தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பங்குச் சந்தையில் பலத்த அடிவாங்கும் பேஸ்புக்!: தொடர்ச்சியாகச் சரியும் பங்கின் விலை

2 posters

Go down

பங்குச் சந்தையில் பலத்த அடிவாங்கும் பேஸ்புக்!: தொடர்ச்சியாகச் சரியும் பங்கின் விலை Empty பங்குச் சந்தையில் பலத்த அடிவாங்கும் பேஸ்புக்!: தொடர்ச்சியாகச் சரியும் பங்கின் விலை

Post by RAJABTHEEN Fri May 25, 2012 12:40 pm

ஆரம்ப பொது வழங்கல் (Initial public offering, அல்லது IPO) எனப்படுவது, ஒரு
நிறுவனம் தனது பொதுப் பங்குபத்திரம் மற்றும் பங்குகளை முதல் முறையாக
வெளியிடுவதைக் குறிக்கின்றது.இது நிறுவனங்கள் தமது வியாபாரத்தை விரிவாக்கும் பொருட்டு தேவையான நிதியினைத் திரட்டிக்கொள்வதற்கான ஒரு வழியாகும்.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமன்றி பாரிய நிறுவனங்களும் இதனை நிதிதிரட்ட உபாயமாகக் கையாள்கின்றன.

அவ்வகையில் தற்போது பரபரப்பாக அனைவரையும் பேசவைத்துள்ள ஒரு விடயம் பேஸ்புக்கின் பங்குச்சந்தைப் பிரவேசமாகும்.

சமூகவலையமைப்பு
மற்றும் இணைய உலகில் ஜாம்பவானான பேஸ்புக்கின் ஆரம்பப் பொதுப் பங்கு
வழங்கல் ( IPO- Initial public offerings) கடந்த வெள்ளிக்கிழமை
ஆரம்பமாகியது.

நஸ்டக் (Nasdaq stock market) மூலமாக பேஸ்புக் தனது பங்கு விற்பனையை ஆரம்பித்தது.

பேஸ்புக்கின் பங்குச்சந்தைப் பிரவேசமானது உலக அளவில் பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.

இதற்குப்
பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக எவ்வித உறுதியான அடித்தளமுமின்றி அதாவது
சாதாரண பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளமொன்று இணைய
உலகில் தவிர்க்கமுடியாத பாரிய நிறுவனமாக வளர்ந்தமையாகும்.

மேலும்
தனது மூலதனமாக அதன் பாவனையாளர்களின் தரவுகளைக் கொண்ட நிறுவனம்
பங்குச்சந்தையில் நுழைந்தமையும், பங்குகள் மூலம் திரட்ட எதிர்பார்த்திருந்த
பிரமாண்ட தொகையுமாகும்.

பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான (Initial public offering) முதற்கட்ட நடவடிக்கையை கடந்த பெப்ரவரி மாதமளவில் ஆரம்பித்தது.

பேஸ்புக்
தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான ஆவணங்களை அமெரிக்க பிணையங்கள் பரிவர்த்தனை
ஆணைக்குழுவிடம் (US Securities and Exchange Commission) அம்மாதத்திலேயே
சமர்ப்பித்தது.

இவ் வழங்கலின் மூலம் முதற்கட்டமாக 5 - 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியினை ஈட்டிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

பேஸ்புக்
பங்குகளை விநியோகிப்பது தொடர்பில் நஸ்டக் (Nasdaq stock market) மற்றும்
நியூயோர்க் பங்குச் சந்தை (New York Stock Exchange) ஆகியவற்றின் இடையே
அத்தருணத்தில் கடும் போட்டியே நிலவியது.

அத்தருணத்தில் வோல்ஸ்ரீட்டில் பேஸ்புக் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

அதற்கான காரணம் முதலீட்டாளர்கள் பலர் பேஸ்புக்கில் முதலிட முன்வந்தமையாகும்.

பேஸ்புக்கின் ஆரம்ப பொது வழங்கல் ஆரம்பம்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பங்குச் சந்தையில் பலத்த அடிவாங்கும் பேஸ்புக்!: தொடர்ச்சியாகச் சரியும் பங்கின் விலை Empty Re: பங்குச் சந்தையில் பலத்த அடிவாங்கும் பேஸ்புக்!: தொடர்ச்சியாகச் சரியும் பங்கின் விலை

Post by RAJABTHEEN Fri May 25, 2012 12:40 pm

கடந்த வெள்ளிக்கிழமை 18/5/2012 அன்று கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக்
தலைமையகத்தில் நடைபெற்ற அறிமுகவிழா மற்றும் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து
பேஸ்புக்கின் பங்கு வழங்கல் தொடங்கியது.


இவ்வழங்கலின் மூலமாக பேஸ்புக் 15-20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஈட்டிக்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சந்தை
மூலதனத்தின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பங்குச்சந்தையான
அமெரிக்க நெஸ்டக் (NASDAQ - National Association of Securities Dealers
Automated Quotations) மூலம் பங்கு விநியோகங்கள் ஆரம்பமாகின.

'FB' எனும் குறீயீட்டின் கீழ் ஆரம்பமாகிய இப் பங்கு வழங்கலின் போது 421,233,615 பங்குகள்( 421 மில்லியன்) விற்பனைக்கு வந்தன.

இவ் எண்ணிக்கை அமெரிக்க சனத்தொகையை விட அதிகமாகும்.

சுமார்
72,759 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தைமூலதனமாகக் கொண்டுள்ள பேஸ்புக்
பங்கொன்றின் ஆரம்ப விலை 38$ அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எதிர்பார்க்கப்பட்ட
தொகையினை விட இது சற்று அதிகமாகக் காணப்பட்டதுடன் ஆரம்பத்திலேயே
முதலீட்டாளர்களை சற்று கலக்கத்துக்குள்ளாக்கியிருந்தது.

எனினும்
நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு 11% அதிகமாக சுமார் 45 அமெரிக்க டொலருக்கு சென்ற
பங்குவிலையொன்று அன்றைய தின சந்தை நடவடிக்கைகளின் முடிவில் பங்கொன்றின்
விலை 38.23 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

இதேவேளை திங்கட்கிழமை பங்கொன்றின் விலை 34.03 டொலர்களாக வீழ்ச்சியடைந்தது.

நேற்று செவ்வாய்க்கிழமை சந்தை நடவடிக்கைகளின் முடிவின் போது பங்கொன்றின் விலை 31 அமெரிக்க டொலர்களாக இருந்தது.

இது ஆரம்பவிலையான 38 அமெரிக்க டொலர்களை விட 18% வீழ்ச்சியாகும்.

இது முதலீட்டாளர்களை பேஸ்புக்கின் பங்குகள் மீதான நம்பிக்கையைக் குறையச் செய்துள்ளதுள்ளதுடன் பெரும் ஏமாற்றத்தினை அளித்துள்ளது.

தொடர்ந்து பங்கொன்றின் விலை வீழ்ச்சியடைந்தது.

இவ்வீழ்ச்சி நிலை தொடரும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பேஸ்புக்
பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தமையினால் 104 பில்லியன் டொலர்கள் எனக்
கணிக்கப்பட்ட அதன் சந்தைப்பெறுமதி தொடர்ச்சியாகக் குறைந்துள்ளது.

இதுமட்டுமன்றி
பேஸ்புக்கில் 503.6 மில்லியன் பங்குகளைக்கொண்டுள்ள ஷூக்கர் பேர்க்கின்
பங்குகளின் மொத்த பெறுமதியும் 19.25 பில்லியன் டொலர்களில் இருந்து
வீழ்ச்சியடைந்துள்ளது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பங்குச் சந்தையில் பலத்த அடிவாங்கும் பேஸ்புக்!: தொடர்ச்சியாகச் சரியும் பங்கின் விலை Empty Re: பங்குச் சந்தையில் பலத்த அடிவாங்கும் பேஸ்புக்!: தொடர்ச்சியாகச் சரியும் பங்கின் விலை

Post by RAJABTHEEN Fri May 25, 2012 12:41 pm

பேஸ்புக்கின் பங்குகளை ஆரம்பத்தில் கொள்வனவு செய்தவர்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளமையினால் பலத்த நட்டமடைந்துள்ளனர்.

பேஸ்புக் பங்கு விலை தளம்பலுக்கு அவதானிகள் பல காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவையாவன:

1.
அதிக எண்ணிக்கையிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டமை. அதாவது 421
மில்லியன் பங்குகள் என்பது ஒப்பீட்டளவில் மிகப்பெரியதொரு எண்ணிக்கையாகும்.

2.
வாக்களிக்கும் உரிமை கொண்ட சாதாரண பங்குகளின் பெரும்பான்மையை ஷூக்கர்
பேர்க் கொண்டுள்ளமை. பேஸ்புக்கில் அதிக பங்குகளைக் கொண்ட தனிநபராக அதன்
ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் திகழ்கின்றார்.

அவர் பேஸ்புக்கில் 28.4 % வாக்குரிமைகொண்ட சாதாரணபங்குகளைக் கொண்டுள்ளார். அதுவாக்குரிமையின்படி 56.9% ஆகும்.

3.
பேஸ்புக்குடன் அதன் எதிர்கால வருவாய் மார்க்கங்கள் தொடர்பில் தெளிவான
கொள்கையைக் கொண்டிராமை .உதாரணமாக கையடக்கத்தொலைபேசி ஊடாக பேஸ்புக் பாவனை
அதிகரித்து வருகின்றமையால் அவற்றில் காட்சிப்படுத்தும் விளம்பரங்களின்
எண்ணிக்கை குறைவாகும். இவ்விடயம் தொடர்பில் பேஸ்புக் பாரிய சிக்கல்களுக்கு
முகங்கொடுத்துள்ளது.

விளம்பர வியாபாரத்தில் கூகுள் போன்ற நிறுவனத்தின் அளவிற்கு பேஸ்புக் இதுவரை வளர்ச்சியடையவில்லை.

அதுமட்டுமன்றி
பங்கு வழங்கல் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனது ஆரம்ப பொது
வழங்கலுக்கான ஆவணங்களின் எதிர்கால வருவாய் தொடர்பில் சில மாற்றங்களை
மேற்கொண்டமை.

பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கல்கலுக்காக மோகன்
ஸ்டேன்லீ போன்ற முதலீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து செயற்பட்டது. பேஸ்புக்
தனது வருவாய் தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுவதினை இந்நிறுவனங்களுக்கு
தெரிவித்தமையும், அம் முதலீட்டு நிறுவனங்கள் தமது வாடிக்கயாளர்களிடம் அத்
தகவல்களைத் தெளிவுபடுத்தியமையும் பங்கு மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம்
குறையக் காரணமாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பங்குகளை வாங்கியவர்கள் அதனை உடனடியாக விற்பனை செய்யத் தொடங்கியமை.

4. எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகப்படியாக நிர்ணயிக்கப்பட்ட விலை.

5.
அமெரிக்க நெஸ்டக் (NASDAQ - National Association of Securities Dealers
Automated Quotations) பங்குச்சந்தையானது பங்கு விற்பனையை ஒழுங்கான
முறையில் கையாளாமை.

வெள்ளிக்கிழமை பங்கு விற்பனை ஆரம்பிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட நேரத்தினை விட தாமதமாகவே வியாபார நடவடிக்கைகள் தொடங்கின.

அதிகப்படியான 'ஓடர்கள்' பெறப்பட்டமையால் அதனை நெஸ்டக் (NASDAQ) இனால் கையாளமுடியவில்லை.

முதலீட்டாளர்களால்
வழங்கப்பட்ட 'ஓடர்களை' உரிய நேரத்தில் நெஸ்டக் தவறிவிட்டதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஏற்பட்ட தாமத்தினால் முதலீட்டாளர்கள்
அசௌகரியத்திற்கு ஆளாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நெஸ்டக் நிறுவனத்தின் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறே இப்பிரச்சினைகளுக்கு மூல காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

6. ஐரோப்பிய சந்தைகளில் நிலவும் பொருளாதார வீழ்ச்சி

7.ஊடகங்கள் விடயங்களை பெரிதுபடுத்திக்காட்டுதல்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பங்குச் சந்தையில் பலத்த அடிவாங்கும் பேஸ்புக்!: தொடர்ச்சியாகச் சரியும் பங்கின் விலை Empty Re: பங்குச் சந்தையில் பலத்த அடிவாங்கும் பேஸ்புக்!: தொடர்ச்சியாகச் சரியும் பங்கின் விலை

Post by RAJABTHEEN Fri May 25, 2012 12:41 pm

பேஸ்புக் தொடர்பான செய்திகளைக் குறிப்பாக இப் பொது வழங்கலில் ஏற்பட்ட
சிறிய விடயங்களை ஊடகங்கள் பெரிதுபடுத்திக் காட்டிவிட்டதாகவும் இவை
முதலீட்டாளர்களில் உளவியல் ரீதியான 'emotional trading' தாக்கங்களை
ஏற்படுத்திவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக
பேஸ்புக்கின் விளம்பர வாடிக்கையாளரான ஜெனரல் மோட்டர்ஸ் பேஸ்புக்கில்
இருந்து தனது விளம்பரங்களை அகற்றிக்கொள்ளப்போவதாக அறிவித்தமை.

இதற்குமுன்
ஆரம்ப பொது வழங்கலில் ஈடுபட்ட இணைய நிறுவனங்கள் சிலவற்றின் பங்குவிலையில்
ஏற்பட்ட வீழ்ச்சி என பல காரணங்கள் தற்போது தெரிவிக்கப்படுகின்றன.

எது எவ்வாறாயினும் இணைய உலகில் ஜாம்பவானான பேஸ்புக்கிற்கு பங்குச்சந்தையில் பாரிய அடிவிழுந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.

அமெரிக்க
வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ஆரம்ப பொது வழங்கல்களில் ஒன்றான
பேஸ்புக் ஆரம்பப் பொதுவழங்கல் புஸ்வானமாகிப்போனமை சற்றுக் கவலையான விடயம்.
[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பங்குச் சந்தையில் பலத்த அடிவாங்கும் பேஸ்புக்!: தொடர்ச்சியாகச் சரியும் பங்கின் விலை Empty Re: பங்குச் சந்தையில் பலத்த அடிவாங்கும் பேஸ்புக்!: தொடர்ச்சியாகச் சரியும் பங்கின் விலை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 28, 2012 12:17 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பங்குச் சந்தையில் பலத்த அடிவாங்கும் பேஸ்புக்!: தொடர்ச்சியாகச் சரியும் பங்கின் விலை Empty Re: பங்குச் சந்தையில் பலத்த அடிவாங்கும் பேஸ்புக்!: தொடர்ச்சியாகச் சரியும் பங்கின் விலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum