை விதைக்கும் சின்னச் சின்ன கதைகளும் உண்டு. அறிவார்ந்த அக்பர்,
பீர்பால் கதையும் உள்ளது. ஒரு கோட்டை அழிக்காமல் சிறிதாக்குவது எப்படி
என்ற கேள்விக்கு அருகில் ஒரு பெரிய கோட்டைப் போட்டு, பழைய கோட்டை
சிறிதாக்கும் யுத்தியை விளக்குகின்றது. இதில் பெரிய தத்துவமே உள்ளது.
நாம் வளர்ந்து விட்ட ஒருவரை அழிக்க எண்ணாமல், நம் முயற்சியால், உழைப்பால்
அவரை விட உயர்ந்து காட்டும் உன்னதத்தை விளங்குகின்றது நூல்.
நமது இரண்டு கைகளையும் இயக்குகின்ற மூன்றாவது கை தான் தன்னம்பிக்கை
இந்த கூற்று முற்றிலும் உண்மை. எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும்
இழக்காமல் தொடர்ந்து முயற்சி செய்தால் இலட்சியத்தை அடைவது நிச்சியம்
என்பதை உணர்த்துகின்றது. சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஒரு பெண்
இரண்டு கைகளும் இல்லாமல் கால்களாலே விமானம் ஓட்டுகிறார், காரத்தே பிளாக்
பெல்ட் வாங்கி உள்ளார், நீச்சல் அடிக்கிறார், கார் ஓட்டுகிறார், இரு
கால்களையே கைகளாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். இந்தப் பெண்மணிக்கு
மூன்று கைகளும் தன்னம்பிக்கை என்பதை உணர்ந்தேன்.
பறக்க பறக்கத் தான் சிறகுகள் பலப்படும்
உழைக்க உழைக்கத் தான் உயர்வுகள் உனதாகும்
சிலர் உழைக்காமல் வீட்டிற்குள்ளே சோம்பி இருந்து விட்டு வெற்றி
கிடைக்கவில்லை சாதனை புரியவில்லை, ஜாதகம் சரியில்லை, நேரம் சரியில்லை என
புலம்பும் மனிதர்கள், இந்த நூலைப் படித்துத் திருந்த வேண்டும்.
தவறுவது தவறில்லை, தவறுகளில் இருந்து கற்றுக்
கொள்ளத்
தவறுவதே தவறு
எண்ணங்களே வாழ்க்கையின் வண்ணங்கள்
எண்ணங்களை மாற்றினால் வாழ்கையை மாற்றலாம்.
சிந்தையை செதுக்கும் வைர வரிகள். இப்படி நூல் முழுவதும் சிந்தனைக்கு
விருந்தாக செய்திகள் பல உள்ளன. பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என
சராசரி வாழ்க்கை வாழாமல் பிறந்தோம், சாதித்தோம், சுவடினைப் பதிப்போம் என
உன்னத வாழ்க்கை வாழ உதவிடும் ஒப்பற்ற நூல். கணினி யுகத்திலும் நூல்கள்
நம் வாழ்வில் மாற்றத்தை, உயர்வை உருவாக்கும் என்பதற்கு உதாரணம் இந்த
நூல். தன் முன்னேற்ற சிந்தனை நூல்கள் பல படித்துள்ளேன். ஆனால் இந்த நூல்
சிறப்பாகவும், தனித்துவமாகவும் உள்ளது. ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: தொட்டு விடும் தூரம் தான் வெற்றி கவிஞர் இரா.இரவி
தொட்டுவிடும் தூரம் தான் வெற்றி, நூலின் தலைப்பே ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது, முயன்றால் முடியாதது இல்லை என்ற தன்னம்பிக்கை பொக்கிஷமாய் விளங்குகிறது நூல்.
தவறுவது தவறில்லை
தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள
தவறுவதே தவறு
என முத்தாய்ப்பாய் சொல்லியிருக்கிறார் ஆசிரியார்
பல வீழ்ச்சிகளின் முடிவில் பூக்கின்ற பூக்கள் தானே வெற்றி என தங்களின் மதிப்புரையால் மணம் வீசுகின்றது இந்த தன்னம்பிக்கை மலர்.
தவறுவது தவறில்லை
தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள
தவறுவதே தவறு
என முத்தாய்ப்பாய் சொல்லியிருக்கிறார் ஆசிரியார்
பல வீழ்ச்சிகளின் முடிவில் பூக்கின்ற பூக்கள் தானே வெற்றி என தங்களின் மதிப்புரையால் மணம் வீசுகின்றது இந்த தன்னம்பிக்கை மலர்.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Similar topics
» தொட்டு விடும் தூரம் தான் வெற்றி , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி
» துளிர் விடும் விதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் வி. கிரேஸ் பிரதிபா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்! கவிஞர் இரா. இரவி
» சிறிய மாற்றம் பெரிய வெற்றி நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வெற்றி உங்களை அழைக்கிறது நூலாசிரியர் : கவிஞர் நீல நிலா செண்பகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» துளிர் விடும் விதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் வி. கிரேஸ் பிரதிபா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்! கவிஞர் இரா. இரவி
» சிறிய மாற்றம் பெரிய வெற்றி நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வெற்றி உங்களை அழைக்கிறது நூலாசிரியர் : கவிஞர் நீல நிலா செண்பகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum