தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெண்கள் உலகின் கண்கள் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Nov 01, 2024 6:43 pm

» உணவே மருந்து
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:05 pm

» மணம் கேட்கும் மலர்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:04 pm

» சுமைக்குள் இருப்பது
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:02 pm

» பக்கத்து இருக்கையில் மனசு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:00 pm

» மகள் இருந்த வீடு- கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:58 pm

» போர் பூமி
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:56 pm

» வேண்டாம் வெறுமை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm

» கிறுக்கல்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm

» வாழ்வதே இலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:54 pm

» மது விலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:52 pm

» மனதோடு மழைக்காலம்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:51 pm

» தீபாவளித் திருநாள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:50 pm

» இலக்கைத் தொடு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:49 pm

» தீபாவளி பக்கத்தில் வந்துருச்சுனு அர்த்தம் !
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:20 pm

» போருக்கும் அக்கப்போருக்கும் வித்தியாசம்…
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:19 pm

» நம்பிக்கை இருக்கும் இடத்தில்...
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:16 pm

» வடை, காபி சாப்பிட வாக்கிங் போறவன்….
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:14 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

2 posters

Go down

சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி Empty சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Thu Jun 24, 2010 12:17 pm


* நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகலைவன்


ஏகலைவன் என்ற பெயரைக் கேட்டதும் எல்லோருக்கும் குரு தட்சணையாக கட்டைவிரலை கேட்ட கதை தான் நினைவிற்கும் வரும்.ஆனால் இந்நூல் ஆசிரியர் ரயில் விபத்தில் ஒருவருக்கு உதவியதால் ஒரு காலை இழந்தவர். தாயின் வயிற்றில் இருக்கும் போது,வளர்ந்திட்ட போது,இரயில் விபத்தின் போது மூன்று முறை மரண வாயிலை எட்டிப்பார்த்தவர்.கால் ஒன்றை இழந்தாலும் கட்டை இரண்டை ஏந்தி தன்னம்பிக்கை யோடு வலம் வரும் இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன்.

ஊனமுற்றோர் என்ற சொல்லை தவிர்த்து மாற்றுத்திறன் உடையோர். இன்று நிலை பெற்று விட்டது. அவர்களது சாதனை இன்று கொடிகட்டி பறக்கின்றது. உடல் நலத்தோடு உடலில் எந்தக்குறையுமின்றி திடகாத்திரமாக இருந்து கொண்டு உழைக்காமல் சோம்பேறியாக வாழ்க்கையை கழிக்கும் வீணர்களின் கன்னத்தில் அறைவது போல உள்ளது. உடலில் குறை உள்ளவர்கள் எல்லாம் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தும் போது உடலில் குறையில்லாதவர்கள் மனக்குறையோடு வாழ்வதை விடுத்து மாற்றுத்திறன் உடையவர்களின் சாதனைகளைப் படித்தபின்பாவது முயற்சி பயிற்சி செய்து சாதிக்க முன்வர வேண்டும்.அத்தகைய தூண்டுதலை தூண்டும் வண்ணம் உள்ளது இந்நூல் படித்துவிட்டு வைத்துவிடும் சராசரி நூல் அல்ல இது.

ஆணிற்குப்பெண் எந்த விதத்திலும் எந்தத் துறையிலும் சளைத்தவர்கள் அல்ல என சகல விதத்திலும்,சகல துறையிலும் சாதனை புரிந்திடும் காலம் இது. மாற்றுத்திறன் படைத்தவர்கள் ஆண்கள் மட்டுமல்ல மாற்றுத்திறன் படைத்தவர்கள் பெண்களும் ஏராளம் உண்டு என மெய்பிக்கும் நூல். பத்து பெண்களின் சாதனையை பட்டியல் இட்டு உள்ளார்.

பெண் கவிஞர்கள் சல்மா ஆண்டாள்,பிரியதர்ஷினி ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றன. வழக்கறிஞர் செல்வி.ம.மோகனாம்பாள் ஆய்வுரை அற்புதம். சுயம் தேடும் முயற்சியில் ஏகலைவனின் என்னுரை மிகச்சிறப்பாக நூலின் நோக்கத்தை பறைசாற்றுகின்றது.

பூர்ணோதயா பெ.கலையரசி சிறந்த ஊனமுற்ற பணியாளர் விரு பெற்று உள்ளார். நம்பிக்கை மனுஷி இப்படி வரிசையாக மாற்றுத்திறன் படைத்த பெண்கள் முனைவர் சுமதி,பேராசிரியை ராதாபாய்,வருவாய் ஆய்வாளர் செல்வசுந்தரி,சதுரங்க வீராங்கனை ஜெனிதா ஆண்டோ,ஓவியக்கலைஞர் பிரபாவதி,வளரும் எழுத்தாளர் சாந்தி ராபர்ட்ஸ்,ஆய்வியல் மாணவி பிரியா,தன்னம்பிக்கை சகோதரிகள் வானவன் மாதேவி – இயல் இசை வல்லபி என பத்து மாற்றுத்திறன் படைத்தவர்கள் சகலகல வல்லவர்களாக இருந்து,தானும் உயர்த்தி தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்தி கலைத்தொண்டு,கல்வித் தொண்டு புரிபவர்களாக சமுதாயத்தில் மதிக்கப்படுபவர்களாக வாழ்ந்து வருவதை நன்கு பதிவு செய்துள்ளார்.

ஊனம் என்பதை மறந்துவிட்டு அளப்பரிய சாதனையை எப்படி? நிகழ்த்தினார்கள்.தான் உயர்ந்தது மட்டுமின்றி தன்னைச் சார்ந்த மாற்றுத்திறன் உடையவர்களையும் எப்படி? உயர்த்தினார்கள் என்பதை மிகச்சிறப்பாக விளக்கி இருக்கிறார்.நூலின் நடை மிகவும் எளிய நடை எல்லோருக்கும் எளிதில் விளங்கும் சொற்கள். இப்படி நூலின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

கவிஞர் ஏகலைவன் எம்.ஏ., வரை பயின்று,பெரியார் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்துகொண்டு,தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறன் உடைய சாதனையாளர்களின் முகவரி கேட்டறிந்து உடன் சென்று சந்தித்து நேர் முகம் கண்டு பதிவுசெய்து அதனை நூலாக்கி சமூகத்திற்கு வழங்கும் உயர்ந்த உள்ளம் கண்டு வியந்து போகின்றேன். எனக்கு மனச் சோர்வு வரும் போதெல்லாம் கவிஞர்.ஏகலைவன் அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர். பார்வையற்ற திரு.பழனியப்பன் இருவரையும் நினைத்துக் கொள்வேன். உடனே மனச்சோர்வு அகன்று சுறுசுறுப்பு பிறக்கும்.எனக்கு முன்மாதிரியாக இருப்பவர்கள் இவர்கள்.

பத்து மாற்றுத்திறன் உடைய சகோதரிகளின் வரலாற்றை மிக அழகாக பதிவு செய்து உள்ளார். இலக்கிய உலகம் இந்த நூலை வாங்கிப் படித்து கவிஞர் ஏகலைவனுக்கு உதவுவது மட்டுமல்ல சக நண்பர்களுக்கும் வாங்கி அன்பளிப்பு வழங்குங்கள். இந்த நூலைப் படித்தால் படித்த அனைவருக்கும் தன்னம்பிக்கை நிச்சயம் பிறக்கும் நமக்குள் இரசாணய மாற்றம் நிகழ்த்தும் அற்புத நூல்
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி Empty Re: சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

Post by eeranila Tue Jul 06, 2010 4:11 pm

அரியதோர் சாதனையாளர்களை அடையாளம் காட்டியுள்ளார் நூலசிரியர், பாறையிலும் பூ மலரும் என படிப்போர் மனதை பக்குவப்படுத்தியுள்ளார், இல்லாமை என்பதைவிட இயலாமை ஒரு பெரும் தடையல்ல சாதனைக்கு என உணர்த்தியுள்ளார் இந்த சமுகத்திற்க்கு. வாழ்த்துக்கள்
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி Empty வணக்கம் மிக்க நன்றி அன்புடன் இரா .இரவி

Post by eraeravi Tue Jul 06, 2010 5:49 pm

வணக்கம் மிக்க நன்றி
அன்புடன் இரா .இரவி :shock:
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி Empty Re: சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum