தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm

» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Mon Jul 19, 2021 5:12 pm

» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm

» காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed Jul 14, 2021 11:02 pm

» அழகின் ஆடல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:13 pm

» அழகியல் நூறு! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:08 pm

» நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 03, 2021 10:21 pm

» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 03, 2021 6:29 pm

» கொரோனா காலக் குறிப்புகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jun 25, 2021 10:34 pm

» ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jun 23, 2021 10:35 pm

» கொரோனா எனும் கொடியவன்! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Wed Jun 23, 2021 10:30 pm

» எல்லார்க்கும் பெய்யும்…
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:41 pm

» காயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:40 pm

» பாதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:39 pm

» உள்ளிருப்பு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:38 pm

» புகைப்படம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:37 pm

» நீ என்ன தேவதை – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» பெயருத்தான்…! – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:36 pm

» அழகு – கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 23, 2021 6:35 pm

» உலக காற்று தினம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Jun 15, 2021 4:08 pm

» பைத்தியகாரனின் உளறல் ! கண்டுகொள்ளாதீர்கள்! நூல் ஆசிரியர் : முனைவர் சா.சே. ராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 10, 2021 12:18 pm

» ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி!
by eraeravi Tue Jun 08, 2021 9:25 am

» சாணக்கியன் சொல்
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:34 pm

» ஒரு ரூபாய் இருந்தால்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:33 pm

» பத்தே செகண்ட்ல டெஸ்ட் ஓவர்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:32 pm

» அடக்கி வாசிப்பது நல்லது!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» எதையும் பாசிட்டீவா எடுத்துக்கணும்..
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:31 pm

» ஆக்ரோஷ சண்டை !
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:29 pm

» கற்கால மனிதர்களை ஏன் திட்டறார்..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மாவட்டங்கள்ல ஆட்டுப் பண்ணை அமைக்கணும்…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:28 pm

» மனுச பசங்கள ஒரு ரவுண்டு பார்த்துட்டு வருவோம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:27 pm

» விருந்தாளியா போவ ஈ பாஸ் கிடையாதாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:25 pm

» ஆண்டியார் பாடுகிறார்…
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:23 pm

» தாயம் விளையாட ஊக்க மருந்து..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:22 pm

» இந்தியில மனு எழுத தெரியல..!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» பாவம் ரொம்ப அடி வாங்கி இருப்பார் போல!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:21 pm

» மீடியம் வெங்காயம் வேணுமாம்!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:19 pm

» கண்டது, கேட்டது…!
by அ.இராமநாதன் Mon May 31, 2021 1:18 pm

» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed May 19, 2021 9:32 pm

» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Sat May 08, 2021 12:36 pm

» தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்க! கவிஞர் இரா.இரவி
by eraeravi Sat May 08, 2021 12:25 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue May 04, 2021 10:12 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்

Go down

சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள் Empty சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 03, 2012 8:29 am

சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி அனைவரும் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.
[You must be registered and logged in to see this image.]


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 31, 2012 5:53 pm; edited 1 time in total

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள் Empty வாழ்க்கை

Post by ramkumark5 Mon Jul 09, 2012 11:21 pm

வாழ்க்கை

ப்பொழுதும் போல் ஆசிரமம் மிக அமைதியாகவே இருந்தது. குரு தன் சீடர்களுக்கு உபதேசங்களை வழங்கி கொண்டிருந்தார். அப்போது ஆசிரம வாயிலில் ஒரு தங்க பல்லக்கு வந்து இறங்கியது. பல்லக்கில் இருந்து தர்கூர் மாகாணத்தின் அரசன் போகாலன் வெளியே வந்து குருவிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டான்.

அவன் முகத்தில் தெரிந்த சிறு பதற்றத்தை கவனித்த குரு, அரசனை தனியே அழைத்து சென்று அவன் பதற்றத்திற்கான காரணத்தை வினவினார்.

“என் வாழ்வில் நிம்மதியே இல்லை. எந்த நேரமும் ஏதாவது கஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. இது ஏன்னு தெரிஞ்சுக்க தான் இங்கே வந்தேன் குருவே” என்று தன் சோகத்தினை குருவிடம் கூறினான் போகாலன்.

குரு போகாலனை அழைத்து கொண்டு ஆசிரமத்திற்கு வெளியே சென்றார். மிக நீண்ட நடை பயணத்திற்கு பின் சற்று தொலைவில் தெரியும் ஒரு மரத்தினை காட்டி அந்த மரத்தில் என்ன தெரிகிறது என்று போகாலனிடம் கேட்டார்.
அந்த மரத்தை சிறிது நேரம் கவனித்த போகாலன் “ஒரு மரம் தெரியுது. அப்புறம் அதிலிருந்து நிறைய சருகுகள் பூமியில் விழுகிறது” என்றான். அப்போது அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவனை அழைத்த குரு, அவனிடம் மரத்தை காட்டி அதே கேள்வியை கேட்டார்.

[You must be registered and logged in to see this image.]

அந்த மரத்தை சிறிது நேரம் கவனித்த விவசாயி “மரத்தில் பூத்திருக்கும் பூக்கள் , கிளையில் அமர்ந்திருக்கும் வெண்ணிற புறாக்கள், மரத்தில் தொங்கும் கனிகள் தெரியுது” என்றான். இதைக் கேட்டவுடன் குரு அந்த விவசாயியை திருப்பி அனுப்பி விட்டு போகாலன் பக்கம் திரும்பினார்.

“இப்ப தெரியுதா உன் மன உலைச்சலுக்கு என்ன காரணம் என்று!!?? உனக்கு அந்த மரத்தில் இருந்து விழுந்த காய்ந்த சருகுகள் தான் தெரிந்தது. ஆனால் அந்த விவசாயிக்கு பூக்கள், பறவை, கனிகள் எல்லாம் தெரிந்தது. எல்லாமே நம்ம பார்வையிலே தான் இருக்கு.

பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான ஒரு சிறிய இடைவெளி தான் வாழ்க்கை. அதை ரசித்து வாழ்வதும், வெறுத்து வீழ்வதும் நாம் பார்வையிலே தான் உள்ளது. வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சி தரும் தருணங்களை மட்டும் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். சோகங்களையும் துக்கங்களையும் எப்பவும் திரும்பி பார்த்து கொண்டே இருந்தால் வாழ்க்கை சருகாய் தான் போகும்.

குருவின் பேச்சை கேட்ட போகாலனின் மனதில் புது வெளிச்சம் பிறந்தது. குருவுக்கு நன்றிகளை கூறி விட்டு தன் அரண்மனைக்கு கிளம்பினான் புத்தம் புதிய வாழ்க்கையை வாழ.
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 35
Location : Surat

Back to top Go down

சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள் Empty பேர் சொல்லும் சருகுகள்...!

Post by ஹிஷாலீ Mon Jul 16, 2012 7:05 pmவள்ளியூர் என்பது ஒரு சிறு கிராமம் அங்கு கோசலை என்ற பெண் தன் கணவனால் கைவிடப்பட்டு ஊருக்கு ஓராமாய் உள்ள தன் நிலத்தில் சிறு குடிசை அமைத்து அங்கே மாடு,ஆடு வாங்கி பால் பண்ணை ஒன்றையும் மற்ற இடங்களில் மா, தென்னை ,சப்போட்டா, கொய்யா என்று பலரக கனிகளை வளர்த்து தன் இரண்டு மகன்களையும் காப்பாற்றி வந்தாள். கனிகள் அற்ற நேரத்தில் காயிந்த சருகுகளை விறகு.விளக்கமார், என்று விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தினாள்.வாயிக்கும் வயிற்றிக்கும் போக மிஞ்சவே இல்லை.கடன் வாங்கி மகன்களை நல்ல படிப்பு படிக்க வைத்தாள்.

காலம் செல்ல செல்ல மகன்கள் இருவரும் பெரியவனாக அவர்களுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்தல், அதே போல் திருமணமும் வெகு சிறப்பாக நடந்தது மகன்கள் இருவரும் தனது மனைவியுடன் நகரத்திற்கு குடியேறிவிட்டார்கள். தனது அம்மாவையும் கூட அழைத்தும் அவள் போகவில்லை. காரணம் செழிப்பான நேரத்தில் மரங்கள் கனி தரும் செழிபற்ற நேரத்தில் இலைகள் வழிகள் தரும் இதை விடுத்துச் சென்றால் அவை நன்றி அழிவைத் தரும் என்றாள்.

உடனே மகன்கள் இருவரும் சரி அம்மா நாங்கள் மாதம் ஒரு முறை வருகிறோம் என்று சென்றனர்.

இப்படியே காலங்கள் செல்லச் செல்ல மகன்கள் வரவில்லை,அவர்களின் ஆசையை நோக்கியே கண்கள் பயணித்தது கால்கள் போக மறுத்தது
வாயிகள் பேசியது அவள் வளர்த்த மரங்களுக்கிடையே பிள்ளையை பெற்றால் கண்ணீரு தென்னையை பெற்றால் இளநீரு என்று கூறுவது போல் அங்குள்ள செடி கொடிகள் மரங்கள் அனைத்தையும் தனது மகன்,மருமகள்,பேத்தி என்று சொந்தம் கொண்டாடி மகிழ்ந்து வந்தாள்.

ஓர் நாள் திடிரென்று மாடுகள் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்தாள் நிறைஞ்ச அம்மாவாசை ஒரே இருட்டு தொழுவத்தில் இருந்து இரண்டு பாம்புகள் தனது நவரத்தினங்களை அருகில் வைத்துவிட்டு நடனமாடியது. இவள் காலடி சத்தமும், மாடுகள் சத்தமும் கேட்டு பாம்புகள் இரண்டும் அந்த காட்டில் கிடக்கும் சருகுகளுக்கிடையே ஓடிவிட்டது.

நவரத்தினத்தை எடுத்த்தாள் அருகில் இருந்த கோவிலுக்கு சென்றாள் இறவா இது என்ன சோதனை நான் வறுமையில் தவித்தபோது நீ வரவில்லை, என் வறுமையை கண்டு பிள்ளைகள் அருகில் இல்லை. இந்த மண்ணும் சருகும் தான் எனக்கு சொறுபோட்டது.இப்போது என் இதயம் சருகாகி இறந்த காலத்தை நோக்கி பயணிக்கும் போது நவரத்தினம் எதற்கு இதை நீயே வைத்துக்கொள் என்று திரும்பினாள்

நில் கணவனை இழந்தும் கற்பு மாறா பெண்மையே நீ செடி கொடுத்தாய் மரம் வளர்த்தாய் ஈ எறும்புக்கும் தீனி போட்டாய் ,பசியென வருவோருக்கு ருசியாக கனி கொடுத்தாய், பிறர் உதவி பேணாமல் வலியவருக்கும் வாழ வழி வகுத்தாய் உன்னால பூமி செழித்தது, உன் பிள்ளைகள் அழைத்தும் போகாமல் என்னையே கெதியாக எண்ணி வறுமையிலும் வழி தவறாத நீ உண்மையேல் கடவுள்
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார் கடவுள்

இறைவா உன்குரல் கேட்டு என் செவிகள் மோட்சம் பெற்றது போல் என் கண்களும் மோட்சம் பெற வேண்டும் என்றாள்

உடனே கடவுள் அவள் முன் தோன்றி எண்ணை கண்ட நொடியில் உன் மரணம் மோச்சமாகும் மகளே, உன் இறுதி ஆசைப்படியே நீ வளர்த்த மரங்களின் சருகுகள் கொண்டே ஐய்ம் பூதங்களும் வாழ்த்துக்கள் பாட இறுதி சடங்கு நடைபெறும் என்று மறைந்தார்.

அவ்வாறே அவள் இறுதிப்பயணம் முடிந்தது தனது இரண்டு பிள்ளைகளும் அந்த நவரத்தின கற்களை கொண்டு அந்த கோயிலை வெகு சிறப்பாக கட்டி முடித்தும் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். ஊர் மக்கள் அனைவரும் அந்த குடும்பத்திற்கே மாலை மரியாதையும்,பட்டாபிசேகம் கட்டியும் பேற்றினார்கள். இருவரும் பேர் சொல்லும் சருகுகளாய் ஊரெங்கும் பரவி ஜொலித்தார்கள்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 26
Location : chennai

Back to top Go down

சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள் Empty சருகுடன் உதிர்ந்த சோம்பல்

Post by ருக்மணி Tue Jul 24, 2012 11:40 am

சேவுகன் அந்தியூர் கிராமத்தின் அரசமரம் பிள்ளையார் கோவிலின் பூசாரி. அவனது ஒரே மகன் கணேசன்... தலை பிரசவத்திலேயே தன் மனைவியை பறிகொடுத்தவன். அதன் பின் அரசமரத்து கணேசனும், மகன் கணேசனும் மட்டுமே இவன் வாழ்க்கை என்று ஆனது... தன் மகனை அம்மா இல்லாத குறை தெரியாமல் வளர்க்க பெரும்பாடு பட்டான். அவனும் சுட்டி தனம் மிக்கவனாகவே வளர்ந்தான். மகனுக்கு படிப்பின் மேல் பெரிதாக ஆர்வம் இல்லை என தெரிந்து மகனை கோவிலின் பராமரிப்புகளில் ஈடுபடுத்த எண்ணினான்..

வழக்கமாகவே சேவுகன் தான் கோவிலின் அனைத்து வேலைகளையும் கவனித்து கொள்வான். மரத்தடி பிள்ளையார் என்பதால் சருகுகள் கொட்டிக் கொண்டே இருக்கும். அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருப்பான். சின்ன கோவில் தான் என்றாலும் பக்தர்கள் கூட்டம் காலையிலும் மாலையிலும் இருந்த வண்ணமே இருக்கும். கோவிலின் அருகிலே வீடு என்பதால் அவனுக்கு வசதியாகவே இருந்தது.

ஒரு நாள் தன் மகனை அழைத்து தனக்கு பின் கோவிலை கவனித்து கொள்ளும் பொறுப்பை செவ்வனே செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி கொண்டு இருந்தான். அப்பொழுதும் விளையாட்டு புத்தியுடன் தலையை மட்டும் ஆட்டி கொண்டு அருகில் இருக்கும் மந்தையில் விளையாடி கொண்டு இருந்த பையன்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று முதல் கோவிலை பெருக்கி சுத்தம் செய்யும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தார். ஒரு நாள் செய்வான். மறுநாள் ஏதாவது ஒரு காரணம் தேடி தந்தையிடமே ஒப்படைத்து விடுவான். இப்படியே நாட்கள் நகர்ந்தது. சேவுகனும் நாள் ஆக நாளாக பொறுப்பு வந்துவிடும் என்று எண்ணி மனதை தேற்றி கொள்வான். ஒரு நாள் தீடீரென மாரடைப்பு ஏற்பட்டு சேவுகன் இறந்து விட கோவிலின் முழு பொறுப்பும் கணேசனிடம் வந்தது.

தந்தையின் கடைசி ஆசைப்படி கோவிலை நன்கு கவனித்து கொண்டு இருந்தான். ஒரு மாதம் கடந்தது. அவனுக்குள் ஏதோ சலிப்பு தட்ட ஆரம்பித்தது. தனக்குள் முடங்கி கிடந்த விளையாட்டு தனம் தலை தூக்க ஆரம்பிக்க கோவிலை கவனிக்க முடியாமல் விளையாட செல்ல ஆரம்பித்தான். காலையில் அரை குறையுமாக பெருக்கி செல்ல கோவிலில் சருகு நிறைந்து இருந்தது.

அன்று கோவிலுக்கு கிராமத்தின் நாட்டாமை வர கோவிலின் நிலைமையை கவனித்து கணேசனுக்கு அன்றைய தினம் நல்ல அர்ச்சனை செய்தார். மனம் உடைந்த போன அவன் அன்று இரவு உறங்க போகும் முன் கடவுளிடம் சென்று “உன்னை நானும் என் தந்தையும் கவனித்து கொண்டதற்கு பரிகாரமாக நாட்டமையிடம் என்னை இப்படி என்னை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறாயே? உண்மையிலே உன் பக்தர்கள் மீது உனக்கு அக்கறை இருக்கிறதா? நான் என்ன செய்வேன். எல்லாம் இந்த சருகினால் வந்த வினை. எத்தனை முறை பெருக்கினாலும் சருகு கொட்டி கொண்டு தானே இருக்கிறது. இதற்கு தீர்வே கிடையாத?” என்று புலம்பி பார்த்தான். “ஏன் பேசாம இருக்க? ஏதாச்சும் பதில் பேசு ?” என்று கடவுளை திட்ட ஆரம்பித்தான்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளையார் அவன் முன் தோன்றி “மகனே !! என்ன உன் பிரச்சனை ? என்று கேட்க, அவனும் “இவ்வளோ நேரம் கதையா கேட்டு கிட்டு இருந்த சாமி. நான் பொலம்புறது உனக்கு வேடிக்கையா இருக்கா” என அலுத்துக் கொண்டு “ இந்த சருகு கொட்டிக்கிட்டே இருக்க கூடாது. இதான் என் பிரச்சனை என்று கூற “சரி மகனே அப்படியே ஆகட்டும். காலையில் நீ எழுந்து பார்க்கும் போது உன் பிரச்சனை தீர்ந்து இருக்கும்” என்று கூறி மறைந்தார்.

நிம்மதியுடன் உறங்கி போனான் கணேசன். அதிகாலை வழக்கம் போல எழுந்து கோவிலை பெருக்க துடைப்பத்துடன் வெளியில் சென்றவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். கோவிலின் மரமே வீழ்ந்து கிடந்தது. மரமே வீழ்ந்து போனதால் பிள்ளையார் சிலையையும் அந்த கிராமத்தின் பெரிய கோவிலுக்கு மாற்றி விட்டனர். கணேசனுக்கு இருந்த கோவில் வேலையும் பறிபோனது. வந்த வருமானமும் நின்று போனது. நம் வேலையை சரி வர செய்யாமல் கடவுளை பழிக்க கூடாது. செய்யும் தொழிலே தெய்வம். சோம்பல் தான் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை என்பதை புரிந்து கொண்டு வேலை தேட ஆரம்பித்தான் கணேசன்.
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 33
Location : சூரத்

Back to top Go down

சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 31, 2012 5:52 pm

சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்

முதலிடம்
by ramkumark5 on Mon Jul 09, 2012 9:51 pm

வாழ்க்கை
எப்பொழுதும் போல் ஆசிரமம் மிக அமைதியாகவே இருந்தது.

இரண்டாமிடம்
by ஹிஷாலீ on Mon Jul 16, 2012 5:35 pm

வள்ளியூர் என்பது ஒரு சிறு கிராமம் அங்கு…

மூன்றாமிடம்
by ருக்மணி on Tue Jul 24, 2012 10:10 am

சேவுகன் அந்தியூர் கிராமத்தின் அரசமரம் பிள்ளையார் கோவிலின்…

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 39
Location : வேலூர்

Back to top Go down

சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்

Post by ருக்மணி Wed Aug 01, 2012 11:33 am

நன்றி தமிழ்தோட்டம்

வாழ்த்துக்கள்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 33
Location : சூரத்

Back to top Go down

சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 01, 2012 3:26 pm

கவியருவி ம. ரமேஷ் wrote: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்

முதலிடம்
by ramkumark5 on Mon Jul 09, 2012 9:51 pm

வாழ்க்கை
எப்பொழுதும் போல் ஆசிரமம் மிக அமைதியாகவே இருந்தது.

இரண்டாமிடம்
by ஹிஷாலீ on Mon Jul 16, 2012 5:35 pm

வள்ளியூர் என்பது ஒரு சிறு கிராமம் அங்கு…

மூன்றாமிடம்
by ருக்மணி on Tue Jul 24, 2012 10:10 am

சேவுகன் அந்தியூர் கிராமத்தின் அரசமரம் பிள்ளையார் கோவிலின்…

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

வாழ்த்துகள்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்

Post by ஹிஷாலீ Wed Aug 01, 2012 4:09 pm

அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 26
Location : chennai

Back to top Go down

சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்

Post by அ.இராமநாதன் Wed Aug 01, 2012 8:20 pm

அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31334
Points : 68752
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்

Post by ramkumark5 Thu Aug 02, 2012 12:23 am

நன்றி. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 35
Location : Surat

Back to top Go down

சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum